குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Thursday, September 8, 2022

லலித மன்றம் நாடக காட்சிகள் - காட்சி இரண்டு

லலித மன்றத்தில் கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்த  வழக்கு விசாரணை தொடங்கியது.

சாமி கேட்டர் ”வக்கீல்கள் யாரப்பா?”

இருவர் வந்து நின்றனர்.

”உங்களில் யார் வஸ்துவணிவர்? ”

அதில் ஒருவர் முன்னால் வந்தார்.

”அவருக்கு இருக்கை கொடுங்கள்”

இருக்கை கொடுக்கப்பட்டது.

”நீங்கள்?”

”நான் காலில் இருந்து பிறந்தவன்”

“சரி, கைகட்டி பத்தடி தூரத்தில் நிற்க”

“வஸ்துவணிபரே! உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்”

”என் வாதத்தை துவங்குவதற்கு முன்பு, நம்ஸ்கார்ம். மை லார்டு, நான் ஏன் நம்ஸ்காரம் என்று துவங்கினேன் என்றால் இது கடவுள் மொழி என்பதால். நானும் உங்களைக் கடவுளாகத்தான் பார்க்கிறேன்”

சாமி புன்னகைத்துக் கொண்டார். தலையை ஆட்டி ஆட்டி ஆமோதித்தார். வக்கீல் மீண்டும் வாதத்தைத் தொடங்கினார்.

”எனது கட்சிக்காரர்கள் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்றுச் சொல்ல முடியாது. ஏனென்றால் குற்றம் செய்தவர்களை விட குற்றச்செயலைச் செய்ய ஊக்குவிக்குபவர்களுக்கு தான் அதிக தண்டனை என்று, ...... எழுதிய (இந்த இடத்தில் சட்டமியற்றவரின் பெயருக்குப் பதிலாக நாக்கை வெளியில் நீட்டி விட்டு தொடர்கிறார் வக்கீல்) சட்டத்தில் இருக்கிறது. 

இந்தக் குற்றம் செய்யக் காரணமாய் இருந்தது ஒரு துணி. ஆம் லார்டு, அது ஒரு கருப்புத் துணி. சாலையில் சென்று கொண்டிருக்கிற போது, அங்கு ஒரு துணியால் ஒரு வஸ்து மூடப்பட்டு இருக்கிறதென்றால், மனிதர்களுக்கு இயற்கையாகவே அது என்னவென்று பார்க்கத் தோன்றுவது இயல்பு அல்லவா? 

அதைப் போலத்தான் எம் கட்சிக்காரர்கள் பதினோரு பேரும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் கருப்பு துணி அணிந்த உருவம் வந்து கொண்டிருந்தது. அது பேயாக இருக்குமோ என்ற பயத்தில் என் கட்சிக்காரர்கள், எதிரில் வந்தவரை விசாரித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிந்தது அது ஒரு பெண் என்று.

அதுமட்டுமல்ல மை லார்டு. அந்தப் பெண்ணின் வயிறு பெருத்து இருந்தது. அது ஏதோ மதக் கலவரத்திற்காக, வயிற்றில் கட்டப்பட்ட வெடிகுண்டாக இருக்குமோ என்ற நினைப்பில் அது என்னவென்று பார்க்கத்தான், என் கட்சிக்காரர்கள் முயன்றனர். 

தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் அவர்கள் அக்காரியத்தைச் செய்தனர் என்பதை மை லார்டு குறித்துக் கொள்ள வேண்டும்.”

அப்போது ஆலரமத்தினடியில் காற்றுப் பலமாக வீசியது.

சாமிக்கு கண்ணில் தூசி பட்டு விட்டதால், வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடரும்.

இந்தச் செய்தி உங்களுக்காக.


நன்றி : மணி கண்ட்ரோல்.காம்

சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி என்பவர் மக்கள் தொகை பெருக்கம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், மக்கள் தொகையினக் கட்டுப்படுத்துதல் அவசியம் என்றும் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டுக்கு மேல் வேண்டாமென்று பிரச்சாரமும் நடந்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது பிள்ளையே பிறப்பதில்லை. அதற்கும் ஹாஸ்பிட்டல்கள் வந்து விட்டன. ஒன்றை பெற்று வளர்ப்பதற்குள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர் மக்கள்.

இப்படியான சூழல் இருக்கும் போது இந்த ஜிதேந்திரனாந்த் வழக்கு என்ன விளைவினை ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுக்கும் என்பதும் தெரியவில்லை. 

இந்த வழக்கை கவனத்தில் வாசகர்கள் குறித்துக் கொள்ளவும்.

Wednesday, September 7, 2022

லலிதமன்ற நாடகக் காட்சிகள் - காட்சி ஒன்று

லலித மன்றம் என்று அழைக்கக் கூடிய, ஆலமரத்தினடியில் சாமிகள் உட்கார்ந்திருந்தனர். இடுப்பில், தொடையில், காலில் பிறந்தவர்கள் மெய் வாய் பொத்தி நின்று கொண்டிருந்தனர். ஆகமத்தில் விதிகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு உட்கார சபையில் அனுமதி இல்லை. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டவை. சாமிகள் யாரும் அதற்கு காரணமில்லை. வேதமே காரணம். 

குற்ற விபரம் : கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் குற்றம்

விசாரணை விரைவில்...!

வாசகர்களுக்கு இன்றையச் செய்தி. நன்றி தினமணி



மேற்கண்ட செய்தியில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயிகள் போராட்டத்தில் தானாகவே ஸ்டார்ட் ஆகி, வேகமாக வந்த கார் விவசாயிகள் மீது மோதியதாக இரண்டாம் பத்தியில் செய்தி இருக்கிறது. கார் இடித்ததால் வன்முறை உண்டானது என்பது கூடுதல் செய்தி. காரினால் தான் வன்முறை என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

Monday, September 5, 2022

லலிதமன்றம் நாடகக் காட்சிகள்


உலகின் ஒப்பற்ற சக்தி படைத்தது மேலே இருக்கும் வஸ்து. அணுகுண்டு எல்லாம் இந்த வஸ்தின் முன்னே தூசு. ஹைட்ரஜன் பாம் சும்மா சும்மா. இதன் ஆற்றலை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது. அந்தளவுக்கு வலிமையான வஸ்து இது.

இந்த வஸ்துவினை அணிந்தவர்களுக்கு உலக மக்கள் யாவரும் சேவகர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்தப் பெருமித எண்ணத்தோடு, எஜமான அடிமைகளான நாம் இனி தொடர்ந்து லலித மன்றத்தில் நடத்தப்படும் நாடகக் காட்சிகளைத் தினம் தோறும் படித்து இன்புறலாம். 

இன்புற விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். லலிதமன்றத்தில் நடத்தப்படும் நாடகங்கள் சுவாரசியமானவையாக இருக்குமா? என்பது படிக்கும் உங்களுக்கு வெளிச்சம்.

நாடகக் காட்சிக்கு முன்பு முன்னுரை:

இந்த மன்றத்திற்கு சுமார் இருபத்தெட்டு ஊர்களும், எட்டு உப ஊர்களில் இருந்தும் நாடகம் பார்க்க ஆட்கள் வருவதுண்டு. சாமிகள் தான் நடிப்பார்கள். நல்ல நடிப்பாக இருக்கும். நாடகத்தில் பல பாத்திரங்கள் உண்டு. அந்தப் பாத்திரங்களில் பலர் எங்கிருப்பர் என்று தெரியாது கடவுளைப் போல. ஆனாலும் பாத்திரங்களாய் இருப்பர்.

இந்த நாடகத்தில் நடிப்பவர்களுக்கு ஆக்கிர மங்கள் எனும் புத்தகமே வழிகாட்டியாக இருக்கிறது. நாடகத்துக்கும் விதிகள் உண்டு அல்லவா?

இனி விரைவில் திரைக்காட்சிகள் தொடரும் ...