Tuesday, June 28, 2022
தர்மம் தலைகாக்குமா? ஓர் உண்மைச் சம்பவம்
Monday, June 20, 2022
நரலீலைகள் (14) - விக்கிரோம் திரை விமர்சனம்
”இன்னிக்கு 2000 கிலோ டிரக்ஸ் வந்திருக்கு. உம் போலீஸை அனுப்பி பிடிச்சு பேப்பர்ல போட்டுக்கோ. கெட்ட பேரா? அப்படியா? என்ன கேள்வியெல்லாம் கேக்கிறாய்? சொல்றதைச் செய்டா வெண்ணெ”
அன்றைக்கு தினசரிகளில் துறைமுகத்தில் கண்டெய்னர்களில் பதுக்கி வைத்த 30000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது என்ற செய்தி வெளியாகி இருந்தது. மக்களில் பெரும்பாலானோர் அரசு அது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.
இந்த தகவல் உளவாளிகள் மூலம் அரசுக்குச் சென்றது. அஸாசிலின் அரசியல் தந்திரத்தை எண்ணி ஃப்ளையருக்கு மகிழ்ச்சி உண்டானது.
“இன்னிக்கு 50000 கோடி ஹெராயின் பிடிபட்டது என்று பேப்பரில் செய்தி வரணும். புரிஞ்சுதா?”
அடுத்த இரண்டாவது மாதத்தில் தினசரிகளில் பெரிய அளவில் போதைப் பொருள் பிடிபட்டது என்ற செய்தி வெளியானது. மக்கள் அரசின் இந்தச் செயலை பாராட்டி மகிழ்ந்தனர்.
”கதையே இல்லாத ஸ்கிரிப்டை நன்றாக படம் பிடிக்கும் இயக்குனர்களைக் கண்டுபிடித்து ஒரு லிஸ்ட், விலை போகாத பெரிய நடிகர்கள் இருப்பார்கள் அவர்களின் லிஸ்ட், வெப் சீரிஸ் எடுக்கும் இயக்குனர்களின் லிஸ்ட்டும் வேண்டும்” என்றான் அஸாசில்.
ஒரே நாளில் அஸாஸில் கையில் லிஸ்ட் கொடுக்கப்பட்டது.
அந்த லிஸ்டில் பலரை டிக் அடித்தான் அஸாசில்.
* * *
”ஏம்பா மாயா, இதென்ன அஸாசில் இப்படி ஒரு லிஸ்ட் கேட்டிருக்கானே? எதற்காக இருக்கும்? உனக்கு ஏதாவது புரியுதா?” என்றான் சந்து.
”மனம் எப்போதும் நெகட்டிவ் அதாவது எதிர்மறை செயல்களின் பால் ஈர்ப்புக் கொண்டது சந்து. மனமொரு குரங்கு. நல்லவைகளை நாடுவதை விட தீயவைகளின் மீதான கவனம் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் தான் நல்லதையே கேளுங்கள், நல்லதையே பாருங்கள் என்றுச் சொல்வார்கள்”
“சரி, நீ சொல்வதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சந்து, ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் அல்லவா? அவர்களை நோக்கி டிரக்ஸ் வலை வீச அஸாசில் திட்டம் போட்டிருக்கிறான்”
“என்ன? டிரக்ஸா அப்டின்னா போதைப் பொருள் தானே?”
“ஆமா சந்து, இளைஞர்கள் மனசு எப்போதும் ஆபத்தான செயல்களை விரும்புவார்கள். அதைச் சாதனையாக நினைப்பார்கள் அல்லவா? பைக்கில் ஸ்டண்ட் செய்வது, நடிகர்களைப் பார்த்து ஹேர் கட் செய்து கொள்வது, நடிகர்கள் போலவே டிரஸ் போட்டுக் கொள்வது இப்படியாக உணர்ச்சிகளின் கலவையாக இருப்பார்கள். அவர்கள் கையில் ஸ்மார்ட் போன் இருக்கிறது அல்லவா? அதை வலையாகப் பயன்படுத்தி சினிமா, வெப்சீரிஸ் மூலம் போதைப் பொருள் விற்பனையை அதிகரிக்கப் போகின்றார்கள்”
”என்ன மாயா சொல்கிறாய்?”
”ஆமாம் சந்து, போதைப் பொருள் உடலுக்கு கேடு என்று ஹீரோ லெக்ஷர் அடிப்பார். போதைப் பொருள் கடத்தலை ஹீரோ தடுக்கிறார் என்று தான் கதை எழுதுவார்கள். ஆனால் படத்தின் கரு என்ன? போதைப் பொருள். அதென்ன போதைப் பொருள். ஒரு தடவை அனுபவித்துப் பார்ப்போம். பின்னால் விட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் விட முடியாது. குடிக்கும் போது உண்டாகும் போதையை விட மிக அதிக போதையைத் தருகிறது டிரக்ஸ் என்கிறது பல படங்கள், வெப் சீரிஸ்கள்.”
”மாயா, இதென்ன பெரும் கொடுமையாக இருக்கிறதே?”
“கொடுமை தான் சினிமாவும், வெப் சீரிஸ்களும் இளைஞர்கள் மீது வலையை வீசுகின்றன. இவ்வகையான படங்களையோ, சீரிஸ்களையோ பார்க்கும் இளைஞர்கள், மனதின் நெகட்டிவ் தன்மையால் ஈர்க்கப்படுகிறார்கள். தூண்டில்கள் அதற்கான வேலையைச் சரியே செய்து விடும்”
“அய்யோ...! மாயா.... கொடூரம்...!”
“என்ன செய்ய முடியும் சந்து? மனிதர்கள் நம்பி நம்பியே அழிபவர்கள் தானே, கீழே இருக்கும் படங்கள் இந்தியா டுடே அக்டோபர் 2022 இதழில் வெளியானது சந்து, இதைப் பாரேன்”
Wednesday, June 15, 2022
கேஜிஎஃப் 2வில் பசப்புறுபருவரல்
அரசியல், பொருளாதாரம், அதிகாரம், ஆணவம், அக்கிரமம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்து விட்டு பசலை நோய் பற்றி பார்க்கலாம். அதென்ன பசலை நோய் என்கின்றீர்களா இப்போதைய மனிதர்களுக்கு சுத்தமாக தெரிந்து இருக்காது.
பசலை நோய் கொரானா நோயை விடக் கொடியது. கொரானாவுக்கு மருந்துண்டு. பசலை வித்தியாசமான நோய்.
காமத்துபாலில் பசப்புறுபருவரல் என்றொரு அதிகாரத்தின் கீழ் நம் திருவள்ளுவர் பத்து திருக்குறள்களை எழுதி இருக்கிறார். அந்தளவுக்கு திருவள்ளுவருக்கு பசப்புறுபருவரலின் மீது என்ன ஆர்வம்? இருக்கிறது.
ரசிகனய்யா அவர். ரசிகன். கலா ரசிகன்.
காமத்தைச் சிற்றின்பம் என்பார்கள். சிற்றின்பமல்ல அது பேரின்பம். இயற்கை உயிர்களுக்கு கொடுத்திருக்கும் கொடை. ஐந்தறிவு கொண்ட உயிர்களுக்கு காமம் என்பது படைப்பு செயலாக்கம். ஆனால் ஆறறறிவு உயிருக்கு காமம் என்பது பேரின்பம்.
காமம் இன்றி இவ்வுலகம் இயங்காது. அரசியல், பொருள், அதிகாரம், போர், அக்கிரமங்கள் எல்லாம் காமத்தின் காரணமாகவே நடக்கிறது.
காமம் அற்ற ஒருவன் வாழவே தகுதியற்றவன் என்கிறது இயற்கை. ஓஷோவை நான் இங்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.
பசி என்பது இயற்கை. அடக்குதல் என்பது வன்முறை.
காமத்தை அடக்கி ஆண்டால் கடவுளை அடையலாம் என்பார்கள்.
கட உள் என்றால் என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு உயிர்களின் உள்ளத்தில் இருக்கும் காமத்தைக் கடப்பது தான் என்று அர்த்தம். சண்டைக்கு வந்து விடாதீர்கள். தமிழ் மொழி கொடுத்திருக்கும் வசதி இது.
கட உள் என்றால் உள்ளத்தைக் கட என்றும் அர்த்தம் வரும். நான் எழுதி இருப்பது போலவும் வரும். ஆகவே சர்ச்சைகளைத் தவிர்த்து தொடர்ந்து படியுங்கள்.
விரும்பவும், வெறுக்கவும் செய்வது காமமே. உலகை உய்விக்க வந்த உணர்வு காமம்.
அடங்கவே அடங்காத உணர்வு காமம். ஆண்களின் காமத்தினை விட பெண்களின் காமம் எரிமலை போன்றது. அதன் வீரியம் தெரிந்த திருவள்ளுவர் தனி அதிகாரமே எழுதி உள்ளார்.
பசப்புறுபருவரல் என்றால் பெண்களின் மேனி மீது ஊறும் பசலை. பாம்பு போல் ஊர்ந்து உடலெங்கும் பரவும் வியாதி. இந்த வியாதி எப்போது வரும்? எப்படி தீர்ப்பது?
இப்போது கே.ஜி.எப் பாடலுக்குப் போகலாமா?
இந்தப் பாடலைத் தனியாக அமர்ந்து கொண்டு பார்க்கவும். பார்த்து விட்டீர்களா? கீழே படியுங்கள்.
ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே
(அகநானூற்றுப் பாடல்)
பாசி படர்ந்த குளத்தில் கைகளால் பாசியை விலக்கி விட்டு நீரை அருந்திச் செல்வர். விலகிய பாசி மீண்டும் ஒன்று சேர்ந்து விடும். அதைப் போல காதலன் (தலைவன்) காதலியை தழுவும் போதெல்லாம் விலகிய பசலை நோய், அவன் விலகிய போது மீண்டும் படர்ந்து விடுகிறது என்கிறது அகம் நானூறு.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
காமத்துப்பால் 1183 வது திருக்குறள்
அவர் என்னைப் பிரிகிற போது பிரிவெனும் காதல் துன்பத்தையும், பசலையையும் எனக்குக் கொடுத்து விட்டு அதற்கு கைமாறாக எனது நாணத்தையும், என் அழகையும் கொண்டு போய் விட்டார் என்கிறாள் பசலை நோயில் சிக்குண்ட காதலி.
புல்லிக் கிடந்தேன் பெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
காமத்துப் பால் 1187வது திருக்குறள்
காதலனுடன் தழுவிக் கிடந்தேன். சற்றே விலகினேன். அவ்வளவுதான் பசலை என்னை அள்ளிக் கொண்டது என்கிறாள் காதலி.
அதென்னதான் செய்கிறது காதலியை?
உடல் சோரும், உள்ளம் நடுங்கும், உதடுகள் வெம்மையினால் காயும், நாக்கு வரளும், உடல் மெலியும், நிற்க முடியாது, அவனின் நினைப்பாலே உடல் ஏங்கும். காற்றுச் சுடும், வெயில் குளிரும்.
காமத்தில் தகிக்கும் சூடு. காதலனுடன் முயங்கிய காதலிக்கு காமம் கொடுக்கும் நோய். பசலை நோய்.
பசலை நோய் காதலனை நீங்கும் போது காதலியைப் பீடிக்கும் நோய். பசலை நோய் பெண்ணுக்கு மட்டுமல்ல. ஆணுக்கும் உண்டு. அங்கே அவள் காத்திருக்கிறாள் என்று உடல் துடித்து நினைவெல்லாம் நித்யாவென்றிருக்கும் நிலையையும் பசலை தான்.
நாயகி நாயகன் கை பிடித்து இழுத்துச் செல்கிறாள். கதவு மூடப்படுகிறது. சிற்றின்ப மலர்கள் வாசம் வீசுகின்றன. மறுநாள் நாயகியைச் சுற்றி வரும் மலர்களின் வாசத்தில் அவர் ஆடுகிறாள். நாயகனைத் தேடுகிறாள். அவனைக் காணாது எதிரே வந்த பெண்ணைக் கட்டித் தழுவுகிறாள்.
வாயிலில் அமர்ந்து அவன் வரவுக்காக காத்திருக்கிறாள். நாயகன் வருகிறான். அவனைக் கண்டதும் பசலை நோயால் பீடிக்கப்பட்டவள் நோய் தாளாது அருகிலிருந்த பணிப்பெண்ணைக் கட்டி அணைக்கிறாள். நாயகன் கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறான். பசலை நோய் விலகா நாயகி ஓடிச் சென்று அவனைக் கட்டித் தழுவுகிறாள். நாயகனைத் தழுவும் போது விலகி ஓடி விடும் பசலை நோய்.
பசலை நோய் நீங்க பெரும் நாயகி ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறாள். பெண் ஆளப்படுபவள். பெண்மை படர்தலில் இன்பம். இரு மனமும் ஒன்றிய நிலையில், அந்த நொடியில் உடல்கள் உணரும் நிலையே இன்பம். மனமற்ற நிலையில் உடல் வழி நுகரப்படும் ஈடு சொல்ல முடியா நிலையே காமனின்பம்.
காமம் கெடுதி அல்ல. காமம் தவறு என்றுச் சொல்லும் ஆன்மீகம் தவறு. காமமற்ற எதுவும் இயற்கை அல்ல. இயற்கைக்கு எதிரான எல்லாமும் தவறே.
கேஜிஎஃப் படக்காட்சிகள் வழியே பசலை நோயைப் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு வாழ்த்துகள்.
படத்தில் நடித்த யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டிக்கும் வாழ்த்துக்கள்.
காட்சிகளின் தொடரமைப்பு பசலை நோய் பீடித்த நாயகியை பார்ப்பவர்கள் உணரச் செய்யும் வித்தை ஆஹா. மனதைக் கவ்விக் கொள்கிறது பாடலும் காட்சிகளும்.
அக நானூறு பாடலும், திருக்குறளின் காமத்துப்பாலும் ஒருங்கே காட்சிகளாய் விரிகிறது.
காதலும் காமமும் முழுமையாக கிடைக்கப் பெறாதவர்களே பாபத்துக்குரியவர்கள்.
பிரசாந்த் நீல் கலா ரசிகன்....!
பசலை - பசப்புறுபருவரல் - இல்லறத்தின் மருந்தற்ற நோய்
Wednesday, June 8, 2022
நரலீலைகள் (13) - சொம்புத்தண்ணீரும் இணையதள சந்தாவும்
”அகலிகை கதை தெரியுமா சந்து உனக்கு?”
”நீ வேற மாயா, அதெல்லாம் யாருன்னே தெரியாது. பேரைப் பார்த்தா பொம்பளைன்னு தெரியுது? அதாரு?”
”பாற்கடலைக் கடையும் போது அமிர்தத்துடன் பிறந்தவள் அகலிகை. அகலிகைன்னா அழகு குறைவு இல்லாத உடலுடையவள் என்று அர்த்தம். இவளைப் பார்த்ததும் தேவர்கள் மோகித்து அவரவருக்கு பிரம்மனிடம் அகலிகையை எனக்கு கொடுங்கள் என்று கேட்க இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டு ஒரு போட்டி வச்சாரு பிரம்மன்”
”அட்ட...! என்னா போட்டி மாயா?”
அகலிகையை எப்படியாவது போட்டுத் தாக்கனும்னு இந்திரனுக்கு ஆசை. யார் இரண்டு தலையுடைய பசுவை வலம் வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அகலிகை என்று சொல்லி விட்டார் பிரம்மன். தேவர்கள் எல்லோரும் யோசித்து யோசித்துப் பார்த்தார்கள். எங்கே போய் இரண்டு தலை உடைய பசுவைக் கண்டுபிடிக்கிறது, அதற்கப்புறம் அகலிகையை மேட்டரு பன்னுவது என்ற சூட்டில் தவித்துப் போய் மீண்டும் பிரம்மனிடம் சென்றார்கள். இரண்டு தலை உள்ள பசுவைப் பார்த்ததே இல்லை, அதனாலே வேற போட்டி வையுங்கன்னு சொல்ல, அவரும் யாரு உலகை முதலில் சுற்றி வருகின்றீர்களோ அவர்களுக்கு தான் அகலிகை என்றுச் சொல்லி விட்டார்.
ஆளாளுக்கு உலகை வலம் வர அவரவர் வாகனங்களில் கிளம்பி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு நாறிப் போன நாதாரி நாரதர் வேலை பார்த்துச்சே ’சோ’மாறி போல தேவலோகத்தில இருக்கிற நாரதர் அகலிகையை கவுதம முனிவருக்கு கட்டி வச்சுடனும்னு திட்டம் போட்டு ஒரு கருப்பிடித்து குட்டி போடும் நிலையில் இருக்கும் காராம் பசுவை கொண்டு போய் கவுதம முனிவரின் ஆசிரமத்தின் முன்னாலே கட்டி விட்டு முனிவரை அழைத்தார். வெளியே வந்த கவுதம முனிவரை குட்டி ஈன்ற போது கன்றின் முகம் தோன்ற, அந்த நிலையில் பசுமாடு இரண்டு தலையுடையதாக இருப்பதைக் காட்டி, பசுமாட்டைச் சுற்றி வரச் சொன்னார் நாரத முனிவர். அதன்படியே முனிவரும் செய்ய பிரம்மன் விதித்த போட்டியை நிறைவேற்றிய கவுதம முனிவருக்கு அகலிகையை கட்டி வைத்து விட்டார் பிரம்மன்.
உலகம் சுற்றி வந்து பார்த்த இந்திரனுக்கு தலையே சுற்றியது. உலகத்தை வலம் வருவதற்குள் கவுதம முனிவருக்கு பிள்ளையே பெற்றுக் கொடுத்து விட்டாள் அகலிகை.
வெறுத்துப் போன இந்திரனுக்கு அகலிகையை எப்படியாவது டீல் போட்டு விடனும்னு துடியா துடித்தான்.
ஒரு நாள் பின் இரவில் சேவல் போல கூவினான். கவுதம முனிவர் காலைக்கடன் கழிக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார். அப்போது முனிவராக மாறி அகலிகையை மேட்டர் போட அணுக, அவளும் புருஷன் தானே என தழுவிக் கொள்ள கசமுசா நடந்து கொண்டிருந்தது.
ஆற்றுக்குப் போன முனிவருக்கு விடிகாலை நேரமில்லையே என்ற சந்தேகத்தில் வீட்டுக்கு வர, அகலிகையை உடன் மேட்டர் முடித்த இந்திரனைக் கண்டு கொண்டார் முனிவர். உடனே சாபம் விட்டார்.
அகலிகையை கற்பு தவறிய நீ கல்லாய் போக என்றுச் சொல்லி விட, சாபத்தை ஏற்றுக் கொண்டாள். பின்னர் அகலிகை முனிவரைப் பணிந்து சாப விமோசனம் கேட்க, தசரத முனிவரின் மகனான இராமன் பாதம் பட்டால் உன் சாபம் தீரும் என்றுச் சொல்லி விட்டார்.
இந்திரனுக்கு வேறு சாபம். அது இங்கின வேண்டாம்.
அகலிகை இராமன் பிறந்து அதான்பா மசூதியை இடித்து விட்டு ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிற இடத்தில் அருள் பாலிக்க இருக்கும் இராமன் பிறந்து வளர்ந்து இளைஞனாகி நடந்து வரும் போது சாப நிவர்த்தியாகி அகலிகை மீண்டும் உருக்கொண்டு தெய்வலோகம் சென்றாள்.
”ஏன் மாயா? ஒரு சொம்புத் தண்ணீரில் முடிய வேண்டிய மேட்டருக்கு இத்தனை வருடம் காத்திருக்கணுமா அகலி? பாவம் மாயா அந்தப் பொம்பள”
“என்னடா சொல்றே?”
“அதான்பா, மேட்டரு முடிஞ்ச உடனே கழுவி விட்டா போச்சு, அம்புட்டுதானே” என்றான் சட்டென்று சந்து. ஏதோ சொல்ல வந்த மாயாவைப் பார்த்து, ”மாயா, நிறுத்து நிறுத்து” என்று கத்தினான் தங்கவேல்.
மாயனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்ன தங்கவேல் இப்படிக் கத்துகிறானே என்று புரியாமல் மாயாவும், சந்துவும் திகைத்து நிற்க, கோபத்தில் பற்களை நற நறவெனக் கடித்தான் தங்கவேல்.
“என்ன ஆசிரியரே? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று நயமாகக் கேட்டான் சந்து.
“அக்ரகாரத்துல இருந்து தெவசத்துக்கு வந்த பான், கையிலை தர்ப்பையை மாட்டி விட்டு, கோத்திரம் என்னன்னு கேட்டான். எனக்குத் தெரியலன்னு சொன்னேண்டா. அதுக்கு அவன் நீங்க கவுதம கோத்திரம்னான். அடங்கொய்யால பயலே, இப்பத்தாண்டா தெரியுது? உங்க லொள்ளு” என்று அருகில் இருந்த மேசை மீது ஓங்கிக் குத்தினான்.
குத்துன குத்துல மேசையில் இருந்தவை ரெண்டு இஞ்சு மேலே போய் மீண்டும் மேசை மீது விழ, எழுந்த சத்தத்தில் மாயனுக்கும் சந்துவுக்கு வெலவெலத்துப் போனது.
இப்படி ஒரு குட்டிக் கதையை தங்கவேல் இடையில் சொருகி விட்டானே என்று மாயா திகைத்துப் போனான்.
சந்துவோ சத்தம் காட்டாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். தங்கவேலுக்கோ உள்ளுக்குள் உலைக்கலன் போல கொதிக்க ஆரம்பித்தது.
* * *
விலை போகா சரக்கை எப்படி விற்பது?
இணையதளம் தொடங்கணும் முதலில்.
சரக்கு வைரம் போல, வைடூரியம் போல, மாணிக்கம் போல. யாருக்கும் சரக்கின் அருமை தெரியவில்லை. இதைப் போன்றதொரு சரக்கை யாரும் இலவசமாகத் தரமாட்டார்கள். ஆனாலும் தருகிறோம். அதற்காக வேண்டியாவது பேரன்பு கொண்ட மக்கள் சந்தா கொடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
கவனிக்க உருக்கமான வேண்டுகோள் விடுத்தல் அவசியம்.
சந்தாக்கள் 1000,2000,5000,10000,25000 என இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டும் போதாது.
“யாரோ ஒருத்தன் பொண்டாட்டி, அவள் காலுக்கு கீழே பல குஞ்சு” என்ற புத்தகத்தை எவனாவது அல்லக்கையின் பேர் போட்டு எழுதி பதிப்பிக்க வேண்டும்.
விஜய் டிவி கோட்டு கோபிநாத்தை வைத்து டாக் ஷோவில் கருத்துச் சொல்ல அழைக்க வேண்டும். மேட்டர் ஓவர். விஜய் டிவி பார்க்கும் ரசிகர்கள் குஞ்சு புத்தகத்தை வாங்கிக் குவித்து விடுவார்கள்.
அடிப்பொடி அங்கன இந்த சரக்கு விபரத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியமான அவசியம்.
இம்புட்டுதான் தந்திரம்.
விற்பனை தந்திரத்தினை விரிவாக எடுத்துரைத்த மாயாவுக்கு நன்றியினைத் தெரிவித்து அமர்கிறேன் என்றான் சந்து மைக்கில்.
* * *
அசாசிலின் வேண்டுகோள்
தமிழ் உலக கலா ரசிகப் பெருமக்களே, ஊ சொல்றியா மாமா, ஊ...ப சொல்றியா மாமா என்ற பாடலை பெரும் புகழடைய வைத்தவர்களே, கலைக்கெனவே பிறப்பெடுத்து இதுவரையிலும் தெரியவே தெரியாத நடிப்பை, நடிகையின் கவட்டிக்குள் உற்றுப் பார்த்து தேடிக் கொண்டிருக்கும் ரசிக கண்மணிகளே, நாளை நடிகைக்கு நாட்டையே ஓட்டுப் போட்டுக் கொடுக்கவிருக்கும் மாபெரும் தியாகிகளே, தயவு செய்து சந்தாவைச் செலுத்தி விடுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
உலகில் எவனும் இதுவரை தயாரிக்காத பொருளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இணையதள உரிமையாளரை வாழ்வியுங்கள். நடிகைக்கே நாடு என்றால், இவருக்கு உலகத்தையே பரிசளிக்கலாம் அல்லவா?
இப்படிக்கு அஸாஸில்.
* * *
நம்பூதிரி பெட்ரூம் கதவைத் திறந்து பார்க்க அக்மார்க் வெள்ளைகாரன் போல படுத்திருந்தான் பாரிஸ்டர் மகன். தலைமுடி மட்டும் கருப்பு கலர். எல்லாம் பெருமாள் செயல். முடிமட்டும் கருப்பாக இல்லையென்றால் ஊரே சிரிக்குமே என்று மனதுக்குள் பெருமாளுக்கு தோத்திரத்தினைச் சொல்லிக் கொண்டே கைகூப்பினார்.
”என்னே பெருமாளின் கருணை?”
பெருமூச்சு விட்டுக் கொண்டு பாகீரதி ரூமுக்குள் நுழைந்தார். பாகீரதி பெட்ரூமில் ஒயிலாக படுத்திருந்தாள். அவளருகில் ஒரு சொம்பு இருந்தது. அதில் தண்ணீர் நிரப்பி மூடி போட்டிருந்தது.
கொசுவத்தி சுருளைப் பின்னாலே சுத்தினால், அலுவலகத்திலிருந்து நம்பூதிரி சோகத்துடன் வந்திருந்ததைப் பார்த்த பாகீரதி என்னவென்று விசாரிக்க, அகலிகை மேட்டரை சொன்னார். பாகீரதிக்கு பட்டென்று பற்றிக் கொண்டது விஷயம்.
”கவலைப்படாதேங்கோ, ஒரு சொம்புத் தண்ணீ போதுண்ணா, சடுதியில் வந்துட்றேன்னா” என்று பாகீரதி சொம்புடன் சென்றாள்.
கொசுவத்தி சுருள் சுற்றுவதை நிறுத்தினால், அந்தச் சொம்பையே பார்த்துக் கொண்டிருந்தார் நம்பூதிரி.
* * *
குறிப்பு : நரலீலைகள் ஒரு கட்டுகதை (ஃபிக்ஷன்). யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஃபிக்ஷன் நாவல்கள் தான் பிரபலமாகுவதால் எனக்குத் தெரிந்த வகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன். படிக்கும் வாசகர்கள் தவறிருந்தால் மன்னித்தருள்க.
நிலம் (98) - கிராம வரைபடத்தில் இல்லாத நிலங்கள்
வருவாய்துறையில் நடைபெறும் வில்லங்க விவகாரங்களைச் சரி செய்து விட்டார் என்றால் ஸ்டாலின் தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார். அந்தளவுக்கு வில்லங்கங்களும், விவகாரங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், அக்கிரமங்களும் நடைபெறும் துறையாக வருவாய் துறை தொடர்ந்து பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு கிராமத்தில் இருக்கும் நிலங்களை வரைபடமிட்டு, அதற்கு சர்வே எண் குறித்து ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலங்கள் வரையறை செய்யப்பட்டு விட்டன. இல்லையென்றால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
பைமாஷ் - சர்வே எண் என மாறிவிட்டது. இந்த பைமாஷ் கணக்கே இன்னும் சரியாகவில்லை. இதற்கிடையில் கொரலேஷன் அதாவது சர்வே எண்கள் இணைப்பு, நகர எல்லை விரிவாக்கம், வார்டுகள் மறுவரையறை ஆகியவற்றில் தமிழ் நாடு வருவாய்த்துறையினர் செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. பைமாஷ் நம்பர், கிராமத்தின் பெயர், பழைய வார்டு, புது வார்டு, பிளாக், அதன் டி.எஸ் நெம்பர் என எதற்கும் அப்டேட் இருக்காது. எந்த பைமாஷ் நம்பருக்கு எந்த சர்வே நம்பர் அதன் பின்பு நகரமாக்கும் போது வழங்கப்பட்ட டி.எஸ். நம்பர் என்ன? பழைய சர்வே எண்ணில் உள்ள நிலம் அனைத்தும் ஒரே டி.எஸ். நம்பருக்குள் இருக்கிறதா? இல்லை பிரிபட்டிருக்கிறதா? என்ற விபரங்களைத் தேடினால் தலையில் இருக்கும் முடி ஒன்று கூட இருக்காது. அவ்வளவு குழப்பம்.
அத்தனை தகவல்களையும் பொதுமக்களுக்கு தராமல் தங்களிடம் வைத்துக் கொண்டு லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒரு சர்வே எண் விபரம் தருவார்கள். இதைப் போல எத்தனை கிராமங்கள்? எத்தனை சர்வே எண்கள்? நினைத்துப் பாருங்கள். எவ்வளவு லஞ்சம் என?
இதற்குள் சிக்கி என்னவென்று தெரியாமல் பலரும் பல இடங்களை வாங்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இணையதளத்தில் ஓசியில் விபரம் கேட்கின்றார்கள். கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்பவர்கள் நல்ல ஒரு லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெற்றால் என்ன கெட்டுப் போய் விடுகிறது? ஆனாலும் நப்பாசை விடுவதில்லை. அவரா நம்மை ஏமாற்றி விடப்போகிறார் என்று தனக்குள்ளே ஒரு சமாதானம்.
நகர எல்லைக்குள் ஒரு கிராமம் வந்து விட்டால் விலை ஏறும் என்ற ஆசையில் எவரும் வார்டு, பிளாக், டி.எஸ். நம்பர்கள், நிலங்கள் பற்றி கவனிப்பதில்லை. அதே போல கிராமபுறங்களில் கொரலேஷன் செய்த விபரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. கொரலேஷன் என்றால் பல சர்வே எண்களை ஒன்றாக இணைத்தும், பிரித்தும் புதிய சர்வே எண்களை உருவாக்குவது. இப்படியான கொரலேஷன்களில் பலரின் இடங்கள் காணாமல் போய் விடும். இது வருவாய் துறையினரால் செய்யும் செயலன்று. அங்கிருக்கும் ஒரு சில ஆடுகள் செய்யும் வேலையாக இருக்கும். கண்காணிப்பு இருந்தாலும் ஏமாற்றித் திருடும் கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது.
இதைப் போன்ற இடங்களை வாங்கும் போது வெகு கவனம் தேவை. பெரும்பாலும் எல்லா மாவட்டங்களிலும் இந்த கொரலேஷன் நடந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். என்னால் இவ்வளவு தான் சொல்ல முடியும். முழுவதையும் எழுத இயலாது.
நில அளவை துறையினிலோ பல கிராம புல வரைபடங்கள் காணவில்லை. அது குறித்து இமெயில் அனுப்பி, போனில் பேசியும் ஐந்தாறு மாதமாக ஒரு கிராமத்தின் புல வரைபடத்தை அப்டேட் செய்யவே மாட்டேன் என்கிறார்கள்.
கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படியுங்கள்.
சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால் சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !! வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?
செய்தியின் உண்மைத்தன்மைக்கு நான் பொறுப்பாளி அல்ல. இப்படியெல்லாம் நடக்குமா என்றால் ஆம் நடக்கும். கவனமாக இருக்க வேண்டியது நாம் தான்.
சமீபத்தில் ஒரு கோர்ட் உத்தரவு படித்தேன். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்யவே கூடாது என்கிறது அந்த உத்தரவு. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மேய்கால் நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு பொது மக்களுக்கு பட்டா வழங்கி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்னவாகும்? என்று தெரியாது.
அதென்ன மேய்க்கால், மேய்ச்ச்சல் நிலம் என்ற கேள்வி எழும்பினால் இந்த பிளாக்கில் எழுதி இருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள்.
* * *
Monday, June 6, 2022
6000 கோடி நித்தி - இறைத்தூதர் பிஜேபி - திருமணப் பிரச்சினை
சாரு நிவேதிதாவின் இணையதளத்தில் 02.09.2009ம் தேதியன்று அவர் எனக்கு அனுப்பிய இமெயிலில் வந்த ’கடவுளைக் கண்டேன் வரம் தரும் கல்பதரு’ என்ற கட்டுரையை அப்லோடியிருக்கிறேன். கட்டுரையின் இறுதியில் நித்தியானந்தாவை ‘கடவுள்’ என்று முடித்திருந்தார். நித்தியானந்தாவின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவருக்காக தனியாக ஆறேழு கட்டுரைகள் எழுதி இருந்தார்.
அன்றிலிருந்து நித்தியானந்தாவை அவரது இணையதளம் மூலமாக தொடர்ந்து கவனித்து வருவதுண்டு. திடீர் திருப்பமாக சன் டிவி நித்தியானந்தா ரஞ்சிதா லீலைகளை வெளியிட்டு பரபரப்பாக்கியது. நக்கீரன் பல இதழ்களை வெளியிட்டு நித்தியானந்தா பரமஹம்சரை நார் நாராகா கிழித்தது.
சாரு நிவேதிதா எவரைக் கடவுள் என்றாரோ அவரை குமுதம் என்று நினைக்கிறேன் அந்த இதழில் ’சரசம் சல்லாபம் சாமியார்’ என்ற தலைப்பில் கிழித்துத் தொங்க விடும் தொடர் கட்டுரைகள் எழுதினார். குமுதம் இதழில் இதற்கு முன்பு ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தலைப்பில் நித்தியானந்தர் எழுதிய தொடர் வந்தது.
பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களும் இவ்வளவுதான். பத்திரிக்கை தர்மம் என்பது வியாபாரம். எழுத்தாளர்களின் தர்மம் என்பது பொருளாதாரம். படிப்பவர்கள் தமக்குள்ளாக சமாதானப்படுத்திக் கொள்வார்கள்.
நித்தியானந்தாவின் பிடதி ஆஸ்ரமத்தில் இருந்து சின்மயி புகழ் வைரமுத்து ஆண்டாளை தவறாக எழுதி விட்டார் என்றுச் சொல்லி ஆரேழு ஜில்லி சிட்டுகள் முழுமையான அலங்காரங்களுடன் பக்தி மனம் கமழ வீடியோ போட்டிருந்தார்கள். அன்றைக்கே தெரிந்தது நித்தியானந்தாவின் ஆசிரமத்தின் கல்பதரு காட்சிகள்.
முன் ஜென்மத்தில் ஆண்டாளின் பக்கத்து வீட்டில் பிறந்திருந்த ஜில்லு சிட்டுக்கள் பிடதி ஆசிரமத்தில் இருப்பதை சின்மையி புகழ் வைரமுத்துவுக்கு தெரியாமல் போனது காலக் கொடுமை. சிட்டுக்களின் வீடியோக்கள் மீடியாக்களில் மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவில் விலையேறும் பெட்ரோல் போல பற்றிக் கொண்டது.
அடுத்த காட்சியாக வீடியோ வெளியிட்ட பக்தை ஜில்லு சிட்டுவின் தந்தை ஜனார்த்தனசர்மா தன் மகள்களை மீட்டுக் கொடுங்கள் என்று காவல்துறையில் புகார் கொடுத்தார். முடிவில் நித்தியானந்தா கைலாசாவிற்கு பல ஜில்லு சிட்டுகளுடன் பறந்து போய் அமர்ந்து விட்டார்.
ஜனார்த்த ஷர்மா, ஜில்லு சிட்டுக்கள் ஆகியோர் பிராமணர்கள். ஆனால் நித்தியானந்தாவோ வேறு சாதி. நித்தியானந்தாவின் ஆசிரம சொத்து மதிப்பு சுமார் 6000 கோடி என விகடன் என்ற கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் எம்.ஜி.ஆருக்கு ஒரு ஜெயலலிதா, ரஜினிகாந்துக்கு ஒரு லதா என்பது போல நித்திக்கும் நாலும் நாலும் நான்கே என்ற விடை வருவதைக் காணலாம். ஆகவே காலம் காலமாக தொடர்வதைப் போல நித்தியானந்தாவின் ஆசிரமத்து சொத்துக்கள் சேரும் இடம் சேரும். இனி நித்தியாந்தாவின் கதி மோட்சத்தில் முடியும் என்று எதிர்பார்க்கலாம். பெண்கள் மிக மிக ஆபத்தானவர்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது உண்மைதானோ?
* * *
நேற்று பாஜகவின் அஃபீஷியல் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா (பிராமணர்) இஸ்லாம் மதத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தைப் பற்றி அர்த்தமற்ற வார்த்தைகளில் விமர்சித்தார். பிஜேபியின் செய்தி தொடர்பாளர் இப்படிப் பேசலாமா? வாய் தவறிப்பேசினாரா என்றால் நம்ப முடியவில்லை.
ஞானவாபி மசூதி பிரச்சினை பிஜேபியின் அடுத்த கட்ட மதக் கலவரத் திட்டம் என பல செய்திகள் வெளியாகி உள்ளன. அயோத்தி ராமர் பிரச்சினைக்குப் பிறகு குதுப்மினார், தாஜ்மஹால் என ஆரம்பித்திருக்கிறார்கள் என்றெல்லாம் மீடியாக்களில் பலர் பேசி வருகின்றார்கள்.
இந்தியாவின் மொத்த அன்னிய செலவாணி கையிருப்பு மே, 2022 மாதத்தில் 640 பில்லியன் டாலர்கள். இதில் சுமார் 70 சதவீதம் அன்னிய செலவாணி அரபு நாடுகளில் வேலை செய்யும் ஆட்களின் மூலமாக, பிசினஸ் மூலமாக வருகிறது என்கிறது புள்ளி விபரம்.
நுபுர் சர்மாவின் விமர்சனத்துக்குப் பிறகு ஓமன், குவைத், சவுதி அரேபிய நாடுகள் விளக்கம் கோரி இந்திய எம்பசிக்கு நோட்டீஸ் அனுப்புகின்றன. அரபு நாடுகளில் இந்தியப் பொருட்கள் விற்பனை நிறுத்தப்படுகிறது.
ஒரு படி மேலே போய் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் விடுமுறையில் இந்தியாவிலிருக்கும் ஊழியரை இனி வர வேண்டாம் என்று ட்வீட் போடுகிறார். இனி பல அரபு நிறுவனங்களின் உரிமையாளருடன் பாகதாரராக இருக்கும் இந்தியர்களின் கதி என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தென் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளில் பணியாற்றும் இந்துக்களின் வேலை என்னவாகுமோ தெரியவில்லை. மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் இருக்கும் போது இந்துக்களின் வேலைகள் என்னவாகுமோ என்ற திகில் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவிற்கு பெருமளவில் வரக்கூடிய அன்னிய செலவாணி என்னவாகும்?
குருடு ஆயில் கொடுக்க கூடாது என்ற பல டிவீட்களை காண முடிகிறது. பிரதமர் மோடியின் படத்தினை குப்பைத் தொட்டியில் ஒட்டி அதன் மீது செருப்பு வரையப்பட்டிருக்கும் புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
நுபுர் சர்மா பிஜேயிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். டிவிட்டரில் வெளியானஒ ட்வீட் வீடியோவில் பிஜேபி எனக்கு சப்போர்ட் செய்யும் என்று பேசியிருக்கிறார். பிஜேபி மசூதியை இடித்து விட்டு ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிறது. பிஜேபி வெளியிட்ட செய்தியோ நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை என்ற பச்சை பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறது.
நுபுர் சர்மாவின் பேச்சின் பின்னாலே பெரும் சதி திட்டம் இருக்குமோ என்று பலரும் ஐயப்பட ஆரம்பித்திருக்கின்றார்கள். தமிழகத்தில் லூலூ நிறுவனம் ஒரு செங்கலைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஜோக்கர் ஆடு பேசிக் கொண்டிருந்தது. ஆனால் பிரதமரும், யோகி ஆதித்திய நாத்தும் லூலூ வணிக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் லூலூ நிறுவனம் வணிகம் செய்யக்கூடாது என்கிறார் பிஜேபி ஜோக்கர் ஆடு. தென்னிந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் அரபு நாடுகளில் (கீழ்சாதி என்றழைக்கப்படும் மனுதர்மத்தின்படியான) இந்துக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் விமர்சனத்தை பிஜேபி பிராமண செய்தி தொடர்பாளர் பேசி பெரிய பிரச்சினை ஆக்குகிறார்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிஜேபி பல ஆயுதங்களை வைத்து திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வர முனைகிறதோ என்ற எண்ணம் எழும்புவதில் ஆச்சரியமில்லை.
* * *
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின் விளைவு உண்டு என்பார்கள். அறுபது எழுபதுகளில் தென்னிந்திய மக்களிடம் வரதட்சிணைக் கொடுமை பெரிய ஆட்டம் ஆடியது.
அதற்கு ஒரு உதாரணமாக சி.சி.சுப்ரமணியம் 1962களில் எழுதிய ஒரு கவிதை சாட்சி.
என்று வருவானோ
பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்.பேசாத சொல்லாகி
சுவடிக்குள் நொறுங்குகிறேன்
உணராத பொருளாகி
சொல்லுக்குள் புழுங்குகிறேன்
ஆளாத பாண்டமாகிசேந்தியில் மழுங்குகிறேன்
கவிதையைப் படித்து விட்டீர்களா? இது ஒரு முதிர் கன்னி சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. முதிர் கன்னி என்னவென்றால் திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள். அந்தக் கால கட்டங்களில் முதிர்கன்னிகளாக வாழ்ந்து மடிந்தனர் பல பெண்கள். ஒரே காரணம் வரதட்சிணைக் கொடுமை. பெண் பிள்ளைகள் பிறந்த போதே உசிலம்பட்டி போன்ற கிராமங்களில் கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்டார்கள். படம் கூட வெளியானது.
மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பார்கள். ஒரு டிவி டாக்ஷோவில் ஒரு ஆண் எட்டு ஆண்டுகளாக பெண் தேடிக் கொண்டிருப்பதாக புலம்பினார். பூமராங்க்
சாதி பிரச்சினை, தகுதி, அழகு, பணம், பொருளாதாரம் இன்றி உற்றார் உறவினர்களின் அப்ரிஷியேசன் போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி அதுவும் வெகு முக்கியமாக பெண் சுதந்திரத்தினை ஒப்புக் கொண்டால் ஒழிய எந்த திருமணமும் இப்போதும் நடப்பதில்லை.
காலத்தின் கொடுமை என்னவென்றால் தனக்கான தகுதியான வரன் தேடித் தேடி பெண்களும் முதிர் கன்னிகளாக மாறிக் கொண்டிருப்பதுதான். அதுவுமின்றி கட்டற்ற சுதந்திரத்தின் வாயிலாக பாலியல் இன்பங்களை திருமணத்துக்கு முன்பே அனுபவித்து விடும் ஆண்களும், பெண்களும் திருமணத்தின் மீது கொண்டிருந்த ஈர்ப்பினை இழந்து விடுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் திருமணம் என்பது இப்போது பூதாகரமானதொரு பிரச்சினையாக மாறி விட்டது. பிள்ளைகளை மருத்துவமனைகள் உருவாக்கிக் கொடுக்கின்றன. அதுமட்டுமின்றி விஜய் டிவியில் அக்கார்டு ஹோட்டல் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தால் குழந்தை பிறக்கும் என்று வேறு சொல்லி மருத்துவமனைகளின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறார்.
இந்தக் காலகட்டமானது எதிரும் புதிருமான வாக்குவாதம் சண்டைகள் சச்சரவுகளை சூழலாகக் கொண்டது. நயவஞ்சகமே உருவெடுத்த ஒரு சில சுய நல கூட்டத்தாரின் புரிந்து கொள்ளவே முடியாத வலைகளில் சிக்கி மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்பது மட்டுமே உண்மை.
* * *
மதுரை ஆதீனத்தின் உண்மையான தலைவர் கைலாசாவின் அதிபர் சுவாமி நித்தியானந்தா அவர்கள். ஆனால் மதுரையில் இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி ஆதீனமாக வந்து உட்கார்ந்து கொண்டு, ஆதீனங்கள் என்ன வேலை செய்யனுமோ அதைச் செய்யாமல் இஷ்டத்துக்கு அரசியல் பேசிக் கொண்டலைகின்றார்கள்.
பிரதமர் மோடியிடம் பேசினேன், அப்படி இப்படி என்று பேசி வருகிறார். தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர் முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் அவர்கள் என்பதை மறந்து விட்டு வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். காலம் சென்ற மதுரை ஆதீனத்தை உட்கார வைத்தவர் கலைஞர் என்பதை மறந்து போனார் போலும். இப்போது இருக்கும் ஆதீனம் பொறுப்பில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்தே தீரும்.
* * *