இந்தியாவின் பத்திரிக்கை துறை அழிக்கப்பட்டது டிசம்பர் 30, 2022ம் ஆண்டு என்று ஆரம்பிக்கிறது ஆர்.சீனிவாசன் அவர்களின் கட்டுரை.
அன்றைய தினம் மிகவும் மதிக்கப்படும் மற்றும் மதிப்பிற்குரிய செய்தி நிறுவனமான என்டிடிவியின் முழு கட்டுப்பாட்டையும் செல்வாக்குமிக்க - மற்றும் பலராலும் சர்ச்சைக்குரிய நிறுவனராக விமர்சிக்கப்படும் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, அப்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆன அவரது அதானி எண்டர்பிரைசஸ் மூலம், என்.டி.டி.வியின் 27.26 சதவீத கூடுதல் பங்குகளை வாங்கிய பிறகு, முழுவதுமாக எடுத்துக் கொண்டார். பிரபல செய்தியாளர் பிரனாய் ராய் வெளியேற்றப்பட்டார்.
அவரிடம் என்.டி.டிவியின் நிறுவனப் பங்குகளில் 64.71 சதவீதம் உள்ளது. என்.டி.டி.வியை கொல்லைப்புறமாக ஆக்கிரமித்த அதானி, சில மாதங்களுக்கு முன்பு, இவரின் ஊடக நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ், புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அரசாங்க நட்பு ஊடகவியலாளர்களை பணியமர்த்தியது.
அதானியின் அடுத்த டார்கெட் தி குவிண்ட் பத்திரிக்கை. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு விட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு குயிண்டில்லியன் பிசினஸ் மீடியாவின் 49 சதவீத பங்குகளை அதானியின் ஏஎம்ஜி நிறுவனம் வாங்கியது.
பதினைந்து வருடங்களாக, பத்திரிக்கைத் துறையில் தனி ஆதிக்கம் பெற்ற நிறுவனங்களை பல வித உபாயங்களைப் பயன்படுத்தி அதானி மற்றும் அம்பானி நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இதற்கு மோடி அரசு உறுதுணையாக இருந்தது என்கிறது அக்கட்டுரை. கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே உள்ளது. கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல இந்த ஊடகங்கள் மூலம் எவ்வளவு அளவு பணம் புரளுகிறது என்ற துல்லியமான கணக்குகள் உள்ளன. ஊடகங்களை அரசும், அரசு சார்பு நிறுவனங்களும் ஏன் விலைக்கு வாங்கி ஆக்கிரமிக்கப்படுகின்றன எனில் எந்த ஒரு உண்மையும் இந்தியர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற நரித்தந்திரத்தினை தவிர வேறொன்றும் இல்லை. இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசையால் இத்தகைய அறமற்ற செயல்களை செயல்படுத்துகிறார்கள்.