குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, September 7, 2022

இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்காக ராகுல்காந்தியின் நடைபயணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்.

ஒன்பது வருடங்கள் நேரு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். தங்களது குடும்பச் சொத்தான நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு கொடுத்தார். 

அந்தப் பரம்பரையில் வரும் ராகுல் காந்தி அவர்களுக்கு அவரது தந்தை இந்தியர்களை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். 

இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த, மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்று தனது வாழ்க்கையை இந்தியர்களுக்குக் கொடுத்த மகாத்மா காந்தி விரும்பினார்.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசும், நேரு குடும்பத்தார் மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. சூரியனை பொய்களும், புராணங்களும் மறைக்க முடியாது.

காங்கிரஸ் ரயிலைக் கொளுத்தவில்லை, கொலைகள் செய்யவில்லை, எந்த மதத்தினருக்கும் வந்தேறிகளுக்கும் அடிமையாக இல்லை. நாட்டை விற்கவில்லை, இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி விழுங்கவில்லை, எந்த அமைப்புக்கும் சார்பாக இல்லை. 

இந்திய மக்களை நேசித்தார்கள். இந்தியாவுக்கு உழைத்தார்கள். இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது. காலம் இந்தியர்களுக்கு இப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய நாளில், ஒவ்வொரு இந்தியனும் பொய்களால் ஏமாற்றப்படுகிறான். வந்தேறிகளால் நாசமாக்கப்படும் இந்தியாவை, மீண்டும் மதவெறிக்கு எதிரான ஒரு சுதந்திரப் போரினால் தான் மீட்க முடியும். 

கடந்த 70 ஆண்டுகளாக துல்லியமான நோக்குடன் திட்டமிடப்பட்டு, இன்று இந்தியா மத வெறி எனும் போர்வையில் வந்தேறிக் கும்பலொன்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடிமைகள் கலவரம் செய்கிறார்கள். வெடிகுண்டுகள் வீசுகின்றார்கள். கார்கள் ஏற்றி கொலைகள் செய்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கின்றார்கள்.

பஞ்சைப்பராரிகளாய் இந்தியர்கள் நயவஞ்சமாக மாற்றப்படுகின்றார்கள். படிக்க அனுமதிக்க மறுக்கின்றார்கள். இந்தியர்கள் கற்காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இந்தியர்களை இந்த மதவெறி வந்தேறிக் கும்பலிடமிருந்து மீட்க, இந்தியாவை நேசிப்பவர்களால், உண்மை இந்தியர்களால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் பொய்கள் எனும் மாயையில் கட்டுண்டு கிடக்கும் இந்தியர்களுக்கு ராகுல் காந்தியின் பயணம் விழிப்புணர்வைத் தரும். இந்தியா மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என்று நம்புவோம்.

ராகுல் காந்தி அவர்களின் எண்ணம் நிறைவேறட்டும். அதனால் இந்தியா மேன்மையடையட்டும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.