குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, September 5, 2022

யாருக்கு வரும் இந்த புத்திசாலித்தனம்?

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஜி.வி. பிலிம்ஸ், ஜி.வெங்கடேசன். இவரது சகோதர பிரபல இயக்குனர் மணிரத்னம். இவரது மனைவி கமல்ஹாசனின் அண்ணன் மகள்  சுகாசினி.  இந்தக் குடும்பமே சினிமாக்குடும்பம். உலகளாவிய தொடர்புகள், இணைப்புகள், வரவுகள், செலவுகள் என்று எவ்வளவோ இருக்கும். அதெல்லாம் தனிப்பட்டவர்களின் ரகசியங்கள் என்பதால் அரசுக்கு ஒன்றும் இழப்பில்லை.

ஜிவி பிலிம்ஸின் பிரபலமான படம் கார்த்திக் நடித்த மெளனராகம். அதைத் தொடர்ந்து ரஜினி காந்தின் தளபதி.

கடனோ அல்லது ஏதாவது பிரச்சினையோ, காரணம் சரியாகத் தெரியவில்லை. வெங்கடேசன் தூக்கில் பரகதி அடைந்தார். ஆனால் அவர் வாங்கிய கடனுக்கு பரகதி கிடைக்கவில்லை. 

குடும்பத்தாரின் முயற்சியில் ஜி.வி பிலிம்ஸ் மீண்டும் படங்களைத் தயாரித்தது. ஆனால் நிர்கதி பிராப்தி அடையாத கடனுக்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த, கவனிக்க போர்ச்சுகல் நாடு, அங்கிருக்கும் ஒரு கம்பெனி நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிலிம்ஸ் லிமிட்டெட்டை வாங்குகிறது.

ஊரான் காசு இலவசமாய் கொட்டிக் கிடக்கும் வங்கியில் அந்த போர்ச்சுகல் கம்பெனி லோன் வாங்குகிறது. 

கவனிக்க, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனியை போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி, வங்கியில் கடன் பெற்று, ஜி.வி.பிலிம்ஸின் பங்குகளை வாங்குகிறது.

ஒரு வெளி நாட்டுக் கம்பெனி, இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டுமெனில் அன்னியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் படி, அதற்கான அனுமதி பெற்று வாங்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லையாம்.

போர்ச்சுகல் அரசுக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும் ஒன்றும் தெரியாது இதைப் பற்றி என்று நம்பிக் கொள்வோம்.

இப்போதுதான் ஒன்றிய அரசின் ஒப்பற்ற அமலாக்கத்துறையின் கவனத்துக்கு இந்த பரிமாற்றம் தெரிய வந்து, ஜி.வி.பிலிம்ஸுக்கு சொந்தமான தஞ்சாவூர் தியேட்டரை பறிமுதல் செய்திருக்கிறார்களாம்.

தற்போது ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட்டின் இயக்குனர்கள் ஆறு பேர்கள். அதில் ஒரு சிலர் பத்துக்கு மேற்பட்ட கம்பெனிகளின் நிறுவனர்கள்.

இவர்கள் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையோ அல்லது சோதனையோ இட்டதாகச் செய்திகள் ஒன்றுமில்லை. கிட்டே போகமுடியுமா? 

அமலாக்கத்துறையில் குற்றம் நடைபெற்று இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்தால் தான் தியேட்டரை சீல் வைக்க முடியும். ஆனால் இதன் காரண கர்த்தாக்களை யாரால் என்ன செய்ய முடியும்? 

ஏன்? என்று காரண காரியம் தெரிந்த மகானுபாவர்கள் கமெண்டில் கருத்துக்களைப் பதிவிடவும். நூலிபான்கள் என்றும், பிராமணர்கள் என்று கமெண்டில் எழுதிவிட வேண்டாம் என்பது வேண்டுகோள்.

அவாளுக்கும் அவாளுக்கும் சண்டை - தினமணியில் செய்தி.

கமல்ஹாசன் உறவினர்கள் தொடர்பானது என்பதால் அரசியல் ஸ்பெஷல் நகர்வுகளாக இருக்குமோ என்று சிந்தித்து விடாதீர்கள். தேசத்துரோகம்.

நன்றி : தினமணி (02.09.2022 செய்தி)0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.