”இன்னிக்கு 2000 கிலோ டிரக்ஸ் வந்திருக்கு. உம் போலீஸை அனுப்பி பிடிச்சு பேப்பர்ல போட்டுக்கோ. கெட்ட பேரா? அப்படியா? என்ன கேள்வியெல்லாம் கேக்கிறாய்? சொல்றதைச் செய்டா வெண்ணெ”
அன்றைக்கு தினசரிகளில் துறைமுகத்தில் கண்டெய்னர்களில் பதுக்கி வைத்த 30000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது என்ற செய்தி வெளியாகி இருந்தது. மக்களில் பெரும்பாலானோர் அரசு அது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.
இந்த தகவல் உளவாளிகள் மூலம் அரசுக்குச் சென்றது. அஸாசிலின் அரசியல் தந்திரத்தை எண்ணி ஃப்ளையருக்கு மகிழ்ச்சி உண்டானது.
“இன்னிக்கு 50000 கோடி ஹெராயின் பிடிபட்டது என்று பேப்பரில் செய்தி வரணும். புரிஞ்சுதா?”
அடுத்த இரண்டாவது மாதத்தில் தினசரிகளில் பெரிய அளவில் போதைப் பொருள் பிடிபட்டது என்ற செய்தி வெளியானது. மக்கள் அரசின் இந்தச் செயலை பாராட்டி மகிழ்ந்தனர்.
”கதையே இல்லாத ஸ்கிரிப்டை நன்றாக படம் பிடிக்கும் இயக்குனர்களைக் கண்டுபிடித்து ஒரு லிஸ்ட், விலை போகாத பெரிய நடிகர்கள் இருப்பார்கள் அவர்களின் லிஸ்ட், வெப் சீரிஸ் எடுக்கும் இயக்குனர்களின் லிஸ்ட்டும் வேண்டும்” என்றான் அஸாசில்.
ஒரே நாளில் அஸாஸில் கையில் லிஸ்ட் கொடுக்கப்பட்டது.
அந்த லிஸ்டில் பலரை டிக் அடித்தான் அஸாசில்.
* * *
”ஏம்பா மாயா, இதென்ன அஸாசில் இப்படி ஒரு லிஸ்ட் கேட்டிருக்கானே? எதற்காக இருக்கும்? உனக்கு ஏதாவது புரியுதா?” என்றான் சந்து.
”மனம் எப்போதும் நெகட்டிவ் அதாவது எதிர்மறை செயல்களின் பால் ஈர்ப்புக் கொண்டது சந்து. மனமொரு குரங்கு. நல்லவைகளை நாடுவதை விட தீயவைகளின் மீதான கவனம் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் தான் நல்லதையே கேளுங்கள், நல்லதையே பாருங்கள் என்றுச் சொல்வார்கள்”
“சரி, நீ சொல்வதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சந்து, ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் அல்லவா? அவர்களை நோக்கி டிரக்ஸ் வலை வீச அஸாசில் திட்டம் போட்டிருக்கிறான்”
“என்ன? டிரக்ஸா அப்டின்னா போதைப் பொருள் தானே?”
“ஆமா சந்து, இளைஞர்கள் மனசு எப்போதும் ஆபத்தான செயல்களை விரும்புவார்கள். அதைச் சாதனையாக நினைப்பார்கள் அல்லவா? பைக்கில் ஸ்டண்ட் செய்வது, நடிகர்களைப் பார்த்து ஹேர் கட் செய்து கொள்வது, நடிகர்கள் போலவே டிரஸ் போட்டுக் கொள்வது இப்படியாக உணர்ச்சிகளின் கலவையாக இருப்பார்கள். அவர்கள் கையில் ஸ்மார்ட் போன் இருக்கிறது அல்லவா? அதை வலையாகப் பயன்படுத்தி சினிமா, வெப்சீரிஸ் மூலம் போதைப் பொருள் விற்பனையை அதிகரிக்கப் போகின்றார்கள்”
”என்ன மாயா சொல்கிறாய்?”
”ஆமாம் சந்து, போதைப் பொருள் உடலுக்கு கேடு என்று ஹீரோ லெக்ஷர் அடிப்பார். போதைப் பொருள் கடத்தலை ஹீரோ தடுக்கிறார் என்று தான் கதை எழுதுவார்கள். ஆனால் படத்தின் கரு என்ன? போதைப் பொருள். அதென்ன போதைப் பொருள். ஒரு தடவை அனுபவித்துப் பார்ப்போம். பின்னால் விட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் விட முடியாது. குடிக்கும் போது உண்டாகும் போதையை விட மிக அதிக போதையைத் தருகிறது டிரக்ஸ் என்கிறது பல படங்கள், வெப் சீரிஸ்கள்.”
”மாயா, இதென்ன பெரும் கொடுமையாக இருக்கிறதே?”
“கொடுமை தான் சினிமாவும், வெப் சீரிஸ்களும் இளைஞர்கள் மீது வலையை வீசுகின்றன. இவ்வகையான படங்களையோ, சீரிஸ்களையோ பார்க்கும் இளைஞர்கள், மனதின் நெகட்டிவ் தன்மையால் ஈர்க்கப்படுகிறார்கள். தூண்டில்கள் அதற்கான வேலையைச் சரியே செய்து விடும்”
“அய்யோ...! மாயா.... கொடூரம்...!”
“என்ன செய்ய முடியும் சந்து? மனிதர்கள் நம்பி நம்பியே அழிபவர்கள் தானே, கீழே இருக்கும் படங்கள் இந்தியா டுடே அக்டோபர் 2022 இதழில் வெளியானது சந்து, இதைப் பாரேன்”