குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அதானி. Show all posts
Showing posts with label அதானி. Show all posts

Wednesday, July 10, 2024

போன் கட்டண விலையேற்றம் - உண்மை என்ன?

ஜூலை 4 முதல் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் போன் ரீஜார்ஜ் மற்றும் கட்டணங்களை சுமார் 27 சதவீதம் அளவுக்கு விலையை உயர்த்தின. பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என சோஷியல் மீடியாக்களில் பேசினார்கள். பிஜேபி தோற்றதற்காக இந்திய மக்களை பழிவாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் விலையை உயர்த்தின எனவும் பேசினார்கள். 

அரசியல், பழிவாங்கல் என்பதெல்லாம் பொதுமக்களின் பொதுப்பார்வை. இதற்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் லாபத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டன. பொதுமக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு துறையில்  நிறுவனங்கள் முதலீடு செய்து விட்டு, இலவச சேவை செய்யமாட்டாரகள். லாபம் ஒன்றே அவர்களின் நோக்கம்.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொத்துக்கள் இருக்கும். அதை மூலதனமாக வைத்து தொழிலை ஆரம்பித்து, தங்களின் நிறுவனத்தை உருவாக்கி இருப்பார்கள். இந்த நிறுவனங்களுக்கு வங்கியில் கடன் இருக்கும். இந்தப் பணம் பொதுமக்களின் பணம். வங்கியில் இருக்கும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து, வங்கிகள் சம்பாதிக்கின்றன.

அடுத்து, பங்கு வர்த்தகத்தில் இவர்களின் நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் என்பதால் பல முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பார்கள்.

இதற்கிடையில் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளங்கள், அவர்களுக்கான சம்பள உயர்வுகள் மற்றும் இதர கட்டணங்கள், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப நிர்வாகச் செலவுகள், கண்ணுக்குத் தெரியாத தொழில் போட்டியாளர்களைச் சமாளிப்பதற்கான செலவுகள், நடை முறைச் செலவுகள் என பல வகையான செலவுகளும் உண்டு.

இதையெல்லாம் சமாளித்து நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்ல வேண்டும். இதில் ஒரு இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பது நிறுவனங்கள் மட்டும் அல்ல. இந்திய மக்களின் வரிப்பணம் மற்றும் அவர்களின் முதலீடுகளும் இழக்கப்படும். இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ, ஷேர்கள் வைத்திருப்பவர்களோ கட்டண உயர்வை சரி என்பார்கள். ஏனெனில் அவர்கள் இந்த நிறுவனத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு கட்டண உயர்வு என்பது நஷ்டம். இவர்களுக்கு பெருத்த லாபமில்லை, ஆனால் நிறுவனம் லாபத்தில் இயங்க வேண்டும். அப்போதுதான் இவர்களால் பிழைக்க முடியும். இது அரசுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் வாய் மூடிக் கொள்வார்கள்.

போன் கட்டணம் உயர்ந்து லாபம் ஏற்பட்டால், இந்த நிறுவனங்களின் மீது முதலீடு செய்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல வேலை இழப்பு உண்டாகும். பணியாளர்கள் நிறுவன சம்பளத்தை வைத்து வீட்டுக்கடனோ அல்லது கார்கடனோ எதுவோ வாங்கி இருப்பார்கள். வேலை இழந்தால் வங்கி ஜப்தி செய்து விடும். வங்கிக்கு இழப்பு உண்டாகும். இப்படி ஒரு சிக்கலான ஆனால் அவசியமான பொருளாதாரப் பிணைப்புகள் மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் உண்டு.

இதையெல்லாம் விட்டு வெளியேற முடியாது. இது தான் பொருளாதாரச் சங்கிலி. கட்டண உயர்வை நிறுத்தி வைக்க உத்தரவிட, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் முடியும். ஆனால் சிஸ்டம் அதைச் செய்ய அனுமதிக்காது. ஏனெனில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த நிறுவனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் செலவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு மக்களை விட நிறுவனங்களின் சாமர்த்தியம் தான் முக்கியமானது. மக்கள் எப்போதும் கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள். எதிராய்ப் பேசுவார்களே தவிர வேறு ஒன்றையும் மக்களால் செய்ய முடியாது என அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும் தெரியும்.

இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா என்று நீங்கள் கேட்பீர்கள் எனத் தெரியும். இதோ கீழே த ரிப்போர்ட்டர்ஸ் கலெக்ட்வ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திகள்.



மேலே இருக்கும் படங்களின் செய்திகள் இணைப்பு கீழே இருக்கிறது. இணைப்பைச் சொடுக்கி, படித்துக் கொள்ளுங்கள். ( Thanks : The Reporters Collective)


ஒவ்வொரு அரசுக்கும் மக்கள் நலன்கள் மீது அக்கறை இருக்காது. ஏனெனில் மக்கள் தேசமெனும் சங்கிலியில் கட்டப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் வரி கொடுத்தே ஆக வேண்டும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து அரசுகள் வரிகளைப் பிடுங்கிக் கொள்ளும். அதை உங்களால் நிறுத்த முடியாது. 

நாட்டின் நலன் முக்கியமாகும் போது, மக்களின் நலன் தியாகமாக்கப்படும். இதுதான் எல்லைகளுக்குள் உட்பட்ட ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் எதார்த்த நிலை. நீங்கள் இந்தப் பூமியில் ஓரளவு சுகமாக வாழ வேண்டுமெனில் வரி கட்ட வேண்டும். எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்றால் பைத்தியமாக சாலைகளில் திரியலாம். அதற்கு மட்டும் அரசு அனுமதி உண்டு. பட்டினியாக கிடக்கலாம். அரசு ஏனென்று கேட்காது. அது தனி மனித சுதந்திரத்துக்குள் வந்து விடும்.  அனாதைகள், நாடோடிகள், பிச்சைககாரர்கள் ஆகியோரைப் பற்றி அரசுகள் எப்போதும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் பல திட்டங்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் அரசுகளால் நிர்வகிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மை அது. 

ஆகவே கட்டண உயர்வுகளை ஏற்றுக் கொண்டு, விதியேன்னு வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரும் எதுவும் செய்யவும் மாட்டார்கள், செய்யவும் முடியாது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவான கட்டமைப்பு என்ன தெரியுமா? இனி ஒரு அம்பானி, அதானி உருவாக முடியாது. அம்பானி ஒரு கட்சி என்றால் அதானி இன்னொரு கட்சியினால் வளர்க்கப்பட்டவர்கள். அரசியல் நடத்த இவர்கள் தேவை. இல்லையென்றால் நம்மிடம் எந்தக் கட்சியும் அரசியல் செய்ய முடியாது. நமது டிசைனுக்கு ஏற்றவாறு தான் கட்சிகளும் இருக்கும்.

அரசியல் என்றால் என்ன? மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோ, மக்களின் வாழ்க்கையை உயர்த்தி, நல்ல நிலையில் வாழ வைப்போம், நாட்டை உயர்த்துவோம் என்பதுதான்.

ஆனால் இங்கு நடப்பது என்ன? எல்லாமே தலைகீழ் அல்லவா? இதுதான் எதார்த்தம். ஆகவே வாழப்பழகிக் கொள்ளுங்கள். 

நீங்கள் யாரும் உங்கள் வாழ்க்கையை வாழ்வதே இல்லை. நீங்கள் வாழ்வது அதிகார மிக்கவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை டிசைனுக்குள். உங்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை இங்கு இல்லவே இல்லை.

வளமுடன் வாழ்க.

10.07.2024

Saturday, May 4, 2024

இந்திய ஊடகங்கள் அழிக்கப்பட்டன - பத்திரிக்கை துறை விலைக்கு வாங்கப்பட்டது

இந்தியாவின் பத்திரிக்கை துறை அழிக்கப்பட்டது டிசம்பர் 30, 2022ம் ஆண்டு என்று ஆரம்பிக்கிறது ஆர்.சீனிவாசன் அவர்களின் கட்டுரை. 

அன்றைய தினம் மிகவும் மதிக்கப்படும் மற்றும் மதிப்பிற்குரிய செய்தி நிறுவனமான என்டிடிவியின் முழு கட்டுப்பாட்டையும் செல்வாக்குமிக்க - மற்றும் பலராலும் சர்ச்சைக்குரிய நிறுவனராக விமர்சிக்கப்படும் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, அப்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆன அவரது அதானி எண்டர்பிரைசஸ் மூலம், என்.டி.டி.வியின்  27.26 சதவீத கூடுதல் பங்குகளை வாங்கிய பிறகு, முழுவதுமாக எடுத்துக் கொண்டார். பிரபல செய்தியாளர் பிரனாய் ராய் வெளியேற்றப்பட்டார்.

அவரிடம் என்.டி.டிவியின் நிறுவனப் பங்குகளில் 64.71 சதவீதம் உள்ளது. என்.டி.டி.வியை கொல்லைப்புறமாக ஆக்கிரமித்த அதானி, சில மாதங்களுக்கு முன்பு, இவரின் ஊடக நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ், புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அரசாங்க நட்பு ஊடகவியலாளர்களை பணியமர்த்தியது.

அதானியின் அடுத்த டார்கெட் தி குவிண்ட் பத்திரிக்கை. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு விட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு குயிண்டில்லியன் பிசினஸ் மீடியாவின் 49 சதவீத பங்குகளை அதானியின் ஏஎம்ஜி நிறுவனம் வாங்கியது. 

பதினைந்து வருடங்களாக, பத்திரிக்கைத் துறையில் தனி ஆதிக்கம் பெற்ற நிறுவனங்களை பல வித உபாயங்களைப் பயன்படுத்தி அதானி மற்றும் அம்பானி நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இதற்கு மோடி அரசு உறுதுணையாக இருந்தது என்கிறது அக்கட்டுரை. கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே உள்ளது. கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல இந்த ஊடகங்கள் மூலம் எவ்வளவு அளவு பணம் புரளுகிறது என்ற துல்லியமான கணக்குகள் உள்ளன. ஊடகங்களை அரசும், அரசு சார்பு நிறுவனங்களும் ஏன் விலைக்கு வாங்கி ஆக்கிரமிக்கப்படுகின்றன எனில் எந்த ஒரு உண்மையும் இந்தியர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற நரித்தந்திரத்தினை தவிர வேறொன்றும் இல்லை. இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசையால் இத்தகைய அறமற்ற செயல்களை செயல்படுத்துகிறார்கள்.


இந்தியாவில் தற்போதுள்ள பெரும்பான்மையான ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது கார்பொரேட் நிறுவனங்களும், மோடியின் அரசும். தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டார் மோடி என்கிறது இந்தக் கட்டுரை. 

இனி ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளில் போலிகளும், பொய்களும் தான் இருக்கும். உண்மையைப் பேசக்கூடிய ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் இந்தியாவில் என்கிறது மேலும் இந்தக் கட்டுரை.

மிக மோசமாக கருத்துச் சுதந்திரத்தை மோடி அரசு நசுக்கி, இந்திய மக்களைப் பயத்தில் வைத்திருக்கிறது என்கின்றன பல பத்திரிக்கைச் செய்திகள். கருத்துக்கு எதிர்கருத்துச் சொன்னால் - தேசத்துரோகி முத்திரை குத்தப்பட்டு, சிபிஐ, இடி, வருமான வரித்துறையினர், போலிச் செய்திகள் மூலம் நசுக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள்.

எது எப்படி இருந்தாலும் உண்மை என்றும் உறங்குவதில்லை. எது உலகை இயக்கி வருகிறதோ அது ஒவ்வொரு செயலுக்குமான பலனைக் கொடுத்தே தீரும் என்பதை வரலாற்றில் படித்து வருகிறோம்.

பார்க்கலாம் அறம் வெல்லுமா? இல்லை அதிகாரப்பணம் வெல்லுமா? என.

வாழ்க வளமுடன்...!

நன்றி : திரு.சீனிவாசன் மற்றும் 360இன்ஃபோ இணையதளம்

Saturday, June 19, 2021

நல்லி எலும்பு கறிக்கொழம்புக்குத்தான் லாயக்கு - ஜகமே தந்திரம் ஒரு பார்வை

 

கதையைப் பார்க்கலாம்.

இரயில் பாதை குறுக்கே ஒரு கார். ஹீரோ உட்கார்ந்திருக்கிறார். சிவப்பு கார்.

ஙொப்புறானே சத்தியமா நம்புங்க.

இரயில் சரியாக காரின் அருகில் பிரேக்கிடுகிறது. இரயிலின் டிரைவர் சீக்கிரம் காரியத்தை முடிங்கன்னு சொல்லுகிறார்.

அங்கு யாரோ ஒரு ஒரு வட நாட்டு சேட்டானின் தம்பியைச் சுட்டுக் கொன்னுட்டு கிளம்புகிறார் #தனுஷ்.

தனுஷின் ஹோட்டலில் தனுஷைக் கொல்ல சேட்டனின் ஆட்கள் முயல, நாட்டு வெடிகுண்டை போட்டு துரத்தி அடிப்பதைப் பார்க்கும் ஒரு ஆங்கிலேயன் (தனுஷ்)சுருளியை அவன் நாட்டில் இருக்கும் ஒரு தாதாவை போட்டுத்தள்ள அழைக்கிறான். ஆங்கிலம் தெரியாத சுருளி பிரிட்டன் கிளம்புகிறான்.

அங்கு பிரிட்டன் ஃபாசிஸ்ட் பீட்டரைப் பார்க்கிறான். அவன் தமிழன் சிவதாசுவைப் போட்டுத்தள்ளச் சொல்கிறான்.

ஐந்தாறு நாட்களில் சிவதாசை ஆராயும் சுருளி அவன் தங்கம் கடத்துகிறான் என்று கண்டுபிடிக்கின்றான். ஒரு லாட்டைப் பிடிக்கிறான். அவ்வளவு திறமை வாய்ந்த தமிழ் எலி (இப்படித்தாங்க தனுஷை சிவதாசு சொல்கிறான்) சுருளியைச் சந்திக்கிறான் சிவதாஸ்.

சுருளியின் ஏற்பாட்டால், சிவதாசும் பீட்டரும் சந்திக்கின்றார்கள். சிவதாசைப் போட்டுத்தள்ளுகிறான் பீட்டர். உதவி சுருளி.

சுருளிக்குப் பரிசாக ஒரு ஏரியா கிடைக்கிறது. லிட்டில் மதுரை எனப் பெயர் வைத்து ஊர் ஆட்களை அழைந்து வந்து வாழ்கிறான். 

சுருளி ஒரு இலங்கைப் பெண்ணைக் காதலிக்கின்றான். அவளுக்கு ஏழு வயதில் பையனுண்டு. (புரட்சிக் கதை இயக்குனரே. மாமிக்கள் மீது தனுஷுக்கு ஆர்வம் போல. ஒது ஒரு ட்ரிக் ஷாட். மாமிகள் முயலலாம் என க்ரீன் சிக்னல். இப்படித்தான் ஒருத்தன் வீணாய்ப் போனான்)

அவளுடன் சுருளி டேட்டிங்க் போகின்றான். அங்கு சுருளி சுடப்படுகின்றான் சிவதாஸ் ஆட்களால். பின்னர் காப்பாற்றப்படுகிறான். சுருளி சுடப்படக் காரணம் காதலி.

காதலி ஏன் சுருளியைக் கொல்ல முயல்கிறாள்? 

சிவதாஸ் உதவியதால் தான் அவள் பிரிட்டனில் இருக்கிறாள். அந்த நன்றிக் கடனுக்காக காதல் போர்வையில் கொலை முயற்சி.

அகதிகளுக்கு உதவிடத்தான் சிவதாஸ் தங்கம் கடத்துகிறான். பீட்டர் தன் நாட்டில் வேறு நாட்டவர் எவரும் இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஃபாசிஸ்ட் என அறிகிறான் சுருளி.

அகதிகளுக்கு ஆதரவாய் சட்டமியற்றப் போராடும் ஒரு ஆங்கிலேயனைப் போட்டுத்தள்ளு என்கிறான் பீட்டர்.

உண்மையை தெரிந்து கொண்ட சுருளி பீட்டரைக் கொல்லாமல் அகதி போல பாஸ்போர்ட் தயார் செய்து எங்கோ கொண்டு போய் விடுகிறான்.

கதையும் முடிந்தது. படமும் முடிந்தது.

* * *

படத்தினை வாங்கி வெளியிட்டிருக்கிறது சுருளி 2019 பிலிம் லிமிடெட் நிறுவனம், லண்டனில் முகவரி இருக்கிறது. அவர்களிடமிருந்து படத்தை வாங்கி நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. 

1949ல் பிறந்த மிஸ்டர் பிரைன் பிரேக் 48 கம்பெனிகளுக்கு இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார். அவரின் நிறுவனம் தமிழ் படத்தை வாங்கி வெளியிடுகிறது. இதன் பிசினஸ் கான்செப்ட் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.

மிஸ்டர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் பிசினஸ் வலைப்பின்னல்கள் பற்றிய இந்த சிறு விபரமே தலை சுற்றுகிறது. இந்த நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒய் நாட் ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து படத்தை தமிழ் நாட்டில் தயாரித்து இருக்கிறது. ஃபாரின் இன்வென்ஸ்ட்மெண்ட் இந்தியா உள்ளே வந்திருக்கிறது. நல்ல வேளை இந்த நிறுவனத்துக்கு முகவரி எல்லாம் இருக்கிறது.

நம்ம அதானி போல ALBULA INVESTMENT FUND, CRESTA FUND AND APMS INVESTMENT FUND - FOREIGN PORTFOLIO INVESTORS போல் இல்லை. ஒரு வெப் சைட் கூட இல்லாத வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் அளவுக்கு நம்ம இந்திய ஒன்றியம் அனுமதி கொடுத்திருக்கிறது. நீண்ட நாள் கழித்து அதைச் செபி கண்டுபிடிக்கிறது. அல்புலா அதானி மட்டுமல்ல பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்கள். அதானி நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட 11,000 கோடி. முகவரி இல்லா நிறுவனத்திடமிருந்து முதலீடு.

ஒரு வோட்டர் ஐடி மாற்ற நாமெல்லாம் என்ன பாடுபடுகிறோம் எனக் கவனியுங்கள்.

அக்கவுண்ட் எல்லாம் செக் செய்தார்களே இன்கம்டாக்ஸ்காரர்கள் என்று அவர்கள் தான் கவலைப்படனும். நமக்கேன் வம்பு.

* * *


கார்த்திக் சுப்புராஜ் காலி பெருங்காய டப்பா என பேட்ட படத்தைப் பார்த்த போதே தெரிந்து விட்டது. பப்புகளில் ஊத்தி விட்டு, தடவி, குடித்து கற்பை கற்பூரமாக்கும் அதி உன்னத வேலையைச் செவ்வனே செய்து வரும் தமிழ் உலகின் உன்னத ஒப்பற்ற நடிகரின் விதி வேலை செய்யத் துவங்கியது போலும்.

சுருளி என்ற பெயருக்கு ஒரு சிலிர்ப்பு இருக்கும். 80களில் சுருளிராஜன் லெஜெண்ட். அவரின் நகைச்சுவையை சந்தானம் நிரப்பினார். இப்போது ஹீரோ படுகுழியில் விழுந்து கிடக்கிறார். அட்டைக்கு மெத்தை ஆகாது அல்லவா?

நகைச்சுவைக்குப் பெயர் போன பெயரை ஹீரோவிற்கு வைத்து  இது நகைச்சுவைப் படம் என்றுச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போல இயக்குனர். அதாவது கிரைம் திரில்லர் ஆக்சன் நகைச்சுவை.

தனுஷை விட பெரிதாக இருக்கும் மெஷின்கன்கள். அதை வைத்து ஆக்சன். துப்பாக்கி சைசுக்கு இருக்கும் ஹீரோ. நான்கு மடங்கு வெயிட்டாக இருக்கும் அடியாட்கள். வேஷ்டியில் வில்லனின் ஆட்களைச் சுடும் ஸ்லோமோஷன் காட்சிகள் என நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். கொய்யாலே..!

பிரிட்டன் தாதா மதுரை தாதாவை வைத்து தன் கொலைகளை நடத்தினால் எப்படி இருக்கும்? இதுதான் கதையின் வொன் லைன்.

அந்த மதுரை தாதாவே நீங்க தான் சார் என்று தனுஷிடம் சொல்லி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குனர் சுப்புராஜ் அவர்களே, 

கவட்டியைச் சொறிந்து விடும் கறி (ஹீரோயினின் சதைக்கறி) குழம்பு வைக்கத்தான் நல்லி எலும்புக்குச் சரிப்படும். அது மாதிரியான மல்லுப் படங்களை எடுத்துக் கல்லாவை நிரப்புங்கள்.

அதை விடுத்து. உலக அரசியல் பேசும் தகுதி எல்லாம் நல்லி எலும்புக்கு கிடையாது இயக்குனரே. நல்லி எலும்பு நாட்டை ஆளக் கேட்டால் அதற்கு கதை பண்ணிக் கொண்டு செல்லும் உம்மைப் போல ஆட்களை காலம் மன்னிக்காது.

ஒரு விஜயகாந்த் போதும் தமிழ் நாட்டுக்கு. விட்டு விடுங்கள் தமிழர்கள் பிழைத்துப் போகட்டும். இப்படத்தின் மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் நீங்கள்? சிவதாசுவை வைத்துக் கேலி செய்வது தான் நோக்கமா? அவ்வளவு இழிவானவர்களா இலங்கைத் தமிழர்கள்?

துரோகம் தமிழனின் கூடப் பிறந்தது என்ற வசனம் உங்களுக்கும் பொறுந்தும். 

நீங்கள் ரசிகர்களுக்குத் துரோகம் செய்திருக்கின்றீர்கள்.

எனது ஆகப்பெரும் கெட்ட வார்த்தை “போடா டேய்”. அந்த வார்த்தையால் கூட திட்ட முடியாத அளவுக்கு கேடுகெட்ட படம் ஜெகமே தந்திரம்.

சீனுக்குச் சீன் வைச்சு செய்யலாமா என்று பார்த்தேன். எரிச்சல்தான் மண்டியது. 

திரும்பக் கிடைக்கவே கிடைக்காத பலரின் நேரத்தை அழித்து விடும் உம்மைப் போன்ற ஆட்களை என்னவென்று வைவது?

தனுஷ்... ரசிர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் - ஜெகமே தந்திரம்.

அம்புட்டுதான்.