குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 14, 2021

வேலை வேண்டுமா? இந்திய அரசின் வேலைவாய்ப்பு இணையதளம்

அனைவருக்கும் இனிய வணக்கம். கோவிட் நோய் தொற்றின் காரணமாக வேலை இழந்தவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இந்தியாவில் எங்கெங்கு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, சம்பளம் எவ்வளவும், ஆன்லைனில் வேலைக்குத் தேர்வு செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வேலை பெறுவது ஆகியவற்றை இந்திய அரசின் வேலைவாய்ப்புத் துறை செய்து வருகிறது.

அரசு வேலை மட்டுமல்ல தனியார் துறையினரின் பங்களிப்பில் மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை வழங்கி வரும் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துக் கொள்ள வேண்டுமென்று இப்பதிவினை எழுதுகிறேன்.

இந்தச் செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள். பதிவை பகிருங்கள். யாரோ ஒருவருக்கு தேவைப்படும் இந்தச் செய்தி. அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை உருவாக்கலாம். அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை தெரிவித்து விட்டால், அவரவர் திறமைக்கு ஏற்ற வேலையினைப் பெற்று மகிழ்வார்கள்.

மத்திய அரசின் இணையதள முகவரி : https://www.ncs.gov.in

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்வது?

தேவையானவை : 

ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள் அட்டை,பாஸ்போர்ட், டிரைவிங்க் லைசென்ஸ் அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் இதில் ஏதாவது ஒன்று  இமெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பர்.

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்யலாம் என்ற வீடியோ இருக்கிறது. அதை ஒரு முறை பாருங்கள். இமெயில் முகவரி மற்றும் மொபைல்  

கீழே காட்டப்பட்டிருக்கும் படிவத்தை வேலை தேடுவோருக்கானது.


 

பதிவு செய்த பிறகு இணையதளத்தின் உள்ளே சென்று மாநிலம் வாரியாக, செக்டார் வாரியாக வெளியாகி இருக்கும் வேலை வாய்ப்பில் பொருத்தமான வேலையைத் தேர்வு செய்து அப்ளை செய்யுங்கள். 

அதுமட்டுமின்றி வேலை வாய்ப்பு முகாம்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. அதிலும் கலந்து கொள்ளலாம்.

தனியார் ஏஜென்சியிடம் பலரும் ஏமாந்து வருகின்றார்கள். அதெல்லாம் தேவையில்லை

ஒன்றிய அரசின் இந்த அருமையான சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்றிய அரசு வழங்கும் இலவச படிப்புகளை www.swayam.gov.in என்ற இணையதளத்துக்குள் சென்று பதிவு செய்து விருப்பமான படிப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி சான்றிதழ் பெருங்கள்.  



 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.