குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, June 26, 2021

நிலம் (84) - மோசடிப்பத்திரங்கள் ரத்து செய்ய நீதிமன்றம் போக தேவையில்லை

அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த பிளாக்கில் 2008லிருந்து எழுதி வருகிறேன். எனக்குள் தோன்றிய எழுத்தார்வத்தால் தொடங்கிய பிளாக் இன்று 13வது வருடத்தினை தொட்டிருக்கிறது. இன்னும் எழுதி வருகிறேன்.

சென்ற காலங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கும் முன்பு பிளாக்குகள் பெரும் புகழடைந்து இருந்தன. இன்றைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதரவைகள் அனைத்திலும் ஹீரோ வில்லன் ரேஞ்சுக்கு சண்டைகள் போட்டுக் கொள்கிறார்கள். மன நோய் அதிகரித்து விட்டது. 

அரசியல் சார்பு நிலை எடுப்பவர்கள், அதற்காக டிவிட், பதிவுகள் போடுபவர்கள் பலனுக்காக சார்ந்திருப்பார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளாது அவர்களின் ஒவ்வொரு கமெண்டுக்கும் பதில் அளிப்பது என்பது  மன நோய் ஆகி விடும். ஒதுக்கி விட வேண்டும். அழுக்குப் பிடித்த மன நோய் முற்றிய நிலையில் பொருள், பதவி, அதிகாரம் ஆகிய நோய் பீடித்தவர்களின் பதிவுகளுக்கு பதில் தரவே கூடாது. 

ஆனால் பிளாக்குகள் அப்படி இல்லை. இவை எழுதுபவர்களிம் மனதின் சிலேட். பதில் போடுபவர்களை நாம் சரியாக கையாளலாம். கோபம் வராது, கொந்தளிப்பு வராது. ஃபேஸ்புக், டிவிட்டர்கள் சந்தைக்குள் நடந்து செல்வது போல. ஆனால் பிளாக் சந்தைக்குள் இருக்கும் கடை போல. அழககாக அடுக்கப்பட்ட பதிவுத் தொகுப்புகள் மூலம் நாம் நம் எழுத்தை எடை போடலாம். ஒவ்வொரு காலத்திலும் இருந்த மனவோட்டத்தை அறியலாம். ஆனால் மேற்கண்டவைகளால் அப்படியெல்லாம் பயனடைய இயலாது. சிக்கலான வடிவமைப்பு கொண்டவை. அவர்களின் வருமானத்திற்கான வடிவமைப்பு. பிளாக் ஆக சிறந்தது எல்லாவற்றிலும் என்பது எனது எண்ணம்.

அந்த வகையில் அடியேன் நிரம்பவும் விரும்புவது பிளாக் தான். ஆனால் தொழில் நிமித்தம் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருக்கிறேன்.

இந்த பிளாக் ஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் படிக்கப்பட்டது. தற்போதும் சுமார் 40 நாடுகளில் இருந்து வாசிக்கப்படுவதாக ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்கிறது. நாம் எழுதுவது எவருக்காவது பயன்பட வேண்டுமென்பதில் எனக்கு நிரம்ப ஆர்வமுண்டு. 

அந்த வகையில் நிலம் தொடர் பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சரி

இப்போது தலைப்புக்கு வந்து விடலாம்.

25.06.2021ம் தேதியன்று தமிழ் திசை தினசரியில் வெளியான ஒரு செய்தி கீழே இருக்கிறது.


மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்த தீர்ப்பின் மீது எனக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்திய பதிவுத்துறைச் சட்டம் 1908னை படித்துப் பார்த்தேன். இந்தச் சட்டத்தின் பதினோறாவது பகுதி, ஐந்தாம் பிரிவில் பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை தலைவரின் ஆளுகை அதிகாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதில் சூழலுக்கு ஏற்ப விதிகளை வகுக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் மோசடிப் பத்திரம் தயார் செய்தவர்களையும், பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரின் மீதான நடவடிக்கைகள் குற்ற நடவடிக்கைகள் மீது நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடப்படல் அவசியம்..

பத்திரத்தினை ரத்து செய்து, அதனை பதிவுத்துறையிலும், வருவாய்துறையிலும் பதிவு செய்தாலும் கூட அந்த மோசடி பத்திரத்தின் அசலை வைத்து ஏமாந்தவர்களிடம் கடனோ, காப்புறுதியோ பெறும் பட்சத்தில் அந்த மோசடிப்பத்திரத்தின் மூலம் தொடரும் குற்றச் செயல்களை எப்படி அனுமதிக்க இயலும்? ஆகவே அப்பத்திரத்தின் நிலை குறித்து ஆவணங்களில் குறிப்பிட்டாலும் கூட அது பறிமுதல் செய்யப்படல் அவசியமாகிறது.

உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை என்றாலும் கூட, குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகளையும் நீதிமன்றம் வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் வழக்குதாரர் கோரிய பரிகாரத்துக்கான பதிலாகத்தான் தீர்ப்பினைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

இனிமேல் மோசடி பத்திரத்தின் பதிவுகள் வருவாய் துறை ஆவணங்களிலும், பதிவுத்துறை ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே சொத்தின் உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்லத்தேவையில்லை என்பது ஒரு சிறந்த தீர்ப்பு என்பதில் ஐயமில்லை.

ஆனால் வருவாய் துறையினர் அவ்வாறான தீர்ப்புகளையோ மோசடி ஆவங்களையோ பதிவு செய்தல் என்பது அவ்வளவு எளிதானதா? இந்த கேப்பில் கிடா வெட்டி விடுகின்றார்கள்.

நீதிதுறை, பதிவுத்துறை, வருவாய் துறை மூன்றும் நேர் அடுக்கில் இணைக்கப்பட்டால் ஒழிய இதற்கு தீர்வே இல்லை.
Sunday, June 20, 2021

சிவசங்கர் ராஜகோபாலன் ஆகியோர் பாலியல் அத்துமீறினார்களா? - உண்மை என்ன?

நானும் ஒரு ஆன்மீகவாதி என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். எனக்கு நான் யார்? எதற்குப் பிறந்தேன் என்று ஆராயவெல்லாம் தெரியாது. அதைத் தெரிந்து கொண்டு எனக்கொன்றும் ஆவப்போவதில்லை. என் முன்னால் நிகழ் காலம் இருக்கிறது. சமூகச் சூழலுக்குள் இருக்கும் நான் சமூகத்தின் ஒரு பிரதியாக இருக்கும் நான், அச்சூழலுக்கு ஏற்ற அறம் சார்ந்த, பிறருக்கு கேடு எழா வண்ணம் வாழ்க்கையை வாழ முயல்கிறேன். ஆகவே எனக்கு எந்த ஒரு சாயமும் இல்லை. எனக்கு வலது, இடது, நடு, முன்னால், பின்னால், இந்து, கிறிஸ்து, முஸ்லீம், பார்சி, சீக்கியம் போன்ற எந்தச் சார்பு நிலையும் இல்லை. ஆகவே இப்பதிவினை தொடர்கிறேன்.

சிக்மெண்ட் பிராய்டு கேள்விப் பட்டிருப்பீர்கள். பாலியல் உணர்வுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்தவர். அவரின் ஆராய்ச்சி மூலமாக அவர் சொன்னது தான் அடுத்து வருகிறது.

அம்மா மீது மகன் கொண்டிருக்கும் பிரியத்துக்குக் காரணம் மகனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சும் போது அவனின் பாலியல் உறுப்பின் மீதான தீண்டல்களினால் அவனடையும் உணர்வுகளினால், அப்பாலின உறுப்புகளின் தீண்டலை அவன் அம்மாவிடமிருந்து பெறுவதினால் தான் மகன்கள் அம்மாக்கள் மீது அதீத பிரியம் கொள்வார்கள். 

அம்மா போலவே மனைவி வேண்டும் எனச் சொல்வார்கள் பிள்ளைகள்.

அதே போலத்தான் அப்பா மகள்கள் மீதான் பிரியத்துக்கும் பாலியல் ரீதியான உணர்வுகளை கிளர்ச்சிகளை சிறுவயதிலிருந்து தன் தந்தையிடமிருந்தே பெறுகிறாள். இது ஒன்றும் தவறில்லை. இது இயற்கை. சமூகத்தின் ஒழுங்கமைவுகள் மகளை பருவ வயதில் ஆண்களிடம் நெருங்க கூடாது என்று சொல்லி வருவதும் இதன் காரணமாகத்தான்.

சிக்மெண்ட் பிராய்டு தன் ஆராய்ச்சியில் இதனை உணர்ந்தார்.

சினிமாக்களில் வயதான கிழட்டு நடிகன் நடிகைகளை தடவுவது, மார்பகங்களில் முகத்தினை இழைப்பது, தொப்புள்களில் விரலை விடுவது போன்ற காட்சிகள், திரைப்படத்தினைப் பார்க்கும் ரசிகனை கிளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்தக் கிளர்ச்சியினால் தான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரைப்படம் பார்க்க வருவார்கள். அதன் காரணமாகத்தான் சிலுக்கு, ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்றோர்கள் பிரபல்யம் அடைந்தார்கள். இவர்களால் தான் ரசிகன் சினிமாவுக்கு வருகின்றான். ஆனால் பலன் முழுவதும் ஹீரோக்களுக்குச் சென்று விடுவதுதான் இங்கு காலம் காலமாக நிகழ்த்தப்படும் அயோக்கியதனம். எம்,ஜி.ஆரின் காதல் டூயட்டுகளைப் பாருங்கள். நாமெல்லாம் எந்த அளவுக்கு ஏமாளிகள் என்று புரிந்து கொள்வீர்கள்.

ஹீரோயிசத்தின் பிம்பம் இப்படித்தான் ரசிகர்களின் மனதில் பதிக்கப்படுகிறது.

காலச்சுவடு பத்திரிக்கையில் தியோடர் பாஸ்கர் அவர்கள் எழுதிய ’மன்மத லீலையை வென்றார் உண்டோ? தமிழ் சினிமாவும் பெண்ணுடல் நோக்கலும்’ கட்டுரையினைப் படித்துப் பார்க்கவும். அதில் ஒரே ஒரு சொட்டு உங்களுக்காக. (நன்றி காலச்சுவடு மற்றும் தியோடர் பாஸ்கர்)

பாலியல் உணர்ச்சி தூண்டப்படுவதால் தான் இன்றைய சமூக ஊடகங்கள், இணையதளங்கள் இயங்குகின்றன. இல்லை என்று எவராலும் மறுக்க முடியாது. கள்ளக்காதலுக்கு என்று இணையதளங்கள் உள்ளன. சென்னையில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு வருடத்திற்கு மூன்று கோடி கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தேன்.

அறிவை விட உணர்ச்சி தான் மேல். அறிவு பின்னால் தான் வேலை செய்யும். உணர்ச்சிதான் முதலாக வேலை செய்யும். பெரும்பாலான குற்றங்கள் நடக்க காரணம் அந்த நொடியில் உண்டாகும் உணர்ச்சியால் தான். 

இளம் பிராயத்தில் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகள் அதிகமாயிருக்கும். அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும். காதல்கள் அதானால் தான் நடக்கின்றன. காதலின் பின்னால் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி காதலர்கள் யோசிக்கவே மாட்டார்கள்.

இந்த இடத்தில் தான் படுபாதகர்கள் தங்களின் வக்கிர புத்தியைக் காட்டுவார்கள். இனி கீழே இருக்கும் யூடியுப் வீடியோக்களைப் பாருங்கள். பார்த்து விட்டுத் தொடருங்கள். அப்போதுதான் இந்த உலகத்தில் வலதுசாரி, ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்தலையும் அயோக்கிய சிகாமணிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

 

இந்த வீடியோவில் சிவசங்கர் “மச்சான் உன்னைப் பார்த்து மயங்கிப் போனேன் நேத்து, நாய் மேல ஆசை வச்சா லொள் லொள்’ என்று பாடுகிறார். கூடவே ஒரு பெண் குரல் லொள் லொள் என்று பாடுகிறது.

சத் சங்கத்தில் இவர் பேசியதை எல்லாம் கேளுங்கள். கேட்ட பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதன் பின்பு, உணர்வுகளால் உந்தப்பட்ட மாணவிகளை பஜனை (அந்த வார்த்தைக்கு சினானிம்ஸ் வார்த்தை இது. புரிஞ்சுக்கோங்க) செய்வதற்கு வலை வீசுகிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது. 

அடுத்து கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள். இவருக்கு ஆதரவாக பேட்டிக் கொடுக்கும் மூன்று பெண்கள். கூட ஒரு கிழட்டு நரி. இரண்டு பேரின் பேட்டியையும் முழுமையாகப் பாருங்கள்.


 அந்த மூன்று ஆபாசிரியர்களையும் கேட்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை அனுப்புவது படிக்கவா இல்லை சிவசங்கரிடம் கட்டிப் பிடித்து முத்தம் வாங்கவா? அவனவன் பிள்ளைகளைப் பெற்று படாதபாடு பட்டு வளர்த்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு கட்டிப் பிடிக்கிறது, கன்னத்தில் முத்தம் கொடுக்கிறது என்ற சேட்டையைச் செய்து, பிள்ளைகளின் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பஜனைக்கு தயார் செய்யும் பாடத்தை இப் பள்ளி ஆபாசிரியர்கள் செய்து வந்திருக்கிறார்கள் என்று இப்பேட்டியைப் பார்க்கும் போது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

சுஷில்ஹரி பள்ளியின் ஃபவுண்டர் சிவசங்கராம். ஒரு பேங்க் அக்கவுண்ட், போன் கூட இல்லையாம். ஆபாசிரியர்கள் சொல்கிறார்கள். ஒரு டிரஸ்டின் ஃபவுண்டர் (நிறுவனர்) தான் டிரஸ்டின் உரிமையாளர். டிரஸ்ட் அக்கவுண்டண்டை  நிறுவனர் நியமிப்பார். எல்லோரும் முட்டாள்கள் என என்ணிக் கொண்டு பேசுவது இந்த ஆபாசிரியர்களின் முட்டாள்தனம்.

அடுத்த வீடியோவில் ஒரு கிழட்டு நரி ஊளையிடுகிறது. சிவசங்கர் ஆபாச பேச்சை குடும்பத்தோடு உட்கார்ந்து கேட்பார்களாம். மும்பை சோனாகாச்சி ஆட்கள் இப்படித்தான் சொல்வார்கள். 

வரலாறு சொல்கிறது. நான் சொல்லவில்லை. ஆங்கிலேயன் இந்தியாவில் ஆட்சி செய்யும் போது அப்போது படித்தவர்களாக இருந்தவர்களை பதவியில் உட்கார வைத்தான்கள். அப்படி பதவியில் இருந்து கொண்டு, சோறு சோறு சுகம் சுகம் பணம் பணம் என்று வாழ்ந்தவர்களை எளிதில் புரிந்து கொண்டான் ஆங்கிலேயன். அனுப்பி வை, இல்லேன்னா கைதுதான். ஒரு சொம்பு தானே. புரிந்ததா?

புரியாதவர்கள் ஓடிப் போய் விடுங்கள் இங்கிருந்து. நீங்க இதற்கு லாயக்கு இல்லை. தனுஷ் படம் பார்க்கத்தான் லாயக்கு.

அடுத்து உளறல் பிரபலம் மதுவந்தி, எழுபது வயதில் சைட் அடிக்கும் பிரபல்யமான மிஸ்டர் ரஜினியின் சகலபாடி ஒய்.ஜி.மகேந்திரவாள் ஆகியோர் டிரஸ்டிகளாக இருக்கும் பத்ம சேஷாத்திரி பாலர் பவன் பள்ளி ஆபாரிசியர் ராஜகோபாலன், அரை குறை ஆடையில் ஆன்லைன் கிளாஸ் எடுக்கின்றான் என்றால் என்ன அர்த்தம்? ஆன்லைனில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு அங்கிட்டு இங்கிட்டு செல்லும் போது தன் குஞ்சாமணியைக் கூட காட்டி இருப்பான். பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, உணர்வின் பிடியில் சிக்கும் பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்து பஜனை செய்வதற்கு தூண்டில் போடுவதை நன்றாகச் செய்து வந்திருக்கிறான் அவன். அவனுக்கு சப்போர்ட் செய்கிறது ஒரு கட்சி. அய்யோ அம்மா என்று கதறுகிறார்கள். ஒருவர் ஆட்சியைக் கலைப்பேன் என்கிறார். பி.எஸ்.பி.பி பள்ளி அரசின் சொத்து. அது அரசுடைமையாக்கப்படல் அவசியமானது.

முரசரங்கம் பகுதியில் நடந்த ஒரு விவாதத்தை கீழே இருக்கும் வீடியோவில் பாருங்கள்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற நவநீதன் சிவசங்கரின் புகைப்படத்தைப் போடக்கூடாது என்கிறான். அவனைச் சாமியார் என்று அழைக்கக் கூடாதாம். இவர்களின் மன நிலை என்னவாக இருக்கும்? இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கேடுகெட்ட ஈனப்புத்திகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இம்மாதிரியானவர்கள் மனித இனமாக இருக்க முடியாது. 

நவநீதன் சொல்கிறான், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு பதிவுக்காக கைது செய்திருக்கிறார்கள் என. அப்பா அம்மாவிடம் கூட பேச முடியதாதை அப்பெண்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்கள். அரசு மிகச் சரியாகத்தான் நடந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் மூலமாகத்தானடா வக்கிர ஆட்களின் தகிடுதத்தங்கள் வெளியாகின்றன. சாட்சிகளை வைத்துக் கொண்டா குற்றவாளிகள் குற்றம் செய்வார்கள்?

சமூகத்தினர் இம்மாதிரியான ஆட்களிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிவசங்கர் தன் வக்கிரமான பாலியல் தேவைகளுக்காக பள்ளி நடத்தி இருக்கின்றான் என்பது கண்கூடு.  அதற்கு அங்கு வேலை செய்யும் ஆபாசிரியர்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறான் என்பதை சாட்சிகளுடன் இங்கு பதிவு செய்திருக்கிறேன். 

ஒருவரின் வார்த்தைகள் மூலம் அவர்களின் மன ஓட்டத்தினையும், அவர்களின் டிசைன் என்னவென்பதையும் சற்றே உற்று நோக்கினால் கண்டுபிடித்து விடலாம். இக்கட்டுரையில் இருக்கும் வீடியோக்கள் ஆதாரமாய் இருக்கின்றன. 

முடிவாக ஒன்று. மேலே இருக்கும் சுஷில்ஹரி பள்ளியின் ஆபாசிரியர்களில் பேட்டி கொடுத்த நடுவில் அமர்ந்திருந்த ஊதா கலர் ஆபாசிரியரை பார்ப்பதற்கே முழு வீடியோவையும் பார்த்தேன். இந்த வீடியோ எடுத்த வீடியோகிராபர் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் அந்த ஆபாசிரியரையே படம் பிடித்திருக்கிறார். நம்ம இனம் அவர். அப்படியே கும்கி கும்தலக்கா லட்சுமி மேனன் போலவே இருக்கிறார் பாருங்கள். இதற்கு நானொன்றும் காரணம் இல்லை. அந்த ஆபாசிரியரும், வீடியோகிராபரும்தான் காரணம். 


மனிதனின் காம வக்கிரங்களுக்குப் பள்ளிக் கூடங்களும், ஆன்மீக ஸ்தலங்களும் காரணமாக இருப்பது காலத்தின் கொடுமை. 

தனது பாலியல் வக்கிரங்களை நிறைவேற்ற, இப்படியான குதர்க்கச் செயல்களைச் செய்து வருபவர்களும், இவர்களுக்கு நிறுவனத்தின் பெயரால் சப்போர்ட் செய்பவர்களும், ஆதரவு தெரிவிப்பவர்களும், இதர ஆதரவு ஆட்களும் குற்றவாளிகள் என்பது தெரிபு. 

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு ஒரே தீர்வு தூக்கு அல்லது ஜெயில் மட்டுமே சரியாக இருக்கும். இவர்கள் மன நிலை தவறியவர்கள். இவர்களை சமூகத்தில் உலவ விடுதல் கூடாது.

நற் சமூகம், நற் சிந்தனை, நற் செயல்கள் தான் உலகிற்கு நல்லன பயக்கும். ஆகவே தீயவர்களை சமூகத்தில் இருந்து நீக்கி ஜெயிலில் போடுவதுதான் வரும் கால சந்ததியினருக்கு நாம் செய்யும் உபகாரமாய் இருக்கும்.

அம்புட்டுதான்...!

Thanks to : Video Providers.

Saturday, June 19, 2021

நல்லி எலும்பு கறிக்கொழம்புக்குத்தான் லாயக்கு - ஜகமே தந்திரம் ஒரு பார்வை

 

கதையைப் பார்க்கலாம்.

இரயில் பாதை குறுக்கே ஒரு கார். ஹீரோ உட்கார்ந்திருக்கிறார். சிவப்பு கார்.

ஙொப்புறானே சத்தியமா நம்புங்க.

இரயில் சரியாக காரின் அருகில் பிரேக்கிடுகிறது. இரயிலின் டிரைவர் சீக்கிரம் காரியத்தை முடிங்கன்னு சொல்லுகிறார்.

அங்கு யாரோ ஒரு ஒரு வட நாட்டு சேட்டானின் தம்பியைச் சுட்டுக் கொன்னுட்டு கிளம்புகிறார் #தனுஷ்.

தனுஷின் ஹோட்டலில் தனுஷைக் கொல்ல சேட்டனின் ஆட்கள் முயல, நாட்டு வெடிகுண்டை போட்டு துரத்தி அடிப்பதைப் பார்க்கும் ஒரு ஆங்கிலேயன் (தனுஷ்)சுருளியை அவன் நாட்டில் இருக்கும் ஒரு தாதாவை போட்டுத்தள்ள அழைக்கிறான். ஆங்கிலம் தெரியாத சுருளி பிரிட்டன் கிளம்புகிறான்.

அங்கு பிரிட்டன் ஃபாசிஸ்ட் பீட்டரைப் பார்க்கிறான். அவன் தமிழன் சிவதாசுவைப் போட்டுத்தள்ளச் சொல்கிறான்.

ஐந்தாறு நாட்களில் சிவதாசை ஆராயும் சுருளி அவன் தங்கம் கடத்துகிறான் என்று கண்டுபிடிக்கின்றான். ஒரு லாட்டைப் பிடிக்கிறான். அவ்வளவு திறமை வாய்ந்த தமிழ் எலி (இப்படித்தாங்க தனுஷை சிவதாசு சொல்கிறான்) சுருளியைச் சந்திக்கிறான் சிவதாஸ்.

சுருளியின் ஏற்பாட்டால், சிவதாசும் பீட்டரும் சந்திக்கின்றார்கள். சிவதாசைப் போட்டுத்தள்ளுகிறான் பீட்டர். உதவி சுருளி.

சுருளிக்குப் பரிசாக ஒரு ஏரியா கிடைக்கிறது. லிட்டில் மதுரை எனப் பெயர் வைத்து ஊர் ஆட்களை அழைந்து வந்து வாழ்கிறான். 

சுருளி ஒரு இலங்கைப் பெண்ணைக் காதலிக்கின்றான். அவளுக்கு ஏழு வயதில் பையனுண்டு. (புரட்சிக் கதை இயக்குனரே. மாமிக்கள் மீது தனுஷுக்கு ஆர்வம் போல. ஒது ஒரு ட்ரிக் ஷாட். மாமிகள் முயலலாம் என க்ரீன் சிக்னல். இப்படித்தான் ஒருத்தன் வீணாய்ப் போனான்)

அவளுடன் சுருளி டேட்டிங்க் போகின்றான். அங்கு சுருளி சுடப்படுகின்றான் சிவதாஸ் ஆட்களால். பின்னர் காப்பாற்றப்படுகிறான். சுருளி சுடப்படக் காரணம் காதலி.

காதலி ஏன் சுருளியைக் கொல்ல முயல்கிறாள்? 

சிவதாஸ் உதவியதால் தான் அவள் பிரிட்டனில் இருக்கிறாள். அந்த நன்றிக் கடனுக்காக காதல் போர்வையில் கொலை முயற்சி.

அகதிகளுக்கு உதவிடத்தான் சிவதாஸ் தங்கம் கடத்துகிறான். பீட்டர் தன் நாட்டில் வேறு நாட்டவர் எவரும் இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஃபாசிஸ்ட் என அறிகிறான் சுருளி.

அகதிகளுக்கு ஆதரவாய் சட்டமியற்றப் போராடும் ஒரு ஆங்கிலேயனைப் போட்டுத்தள்ளு என்கிறான் பீட்டர்.

உண்மையை தெரிந்து கொண்ட சுருளி பீட்டரைக் கொல்லாமல் அகதி போல பாஸ்போர்ட் தயார் செய்து எங்கோ கொண்டு போய் விடுகிறான்.

கதையும் முடிந்தது. படமும் முடிந்தது.

* * *

படத்தினை வாங்கி வெளியிட்டிருக்கிறது சுருளி 2019 பிலிம் லிமிடெட் நிறுவனம், லண்டனில் முகவரி இருக்கிறது. அவர்களிடமிருந்து படத்தை வாங்கி நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. 

1949ல் பிறந்த மிஸ்டர் பிரைன் பிரேக் 48 கம்பெனிகளுக்கு இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார். அவரின் நிறுவனம் தமிழ் படத்தை வாங்கி வெளியிடுகிறது. இதன் பிசினஸ் கான்செப்ட் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.

மிஸ்டர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் பிசினஸ் வலைப்பின்னல்கள் பற்றிய இந்த சிறு விபரமே தலை சுற்றுகிறது. இந்த நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒய் நாட் ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து படத்தை தமிழ் நாட்டில் தயாரித்து இருக்கிறது. ஃபாரின் இன்வென்ஸ்ட்மெண்ட் இந்தியா உள்ளே வந்திருக்கிறது. நல்ல வேளை இந்த நிறுவனத்துக்கு முகவரி எல்லாம் இருக்கிறது.

நம்ம அதானி போல ALBULA INVESTMENT FUND, CRESTA FUND AND APMS INVESTMENT FUND - FOREIGN PORTFOLIO INVESTORS போல் இல்லை. ஒரு வெப் சைட் கூட இல்லாத வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் அளவுக்கு நம்ம இந்திய ஒன்றியம் அனுமதி கொடுத்திருக்கிறது. நீண்ட நாள் கழித்து அதைச் செபி கண்டுபிடிக்கிறது. அல்புலா அதானி மட்டுமல்ல பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்கள். அதானி நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட 11,000 கோடி. முகவரி இல்லா நிறுவனத்திடமிருந்து முதலீடு.

ஒரு வோட்டர் ஐடி மாற்ற நாமெல்லாம் என்ன பாடுபடுகிறோம் எனக் கவனியுங்கள்.

அக்கவுண்ட் எல்லாம் செக் செய்தார்களே இன்கம்டாக்ஸ்காரர்கள் என்று அவர்கள் தான் கவலைப்படனும். நமக்கேன் வம்பு.

* * *


கார்த்திக் சுப்புராஜ் காலி பெருங்காய டப்பா என பேட்ட படத்தைப் பார்த்த போதே தெரிந்து விட்டது. பப்புகளில் ஊத்தி விட்டு, தடவி, குடித்து கற்பை கற்பூரமாக்கும் அதி உன்னத வேலையைச் செவ்வனே செய்து வரும் தமிழ் உலகின் உன்னத ஒப்பற்ற நடிகரின் விதி வேலை செய்யத் துவங்கியது போலும்.

சுருளி என்ற பெயருக்கு ஒரு சிலிர்ப்பு இருக்கும். 80களில் சுருளிராஜன் லெஜெண்ட். அவரின் நகைச்சுவையை சந்தானம் நிரப்பினார். இப்போது ஹீரோ படுகுழியில் விழுந்து கிடக்கிறார். அட்டைக்கு மெத்தை ஆகாது அல்லவா?

நகைச்சுவைக்குப் பெயர் போன பெயரை ஹீரோவிற்கு வைத்து  இது நகைச்சுவைப் படம் என்றுச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போல இயக்குனர். அதாவது கிரைம் திரில்லர் ஆக்சன் நகைச்சுவை.

தனுஷை விட பெரிதாக இருக்கும் மெஷின்கன்கள். அதை வைத்து ஆக்சன். துப்பாக்கி சைசுக்கு இருக்கும் ஹீரோ. நான்கு மடங்கு வெயிட்டாக இருக்கும் அடியாட்கள். வேஷ்டியில் வில்லனின் ஆட்களைச் சுடும் ஸ்லோமோஷன் காட்சிகள் என நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். கொய்யாலே..!

பிரிட்டன் தாதா மதுரை தாதாவை வைத்து தன் கொலைகளை நடத்தினால் எப்படி இருக்கும்? இதுதான் கதையின் வொன் லைன்.

அந்த மதுரை தாதாவே நீங்க தான் சார் என்று தனுஷிடம் சொல்லி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குனர் சுப்புராஜ் அவர்களே, 

கவட்டியைச் சொறிந்து விடும் கறி (ஹீரோயினின் சதைக்கறி) குழம்பு வைக்கத்தான் நல்லி எலும்புக்குச் சரிப்படும். அது மாதிரியான மல்லுப் படங்களை எடுத்துக் கல்லாவை நிரப்புங்கள்.

அதை விடுத்து. உலக அரசியல் பேசும் தகுதி எல்லாம் நல்லி எலும்புக்கு கிடையாது இயக்குனரே. நல்லி எலும்பு நாட்டை ஆளக் கேட்டால் அதற்கு கதை பண்ணிக் கொண்டு செல்லும் உம்மைப் போல ஆட்களை காலம் மன்னிக்காது.

ஒரு விஜயகாந்த் போதும் தமிழ் நாட்டுக்கு. விட்டு விடுங்கள் தமிழர்கள் பிழைத்துப் போகட்டும். இப்படத்தின் மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் நீங்கள்? சிவதாசுவை வைத்துக் கேலி செய்வது தான் நோக்கமா? அவ்வளவு இழிவானவர்களா இலங்கைத் தமிழர்கள்?

துரோகம் தமிழனின் கூடப் பிறந்தது என்ற வசனம் உங்களுக்கும் பொறுந்தும். 

நீங்கள் ரசிகர்களுக்குத் துரோகம் செய்திருக்கின்றீர்கள்.

எனது ஆகப்பெரும் கெட்ட வார்த்தை “போடா டேய்”. அந்த வார்த்தையால் கூட திட்ட முடியாத அளவுக்கு கேடுகெட்ட படம் ஜெகமே தந்திரம்.

சீனுக்குச் சீன் வைச்சு செய்யலாமா என்று பார்த்தேன். எரிச்சல்தான் மண்டியது. 

திரும்பக் கிடைக்கவே கிடைக்காத பலரின் நேரத்தை அழித்து விடும் உம்மைப் போன்ற ஆட்களை என்னவென்று வைவது?

தனுஷ்... ரசிர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் - ஜெகமே தந்திரம்.

அம்புட்டுதான்.


Monday, June 14, 2021

வேலை வேண்டுமா? இந்திய அரசின் வேலைவாய்ப்பு இணையதளம்

அனைவருக்கும் இனிய வணக்கம். கோவிட் நோய் தொற்றின் காரணமாக வேலை இழந்தவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இந்தியாவில் எங்கெங்கு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, சம்பளம் எவ்வளவும், ஆன்லைனில் வேலைக்குத் தேர்வு செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வேலை பெறுவது ஆகியவற்றை இந்திய அரசின் வேலைவாய்ப்புத் துறை செய்து வருகிறது.

அரசு வேலை மட்டுமல்ல தனியார் துறையினரின் பங்களிப்பில் மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை வழங்கி வரும் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துக் கொள்ள வேண்டுமென்று இப்பதிவினை எழுதுகிறேன்.

இந்தச் செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள். பதிவை பகிருங்கள். யாரோ ஒருவருக்கு தேவைப்படும் இந்தச் செய்தி. அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை உருவாக்கலாம். அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை தெரிவித்து விட்டால், அவரவர் திறமைக்கு ஏற்ற வேலையினைப் பெற்று மகிழ்வார்கள்.

மத்திய அரசின் இணையதள முகவரி : https://www.ncs.gov.in

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்வது?

தேவையானவை : 

ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள் அட்டை,பாஸ்போர்ட், டிரைவிங்க் லைசென்ஸ் அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் இதில் ஏதாவது ஒன்று  இமெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பர்.

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்யலாம் என்ற வீடியோ இருக்கிறது. அதை ஒரு முறை பாருங்கள். இமெயில் முகவரி மற்றும் மொபைல்  

கீழே காட்டப்பட்டிருக்கும் படிவத்தை வேலை தேடுவோருக்கானது.


 

பதிவு செய்த பிறகு இணையதளத்தின் உள்ளே சென்று மாநிலம் வாரியாக, செக்டார் வாரியாக வெளியாகி இருக்கும் வேலை வாய்ப்பில் பொருத்தமான வேலையைத் தேர்வு செய்து அப்ளை செய்யுங்கள். 

அதுமட்டுமின்றி வேலை வாய்ப்பு முகாம்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. அதிலும் கலந்து கொள்ளலாம்.

தனியார் ஏஜென்சியிடம் பலரும் ஏமாந்து வருகின்றார்கள். அதெல்லாம் தேவையில்லை

ஒன்றிய அரசின் இந்த அருமையான சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்றிய அரசு வழங்கும் இலவச படிப்புகளை www.swayam.gov.in என்ற இணையதளத்துக்குள் சென்று பதிவு செய்து விருப்பமான படிப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி சான்றிதழ் பெருங்கள்.   

Sunday, June 6, 2021

நிலம் (83) - அனாதீனம் மேய்க்கால் புறம்போக்கு - அதிர வைக்கும் நில மோசடிகள் ஏமாறும் மக்கள்

இந்துவில் ஒரு கட்டுரை ”வெளிப்படைத்தன்மை மீதான அபாயகரமான போர்” தமிழில் கை. அறிவழகன் மொழி பெயர்த்திருக்கிறார். பிஜேபி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியா தகவல் மறைக்கப்பட்ட பிரதேசமாக மாறிப் போனது என்று அக்கட்டுரை சொல்கிறது. நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் காணும் போது வெளிப்படைத்தன்மை அற்ற அரசு எப்படி ஒரு நல் அரசாக இருக்க முடியும் என்று தோன்றுவது இயல்பு. தொடர்ச்சியாக பிஜேபி அரசின் மீதான நல்லெண்ணம் மறைந்து விடும் அபாயமும் உண்டு. (கட்டுரை எனது ஃபேஸ்புக் தளத்தில் உள்ளது. தேடிப்படித்துக் கொள்ளுங்கள்)

வெளிப்படைத்தன்மை அற்ற நிர்வாகம் மக்களுக்கு பெரும் தீங்கினைச் செய்யும். ரெவின்யூ துறையில் பெரும்பாலான ஆவணங்கள் கிடைக்கப் பெறாத காரணத்தால் காலம் காலமாக மக்கள் அடையும் துன்பம் சொல்லில் எழுத முடியாதவை.

தற்போது தமிழகத்தில் பிஜேபி, அதிமுக கட்சிக்காரர்கள் செய்யும் டிவிட் அரசியல் ஆக்க பூர்வமானவை அல்ல. தமிழருக்கும், தமிழுக்கும் எது நன்மையோ அதை அவர்கள் பேச மறுக்கின்றார்கள். அவர்கள் எவரோ ஒருவரால் உருவாக்கப்பட்ட மூளைகெட்ட ஜாதீய சித்தாந்தங்களுக்கு ஆட்பட்ட கொள்கைகளுக்காக சமுதாயத்தில் விரோத போக்கை வளர்ப்பதற்காகப் பேசுகின்றார்கள் என்று அறிவான சமூகத்தினர் பேசிக் கொள்கிறார்கள். இதோ ஒரு உதாரணம். பிஜேபி இதுபற்றி வாயைத் திறப்பதில்லை.


சமூக வளைத்தளங்களில் அந்தக்கால எம்.ஜி.ஆர். நம்பியார் போல அடித்துக் கொள்கிறார்கள் என்கிறார் நண்பர். 

இதில் வேடிக்கை என்னவென்றால் போலி டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளில் மூலம் முகம் தெரியாத பல பிசினஸ் புரமோஷன் வெற்று வார்த்தைகளுடன் அரசியல் ஆர்வம் கொண்டவர்களும் அறச்சீற்றம் கொண்டவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பிசினஸ் மாடல். வெற்று வார்த்தைகள் அவை. அதற்காக அவர்கள் பணம் பெறுகிறார்கள். பதவி பெறுகிறார்கள். அவைக் கருத்துக்கள் அல்ல. சச்சரவுக்கான வார்த்தைகள். அவைகளை எழுதுபவர்கள் கருத்தற்றவர்கள். அவர்களுக்கு பணம் தேவை. அதற்காக எழுதுகின்றார்கள். இப்படியான முகமற்ற போலிக் கணக்கு டிவிட்களையும், அறமற்ற அரசியல்வாதிகளையும் புறம் தள்ளி விட வேண்டும். ஏனென்றால் வேறு வேலைகள் இருக்கின்றன.

இனி அனாதீனம் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு பற்றிப் பார்க்கலாம். அதற்கு முன்பாக இடைச்செருகலாக ஒரு விஷயம்.

வாட்சப் காலில் ஒருவர் அழைத்தார். ஆர்.டி.ஓ கோர்ட்டில் அவரின் சொத்து தொடர்பான வழக்கு முறையற்ற வகையில் தீர்ப்பாகி இருப்பதாகவும் அதற்கு என்ன செய்யலாமென்றும் கேட்டார். அவரின் ஆவணங்களைப் படித்த போது முச்சலிக்கை என்ற வார்த்தைப் பார்த்தேன். முச்சலிக்கை என்றால் பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் பஞ்சாயத்தார் முன்னிலை என்று அர்த்தம் என்றார். இவ்வார்த்தையின் அர்தத்தைப் பதிவு செய்கிறேன். 

சொத்துரிமை தொடர்பாக ஆர்.ஓ.டி. கோர்ட்டில் விசாரணை நடக்கும் போது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆர்.டி.ஓவின் விசாரணையைப் பாதிக்கும். அதுமட்டுமில்லை சொத்துரிமை விசாரணையைப் பெரும்பாலும் ஆர்.டி.ஓ மூலமே கோர்ட் விசாரிக்கச் சொல்லும். அப்படி இருக்கையில் அந்த விசாரணைக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்பது எனது புரிதல்.

அடுத்து, வாட்சப் அழைப்பாளரின் சொத்துரிமை விசாரணை ஆவணத்தை ஆராய்ந்த போது அந்த ஆர்.டி.ஒ முறைகேடாக ஏதோ ஒரு இணக்கத்தின் பேரில் (வேறென்ன லஞ்சம்) சொத்துரிமையை மாற்றம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்தல் அவசியம். சொத்துரிமையை இனி கோர்ட் மூலம் தான் சரி செய்ய வேண்டும். வருவாய் துறை அதிகாரிகள் செய்யும் இதைப் போன்ற செயல்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்கவே கூடாது. இது அடித்துப் பிடுங்கிக் கொடுத்தல். அதாவது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி  பிடுங்குதல். இவர்கள் தண்டிக்கப்படல் அவசியம்.

நான் முதலமைச்சரானால் (சும்மா ஒரு பேச்சுக்கு) இவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் நடு வீதியில் நிறுத்தி சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன். அந்த சொத்துரிமை மாற்றம் செய்யப்பட்டு இழந்தவரின் வாழ்க்கை கோர்ட்டில் அழிக்கப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையை அழிக்க இன்னொருவருக்கு அனுமதி இல்லை. அவ்வாறு அழிப்பவரைச் சட்டம் அழித்து விட வேண்டும் அல்லவா?

என் அலுவலகத்தில் என்னைச் சந்தித்த பெரும்பாலானோர் அழுது புலம்புவர். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு பல கேடுகெட்ட வருவாய் துறை அலுவலர்கள் செய்யும்  அயோக்கியதனம் சொல்லி மாளாது. பித்துப் பிடித்தாற் போல திரிவார்கள். ஆனால் நல்ல வருவாய் அலுவலர்கள் நிரம்ப உண்டு என்பதை இங்குச் சொல்லி விட வேண்டும். அவர்கள் களைகள், மனித இன விரோதிகள். அவர்கள் சமுதாயத்திற்கும் அரசுக்கும் மக்களுக்கும் கேடானவர்கள். 

இனி நம் விஷயத்துக்கு வந்து விடலாம்.

அனாதீனம் என்றால் பல வகைப்பாடுகளில் நிலம் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். அவ்வகை நிலங்கள் நில உடமை வரி விதிப்பு ஆவணங்களில் அனாதீனம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வகை நிலங்கள் அரசின் நிலங்கள் ஆகும். 


அடுத்து மேய்க்கால் நிலம் என்றால் அந்தக் காலத்தில் கால் நடைகள் மேய்ப்பதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சில இடங்கள் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நிலங்கள் மேய்க்கால் நிலங்கள் ஆகும். பஞ்சாயத்து தலைவர்கள் பலரால் இந்த மேய்க்கால் நிலம் அல்லது மேய்ச்சல் நிலங்கள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. நில உரிமை, பட்டா போன்றவற்றிற்கும் பஞ்சாயத்தாருக்கும் எந்த வித உரிமையும் இல்லை. பஞ்சாயத்து என்பது ஊரை நிர்வகிக்கும் பொறுப்பு உடையது மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

அடுத்து செய்தி தாளில் வெளியான இரண்டு செய்திகள் கீழே இருக்கின்றன. ஒரு செய்தி இந்திய அரசின் பணத்தை முறைகேடாக பெற்றமைக்கு சிபிஐ வழக்கு வளையத்தில் சிக்கப் போகும் நபர்களைப் பற்றியது. உடந்தையாக இருந்த அத்தனை வருவாய் துறை ஆட்களின் தலையெழுத்து சிறை என்பது உறுதி. பணம் பெற்ற போலி உரிமையாளர்களுக்கும் சிறை உறுதி. 

இது போன்ற சிக்கல்கள் இல்லாமல் சொத்துக்களை தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும் வாங்குவதற்கு, வெகு துல்லியமான லீகல் ஒப்பீனியன் மற்றும் பத்திரங்களுக்கு அணுகவும்.

லீகல் பார்க்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட சொத்துகளை வாங்குவதற்கு இணைப்பினைக் கிளிக் செய்யவும்.Friday, June 4, 2021

இளையராஜா திரை இசை வரலாற்றில் மறைக்கப்பட்ட வரலாறு ஏதும் உள்ளதா? - ஆய்வு

 

அன்பர்களே, அனைவருக்கும் இனிய வணக்கம். இளையராஜா பற்றிய பல்வேறு பதிவுகளை ஃபேஸ் புக்கில் படிக்க நேர்ந்தது. கவிஞர் மகுடேஸ்வரன் மற்றும் ஆதவன் நவீன் ஆகியோரின் பதிவுகளைப் பலரும் பகிர்ந்திருந்தனர். இளையராஜாவின் இசைக்கோர்வையின் தாக்கமும் அதன் ரசனை ஒப்பீடுகளும் புளகாங்கிதப்படுத்தின.

ஆம் எல்லாம் உண்மைதான் இல்லையென்றுச் சொல்லவில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்பு வடபழனி பிரசாத் ஸ்டுடியோவின் எதிர்புறம் இருக்கும் ஸ்டுடியோ 36 எனும் விடுதி வாசலில் ஒரு பிரபல இசையமைப்பாளரின் வாரிசைப் பார்த்தேன். நிதானமற்ற தன்மையில் குடிப்பதற்காக பலரிடம் அவர் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். 

ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதனை ஆராய நினைத்தேன். அறத்தின் வழி வாழ்வியலை நடத்திச் செல்லும்  அதன் தொடர்ச்சியாக பல்வேறு செய்திகள் கிடைத்தன.  அதனைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். விரைவில் அப்பதிவு வெளிவரும். 

இப்பதிவு அவரை விமர்சிக்கும் பதிவு அல்ல. அவரின் வாழ்க்கை முழுமையும் தமிழர்களுக்கு சொந்தனமானது. அவர் தன்னை ஒரு திறந்த புத்தகமாக வெளிப்படுத்தி விட்டார். அவரின் வாழ்வியல் காட்டும் பாதை பற்றிய ஆய்வில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பது பற்றியது மட்டுமே.

நன்றி - இது ஒரு புரொமொ - இசை பற்றி மட்டுமே பேச வேண்டுமா என்ன? அதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதையும் கொஞ்சமாய் அலசிப்பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது.


கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் நாம் சைவர்களா இந்துக்களா கட்டுரை ஆய்வு

மதம் கொண்ட யானையை விட மத வெறி பிடித்த மனிதன் கொடூரமானவன். மதவெறியினால் எதையும் சாதித்து விட இயலாது என்று காலம் காலமாக உலக வரலாற்றில் பல்வேறு செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அவரவர் சிந்தனை, பெற்ற கல்வி அறிவு, சூழல் அறிவு, சார்பு அறிவு, சுய அறிவு போன்றவற்றைக் கொண்டு பல்வேறு கருத்துகளைச் சொல்வார்கள். அக்கருத்துக்கள் முழுமையானவையா? சரியானவையா? என்று தெரிந்து கொள்ள இயலாத வகையில் இருப்பதால் உண்மை எதுவென அறிந்து கொள்ள இயலாது.

அவ்வகையில் ஒரு சில சமுதாயத்தில் முக பிரபல்யமும், கருத்து பிரபல்யமும் கொண்டவர்களால் சொல்லப்படும் கருத்துகள் உண்மை என்பது போல பதிந்து விடும். ஒரு சிலர் மனம் புண்பட்டு விடக்கூடாது என்று பட்டும் படாமலும்  சொல்லி இருப்பார்கள்.

அவ்வகையில் நாம் சைவர்களா இந்துக்களா என்ற கட்டுரையினை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்  அவர்கள் 28.05.2021 மற்றும் 04.06.2021 ஆகிய தேதிகளில் தினமணி வெள்ளிமணியில் எழுதி இருக்கின்றார்கள். கட்டுரையினை வாசித்த போது எனக்குள் எழுந்த கேள்வியும் அதன் முடிவும் தான் இப்பதிவு.

கட்டுரையின் இரண்டாம் பகுதியில் வேதமே நம் சமயத்தின் முதல் நூலாம் என்று சொல்லி இருக்கிறார். 

ஆனால் முதல் பகுதியில் சைவர்கள் தமது தோத்திர நூலாக திருமுறைகளையும், சாத்திர நூலாக சைவ சிந்தாந்த சாத்திரங்களையுமே காலாகாலமாக ஏற்றுப் பின்பற்றி வருகின்றனர். திருமுறைகளும், சிந்தாந்த சாத்திரங்களும் சிவனையே முழு முதற் தெய்வமாய் வலியுறுத்துகின்றன. ஆதலால் நாம் சைவ சமயிகளேயாம். இதில் எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லை.

இன்று திருமுறைகளை தோத்திரமாகவும், சைவ சித்தாந்தத்தை சாத்திரமாகவும் கொள்ளாது, பகவத் கீதை போன்ற நூல்களைத் தோத்திரமாகவும், வேதாந்த தத்துவத்தை தமது சாத்திரமாகவும் கொண்ட, பல சமைய அமைப்புகள் மெல்ல,மெல்ல நம் மண்ணில்  புகுந்து வேரோடத் தொடங்கியுள்ளன.

அத்தோத்திரமும் சாத்திரமும் கூட தவறானவை அன்றாம். ஆனாலும் சைவ சாத்திர தோத்திர நூல்களைப் பின்பற்றி, ஒருமித்து வாழ்ந்த மக்களிடையே வேறுபட்ட சமய அமைப்புகள் புகுந்ததால், நிச்சயம் அது பூசல்களுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

வலிமையாய்ச் சைவ வாழ்வை ஏற்றுக் கொண்ட, நம் ஊர்கள் பல வேற்றுத் தத்துவக்காரர்களை உள் நுழைய விடாமலே வைத்திருந்தன.

இன்று நம் மண்ணின் பலவீனப்பட்ட சமய அறிவு நிலையால், மெல்ல மெல்ல எல்லாக் கொள்கையினரும், வேறு வேறு அமைப்புகளின் பெயர்களோடு உள் நுழைய தொடங்கி விட்டனர்.

அங்கணம் உட்புகுந்ததால், இத்தத்துவங்களுள் எது உயர்ந்தது என்பதான சர்ச்சைகளும், மோதல்களும் உருவாகி அவை வீணாக நம் முக்தி வழியை தடை செய்து நிற்கின்றன.

அதனால் நாம் முன்பு போலவே ‘ஒருவனைப் பற்றி ஓரகத்திரு’ என்றாற்போல, சைவ சாத்திரத்தையும், தோத்திரத்தையும் மரபுவழி பின்பற்றி சைவர்களாய் வாழ்வதே உயர்ந்ததாம்.

இவ்வாறு எழுதிச் செல்லும் அவர், ஆங்கிலேயர்களால் ஆறு சமயங்களாக தெய்வ வழிபாடு கொண்டவர்களை எல்லாம் ஒருங்கே இந்து என விளிக்கப்பட்டது என்கிறார். அதென்ன ஆறு சமயங்கள்.

சிவனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சைவர்கள்

விஷ்ணுவை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள்

சக்தியை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சாக்தர்கள்

விநாயகரை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் காணாபத்தியம்

முருகனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் கெளமாரம்

சூரியனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் செளரம் 

இவ்வளவுதான் சமயங்கள் என்கிறார் அவர்.

அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தின்படி தமிழர்கள் சைவர்கள் ஆவார்கள் என கருத வேண்டி இருக்கிறது. ஏனென்றால் தமிழ் நாட்டில் தான் சிவன் கோவில்கள் அதிகம். நூறு சிவன் கோவில்களை கட்டிய மன்னர் என்கோ செங்கண்ணான் என்று வரலாறு சொல்கிறது.

இவ்வாறு சொல்லும் அவரின் கட்டுரையில் ஓரிடத்தில் ஆறு சமயங்களுக்கும் வேதமே முதலாம் என்று இருக்கிறது. சைவர்களுக்கு திருமுறைகளே முதலாம். வேதம் என்பது சைவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று நன்கு கற்று அறிந்து தெளிந்தவர்களுக்குத் தெரியும். ஏன் அவர் இப்படியான குழப்பமான வார்த்தையினை பயன்படுத்தி இருக்கிறார் என்பதை படிக்கும் வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம். 

தெளிவற்று இருந்த ஒரு சில விஷயங்கள் இக்கட்டுரையின் வாயிலாக தெளிவாயின எனலாம். ஆதி சங்கரர் அவர்களால் எல்லா கடவுள் வழிபாட்டு சமயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன என்று தெரிய வருகிறது. அதற்கு ஆங்கிலேய ஆட்சியில் சூட்டிய பெயர் தான் இந்து என்றும் அவ்வகையில் தான் நீதிமன்றங்களில் பகவத்கீதை இந்து மத நூலாக கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் தெளிவாகிறது. ஆனால் ஆறு சமய வழிபாடுகளைக் கொண்ட சமுதாயத்தில் ஒரே ஒரு சமயத்தின் நூலை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது சமய நல்லிணக்கத்தைக் காட்டுகிறது எனவும் புலனாகிறது.

நான் இந்தியன், தமிழன், சைவ சமயத்தைச் சார்ந்த இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதுதான் சரி என நினைக்கிறேன். தமிழர்கள் தம் அடையாளத்தை என்றைக்கும் இழந்து விடக்கூடாது என்று இந்த நேரத்தில் இக்கட்டுரையினைப் பதிப்பித்த தினமணிக்கு மிக்க நன்றிகள் பல.

நன்றி : இலங்கை ஜெயராஜ் மற்றும் தினமணி