குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Saturday, October 4, 2025

இட்லி கடை - பணத்திமிர்


ஒரு உண்மைக் கதையைப் படியுங்கள். அதைத் தொடர்ந்து இட்லி கடைக்கு வருவோம்.

கிராமத்திலிருந்து சென்னை வந்த ஒருவர், அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு ஹோட்டலைத் திறக்கிறார். அவரின் வாழ்க்கையில் அவரின் அம்மாவின் சமையல் குறிப்புகள் பற்றிய பல செய்திகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்கிறார். இந்தியாவுக்கு வந்தால் அவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவரும், அவரின் அம்மாவும் சமையல் செய்கிறார்கள். 

அவர் பல தோல்விகளைச் சந்திக்கிறார். சவால்களை எதிர் கொள்கிறார். எல்லாவற்றிலும் வெற்றி கண்டு அமெரிக்கா மட்டுமல்ல, தற்போது திருப்பதியில் கூட ஒரு ஹோட்டல் துவங்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. அவர் யார் தெரியுமா?

மைலாப்பூர் எக்ஸ்பிரஸ் ஹோட்டலின் உரிமையாளர் ஜெய். 

அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது அவரின் உணவுகள். ஏன் திரும்ப இந்தியாவில் அதுவும் திருப்பதியில் ஹோட்டல் ஆரம்பிக்கிறார்? அவருக்குத் தெரிந்திருக்கிறது அமெரிக்கா பற்றி. திட்டமிடல்.

ஒரு மாபெரும் ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்.

இவ்வளவுக்கும் அவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். அவரின் குடிப் பெருமையை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்துகிறார். அவர் விற்பனை செய்யும் உணவுகளில் அவைகள் வெளிப்படுகின்றன.  அவரிடம் வேலை செய்யும் பணியாளர்களிலிருந்து எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துகிறார். 

அவர் மிகச் சரியான வகையில் தன்னையும், தன் குடிப் பெருமையையும், தன்னைச் சார்ந்த நபர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். அதை எல்லோரும் வெறுக்கா வண்ணம் சாத்தியப்படுத்துகிறார்.

உணவு என்கிற போது சமூகநீதி உண்டு.  உணவின் பெயர்களில் சாதி இருந்தாலும், அதன் சுவைக்கு முன்னால், அதன் வியாபாரத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாது.

ஆனால் கல்வியில் அது இல்லை. 

அமெரிக்க கல்லூரி ஒன்றின் ஆய்வறிக்கையில் - பார்ப்பனர்கள் ஒரு பள்ளியின் பாடத்திட்டத்திலிருந்த தலித் என்கிற வார்த்தை இந்திய வரலாற்றில் இல்லை எனக் குறிப்பிட்டு, அதை நீக்க வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதை குழுவில் சமர்ப்பித்த போது, பார்ப்பனர்களின் சதியால் பொய்யான தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அந்த பாடத்திட்டத்தினை நிராகரித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியினர். 

https://scroll.in/article/808394/california-to-decide-today-whether-hindu-groups-can-dictate-what-dalits-call-themselves-in-textbooks

மேலே இருக்கும் இணைப்பில் இருப்பதைப் படித்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு பிராமணர்கள் தலித் என்கிற வார்த்தையின் மீது வன்மம் கொண்டுள்ளனர் என அந்த நிகழ்வு காட்டுகிறது. இணைப்பை கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.

இதோ மற்றுமொரு ஆதாரம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்து என்ற ஒற்றை வார்த்தையின் பின்னால் மறைந்து கொண்டு நடக்கும் சதிகளைப் படித்துப் பாருங்கள்.

https://csrr.rutgers.edu/wp-content/uploads/2025/05/hindutva-in-america.pdf




அமெரிக்காவில் தலித்துகளும் உள்ளனர். அவர்கள் ஜெய் நடத்தும் மைலாப்பூர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றால் அவர்களை யாரும் தடுப்பது இல்லை. 

பணத்திற்கு ஏது சாதி?

ஒரு தாய் தன் மகனை தொழிலதிபராக மாற்றியது தான் இந்தக் கதை. 

இனி இட்லி கடைக்கு வருவோம்.

தனுஷ் பற்றி எல்லோருக்கும் அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும்.  அசுரன் படத்தையும் பார்த்திருப்பீர்கள். 

இந்த இட்லிகடை திரைப்படம் அவரின் கற்பனையில் உருவான படமாம். இயக்கமும் அவரே.

என்ன கதை ? 

ஒரு கிராமத்தில் சாலையோரமாய் இருக்கும் உணவகத்தினை தனுஷின் அப்பா ராஜ்கிரண் நடத்தி வருகிறார். சிறுவனாக இருந்த பொழுது முதற்கொண்டு அவருடன் உணவகத்துக்கு வரும் தனுஷ் வளர்கிறான். உணவு தயாரிப்பு பற்றிப் படிக்கிறான். ராஜ்கிரண் அவனை இங்கேயே இருந்து, இந்த உணவகத்தை நடத்தி வா என்கிறார். அவன் மறுத்து விடுகிறான். சென்னை செல்கிறான், பின்னர் அமெரிக்கா செல்கிறான். 

அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் மகளை விரும்புகிறான். திருமணம் நிச்சயமாகிறது. அப்பாவை திருமணத்துக்கு அழைக்கிறான். அவர் முடியாது என்கிறார்.  திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அடுத்த நாளில் ராஜ்கிரண் இறக்கிறார். 

இறுதிச்சடங்கிற்காக இந்தியா வருகிறான். பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னால் அப்பா விட்டுச் சென்ற இட்லிக் கடையை நடத்துகிறான். வில்லன் அமெரிக்க காதலியின் அண்ணன். லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது.

அவனுடன் படித்த பெண்ணைத் திருமணம் செய்கிறான். எதிர்த்த அமெரிக்க  மச்சானை அகிம்சா படி சமாளித்து அவனை இந்த இட்லிக் கடையில் மாவாட்ட வைக்கிறான். 

இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா?

ஊரில் பேசிக் கொல்(?)கிறார்கள் இப்படி.

“அப்பன் பெயரை மகன் காப்பாற்றி விட்டான்”

சுபம்.  

இந்தப் படத்தைப் பார்த்த மாத்திரத்தில் புட் பிளாக்கர் குஞ்சாமணிகளுக்கு குஷி வந்திருக்கும். ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லி, அம்மிக்கல்லில் அரைத்து வைக்கும் சாம்பாரின் சுவைக்கு இந்த உலகில் ஈடு இல்லை. அந்தப் பாரம்பரியத்தை விட்டு விடலாமா? இதற்கு முன்னால் காசு, பணமெல்லாம் தூசு. சாதி,சனத்தை விட்டு விட்டு வெளி நாட்டுக்கு ஏன் போய் பணம் சம்பாதிக்க வேண்டும். 

இந்த இட்லியைச் சாப்பிட்டுச் செல்லும் மக்கள் பாராட்டும் வார்த்தைகளை விட உயர்ந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா? 

அனைவரும் இதற்குத்தானே பிறந்தோம். 

இதை விட ராக்கெட் விடுவது, டெக்னாலஜியில் வளர்வது, கோடிகளில் சம்பாதிப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் படம் அதைத்தான் சொல்கிறது. பாரம்பரியத்தினைக் காப்பாற்ற வேண்டுமாம்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றுச் சொன்னார் கலியன் பூங்குன்றனார்.  

இல்லையில்லை என் ஊரே எனக்குப் போதும் என்கிறது இட்லிகடை.

மண் சுவர், ஓலைக்கூரை வேய்ந்த சிறு கடை, மரப்பெஞ்சுகள் இரண்டு, அடுப்பு, அம்மிக்கல், ஆட்டுக்கல் - பாரம்பரியம்.

1800 களில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயனுக்கு, இந்தியாவில் இருந்த சாதி கொடுமைகள் பெருத்த அவமானத்தை தந்தது. 

  • பிராமண குலத்துக்குத்தான் கல்வி - எல்லோருக்கும் அன்று இல்லை.
  • அக்ரஹாரத்துக்குள் தலித்துகள் வரவே கூடாது.
  • தலித்துக்கு என சேர் என்ற பெயரில் ஊரை விட்டு ஒதுக்கிய இடத்தில் வீடுகள். 
  • தலித்துக்கு என சொத்துக்கள் கிடையாது.
  • பரம்பரையான கூலிகள் அவர்கள்.
  • குளத்தில் குளிக்க அனுமதி இல்லை.
  • தெருவில் நடக்க அனுமதி இல்லை.
  • கோவிலுக்குள் கடவுளைக் கும்பிட அனுமதி இல்லை.
  • முலையின் சைசுக்கு வரி கட்ட வேண்டும்.
  • கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை.
  • மேல் துணி போட அனுமதி இல்லை.
  • காலில் செருப்பு அணிய அனுமதி இல்லை.
  • நீதிமன்றத்தில் நீதிபதியிடமிருந்து 16 அடி தள்ளி நிற்க வேண்டும்.

தென் தமிழகத்தில் பரவி இருந்த மனித வன் கொடுமைகள் இவை.

பெரியார் தென் தமிழகத்தினை திராவிடக்குடும்பம் எனக் குறிப்பிட்டு மேலே குறிப்பிட்டுள்ள கொடுமைகள் செய்தோரை எதிர்த்தார். 

படிப்பறிவில்லாதவர்களைப் படிக்க சொன்னார், கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பெரியார், அண்ணா, கலைஞர் என இன்றும் தொடர்கிறது சாதிய வன் கொடுமைகள். இதோ தமிழ் நாட்டிலிருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பிராமணரைத் தவிர வேறு எவரும் கருவறைக்குள் சென்று கடவுளை வழிபட முடியாது. இப்படியான சூழல் இருக்கும் போது, இந்த இட்லி கடை.

பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம், ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் ஆகியவை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் அல்லவா? இன்றைக்கும் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்விக்கான தொகையை தராமல் தடுத்துக் கொண்டிருக்கிறது பிஜேபி அரசு.

இட்லி கடை என்ன சொல்ல வருகிறது?

  • வண்ணான் மகன் வண்ணான்
  • தோட்டி மகன் தோட்டி
  • ஆசாரி மகன் ஆசாரி
  • தோட்டக்காரன் மகன் தோட்டக்காரன்
  • சாதியும் சனமும் தேவை (எதற்கு இட்லி தின்பதற்கு)
  • அமெரிக்கா தேவையில்லை, பணம் தேவையில்லை. படிப்புத் தேவையில்லை. இப்படி எதுவும் தேவையில்லை.
  • அப்பன் பெயரைக் காப்பாற்ற வேண்டும். குலப் பெருமையை விட்டு விடக்கூடாது.

அந்த ஊரில் ராஜ்கிரண் மட்டும்தானே உணவகம் வைத்திருந்தார். அவரின் ஆசையை அவரின் மகன் நிறைவேற்றுவது எப்படி தவறாகும் என்று கேட்பீர்கள். அது தனிப்பட்ட ஒருவரின் ஆசை. அந்த ஆசையை மகன் நிறைவேற்றி இருக்கிறான், அதுதானே படம். அதை இப்படி விமர்சிக்க வேண்டுமா எனவும் கேட்பீர்கள்.

சினிமாக்காரர்களை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பக்கத்து மாநிலத்தில் ஒரு சினிமாக்காரர் துணை முதலமைச்சராக ஆக்கிய பெருமை தென் இந்தியாவுக்கு உண்டு. படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து மூளை மழுங்கச் செய்யும் தந்திர வித்தை கொண்டது சினிமா. 

இப்போது சொல்லுங்கள். நான் விமர்சிப்பது சரிதானே?

சமூக நீதிக்காக இன்றைக்கும் இணையத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோருக்கு இந்தப்படம் மாபெரும் எரிச்சலைத் தந்தது. 

ஒரு பிராமணர் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களை அமெரிக்கா வரை கொண்டு சென்று, அவர்களின் வாழ்வியலை உயர்த்துகிறார்.

ஆனால் இவரோ அதெல்லாம் தேவையில்லை என தன் வாழ் நாளை சமூகநீதிக்காக வாழ்ந்தவர்களை அசிங்கப்படுத்தி, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் முன்னேற்றமடைவது தவறு எனப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார். சாதி சனம் முக்கியம் என்று பேசுகிறார்.

இதற்கு என்ன காரணமாக இருக்கும்?  வேறென்ன பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்.

கொஞ்சமாவது மனித சமூகத்தின் மேன்மைக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் அதற்கான தகுதி இருப்பவர்களிடம் இதைக் கேட்கலாம்.  இல்லாதவர்களிடம் கேட்டு என்ன பலன்?

சமூக நீதிக்கான போராட்டத்தைச் சீர்குலைக்கும் நயவஞ்சகமான படம் இது.  

இது கோடாலிப்படம். 

தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அவலம்.

இது படமல்ல, அசிங்கம்.

வளமுடன் வாழ்க.

04.10.2025

ஒரு குசும்பு விமர்சனம் : இட்லி கடைத் திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவு அரைப்பார். அதில் தான் சுவை அதிகமாம். ஒரு விஷயத்தை தனுஷ் மறந்து போனார். தனுஷ்க்கு ஆட்டுக்கல்லே தேவையில்லை. நித்யா மேனனே போதுமே? பின்னர் எதற்காக இன்னொரு ஆட்டுக்கல்? இந்த இடத்தில் இயக்குனர் தனுஷ் கொஞ்சம் ரசனை மறந்து விட்டார் என்பது அடியேனின் பார்வை.


Tuesday, April 1, 2025

தனுஷின் நாய்க்காதல் - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?

ஆறறிவு கொண்ட மனிதன் விலங்குகளை விட கேவலமான நிலைக்குச் செல்வான் - வரலாறு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.

மார்கழி மாதம் நாய்கள் தெருவில் காதல் செய்வதைப் பார்த்திருப்போம். மனிதர்கள் செய்தால் - அதுவும் தனுஷின் அக்கா பையன் பவிஷ் ( சுவற்றில் வச்சு தேச்சாலும் கிளம்பாத முகம்) - விசிலடிச்சான் குஞ்சுகளுக்குப் புதுவழி காட்டிய நாய்க்காதல் படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 

நாய்களுக்கு நேரமும் இல்லை, காலமும் இல்லை - தேவையென்னால் இடம் பொருள் பார்க்காமல் கோர்த்துக் கொள்ளும். அதை தான் தனுஷ் படமாக எடுத்து இருக்கிறார்.

தனுஷை கொண்டாடி ஆடி பாடி தீர்க்கும் ரசிகன் எவனையாவது ஹீரோவாக்கலாமே தனுஷ். ரசிகனின் காசு மட்டும் வேண்டும். ஆனா உங்க குடும்பம் மட்டுமே தான் ஹீரோவாக நடிக்கனுமா தனுஷ்? உம்ம பையன் அடுத்த ஹீரோ...வா? 

காசையும் நேரத்தையும் கொடுத்து, நாசமாக போகவென தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரையிலும் உங்களைப் போன்றோர்களின் ஆட்டம் அடங்கவா போகுது?

நாயகி அனிகா சுரேந்திரன் - பிஞ்சிலே பழுத்தது. முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தால் நித்தியானந்தாவாக இந்தியாவை விட்டு ஓடிப் போகனும்.  உருண்டு திரண்ட உடலிருந்தால் - அந்த நான்கு இஞ்ச் இடத்தை தவிர மற்றதெல்லாம் காட்டினால் ஹீரோயின். இன்ஸ்டாகிராமில் ஆட்டம்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் - ஒற்றை விரலை நீட்டி கண்ணடித்த கலையுலக நடிகை. இது நாள் வரை எங்கே போனாரோ தெரியவில்லை. தனுஷுக்கு மாமி நடிகைகளை ரொம்பவும் பிடிக்கும் போல. 

எங்கேயிருந்து பிடிக்கிறானுங்களோ? 

மேத்யூ தாமஸ் - மலையாள படங்களில் இருந்து ஓய்வு பெற்ற ஷகிலா இப்போது அம்மா ஆகி புனிதராகி விட்டார். சிலுக்கு நடித்த லயனம் பட ஹீரோ நந்து போல இருக்கிறார். விரைவில் மலையாள சூப்பர் ஹீரோக்களுக்கு ஷகிலா போல டஃப் கொடுக்கலாம். 

ரம்யா ரங்கநாதன்  - அச்சு அசல் மாமி. தனுஷ்ஷுக்குப் பிடிக்க இந்த ஒன்றே போதும்.

கவட்டிக்குள் சொரியும் கதையில் நடித்தால் தான் ரசிகனின் மனதைக் கொள்ளை கொள்ள முடியும். அதைத்தான் மாமியாரைத் தடவி ஹீரோவான  சோசப் - இப்போது முதலமைச்சராக வேண்டுமென கதறிக் கொண்டிருக்கிறான்.

ஆபாசப்படம் - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 

ஒழுக்கமென்றால் என்னவென்று தெரியுமா தனுஷ் உங்களுக்கு?

சுய ஒழுங்கு என்றால் என்னவென்று உங்களைப் போன்றோருக்குத் தெரியாது. 

பெண்களை அசிங்கப்படுத்தும் போக்கினை எப்போதுதான் உணர்வீர்களோ தெரியவில்லை. 

சுயகவுரம் இல்லாத பெண்களை நடிகைகளாக்கி - நாசகாரம் செய்யும் இதைப் போன்ற படங்களை காசு கொடுத்துப் பார்க்கும் ரசிகர்களின் எதிர்காலத்தை நினைக்கும் போது ஆயாசம் தான் ஏற்படுகிறது.

தனுஷ் நீங்கள் வாழும் காலம் வரை - ஒரு நல்ல செயலையாவது செய்யுங்கள்.  மலத்தை தட்டில் வைத்து பரிமாறும் மனத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

பெண்கள் ஆலமரம் போன்றோர்கள். அவர்களை அசிங்கம் செய்யாதீர்கள். சரோஜாதேவி கதைப் படங்களை அமெரிக்கா சென்று எடுங்கள். அந்த ஃபீல்ட் தனி. 

சன்னிலியோன்களை தமிழ் நாட்டில் உருவாக்கிட முயலாதீர்கள். 

Saturday, June 19, 2021

நல்லி எலும்பு கறிக்கொழம்புக்குத்தான் லாயக்கு - ஜகமே தந்திரம் ஒரு பார்வை

 

கதையைப் பார்க்கலாம்.

இரயில் பாதை குறுக்கே ஒரு கார். ஹீரோ உட்கார்ந்திருக்கிறார். சிவப்பு கார்.

ஙொப்புறானே சத்தியமா நம்புங்க.

இரயில் சரியாக காரின் அருகில் பிரேக்கிடுகிறது. இரயிலின் டிரைவர் சீக்கிரம் காரியத்தை முடிங்கன்னு சொல்லுகிறார்.

அங்கு யாரோ ஒரு ஒரு வட நாட்டு சேட்டானின் தம்பியைச் சுட்டுக் கொன்னுட்டு கிளம்புகிறார் #தனுஷ்.

தனுஷின் ஹோட்டலில் தனுஷைக் கொல்ல சேட்டனின் ஆட்கள் முயல, நாட்டு வெடிகுண்டை போட்டு துரத்தி அடிப்பதைப் பார்க்கும் ஒரு ஆங்கிலேயன் (தனுஷ்)சுருளியை அவன் நாட்டில் இருக்கும் ஒரு தாதாவை போட்டுத்தள்ள அழைக்கிறான். ஆங்கிலம் தெரியாத சுருளி பிரிட்டன் கிளம்புகிறான்.

அங்கு பிரிட்டன் ஃபாசிஸ்ட் பீட்டரைப் பார்க்கிறான். அவன் தமிழன் சிவதாசுவைப் போட்டுத்தள்ளச் சொல்கிறான்.

ஐந்தாறு நாட்களில் சிவதாசை ஆராயும் சுருளி அவன் தங்கம் கடத்துகிறான் என்று கண்டுபிடிக்கின்றான். ஒரு லாட்டைப் பிடிக்கிறான். அவ்வளவு திறமை வாய்ந்த தமிழ் எலி (இப்படித்தாங்க தனுஷை சிவதாசு சொல்கிறான்) சுருளியைச் சந்திக்கிறான் சிவதாஸ்.

சுருளியின் ஏற்பாட்டால், சிவதாசும் பீட்டரும் சந்திக்கின்றார்கள். சிவதாசைப் போட்டுத்தள்ளுகிறான் பீட்டர். உதவி சுருளி.

சுருளிக்குப் பரிசாக ஒரு ஏரியா கிடைக்கிறது. லிட்டில் மதுரை எனப் பெயர் வைத்து ஊர் ஆட்களை அழைந்து வந்து வாழ்கிறான். 

சுருளி ஒரு இலங்கைப் பெண்ணைக் காதலிக்கின்றான். அவளுக்கு ஏழு வயதில் பையனுண்டு. (புரட்சிக் கதை இயக்குனரே. மாமிக்கள் மீது தனுஷுக்கு ஆர்வம் போல. ஒது ஒரு ட்ரிக் ஷாட். மாமிகள் முயலலாம் என க்ரீன் சிக்னல். இப்படித்தான் ஒருத்தன் வீணாய்ப் போனான்)

அவளுடன் சுருளி டேட்டிங்க் போகின்றான். அங்கு சுருளி சுடப்படுகின்றான் சிவதாஸ் ஆட்களால். பின்னர் காப்பாற்றப்படுகிறான். சுருளி சுடப்படக் காரணம் காதலி.

காதலி ஏன் சுருளியைக் கொல்ல முயல்கிறாள்? 

சிவதாஸ் உதவியதால் தான் அவள் பிரிட்டனில் இருக்கிறாள். அந்த நன்றிக் கடனுக்காக காதல் போர்வையில் கொலை முயற்சி.

அகதிகளுக்கு உதவிடத்தான் சிவதாஸ் தங்கம் கடத்துகிறான். பீட்டர் தன் நாட்டில் வேறு நாட்டவர் எவரும் இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஃபாசிஸ்ட் என அறிகிறான் சுருளி.

அகதிகளுக்கு ஆதரவாய் சட்டமியற்றப் போராடும் ஒரு ஆங்கிலேயனைப் போட்டுத்தள்ளு என்கிறான் பீட்டர்.

உண்மையை தெரிந்து கொண்ட சுருளி பீட்டரைக் கொல்லாமல் அகதி போல பாஸ்போர்ட் தயார் செய்து எங்கோ கொண்டு போய் விடுகிறான்.

கதையும் முடிந்தது. படமும் முடிந்தது.

* * *

படத்தினை வாங்கி வெளியிட்டிருக்கிறது சுருளி 2019 பிலிம் லிமிடெட் நிறுவனம், லண்டனில் முகவரி இருக்கிறது. அவர்களிடமிருந்து படத்தை வாங்கி நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. 

1949ல் பிறந்த மிஸ்டர் பிரைன் பிரேக் 48 கம்பெனிகளுக்கு இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார். அவரின் நிறுவனம் தமிழ் படத்தை வாங்கி வெளியிடுகிறது. இதன் பிசினஸ் கான்செப்ட் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.

மிஸ்டர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் பிசினஸ் வலைப்பின்னல்கள் பற்றிய இந்த சிறு விபரமே தலை சுற்றுகிறது. இந்த நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒய் நாட் ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து படத்தை தமிழ் நாட்டில் தயாரித்து இருக்கிறது. ஃபாரின் இன்வென்ஸ்ட்மெண்ட் இந்தியா உள்ளே வந்திருக்கிறது. நல்ல வேளை இந்த நிறுவனத்துக்கு முகவரி எல்லாம் இருக்கிறது.

நம்ம அதானி போல ALBULA INVESTMENT FUND, CRESTA FUND AND APMS INVESTMENT FUND - FOREIGN PORTFOLIO INVESTORS போல் இல்லை. ஒரு வெப் சைட் கூட இல்லாத வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் அளவுக்கு நம்ம இந்திய ஒன்றியம் அனுமதி கொடுத்திருக்கிறது. நீண்ட நாள் கழித்து அதைச் செபி கண்டுபிடிக்கிறது. அல்புலா அதானி மட்டுமல்ல பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்கள். அதானி நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட 11,000 கோடி. முகவரி இல்லா நிறுவனத்திடமிருந்து முதலீடு.

ஒரு வோட்டர் ஐடி மாற்ற நாமெல்லாம் என்ன பாடுபடுகிறோம் எனக் கவனியுங்கள்.

அக்கவுண்ட் எல்லாம் செக் செய்தார்களே இன்கம்டாக்ஸ்காரர்கள் என்று அவர்கள் தான் கவலைப்படனும். நமக்கேன் வம்பு.

* * *


கார்த்திக் சுப்புராஜ் காலி பெருங்காய டப்பா என பேட்ட படத்தைப் பார்த்த போதே தெரிந்து விட்டது. பப்புகளில் ஊத்தி விட்டு, தடவி, குடித்து கற்பை கற்பூரமாக்கும் அதி உன்னத வேலையைச் செவ்வனே செய்து வரும் தமிழ் உலகின் உன்னத ஒப்பற்ற நடிகரின் விதி வேலை செய்யத் துவங்கியது போலும்.

சுருளி என்ற பெயருக்கு ஒரு சிலிர்ப்பு இருக்கும். 80களில் சுருளிராஜன் லெஜெண்ட். அவரின் நகைச்சுவையை சந்தானம் நிரப்பினார். இப்போது ஹீரோ படுகுழியில் விழுந்து கிடக்கிறார். அட்டைக்கு மெத்தை ஆகாது அல்லவா?

நகைச்சுவைக்குப் பெயர் போன பெயரை ஹீரோவிற்கு வைத்து  இது நகைச்சுவைப் படம் என்றுச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போல இயக்குனர். அதாவது கிரைம் திரில்லர் ஆக்சன் நகைச்சுவை.

தனுஷை விட பெரிதாக இருக்கும் மெஷின்கன்கள். அதை வைத்து ஆக்சன். துப்பாக்கி சைசுக்கு இருக்கும் ஹீரோ. நான்கு மடங்கு வெயிட்டாக இருக்கும் அடியாட்கள். வேஷ்டியில் வில்லனின் ஆட்களைச் சுடும் ஸ்லோமோஷன் காட்சிகள் என நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். கொய்யாலே..!

பிரிட்டன் தாதா மதுரை தாதாவை வைத்து தன் கொலைகளை நடத்தினால் எப்படி இருக்கும்? இதுதான் கதையின் வொன் லைன்.

அந்த மதுரை தாதாவே நீங்க தான் சார் என்று தனுஷிடம் சொல்லி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குனர் சுப்புராஜ் அவர்களே, 

கவட்டியைச் சொறிந்து விடும் கறி (ஹீரோயினின் சதைக்கறி) குழம்பு வைக்கத்தான் நல்லி எலும்புக்குச் சரிப்படும். அது மாதிரியான மல்லுப் படங்களை எடுத்துக் கல்லாவை நிரப்புங்கள்.

அதை விடுத்து. உலக அரசியல் பேசும் தகுதி எல்லாம் நல்லி எலும்புக்கு கிடையாது இயக்குனரே. நல்லி எலும்பு நாட்டை ஆளக் கேட்டால் அதற்கு கதை பண்ணிக் கொண்டு செல்லும் உம்மைப் போல ஆட்களை காலம் மன்னிக்காது.

ஒரு விஜயகாந்த் போதும் தமிழ் நாட்டுக்கு. விட்டு விடுங்கள் தமிழர்கள் பிழைத்துப் போகட்டும். இப்படத்தின் மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் நீங்கள்? சிவதாசுவை வைத்துக் கேலி செய்வது தான் நோக்கமா? அவ்வளவு இழிவானவர்களா இலங்கைத் தமிழர்கள்?

துரோகம் தமிழனின் கூடப் பிறந்தது என்ற வசனம் உங்களுக்கும் பொறுந்தும். 

நீங்கள் ரசிகர்களுக்குத் துரோகம் செய்திருக்கின்றீர்கள்.

எனது ஆகப்பெரும் கெட்ட வார்த்தை “போடா டேய்”. அந்த வார்த்தையால் கூட திட்ட முடியாத அளவுக்கு கேடுகெட்ட படம் ஜெகமே தந்திரம்.

சீனுக்குச் சீன் வைச்சு செய்யலாமா என்று பார்த்தேன். எரிச்சல்தான் மண்டியது. 

திரும்பக் கிடைக்கவே கிடைக்காத பலரின் நேரத்தை அழித்து விடும் உம்மைப் போன்ற ஆட்களை என்னவென்று வைவது?

தனுஷ்... ரசிர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் - ஜெகமே தந்திரம்.

அம்புட்டுதான்.