குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, September 30, 2022

3570 கிலோ மீட்டர் நடை பயணம் - யாருக்காக நடக்கிறார் ராகுல் காந்தி?

உலகில் வேறெந்த தலைவராலும் முடியாத ஒரு நடை பயணம் - ராகுல் காந்தி - ஒப்பற்ற தலைமைப் பண்புள்ள தலைவராக - இந்திய மக்களின் ஒற்றுமைக்காக - நடக்கிறார்.

ஏன்?

பதவி வேண்டுமா? 

பணம் வேண்டுமா?

என்ன வேண்டும் இவருக்கு?  ஏன் இத்தனை கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார்?

என்ன இல்லை அவரிடம்? ஏன் நடக்க வேண்டும் இவ்வளவு தூரம்?

அவர் என்ன கொடுக்கவில்லை இந்தியாவுக்கு?

அவர் தாத்தா இந்தியாவிற்கு கொடுத்தது - நாடாளுமன்றம். 

ஒன்பதாண்டு காலம் நேரு சுதந்திரத்துக்காக சிறையில் கிடந்தார்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிர் தியாகம் செய்தார்கள்.

இன்னும் எவ்வளவோ? 

இந்தியாவின் இன்றைய கட்டமைப்பை உருவாக்கியது காங்கிரஸ்.

காங்கிரஸ் போட்ட சாலையில் பயணம் செய்யும் நவீன கால போலிகள் - உயர் ஜாதிய ஆக்கிரமிப்பு - மத அரசியல் - பொருளாதார சீரழிவினை எட்டு ஆண்டுகளாய் நாசமானாலும் பரவாயில்லை. ஆனால் இந்திய மக்களிடம் மத வெறுப்பின்மையை - உணவால், உடையால், மொழியால், ஜாதியால் உருவாக்கி உள்ளார்கள் இந்த எட்டு ஆண்டுகளில்.

இந்தியாவின் ஆன்மாவான சத்யாகிரகத்தின் தந்தை மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலைகள் வைக்கிறார்கள்.

மதம் பேசுபவன் - அயோக்கியன், ஜாதி பேசுபவன் - கலவரக்காரன் - மக்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத நயவஞ்கக் கூட்டத்தின் நாசகார திட்டத்தினால் - இந்தியா முழுமையும் கலவரம் செய்கிறார்கள். கூலிக்கு வேலை செய்யும் குறை மதியாளர்களின் கூட்டம் கொக்கரிக்கிறது. பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படும் எச்சையர்களின் கூட்டம் பொய்களால் மக்களைக் குழப்புகிறார்கள். ஆடுகள் கூப்பாடு போடுகின்றன. ஆட்டு மந்தைக் கூட்டங்கள் முட்டிக் கொள்கின்றன. பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ஏழைகள் அழிக்கப்படுகிறார்கள். 

இந்தியர்கள் ஒற்றுமையுடன் இந்தக் களவாணிகளை வேரறுக்க வேண்டும்.

காங்கிரஸ் - இந்தியா - இந்திய மக்களுக்கானது. 

மீண்டும் இந்தியா சுதந்திரப்போருக்கு முன்பு இருந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது கண்டு, மக்களை ஒன்று சேர்க்க தியாகத்தினால் உருவான ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கிறார் இந்திய மக்களின் ஒற்றுமைக்காக.

வரும் கால இந்தியா - அமைதியாய், ஆனந்தமாய், முன்னேற்றமடைய வேண்டுமெனில் நாட்டு மக்கள் மீது அன்பு கொண்ட தலைவரால் தான் முடியும்.

அவர் - நம் ராகுல் காந்தி

ஒன்பதாயிரம் கோடி வாகனம் இவரிடத்தில் இல்லை.

இந்தியாவெங்கும் நடக்கும் ஒப்பற்ற தலைவர்.

ஒன்று சேர்வோம் இந்தியர்களாக. மதவெறி கூட்டத்தை - ஜாதி வெறியர்களை மண்ணோடு மண்ணாக்கி - எதிர்கால இந்தியாவை வரும் கால சந்ததியினருக்கு உருவாக்கித் தருவோம்.

இணையுங்கள் நடைபயணத்தில். காப்பாற்றுவோம் இந்தியாவை.

வாழ்க இந்தியா - இந்தியர்கள்.
நாம் இப்போது வாழும் இந்தியாவை நிர்மானித்தது காங்கிரஸ் கட்சி. நன்றி மறந்தவர்களால் தான் இன்றைய அத்தனை சீரழிவும். போதும் போலிகளிடம், பொய்யர்களிடம், ஜாதிய அடிமைகளிடம், மத வெறியர்களிடம் ஏமாந்தது.

நாம் நன்றியுணர்ச்சி உடையவர்களாய் இருப்போம். 

ராகுல்காந்தி என்ற ஒப்பற்ற தலைவரின் வழியாக நம் இந்தியாவை மதச்சார்பற்ற - ஜீவகாருண்ய நாடாக்குவோம்.

மக்கள் சேவைகள் எவை எவை

இன்றைய நாளிதழில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் பேசியதாக ஒரு செய்தி.  மக்கள் சேவையே பாஜகவின் நோக்கம். இந்தியாவை முன்னேற்ற இதுவரை பாஜக செய்து வரும் மக்கள் பணிகள் என்னென்ன என்று குழப்பம் வந்து விடக்கூடாது.

எவையெல்லாம் மக்கள் சேவை?

 • 2014ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.58.80 பைசா
 • 2022ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80.81 பைசா
 • சுங்க வரி கட்டணம் உயர்வு
 • நிறுவனங்களின் வாராக்கடன் 12 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி
 • சமையல் எரிவாயு விலை ரூ.1100
 • உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரிப்பு
 • வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
 • பணவீக்க விகிதம் 7 சதவீதத்துக்கும் மேல்
 • பாஜக ஆளாத மா நிலத்தில் கவர்னர்களை வைத்து சட்டசபையை முடக்கி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த விடாமை
 • அரசியல் எதிரிகள் மீது பலமுனைத் தாக்குதல்
 • ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் பார்ப்பனியர் ஆதிக்கம்
 • நீதித்துறையில் அரசு தலையீடு - (நான்கு ஜட்சுகள் புகார் ஆதாரம்)
 • ஜி.எஸ்.டியில் 28 சதவீதம் வரை வரி - அதாவது 100 ரூபாய்க்கு 28 ரூபாய் வரி
 • மதத்தின் பெயரால் அரசியல் பொய் புரட்டுகள் கலவரங்கள்
 • ஷேர் மார்க்கெட்டில் 5 லட்சம் கோடிக்கும் மேல் முறைகேடு - வழக்கு நிலுவை - லட்சுமி 
இவைகள் மக்கள் நலனுக்கானவை. இந்தியாவின் கட்டமைப்புக்காக, வளர்ச்சிக்காக.


Thursday, September 29, 2022

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் என்ற குப்பை - விருது

செருப்புத் தைக்கும் தொழிலாளி - அறுந்து போன செருப்புகளின் பல நல்ல பகுதிகள் கிடைத்தால், அதை வைத்து மற்றொரு செருப்பினைத் தைப்பான். 

வாடிக்கையாளர்களிடம், “குவாலிட்டிங்க - இத போல வேறொன்ன பார்க்க முடியாது” என்பான்.

மர ஆசாரி வெட்டிக் கிடக்கும் மரத்துண்டுகளை வைத்து - ஸ்டூல் ஒன்றினைச் செய்து விடுவான் -”தேக்குங்க - பார்த்துப் பார்த்துச் செய்தேன் - எலும்பு மாதிரி கிடக்கும்” என்பான்.

அழுகிப் போன காய்கறி விற்பவன் கூட - அமேசான் தரம் பக்கத்துல வராதுங்க என்பான்.

மாட்டு மூத்திரம் விற்பவன் - ”இது கிர்ருங்க. சிவபெருமானின் வாகனம் பேஞ்சது. ஆயிரம் பாட்டில் ஆர்டர் இருக்கு. ஆனா பாருங்க, நீங்க வந்துட்டீங்க. எல்லாம் மேலே இருப்பவன் செய்றாங்க. யாருக்கு எது கிடைக்கனும்னு அவனுக்குத்தானே தெரியும். சிவாய நம”

வாங்குகிறவனுக்கு நமஹ - புளகாங்கிதத்தோடு பொண்டாட்டி வாயில ரெண்டு சொட்டு விடுவான் வாடி க் கை ஆளன்.

அவரவர் சரக்குக்கு அவரவர் வியாக்கியானம்.

கேட்கிறவன் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு வலை விரித்தால் ஆயிற்று. 

கேட்பவன் கேனப்பயலா இல்லாமல் விவரமா இருந்துட்டா - வியாபார வியாக்கியானம் - விழலுக்கு இறைத்த நீர்.

மகாபாரதம் ஒரு புராணம் - புராணம் கட்டுக்கதைகளின் தொகுப்பு - அதை எவர் வேண்டுமானாலும் அவரவர் மனக்குப்பைக்குள் கலந்து - பிசைந்து - உருட்டி - ஒட்டி வெளியிடலாம்.

அந்த வகையில் ஜெயமோகனின் மனக்குப்பைக்குள் பிறந்த குப்பை விஷ்ணுபுரம் என்ற மகாபாரதம்.

வெட்கம்-சூடு-சுரனைகளை கோபியர் கொஞ்சுபவனிடம் விட்டாச்சு. மூன்றையும் விடாது தொங்கிக் கொண்டிருந்தால் - நடிகையின் அழுக்குத் தோல் ஸ்பரிசம் கிடைக்குமா? காசு கிடைக்குமா?

இட்லி மாவுக் கடைக்காரன் விட்ட செவுள் கிழியும் அடியில் ஓடோடிப் போயிருக்கும் மூன்றும். 

பேஞ்ச மூத்திரத்தைக் கழுவவில்லை என்றால் நாற்றெமெடுக்கும் உறுப்புகளின் பெயர்களை வைத்து - bondage, discipline, dominance, submission, and sadism  எனப் பின்னால் விடும் நவீனத்துவ குப்பைக் கூடைக்காரனுக்கு - குப்பையின் பெயரில் ஒரு விருது. 

குப்பை தானே இன்னொரு குப்பையை மதிக்கணும். உலக நியதி.

அந்தக் குப்பை இந்தக் குப்பை சொரியறதும், நக்கிறதும், திட்றதும் - அது இதைத் செய்வதும் - இலக்கிய சொறி சிரங்கு சில்லாடிகளின் நெட்டிதங்கள் என படை வீட்டு அம்மன் கணக்காய் தூப தீபம் காட்டி - அருளைப் பெற துடிக்கும் குஞ்சாமணிகள் பராக்கிரமங்கள் ஏகதேசம்.

சொறிந்து விடுவதுதான் இலக்கியம். ஆகவே சொறியும் சொறியும் - தோல் கழண்டு இரத்தம் வரும் வரையில் சொறியும் குஞ்சாமணிகள் ரகளைகளை கண்டு ரசிக்கலாம்.

கிடைக்கவே கிடைக்காத நேரத்தை குப்பையைக் கிளறுவதில் இருக்கிறது இன்பம் என்று நம்புவது அவரவர் ரசனை.

பன்றிக்கு சாக்கடை சொர்க்கம். சோறு கொடுக்கும் வெஸ்ட் மின்ஸ்டர். இங்கே குப்பையைக் கிளறும் ஆட்களுக்கோ? 

ஈ வாய்க்குள் சென்று போடும் ஆய் மிச்சம். 

போங்கடா நீங்களும் உங்க வி ருது களும்.

நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கவனிக்கவும். வி - ருது என்று இளித்துக் கொண்டு ருது அடைந்த ஜில்லா முழுக்க நல்லா காட்டும்  V க்களைத் தேடி ஓடப்போவுது குப்பை. 

Tuesday, September 27, 2022

அதிரும் சென்னை உயர்நீதிமன்ற முறைகேடு - தீர்ப்புகள் திருத்தப்பட்டன - உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

சவுக்கு சங்கர் நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று சொல்லியதற்காக தண்டிக்கப்பட்டு சிறைவாசம் - ஜனநாயகப் பரிசு. சட்டம் வழங்கிய மேல் முறையீடு வசதியைக் கூட அனுமதிக்கவில்லை நீதிபதிகள். அந்தளவுக்கு நீதிமன்றத்தின் மாண்பு மீது அக்கறை.

நல்லது.

சவுக்குக்கு தண்டனை கொடுத்து இன்றோடு பனிரெண்டு நாட்கள் ஆகி விட்டன. ஒரு சாமனியனுக்கு தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் நீதி மறுக்கப்பட்டது - பிரிட்டிஷ் ஆட்சியில் கூட சட்டம் சாமனியனுக்கு கிடைக்கும்படி மதிக்கப்பட்டதாம்.

ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்கிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

மதுரைக்கிளை நீதிமன்றம் - வழங்கிய தீர்ப்பினால் நீதிமன்றத்தின் மாண்பு பாதுகாக்கப்பட்டது. மக்கள் நம்பும் நீதிமன்றம் கேலிபடக்கூடாது.

ஒரு சாமானியனின் கருத்துரைக்கு எதிரான இந்த வழக்கின் அதிர வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட சூடு இன்னும் குறையவில்லை. அதற்குள் ஒரு பிரச்சினை

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த முறைகேடு. குற்றச் செயல், திருட்டு, ஊழல் இப்படி எந்த வார்த்தைகளாலும் அழைக்கும் தரமுள்ள அக்மார்க் குற்றம்.

இந்தச் செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் வெளி வந்ததா என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு எண்: CMP 13117/2002 - CMP :7981/2022. ஒரிஜினல் வழக்கு - O.S.A.No.101/2014. 

இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு 01.09.2022ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தீர்ப்பு நீதிமன்றத்தில் 01.09.2022ம் தேதி படிக்கப்பட்டு, வழங்கப்பட்டது. தீர்ப்பின் நகல் உயர்நீதிமன்றத்தின் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டு விட்டது. 

இதுவரைக்கும் பிரச்சினை இல்லை. 

ஒரு வாரம் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பினை டவுன்லோடு செய்து பார்த்தால் தீர்ப்பு திருத்தப்பட்டிருக்கிறது. படிக்கப்பட்ட தீர்ப்பும் - டவுன்லோடு செய்யப்பட்ட தீர்ப்பும் - ஒரு வாரத்தில் மாற்றப்பட்டு அப்லோடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்திற்குச் சென்று தீர்ப்பினைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. இந்த தீர்ப்பினை 01.09.2022ம் தேதி வழங்கிய நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகிய இருவர்.

ஜனநாயகத்தின் தூணில் ஒரு மெகா ஓட்டை. ஓட்டை அடைக்க சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றார்கள்.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. யார் இதைச் செய்தது எனக் கண்டுபிடிக்க சென்னை நீதிமன்றப்பதிவாளருக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது.

பலர் முன்னிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரே வாரத்தில் மாற்றப்பட்டிருப்பது குற்றச் செயல். தேசத்துரோகம். என்ன சொன்னால் என்ன? அது கோர்ட்டு சமாச்சாரம்.

நீதிமன்ற பதிவாளர் எப்படி விசாரிப்பார்? அவருக்கு குற்றச் செயல்களை விசாரிக்கும் படி சட்டம் அனுமதி வழங்கி இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியது யார்? யாருக்காக மாற்றப்பட்டது? யாரால் அப்டேட் செய்யப்பட்டது? இதன் பின்னால் இருக்கும் ஊழல் என்ன?  கேள்வி கேட்க முடியுமா சாமானியனால்.

என்ன காரணத்துக்காக தீர்ப்பு எடிட் செய்யப்பட்டது? எடிட் செய்யப்பட்ட தீர்ப்பினால் பலன் அடைந்தது யார்?  இப்படி எந்தெந்த தீர்ப்புகள் மாற்றப்பட்டனவோ? கேள்விகள் பல. பதில் கேட்க முடியாது. 

பரிசு கிடைக்கும்.  நீதிமன்ற அவமதிப்பு அதன் பெயர்.

டிஜிட்டல் மயமாக்கத்தின் பின் விளைவு - எப்போ வேண்டுமானாலும் டெலீட் செய்யலாம் - எடிட் செய்யலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுறுத்தல்களை நிதியமைச்சகம் செய்வது போல. சட்டமா? சட்டசபையா? ஒப்புதலா? அதெல்லாம் என்ன? இது யார் ஆட்சி? என்ன கேள்வி?

அரசு நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆவணங்களை அழித்து விடலாம் என்கிற நிலை. எல்லாம் இந்திய தேச மக்களின் நன்மைக்காக - டெவலப்மெண்டுகளுக்காக.

அரசியல் எதிரிகளை அரசு என்னவெல்லாம் செய்யுமோ என்று நினைக்கவே கூடாது. தேசத்துரோகிகள் அவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நேரு இந்தியாவை நாசம் செய்து விட்டார். பெரும் கடமை முன்னால் இருக்கிறது. நாடு நாடாக சென்று திட்டமிடல் அவசியம். டிஜிட்டல் இந்தியா. இந்தியா வளர்கிறது. 

ஓப்பன் கோர்ட்டில் படிக்கப்பட்ட தீர்ப்பையே மாற்றி அப்லோடு செய்கிறார்கள் என்றால் நீதிதுறையில் என்ன நடக்கிறது என்பதை யார் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்?

அதே நீதித்துறையில் இருப்பவர்களே கண்டுபிடிப்பார்களா?

இந்த வழக்கை மக்கள் எவரும் மறந்து விடக்கூடாது. என்ன அவசியம். மறக்காமல் இருந்தால் பசியா தீரப்போவுது? என்கிறீர்களா? பசி தீர்ந்து விடும் நோயா என்ன?

இந்த வழக்கின் விசாரணை எப்படி நடக்கிறது? குற்றவாளி யார்? என்பது பற்றி மக்கள் கவனமுடன் கவனிக்க வேண்டும். சொல்லி வைக்கிறேன். கேட்பதும் கேட்காதது அவரவர் முடிவு.

சென்னை உயர் நீதித்துறையில் நடக்கும் மர்மங்கள், குற்றச்செயல்கள் பற்றி - மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நீதிபதிகள் வெளிப்படையாக மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

வேறு எந்த உயர் நீதிமன்றத்திலும் நடக்காத குற்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதை வழக்காக எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஆணை பிறப்பிப்பது என்பது நீதிமன்றத்தின் மாண்பினை குலைக்காதா? நீதிமன்றத்தீர்ப்புகளை மாற்றினால் எப்படி ஆவணங்களை நம்புவது? இனி கோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் எப்ப்டி நம்புவார்கள்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த குற்றம் பற்றி விசாரித்த, உச்ச நீதிமன்ற உத்தரவு கீழே இருக்கிறது. 

ஊழல் இல்லையென்று சொல்லு முடியுமா? இல்லை தவறுதலாக நடந்தது என்று சொல்ல் முடியுமா? 

சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுக்கு இந்த வழக்கு ஒரு சாட்சியாக இருக்கிறதே? 

இந்த வழக்கைப் படிக்கும் போது இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன. 

எனது நோக்கம் நீதிமன்றத்தினை குற்றம் சொல்வது அல்ல. கடவுளைப் போன்ற நீதிபதிகள் சட்டத்தின் படி செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கிறேன். நீதிபதிகளுக்கு மக்களும், இந்திய அரசியல் சாசனமுமே கடவுள்கள் ஆவர். ஒவ்வொரு சாமானியன் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறோம் என்ற சிந்தனை ஒவ்வொரு அரசு அலுவலருக்கும் இருக்க வேண்டும். அரசு அலுவலர் என்பவர் மக்களின் பணியாளர்கள்.

விசாரணை உத்தரவைப் படித்து விட்டீர்களா? இனி செய்தி கீழே. இந்த வழக்கில் தொடர்புடைய மகாசேமம் டிரஸ்ட்டின் (mahasemam trust) வரலாற்றினை நெட்டில் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். 

நீதிமன்றம் - அதுவும் சென்னை உயர் நீதிமன்றம் - என்ன சொல்வது?
வெளிநாட்டு நன்கொடைகள் - மாற்றப்பட்ட விதிகள் - மறைக்கப்பட்ட விபரங்கள்

காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்குள் வரும் நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாக மக்கள் காணும் வகையில் FCRA - இணையதளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

fcraonline.gov.in  என்ற இணையதளத்தில் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் எவை - அவை எவ்வளவு நன்கொடைகளைப் பெற்றிருக்கின்றன என்ற தகவல்கள் எல்லாம் இருந்தன.

திடீரென்று 2022 - ஜூலை மாதம் 13ம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு செய்தி. FCRA ஆன்லைன் வெப்சைட்டில் இருந்த தொண்டு நிறுவனங்கள், அவைகள் பெறும் நன்கொடை விபரங்கள் - அனுமதி பெற்ற தொண்டு நிறுவனங்கள் எவையெவை? - அனுமதி இல்லாதவை எவையெவை? - அனைத்து விபரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி வெளிநாட்டு நன்கொடைச்சட்டத்தில் ஒரு உப பிரிவு டெலீட் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

என்ன காரணத்துக்காக அத்தகவல்கள் நீக்கப்பட்டன? வெளிப்படைத்தன்மை எங்கே போயிற்று? என்ன மர்மம்? யாருக்காவது தெரியுமா? 

இதே போலத்தான் பல இணைய விபரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. 

வெளிப்படையான நிர்வாகம் என்று பேசும் பிரதமர் மோடி - ஏன் இந்த  தகவல்கள் இணையதளத்தில் இருக்கு நீக்கப்பட்டு - மறைக்கப்பட்டது என்பதினை மங்கி பாத்தில் மக்களுக்கு சொல்ல வேண்டும்.

ஒரு நல்ல ஆட்சியாளன் காதில் எல்லா சத்தங்களும் கேட்க வேண்டுமென்பார்கள். 

கீழே இருக்கிறது படித்துக் கொள்ளவும். 
வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடைகள் - தொண்டு நிறுவனங்கள் விபரம் மறைக்கப்பட்டதற்குப் பின்னால் ஏதோ பெரிய தில்லாலங்கடி வேலைகள் உள்ளன என்று யோசிக்கத் தோன்றுகிறது. காலம் அதற்குப் பதில் சொல்லும் என நம்பலாம்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஜக்கி வாசுதேவ் - அசாமில் அனுமதியற்ற இரவு நேரத்தில் காண்டாமிருக வனத்துக்குள் சவாரி

ஒரு சிலருக்கு எல்லாமும் கிடைத்து விட்டால், மமதை ஏறிவிடும். ஒரு சிலருக்கு அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைத்து விட்டால் உலகமே ஒன்றுமில்லை என்று ஆகிவிடும். 

ஜக்கி வாசுதேவ் தன்னை சத்குரு என்று அழைக்கச் சொல்கிறார். முல்லா என்கிறீர்கள், ஃபாதர் என்கிறீர்கள், என்னை சத்குரு என்று அழையுங்கள் என்கிறார். 

பெயரில் என்ன இருக்கிறது. காலத்தின் முன்னாள் என்றோ ஒரு  நாள் விதி முடிந்த நாளன்று, பிணமாகப் போகும் பிண்டம் தானே சத்குருவும். 

ஒன்பதாயிரம் கோடி வாகனத்தில் பயணம் செய்தாலும் வயது ஏற ஏற கிழட்டுப் பருவம் வரத்தானே செய்யும். ஒன்பதாயிரம் கோடிப்பு - வயது ஏறாதப்பு என்றுப் பெருமை பேசிக் கொள்ளலாம்.

இணையதளத்தில் ஜக்கியைப் பற்றி விமர்சித்தால் அவர் கோடானு கோடி மக்களால் பின் தொடரப்படும் மகான். அவரை விமர்சிக்க எவருக்கும் தகுதி இல்லை என்று திட்டுவார்கள். 

விமர்சன கமெண்ட் போட்டால் 200 ரூபாய் உ.பியா என்பார்கள். ஜக்கிக்கு தூக்கிப் பிடிக்கும் இவர்கள் 200 ரூபாய்க்கு கூட தகுதியில்லா தற்குறிகள் என்பதை மறந்து போகிறார்கள்.

அதென்னவோ தெரியவில்லை - ஜக்கிக்கு விலங்குகள் என்றால் பிடிக்காது போலும். 

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து விட்டு, இல்லவே இல்லை என்கிறார்.  ஜக்கி மையம் வைத்திருக்கும் இடத்தில் பெரிய பிரச்சினை இருக்கிறது. அது தற்போதைய ரெவின்யூ ஆட்களுக்குத் தெரிவதில்லை.

ஜக்கி சும்மாச்சுக்கும் காட்டுக்குள் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கமாட்டார். உட்காரணம் என்ன? 

சிவரகசியம்.

உலகிற்கே தெரியும் - ஈஷா யோக மையம் - யானை வழித்தடத்தில் உள்ளது என்பது. ஆனால் இன்றும் ஜக்கி யானை வழித்தடத்தில் இல்லை என்று பொய் பேசிக் கொண்டிருக்கிறார். இணையவசதி இருக்கிறவர்கள் ஜக்கியின் ஈஷா யோக மையம் அமைந்திருக்கும் பகுதியை கூகிள் மேப்பில் பாருங்கள். ஆக்கிரமித்திருக்கிறாரா இல்லையா என்பதை.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.


அசாமில் உள்ள காசிரங்கா வனப்பகுதியில் இரவில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்தா மல்லா பருவா ஆகிய இருவரும் கூட இருக்க, இரவில் தானே காரை ஓட்டிக் கொண்டு காண்டாமிருகம் வசிக்கும் காட்டுப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட நேரத்தில் உலா சென்றிருக்கிறார் ஜக்கி. 

பேட்டியைப் பாருங்கள்.

இதை எதிர்த்து இரண்டு சமூக செயல்பாட்டாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்ததும், வழக்கம் போல அரசியல், “ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என முதலமைச்சர் திருவாய் அருளியிருக்கிறார்.

மேலே இருக்கும் வீடியோயில் வெகு தெளிவாக இரவு மூவரும் சட்டத்தை மீறி காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மக்களுக்கு நான்கு மணி வரை மட்டுமே அனுமதி. 

ஆனால் ஜக்கிக்கோ கார் ஓட்ட அனுமதி? 

யாரிந்த ஜக்கி? ஒரு சாதாரண யோகா மாஸ்டர் தானே? எதற்கு இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? காங்கிரஸ் கட்சிக்காரர்கள் விசாரித்துப் பாருங்கள். பெரும் பூதம் இருந்தாலும் இருக்கலாம்.

ஏதோ ரகசியம் இருக்கிறது. தண்ணீருக்குள் விடப்பட்ட அபான வாயு, வெளியில் குபுக்கென வருமாம். வரும் போது தெரிந்து கொள்வோம்.

செய்தியை தமிழ் விபச்சார மீடியாக்கள் வெளியிடாது என்பதால் பிளாக்கில் எழுதி இருக்கிறேன்.

செய்தி ஆதாரம் : https://www.tribuneindia.com/news/nation/row-over-assam-chief-minister-sadhgurus-kaziranga-park-night-jeep-safari-435465

செய்தியில் ஒரு பகுதி கீழே

Videos circulated on social media and local channels showed Vasudev driving an open safari SUV along with Sarma and Baruah.

"There is no violation. According to wildlife law, the warden can give permission to enter a protected area even at night. No law stops people from entering at night. Yesterday, we had the formal opening of the park for this season and now Sadhguru and Sri Sri Ravi Shankar have arrived. Since they have lakhs of followers, this time we expect the tourist season will be very good for Kaziranga," Sarma told reporters on Sunday night. (ஜக்கியின் வியாபார தந்திரம் - பாலோயர்ஸ்)

Sarma and Vasudev on Saturday inaugurated the three-day Chintan Shivir at Kaziranga.

Later, Chief Minister Sarma unveiled three rhino statues at Mihimukh in Kaziranga along with Vasudev.

These rhino statues have been created using the ashes collected from burning rhino horns. It may be noted that on September 22, last year, the Assam government made history when a stockpile of 2479 rhino horns were consigned to flames to send across a strong message to the poachers and illegal horn traders that rhino horns have no medicinal value.

The rhino statues thus created are an attempt to immortalize the efforts and dedication of those who selflessly protect Assam's pride, the great one-horned rhinoceros.

On Saturday, the Assam Chief Minister along with Sadhguru Vasudev also opened the Kaziranga National Park for tourists for this season.

Friday, September 23, 2022

சிறுமிக்கு திருமணம் - குற்றச்செயல்களின் இருப்பிடமாக சிதம்பரம் நடராஜர் கோவில் - இந்துக்களிடம் கோவிலை ஒப்படைக்குமா தமிழக அரசு?

மானம் கெட்ட, ஈனப் பிழைப்பு பிழைத்துக் கொண்டு, பார்ப்பனியர்களின் காலை நக்கி குடித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள், சூடு-சுரணையற்றுப் போய், வெந்ததைத் தின்று விதி வந்த பின்னாலே செத்துப் போகும் ஒரு இனமாக மாறிப் போய் எத்தனையோ ஆண்டுகாலம் ஆகி விட்டது. சினிமாக்காரியின் தொடைகளுக்குள் கண்களைத் திருப்பியவர்கள், இன்னும் எடுக்கவே இல்லை. அதற்குள் தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள் போல.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. கோவிலில் பூசை செய்பவர்களுக்கே கோவில் நிர்வாகம் உரிமை என்பது போல இருக்கிறது.  கோவில் நாம் கட்டியது - ஆனால் கருவறைக்குள் பூசை செய்ய அனுமதி கிடையாது. கோவில் கருவறைகள் சாதி தீண்டாமையை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

தீண்டாமை குற்றம் என்கிறது சட்டம். ஆனால் கருவறைக்குள் மட்டும் தீண்டாமை? என்ன ஒரு சட்டம்? வெட்கம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கோவிலுக்குள் தமிழில் பூசை செய்ய அனுமதி மறுத்தவர்கள் தீட்சிதர்கள். ஆனால் கோவிலுக்குள் செல்லும் ஒவ்வொன்றும் தமிழர்களின் கொடுத்தது. இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழர்கள் பூனூலான் தட்டில் காசு போடுவதை எப்போது நிறுத்துகிறார்களோ, வருமானம் இல்லாத கோவிலின் பக்கம், பூனூல் போட்டவர்கள் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். 

தமிழர்களின் சொத்தான சிதம்பரம் நடராஜர் கோவிலை, எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டத்தினர் ஆக்கிரமிப்புச் செய்து, தின்று கொழுத்து வருவதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழர் இனம். ஆங்கிலேயன் சென்று விட்டான். இன்னும் நம் கோவில் நமக்கு கிடைக்கவில்லை. வெட்கமில்லா தமிழர்கள் நாம்.

எங்களை உங்களால் என்ன செய்து விட முடியும்? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

24 வயது பசுபதி எனும் தீட்சிதருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை சுமார் 13 வயது - திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அக்கிரமக்காரர்கள். இதற்கு பசுபதி என்பவனின் தந்தை கணபதியும், அச்சிறுமியின் தகப்பனும் உடந்தை. அந்தச் சிறுமி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். இந்த கல்யாணம் 2021ம் ஆண்டு நடந்திருக்கிறது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006 - இரண்டாண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வகை செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல பெயில் வழங்கக் கூடாத சட்டம் இது. த கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் ஆக்ட் 2013 மூலம் பெயில் கொடுக்க கூடாத குற்றச் செயல்களை மூவர் மட்டுமல்ல கோவில் நிர்வாகமும் செய்திருக்கிறது.

ஆனால் பாருங்கள் - மூவருக்கும் பெயில் கிடைத்து விடும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு எல்லா துறைகளிலும் நூலிபான்கள் ஊடுறுவல் செய்திருக்கிறார்கள்.

என்ன ஒரு அக்கிரமம்? இதுவா ஆகமம்? இதுவா தர்மம்? 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் இவர்களை என்ன செய்வது? தமிழக காவல்துறை கைது செய்திருக்கிறது. இதுவே அதிமுக அடிமைகள் ஆட்சி என்றால் தீட்சிதர்கள் ஜாலியாக இருந்திருப்பர்.

என்னவென்றே தெரியாத ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பிற்குள் 24 வயது தீட்சிதர் தன் ஆண் உறுப்பை நுழைத்து கற்பழித்து இருப்பான். சிதம்பரம் நடராஜர் இவர்களைத் தான், தான் அருள்பாலிக்கும் கருவறைக்குள் பூசை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசு - சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். கோவிலில் பூசை செய்ய ஒவ்வொரு சாதிக்கும் முறை வைத்து அனுமதி வழங்க வேண்டும். 

இந்துக்களில் சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் கோவிலை மீட்க போராட்டம் செய்தல் அவசியம். சிவன் நம் தெய்வம். அவருக்கும் நாம் தான் பூசை செய்ய வேண்டும். சிவன் தீட்சிதர்கள் தெய்வம் அல்ல. சிவனை முதல்வனாகக் கொண்ட சைவதமிழர்கள் - நடராஜர் கோவிலை மீட்க வேண்டும்.  

இனியும் தீட்சிதர்கள் மனசாட்சியே இல்லாமல், குற்றச் செயல்களை நிகழ்த்தும் இடமாக நம் சிவபெருமானின் கோவில் இருக்க கூடாது. அவர்களை கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

கோவிலில் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்களையும், அனுமதி கொடுத்த தீட்சிதர் நிர்வாகத்தினரையும் கைது செய்யாமல், மூவரை மற்றும் கைது செய்திருப்பது சரியல்ல. காவல்துறை நடவடிக்கை எடுத்தல் அவசியம்.


13 வயசுப் பெண்ணின் யோனியில் தான் தன் குஞ்சை விடுவாராம் இந்தத் தீட்சிதர் பசுபதி. இதுதான் தீட்சிதர்களின் விதியாம். ஆகமமாம்.பட உதவி புதியதலைமுறைச் செய்தி. இணைப்பு கீழே.

https://www.puthiyathalaimurai.com/newsview/147750/3-Dikshitars-of-Chidambaram-Nataraja-temple-arrested-in-case-of-marrying-a-girl-

காவல்துறையினர் இவர்களுக்கு பாத்ரூம் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம். இது அக்மார்க் கற்பழிப்பு. நிர்பய கற்பழிப்பு வழக்குக்கும் இதற்கும் வேறுபாடில்லை.  

தனக்கு மகளாகப் பிறந்ததினாலே பெண்களுக்கு சட்டம் வழங்கும் பாதுகாப்பைக் கூட கொடுக்காத சிறுமியின் தகப்பனாருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். திருமணம் செய்த தீட்சிதனையும், அவனின் தந்தையையும் மனிதர்களாகக் கருதக் கூடாது. இவர்கள் பெண் இனத்திற்கே கேடு செய்வார்கள் என்பதால் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.

கோவையில் பெண் குழந்தையைக் கற்பழித்துக் கொன்ற ஒருவரை என்கவுண்டர் செய்தது போலச் செய்ய வேண்டுமென, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கோபம் அடைவார்கள்.

பெண் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? தீட்சிதர்களை மன்னிக்கவே முடியாது. கூடவும் கூடாது. இவர்களைக் கைது செய்த காவல்துறையினருக்கும் பெண் குழந்தைகள் இருப்பர். அவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நன்றி : தினமணி - புதிய தலைமுறைச் செய்திகள்

Thursday, September 22, 2022

நீதிபதிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா? ஓர் பார்வை

ஜூனியர் விகடனில் சவுக்கு சங்கர் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தி ஆகிய இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதினைந்து நாட்களுக்குள் விசாரணை செய்து, தண்டனை கொடுத்து, அப்பீலுக்கும் போகக்கூடாது என்று உத்தரவு இட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

தண்டனையை எதிர்த்து அப்பீல் போக விடாமல் செய்தது மாபெரும் சட்ட விதிமீறல் என்கிறது ஜூ.வி. 

இந்தச் சூழ்நிலையில்தான் சவுக்கு சங்கர் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டிகளை வைத்துத்தான் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தியும் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளனர். அப்படிப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரிவு 19-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய சங்கருக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்திவைக்கும் அதிகாரம் தண்டனையளித்த நீதிபதிகளுக்கு இருந்தபோதும் அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. என்றைக்கு ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு இறுதியானது அல்லவோ... அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதோ... அப்போது தண்டனையை நிறுத்திவைப்பதுதான் முறை. இல்லையென்றால், வாரக் கடைசியில் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்து, ‘உன்னை இரண்டு நாள்களாவது சிறையில் வைப்பேன்’ என்று வீம்பு செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. (ஜூவி கட்டுரையில் ஒரு பகுதி)

எந்த ஒரு குற்றச் செயலுக்கும் தண்டனை விதிக்கப்பட்டால், உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, அப்பீல் போக விடாமல் தண்டனை கொடுப்பது கொடுஞ்செயல்.

பேச்சுரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமையாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விதிவிலக்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறப்பட்டிருப்பதும், ஒரு கட்டுரையோ (அ) சொற்பொழிவோ நீதிமன்ற அவமதிப்பு வரையறைக்குள் வரும் என்பதும், அதனால் நீதிமன்ற மாண்பு குலைந்துவிட்டது என்று கூறி தனிப்பட்ட நீதிபதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முற்படுவதும் எப்படி நியாயமாகும்?

அதேபோல் ஒருவரை தண்டிப்பதற்கு முன்னால் முறையான நடைமுறைகளைக் கையாள மறுத்து, ராணுவ நீதிமன்றங்கள்போல் சட்ட நியாயங்களுக்கு விரோதமாகச் செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது.

மேலும் தண்டனை என்பது ஒருவரை அவரது குற்றத்தை உணரவைத்து, சீர்திருத்தி மறுபடியும் மைய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டது. அப்படியிருக்கும்போது தவறு செய்தவரையும் தண்டிக்காமல், மன்னிப்பதன் மூலம்தான் நீதிமன்றத்தின் மாட்சிமை பெருகுமேயொழிய பழிக்குப் பழி என்பது அதன் தீர்வாகாது. இதை நீதிபதிகள் உணர்வதோடு, ஒரு சிலர் தவறாகப் பேசிவருகிறார்கள் என்பதற்காக மாபெரும் அதிகார வரையறையை மேற்கொள்வது ஒரு கொசுவை நசுக்குவதற்கு உலக்கையைப் பயன்படுத்துவதுபோல் உள்ளது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மதுரை நீதிபதிகள் தாங்கள் அளித்த தண்டனையைச் சுயமாக திரும்பப் பெற்று, சவுக்கு சங்கரைச் சிறையிலிருந்து விடுவிப்பதுதான் உத்தமமான செயலாக இருக்கும்! (ஜூவியில் ஒரு பகுதி)

நன்றி:ஜூனியர் விகடன்

முழு கட்டுரை இணைப்பு கீழே உள்ள இணைப்பில் இருக்கிறது.

https://www.vikatan.com/news/general-news/journalist-savukku-sankar-arrest-issue

கட்டுரையின் இறுதிப் பகுதியில் இப்படி முடித்திருக்கிறது ஜூ.வி.

நீதிபதிகள் ஊழலே செய்யவில்லையா?  என்னிடம் இருக்கும் லிஸ்ட்டை கட்டுரையின் இறுதியில் தருகிறேன். அதற்கு முன்பு குற்றச் செயலில் ஒரு நீதிபதி ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை எப்படி எடுக்கலாம் எனப் படியுங்கள். அதிர்ச்சி தான் உண்டாகும். நாம் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் மக்களின் பணியாளர்கள் நீதிபதிகள் என்பதை படிப்பவர்கள் கவனத்தில் கொள்க. 

ஊழல் செய்யும் நீதிபதிகள் மீது சாமானியன் ஒருவனால் எளிதில் நடவடிக்கை எடுக்க இயலுமா? இதோ கீழே படியுங்கள். நீதிபதிகள் மீது புகார் தெரிவிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை.

 • Judiciary is an independent organ of the State under the Constitution of India. Government of India does not interfere in the functioning of the Judiciary.
 • The administrative/ disciplinary control over the members of subordinate judiciary in the States vests with the concerned High Court and the respective State Government. The State Government frames Rules and Regulation in consultation with the respective High Courts.
 • Central Government neither maintains records related to any court proceedings/ decisions / judgments nor does it have and can have a mechanism to monitor the action taken on them.
 • No administrative action can be taken on a grievance; subject matter of which is subjudice.

 • Government cannot ask a Court of Law to expedite proceedings of any particular case. Therefore, no action can be taken by the Government where the petitioner is aggrieved of the fact that there has been inordinate delay in disposal of the case.
 • A judicial order can be challenged only before appropriate Court of Law as per prescribed legal procedure. Therefore, it is a futile exercise to file a grievance against a judicial order/judgement.
 • A grievance regarding a complaint against a Judge can be taken up for inquiry by the concerned High Court or Supreme Court as per in-house procedure adopted by them. There is no role of Government in disposal of such grievances.
 • Detailed guidelines on grievances received in the Department of Justice are available on this Department’s website doj.gov.in. As per guidelines issued by the Supreme Court of India, grievances against Judicial Officers are required to be sent on sworn affidavit with verifiable facts to the Registrar General of the concerned High Court.
 • Petitions, applications and other documents to be filed before a Court of Law should not be forwarded alongwith grievances as these are to be presented in person or by a duly authorised agent or by an advocate on record duly appointed for the purpose.
 • As Judiciary is independent and Government does not interfere in the functioning of the Judiciary, no further follow-up or correspondence is made by the Government after forwarding of grievance to the concerned High Court or Supreme Court, as the case may be.
 • As the citizens can lodge their grievances online on pgportal no action is being taken on the grievances received through e-mail. pgportal.gov.in has been specifically created for lodging of grievances by the citizens.
 • Once final reply is given on a grievance, it should not be repeated again.
 • Thanks to www.doj.gov.in

மேலே இருப்பவைகளை இந்த இணையதளத்தில் படிக்கலாம். 


ஒரு சாமானிய இந்தியன் தனக்கு அநீதி வழங்கப்பட்டதாகக் கருதினால் எங்கனம் நடவடிக்கை எடுக்க இயலும்? நீதிபதிகள் மேல் புகார் தெரிவித்தால், அதை நீதிபதிகளே விசாரணை செய்வது சரியாகுமா? மனசாட்சி இருப்பவர்கள் யோசித்துப் பாருங்கள். எல்லோரும் மனிதர்கள் தானே.  அரசு நீதிபதிகளைக் கேள்வி கேட்க முடியாது. மக்களுக்கும் இத்தனை கட்டுப்பாடுகள். வக்கீல்களின் நிலையோ வாய்ப்பூட்டு. கேள்விகளுக்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் நீதிபதிகளுக்கு விதிவிலக்குக் கொடுத்திருக்கிறதா என்ன?

கீழே படியுங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டம் 1971 என்ன சொல்கிறது என. 


படித்துப் பாருங்கள். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட தண்டனை எப்படிப்பட்டது என்று புரியும்.

28 ஆண்டுகாலம் நடந்த ஊழல் வாதி ஜெயலலிதாவுக்கு நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை ரத்துச் செய்தாரா நீதிபதி குமாரசாமி, அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, நீதிபதி குன்கா வழங்கிய உத்தரவை உறுதி செய்ததே? 

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு தவறு? என்றால் வழங்கிய நீதிபதிக்கு என்ன தண்டனை? ஏன் அவர் தவறான தீர்ப்பினை வழங்கினார்? சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து கொண்டு தப்பித்து விடுவதை பலரும் செய்து வருகின்றனர்.

எந்த நீதிபதி ஊழல் செய்தார்? ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்பவர்கள், மெயில் டுடேவில் வெளியான கட்டுரையினைக் கீழே படிக்கவும்.

படித்து விட்டீர்களா? நீதிபதிகள் என்றாலும் அவர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. மக்கள் தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விமர்சிக்க வேண்டும். வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நீதிபதிகளின் தீர்ப்புகள் ஆராயப்பட வேண்டும். தீர்ப்புப் பழி வாங்குதலுக்காகவோ அல்லது இதர பலன்களுக்காக வழங்கப்பட்டிருந்தால், தண்டிக்கப்படல் அவசியம்.

இது ஒன்றும் ராஜா / மன்னர் காலம் அல்ல என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. 

Saturday, September 17, 2022

பெரியாரை பின்பற்றுவோம் - மனிதாபிமானத்தைப் போற்றுவோம்

அன்பே கடவுள் அவ்வளவுதான். சக மனிதனின் வளர்ச்சியிலும், அவனின் நலனிலும் அக்கறை கொள்பவன் எவனோ அவனே இறைவன். பேராசைப்படாமலும், பொறாமைப்படாமலும் இருப்பவன் எவனோ அவனே மனிதன். 

உயர் சாதி நாங்கள் என்று எவன் பேசினாலும் அவன் மனித குலவிரோதி. ஆக பிராமணியம் மனித குலத்தின் எதிரி என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் அவர்களும் மிருகங்களே.

மனிதாபிமானத்தைப் பற்றிப் பேசும் பெரியாரை, அவர் வழி நின்று எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் வண்ணம் அவரின் பிறந்த நாளில் இன்று உறுதியேற்போம்.


பெரியாரின் கருத்துக்கள் மேலே இருப்பவை. இவற்றை எவன் மறுதலிக்கின்றானோ அவனே மனிதனின் எதிரி.பார்ப்பனர்களின் வெவ்வேறு ஜாதிகள் - மலைக்க வைக்கும் ஊடுறுவல்

இந்திய நாகரீகத்தை ஆரியர் நாகரீகமாக மாற்ற இதுவரை பார்ப்பனர்களால் கையாளப்படும் வழிகளாக தேவ நேயப்பாவாணார் எனும் தமிழறிஞர் தான் எழுதிய பண்டைத் தமிழர் நாகரீகம் எனும் நூலில் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

ஒரு நாட்டை போரில் வென்று ஆக்கிரமிப்பது வேறு, படிக்காதவர்கள் நிறைந்த இந்தியாவில், கல்வி அறிவு பெற்ற சமூகமாக இருந்த பார்ப்பனர்கள் தங்கள் சதியால் இந்திய நாகரீகத்தை அவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் என்று நிறுவ இன்றும் துடிப்பாக துல்லியமாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.
 • பழந்தமிழ் நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும்
 • பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல்
 • தமிழ் நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதகாலத்தினின்றும் தொடங்கல்
 • தென்னாட்டு பழங்குடி மக்களாகிய தமிழரை வந்தேறிகளாகவும் கலவையினமாகவுங் காட்டல்
 • குமரிக்கண்ட இடப்பெயர்களையும் தெய்வப்பெயர்களையும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டல்
 • கட்டுக்கதைகளையும் ஆரியச் சொற்களையும் புகுத்தி, இருபெருந்தமிழ்ச் சமயங்களாகிய சிவ நெறியையும், திருமால் நெறியையும் ஆரிய வண்ணமாக்கலும், தமிழைக் கோயில் வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளலும்
 • மூவேந்தர் பேதமையால் ஆரியம் வேரூன்றிய கடைக்கழகக் கால நூல்களினின்று ஆரியச் சார்பான சான்று காட்டல்
 • தமிழ் வடமொழிக்கிளையென்று அயலார் கருதுமாறு, அடிப்படைத் தமிழ்ச் சொற்கட்கெல்லாம் வலிந்தும் நலிந்தும் வடசொற் மூலங்காட்டல்
 • வடமொழி தேவமொழியென்றும், பிராமணர் நிலத்தேஅர் (பூசுரர்) என்றும், வேதக்கால ஆரியப் பூசாரியால் புகுத்தப்பட்ட ஏமாற்றுக் கருத்துகளையும், பிறப்புத் தொடர்பான குலப்பிரிவினையையும் தொடர்ந்து போற்றல்
 • சமயச்சார்பான சொற்பொழிவுகளாகாற் பொதுமக்களை அறியாமையில் அமிழ்த்துதல்
 • உண்மை கூறும் தமிழ்ப் புலவர்க்கு அலுவற் பதவியில்லாதவாறு செய்தல்
இவ்வாறு 1966 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதுகிறார். இந்தக் கால கட்டத்தில் நான் பிறக்கவே இல்லை. பார்ப்பன ஊடுறுவல்கள் இன்னும் இருக்கின்றன. வரும் காலங்களில் எழுதுகிறேன்.

ஆரியர்களின் ஊடுறுவல்கள் பல தளங்களில் கிடைத்தவை தொகுப்பாக:-  

வேத ஆரிய பிராமணர்களின் வேர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன். சரஸ்வதி நதிக்கு அருகில் தங்கியிருந்ததாகக் கூறப்பட்டதில் வரலாற்று  உண்மை என்னவென்றால் சரஸ்வதி நதி என்பது  ப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு அருகில் உள்ள ஹரஹ்வைதி நதி ஆகும். 

சரஸ்வதி பகுதியில் இருந்து கங்கை பகுதிக்கு வந்த பிராமணர்கள் தங்களை கௌட சரஸ்வத பிராமணர்கள் என்று அழைத்தனர்.

நாகர் பிராமணர்கள் முதன்முதலில் குஜராத்துக்கு கி.பி. 404 ஆண்டில் குடியேறினர். கிரீஸ், மாசிடோனியா, சிரியா அல்லது இந்த இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் நாகர் பிராமணர்கள் என  வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

இந்திய அறிஞர் ராமகிருஷ்ண கோபால் பண்டார்கர் சித்பவான்களின் பெயர்களுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள புவியியல் தளங்களுக்கும் இடையே ஒற்றுமையைக் காட்டியுள்ளார்.

கி.பி 1120 இல் அரேபியர்களுடன் கூட்டு சேர்ந்த பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார்.

1311 இல் மாலிக் காஃபூர் பாண்டிய பேரரசின் மீது போர் தொடுத்த பிறகு தமிழர்கள் அரசு முடிவுக்கு வந்தது. தாக்குதலுக்குப் பிறகு, பெரும்பாலான தமிழ் பிராமணர்கள் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.  கி.பி 1529 இல் மதுரை நாயக்கர் ஆட்சி நிறுவப்பட்டபோது மகாராஷ்டிராவிலிருந்து ஒரு புதிய பிராமணர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

சர் சிபி. ராமசாமி ஐயர் தனது வாழ்க்கை வரலாற்றில் தனது முன்னோர்கள் மகாராஷ்டிராவில் உள்ள தேஷ் பகுதியில் இருந்து குடிபெயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

நம்பூதிரி பிராமணர்கள் உத்தரபாஞ்சால நாட்டின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து அதாவது பண்டைய நேபாளத்திலிருந்து கர்நாடகாவிற்கு கடம்ப மன்னன் மயூரவர்மாவின் ஆட்சியின் போது கி.பி 345 இல் குடிபெயர்ந்தனர்.

கேரளா துளு-நேபாளத் தாய்வழி சாமந்த ஆட்சியாளர்கள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானகத்தால் வழங்கப்பட்டது. இதனால் கி.பி.1335ல் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் ஆதரவைப் பெற்ற நேபாள பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் கேரளா வந்தது.

நம்பூதிரிகளால் எழுதப்பட்ட கேரளோல்பத்தி மற்றும் கேரள மகாத்மியம் போன்ற அனைத்து நூல்களும் பண்டைய நேபாளத்தின் தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்தில் இருந்துள்ள தங்கள் தோற்றத்தைக் குறிப்பிடுகின்றன.

கிபி 1311 இல் பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மாலிக் காஃபூர்தான் துளு-நேபாள மக்களுக்கு அதாவது நம்பூதிரி நாயர் மற்றும் சாமந்தா ஆட்சியாளர்களுக்கு கேரளாவின் மேலாதிக்கத்தை வழங்கினார்.

பழைய செப்பேடுகளில் அக்ரஹாரம் என்பது ஊரிலிருந்து ஒதுக்குபுறமாக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகவே பதியப்பட்டிருக்கிறது. நாளடைவில் கோவிலை உருவாக்கி, பூசையை உருவாக்கி பாமர மக்களிடம் இல்லாத பொய்களையும், புரட்டுகளையும் புராணங்கள், வேதங்கள் என்றுச் சொல்லி ஏமாற்றி ஊரின் நடுவில் அமர்ந்து கொண்டனர்.

அதுமட்டுமல்ல, இந்தியா முழுமையும் நம்பூதிரி, ஐயர், ஐயங்கார், முகர்ஜி, பேனர்ஜி, சாட்டர்ஜி, சித்பவன் (ஆர்.எஸ்.எஸ் தலைமை வகிக்கும் பிராமணர்கள்), பண்டிட், பட்டேல், மிஸ்ரா என்ற பெயர்களில் தங்களை வேறு இனமாக காட்டிக்கொண்டு, இந்தியா முழுமையும் ஊடுறுவி இருக்கிறார்கள் என்று தொல் திருமாவளவன் பேசி இருப்பதைப் பாருங்கள்.


இந்தியாவை இவர்களிடமிருந்து மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானதா என்றால் எளிதுதான். 

தமிழர்களுக்கு பார்ப்பனிய நலனுக்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போல ஒரு அமைப்பும் இல்லை. 

பார்ப்பனியம் எப்படி ஒரு அமைப்பாக உலகெங்கும் சாதி வன்மத்தை இன்னும் முனை கருகாமல் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதற்கு 2002ம் ஆண்டில் வெளியான “The Foreign Exchange of Hate - IRDF and the American Funding of Hate" என்ற புத்தகத்தில் இருந்து ஒரு விளக்கப்படம் கீழே. 

காலத்தின் கட்டாயமாக அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு அமைப்பினை பார்ப்பன சதிகளுக்கு உட்படாமல் உருவாக்கிட வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் வாரிசுகள் படிப்பின்றி, கல்வியின்றி பார்ப்பன அடிமைகளாக கிடக்க நேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கும் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும். கோவில்களுக்குள் பூசை செய்தல் வேண்டும்.

மேற்கண்ட செய்திகள் எல்லாம் காலம் காலமாக பார்ப்பனியத்துக்கு, அதன் சாதிய வன்மத்துக்கு எதிராக மானுடத்தின் மீது அன்பு கொண்டவர்களால் எழுதப்பட்டது.  இது எதுவும் என் கருத்து அல்ல. நான் படித்தவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மை எதுவெனப் புரிந்து கொள்ள முயலுங்கள். 

தமிழ் பரப்பும் பெரியார் - மோடி - டாக்டர் கே.பி.இராமலிங்கம்

போற இடம் தெரியாமல், வாழ வழி தெரியாமல், தமிழ மக்களாலும், அரசியலிலும் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒருவர் கேபி ராமலிங்கம்.

பார்ப்பனர்களுக்கு ஊழியம் செய்வதற்காக கட்சி என்ற பெயரில் பிற இனத்தவரை அடிமையாக்கி, அவ்வப்போது பதவி கொடுத்து வரும் பி.ஜே.பி கட்சியில் இணைந்து ஏதோ ஒரு பதவியில் இருக்கிறார். 

ஒவ்வொரு மனிதரின் கடைசி புகலிடம் சுடுகாடு. வேற வழியே இல்லை.

தினமணியில் ஒரு கட்டுரை. தலைப்பைப் படித்ததும் ஆர்வமாகப் பார்த்தால், கேபி ராமலிங்கம் அவர்கள் பிரதமர் மோடியைச் சொரிந்து விடும் கட்டுரையைக் கண்டேன்.

பரிதாபம். வேறு வழி இல்லை போலும். 

தாயையும், தமிழையும் பழிப்போர் அற்றுப் போவர் என்பதை மறந்து போனார் போலும். இவரின் எதிர்காலமும், வாரிசுகளையும் நினைக்கையில் பரிதாபம்.

பசி காதடைத்து இருக்குமோ?

இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கார் என்றார். இன்ஸ்டண்டாக ஒரு எம்.பி பதவி பார்சல் ஆனது.

அதைப் போல பிரதமர் மோடியை பெரியார் என்றால் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார் போல. 

பெரியார் என்றால் ஒன்றும் கிடைக்காது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

கேபிராமலிங்கத்துக்கு ஒரு பழமொழி சொல்ல வேண்டும்.

நக்குகிற நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான். 

புரிந்தால் சரி.

இனி தினமணியில் வெளியான தமிழ் பரப்பும் பெரியாரின் அருமை பெருமைகளைப் படியுங்கள். சும்மா அள்ளும். பாவம் பிரதமர் மோடி அவர்கள். இவர்கள் சொரியும் சொரிக்கு எந்தப் பதவியைக் கொடுக்க வேண்டுமென குழம்பி நிற்கப் போகிறார்.

இதோ கேபி.ராமலிங்கத்தின் கட்டுரையில் ஒரு சொரி சொட்டு.

22 இந்திய மொழிகளில் தமிழும் இருப்பதை ஏட்டளவிலிருந்து நாட்டு மக்களிடம் கொண்டு சோ்த்திருப்பது மட்டுமல்லாமல், தமிழுக்கு உலக அரங்கில் ஏற்றம் தந்து புகழ்உச்சியில் மகுடம் சூட்டி மகிழ்பவா் நம் பிரதமா் மோடி!

தமிழுக்குப் பெருமைசோ்த்த அப்பெருமகனாரின் பிறந்த தினம் செப்டம்பா் 17. அவா் பல்லாண்டு வாழ்க என நாம் வாழ்த்தும்போது தமிழன்னையும் ‘தமிழ் வளா்க்கும் பெரியாா் மோடி’ வாழ்க என வாழ்த்துவாள்.

இத்தனை நாளாக தமிழ் உலகம் அறிந்திருந்திராத அரும் பெரும் உண்மையை, தமிழக இலக்கியவியாதிகள் கவனித்து, இனி நடக்கவிருக்கும் உலகத்திலே உயர்வான தமிழர்களின் புகழ் பரப்பும் ஒரே விருதான, ‘விஷ்ணுபுரம் விருது’ விழாவிலே நம் தமிழ் பெரியார் மோடியை அழைத்து வந்து விருது வழங்கும்படி செய்தல் வேண்டும்.

இதை ஒவ்வொரு தமிழரும் கடமையாகச் செய்தல் அவசியம். இல்லையென்றால் தமிழ் உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.

சொரிந்து விடுவதால் எம்.பி பதவி கிடைக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். சும்மா கிடைக்குமா பதவி?

கட்டுரையைக் கீழே இருக்கும் இணைப்பில் படியுங்கள்.மனைவியுடன் உறவு குற்றச் செயல்

ஆண்கள் உலகம் சந்திந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுள் பெரிது பாலியல் குற்றங்கள். வேறு வேலையே இல்லாமல் கையில் குஞ்சாமணியைப் பிடித்துக் கொண்டு, கண்களில் தென்படும் பெண்களை எல்லாம் கற்பழிக்கத் திரிவது போலவே ஆண்களால் நடத்தப்படும் ஊடகங்கள் காம வெறிபிடித்தவர்கள் ஆண்கள் என்பது போல செய்திகள் வெளியிட்டு வருவது சாபக்கேடு. 

ஆண்களுக்கு ஆண்களே விரோதி.

சில ஆண்கள் பெண்ணீயம் பேசுவார்கள். பெண்ணீயம் பேசும் ஆண் கொக்கி. சிக்கும் சிலைகளைச் சிதைப்பது நோக்கம். 

விஷ்ணுபுரம் விருது புகழ் இலக்கியவாதிகளின் கொக்கி போல.

பெண்கள் அழகு சாதனப் பொருட்களின் 2021 ஆம் ஆண்டின் மொத்த மதிப்பு 288 அமெரிக்க பில்லியன் டாலர்கள். உடைகள் வேறு கணக்கு. மயக்கம் வரும்.

மில்லியன் டாலர் கணக்கில் சுனோ, பவுடர் இத்தியாதிகளை அப்பிக் கொண்டிருக்கும் பெண்கள், யாருக்காக இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது இந்திய அரசியலமைப்புக்கே வெளிச்சம்.

ஆண்கள் மட்டுமே பெண்களின் மீதான கொடும் செயல்களைச் செய்வதாகச் சொல்கிறார்கள். 

பெண்கள் உத்தமர்களின் உருவமாய் திகழ்கிறார்களாம். நம்பிக் கொள்ள வேண்டும்.

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ஆண்கள் பாலியல் குற்றவாளிகளா? பெண்களா? என்று கேட்டால், அவர் தன் இனத்துக்குத்தான் ஆதரவாக இருப்பார். அவர் ஒரு ஜி.ஆர்.சு.

ஹெலிகாப்டர் வேண்டும், தனி வீடு வேண்டும், லட்சங்களில் சம்பளம் வேண்டும், மாமியார்-மாமனார் இருக்க கூடாது, அக்கா-தங்கை ஆகவே ஆகாது, இப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டு மணாளனைத் தேர்த்தெடுப்பார்கள் பெண்கள்.

கட்டிக்கிட்டு கூட்டிக்குப் போய் பெட்டில் படுக்க வைத்து, பூக்களால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டி, காலையில் ஒருவாட்டி, மாலையில் ஒரு வாட்டி, நடு இரவில் ஒரு வாட்டி என சாமி கும்பிட்டு கண்ணில் இட்டு பயபக்தியுடன் கும்பிடணும் போல. அப்படி கும்பிடுபவன் தன் நல்ல கணவன்.

கல்யாணம் கட்டிக் கிட்டு என்னதான் சுகத்தை ஆண்கள் அடைகிறார்கள்? கடைசி வரை பழிதான் சுமக்கின்றார்கள். 

ஒவ்வொரு மனைவிக்கும் முதல் எதிரி அவரவர் கணவன் மட்டுமே. 

என்னதான் செய்வது ஆண்கள்? சொன்னால் பளிச்சென்று கேட்டு விடுவான்கள் என்பார் என் தோழி.

ஆண்கள் தங்களின் இனத்துக்கு செய்யும் உபகாரமாக ஒரு வேண்டுகோள்.

இனிமேல் பெண்களைக் கவனிக்காதீர்கள், பார்க்காதீர்கள், பாராட்டாதீர்கள். நடிகைகளை நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்க்காதீர்கள். 

ஒரு மாதம் விரதம் இருந்துதான் பாருங்களேன். அட்லீஸ்ட் ஒரு வாரமாவது இருங்களேன் பார்ப்போம்.

என்ன கெட்டுப் போகப் போவுது? 

ஆண்களுக்கு கற்பு இல்லையா? என்ன கற்பா? அப்படின்னா என்னாப்பான்னு பிஜேபி குஷ்பூ கேட்பார். 

பீதி உண்டாகிறது டிவிக்காரனுவ குரைக்க ஆரம்பிப்பானுங்களே என.

கீழே இருக்கும் செய்தியைப் படித்து விட்டு தலையைப் பிய்த்துக் கொள்ளுங்கள். 

செய்தி: தினமணி 17.09.2022 கோவைப் பதிப்பு

மனைவியைக் கட்டாயப்படுத்தினால் குற்றம், கணவனைக் கட்டாயப்படுத்தினால் குற்றமில்லையாம்.  இதையெல்லாம் யார் கேட்பது?

நம்ம பிரபல நீதிபதி மாரிதாஸ் சவுக்கு சங்கர் புகழ் - ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களிடம் வழக்குப் போட வேண்டும். 

Monday, September 12, 2022

நிலம் (101) - நில விற்பனையில் அதிரடிக்கும் புதுவித மோசடி

நிலம் தொடரின் 101 வது பகுதி எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நான் எழுதிய பதிவுகள் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். எனது 20 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன், தற்போது நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கின்றார்கள். 

நேரமும், சூழலும் அமைந்தால் ஒருவரை அழித்துதான் ஆக வேண்டுமென்றால், மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு (அப்படி ஒன்று இருக்கிறதா?) மனம் கூசாமல் அழிக்கும் செயலைச் செய்கிறார்கள்.

இன்ஸ்டண்ட் பணம், மாயாஜாலமாக வந்து விடாதா என்று பரபரக்கின்றார்கள். 

பணம் தகுதி உடையவர்களிடம் வந்து சேரும். அந்தத் தகுதியை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை? இந்த உலகம் அதைச் சொல்லித் தருவதும் இல்லை.

உடனே ஐ.டி, இஞ்சினியர், டாக்டர், படிப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். படிப்பு என்பது ஒரு தகுதி. அவ்வளவுதான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 

அனுபவம் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. இரண்டுக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறது. படிப்பறிவு பட்டறிவாக மாற வேண்டும். 

வேலைக்குச் செல்வது, செக்குமாடு போல குரலுக்கு அடிபணிந்து வேலை செய்வது என்பது பாதுகாப்பான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதுவல்ல வாழ்க்கை என்பது ரிட்டயர்ட் ஆன பிறகு தான், தான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது எனத் தோன்றும்.

கார், வீடு, பணம் எல்லாம் இருக்கும். ஆனால் வாழ்க்கை ஓடிப்போயிருக்கும். கண் முன்னால் நோயும், மரணமும் நின்று கொண்டிருக்கும். 

வேதாந்தம் பேசாதே, மாதச் சம்பளம் தான் பாதுகாப்பான வாழ்க்கை என நினைப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது. 

விசித்திரமான வாழ்க்கையில் நாம் எவரும் நம் வாழ்க்கையை வாழவே இல்லை என்பது சாபக்கேடு. அதை உணர்ந்து கொள்ளவே முடியாத அறிவுதான் நாகரீகம் என்பது அதை விடக் கொடுமை.

இனி அதிரடிக்கும் புதுவித மோசடி என்னவென்று பார்க்கலாம்.

சென்னையில் இருக்கும் ஒரு வாடிக்கையாளார் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு விலை பேசி, அட்வான்ஸ் கொடுத்து விட்டு, பேப்பர்களை வாங்கி என்னிடம் லீகலுக்குக் கொடுத்தார். நானும் லீகலுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று, ஆவணங்கள் ஆய்வு வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் நில உரிமையாளார் அட்வான்ஸ் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நில உரிமையாளரிடம் கையொப்பம் பெறச் சென்றேன். 

அவர் நான் கொடுத்த பேப்பரில், என்ன எழுதி இருக்கிறது என்றுப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டார்.  உள்ளே அலாரம் அடித்தது. ஏதோ சரியில்லையே எனத் தோன்றியது.

வாடிக்கையாளருக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கலாம். எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாமென்று நினைத்தேன்.

அடுத்த ஒரு மாதத்தில் கிரையப்பத்திரம் தயார் செய்து விட்டு, வாடிக்கையாளருக்கு அழைத்தால் கிரையம் நடக்கவில்லை என்றார். 

காரணமென்ன என விசாரித்தால், நில உரிமையாளரின் அம்மா, நிலத்தை விற்க வேண்டாமென்றுச் சொல்லி விட்டதால், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தருவதாகச் சொல்லி விட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார். அம்மா சூசைடு செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் திரைக்கதை எழுதி இருக்கிறார் நில உரிமையாளர்.

ஆனால் அது காரணம் அல்ல என்று எனக்குத் தெரிந்து விட்டது.

அந்த நில உரிமையாளரின் மொத்தச் சொத்து வரலாறும் என்னிடம் இருந்தது. அதில் ஒரு சொத்து வங்கியில் அடமானக்கடனில் இருந்தது. வங்கியில் நண்பர் மூலமாக விசாரித்தேன். வங்கி மேனேஜர் நில உரிமையாளரை பாராட்டி மகிழ்ந்தார். ஏலம் போக இருந்த சொத்தினை மீட்டு விட்டார் இந்தப் பணத்தை வைத்து. அடுத்தக் கடன் வேறொரு வங்கியில் வைத்து வாங்கிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவார். 

வட்டி இல்லாக் காசு ஆறு மாதத்திற்கு. கொஞ்ச நஞ்ச தொகையில்லை சுமார் இருபது லட்சம். அத்தனையும் அக்கவுண்டில் வாங்கினார். அந்த அக்கவுண்டில் இருந்து  லோன் அக்கவுண்டுக்கு பணம் கட்டி சொத்தினை மீட்டு விட்டார்.

இப்படித்தான் இப்போது பெரும்பாலும் நடக்கிறது. இனி நடையாய் நடந்து  அப்பணத்தை வாங்க வேண்டும். கோர்ட்டில் வழக்குத் தொடுத்தால் என்ன ஆகும் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மொத்தப் பணமும் வருவதற்குள் எல்லாம் செலவாகி இருக்கும். மன உளைச்சல் வேறு.

இப்படி ஒரு பகீர் திட்டத்தை இந்தியாவெங்கும் பலரும் செயல்படுத்தி வருவதாக பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன்.

சொத்தினை விலை பேசி அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்வதற்குள், வேறொரு புரோக்கர் ஒரு ஆளைச் செட் செய்து, அதிக விலைக்கு கேட்பார்கள். அதை நம்பும் நில உரிமையாளர் விலையை அதிகம் சொல்வார். இல்லையென்றால் அட்வான்ஸைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பார். 

ஒரு புரோக்கர் சம்பாதித்து விடக்கூடாதே என்று இன்னொரு புரோக்கர் இந்த தகிடுதத்தைச் செய்வார். இப்படித்தான் பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகாமல் கிடக்கின்றன.

கடன் இருக்கா, சொத்தினை விற்பனை செய்கிறேன் எனப் புரோக்கர்களிடம் சொல்ல வேண்டியது. எவனாவது ஏமாந்தால் அவனிடமிருந்து தொகையைப் பெற்று கடனைக் கட்டி விட்டு, ஒரு சிலர் கம்பி நீட்டி விடுவார்கள். இதில் ஊர் பிரசிடெண்ட், கவுன்சிலர், மாவட்டம், ஒன்றியம், கிளை, வட்டம், யெம்ம்ல்லே, மினிஸ் என்று எவராவது உள்ளே வந்து விட்டால் அதோகதிதான்.

இப்போதெல்லாம் நிலம் வாங்க வரும் ஆள் எப்படி என கணித்து விடுவார்கள். அவர்களுக்கு ஏற்ப ஸ்கெட்ச் தயாராகி விடும். இதுவெல்லாம் அறியாமல் விட்டில் பூச்சிகளாய் விடுவர் ஒரு சிலர்.  இன்னும் ஊட்டியில் நாற்பது இலட்சத்தை அட்வான்ஸாக கொடுத்தவருக்கு கிரையமும் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை, நிலத்தின் உரிமையாளரையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை. நடையாய் நடக்கிறார். முன்பே இது பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன்.

இந்தபதிவினை விழிப்புணர்வுக்காக எழுதி இருக்கிறேன். எவரையும் குறை சொல்லவோ அல்லது குற்றம் சாட்டவோ எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பதிவு செய்திருக்கிறேன். 

சமீபத்தில் கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்தவர் ஒருவர், நான் அதை எழுதிக் கொடுக்கவே இல்லை என வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் பாருங்கள். பணம் கொடுத்த ஆளுக்குத் தூக்கம் வருமா? நினைத்துப் பாருங்கள். இனி வழக்கு, புகார் என்று போனால் எத்தனை வருடமோ? இதில் மற்றுமொரு பிரச்சினை - ரொக்கமாகக் கொடுத்த தொகை என்னவாகும்?

நாமம் தான்.

இனி கவனமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். 

யாரைத்தான் நம்புவதோ? எப்படித்தான் நிலம் வாங்குவதோ? என்று தோன்றும். சின்ன விஷயம் தான். மிகச் சரியாகச் செய்ய வேண்டும். அது என்ன? அது என் தொழில்? அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்?

வாழ்க வளமுடன்...!

எனது “கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகம் டிஜிட்டல் வடிவில் அமேசானில் விற்பனைக்கு இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். நிச்சம் அந்தப் புத்தகம் உங்களுடன், உங்கள் மனதுடன் பேசும் என நம்புகிறேன். 

புத்தகத்தின் விலை ரூ.120/-

படத்தினைக் கிளிக் செய்தால் அமேசான் லிங்க் கிடைக்கும்.