குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, September 9, 2022

பெண்களும் - சாதி வெறியர்களும் - இஸ்லாம் மார்க்கமும்


(பெண்கள் படிக்க வேண்டிய அவசியமான புத்தகம் இது)

மனுஸ்மிருதியில் மனு என்ற மகான் பெண்களும், அவர்களைக் கையாளும் விதம் பற்றி எழுதி இருக்கிறார். பார்ப்பனிய இனம் தான் உயர் சாதி என்றுத் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது. 

மனுவின் தர்மத்தைப் பற்றிக் கீழே படியுங்கள். இந்த உயர் சாதி என்று உளறிக் கொண்டிருக்கும், இவர்களைத் தான் ஆகமம எனச் சொல்லி கோவில் கருவறைக்குள் பூசை செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியது. மனிதாபிமானம் அற்ற விதிகள் ஆகமம். மனிதனுக்குள் உயர்வு தாழ்வு உண்டாக்கும் விதிகள் தான் உயர்ந்ததாம்.

எவனோ ஒரு பரதேசி எழுதிய விதிகளை மெய் வாய் பொத்தி கேட்க தமிழர்கள் என்ன கேனயர்களா?

இன்னும் எத்தனை நாள் தான் ஏமாறுவீர்கள் இளிச்சவாய் தமிழர்களே...! வெட்கமில்லையா? மானமில்லையா? நெஞ்சுக்குள் ஈட்டி நுழைந்ததை வீரமெனக் கருதிய தமிழன் செத்துப் போனானா? இப்படியா ஒரு பிழைப்பு பிழைப்பது?

நம் சொத்துக்களைப் பிறரை அனுபவிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பதா?விழுந்து கும்பிடுவதா? இதுவா வாழ்க்கை? இதுவா ஆன்மீகம்? கொடுமை.

உயர் சாதியில் பிறந்த மனு பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் எனப் படியுங்கள்.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;" என்கிறது, இந்து தர்மம்.

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்" ( நன்றி : பதிவுத் தொகுப்புகள்)

மேலும் மனு எழுதிய பெண்கள் பற்றி மிக மோசமான விதிகளைப் படிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்.


போதுமா? இன்னும் இருக்கிறது எழுத நான் என் அம்மாவின் கருவறையில் இருந்தவன். அவளிடமிருந்து உயிர் பெற்று வாழ்ந்தவன். எவன் பெண்களைப் பற்றி இழிவாகவும், விதிகள் அதுகள் என்று பேசினாலும் அவனொரு மன நோயாளி. ஒரு மன நோயாளி எழுதியதைத் தான் இந்து தர்மம் என்றுச் சொல்லித் திரிகிறது ஒரு கூட்டம். 

* * *

இஸ்லாம் என்பது மதமல்ல. அது ஒரு மார்க்கம். ஊருக்குச் செல்லும் போது பஸ் எந்த மார்க்கமாகப் போகிறது என்று கேட்பார்கள். அது போல ஒன்றே கடவுள் என்று சொல்லும் உன்னதமான ஆன்மீக பாதை இஸ்லாம். நபிகள் நாயகம் இஸ்லாத்தின் முதல் மனிதர். நபிகள் பெருமானார் எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவர் கடவுளின் மகிமையைப் பற்றி மட்டுமே பேசினார்.

இஸ்லாம் மார்க்கத்தில் கடவுள் மட்டுமே. பூசாரி இல்லை, குருமார்கள் இல்லை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரோக்கர்கள் இல்லை. சடங்குகள் இல்லை, சாதி இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை. கீழ், மேல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அதனால் தான் இஸ்லாம் உலகமெங்கும் பரவுகிறது.

இஸ்லாத்தில் கொலை செய்தவனுக்குத் தண்டனை கொலையே. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தான் கொலையாளியை மன்னித்து, பகர் பெற்றுக் கொண்டால் மன்னிப்பு உண்டு என்கிறது.

இதுதான் மார்க்கத்துக்கும் சாதி வெறிக்கும் உள்ள வித்தியாசம்.

* * * 
தமிழர்கள் உலகிற்கு இஸ்லாம் மார்க்கம் சொல்வதை முன்பே அறிவித்தவர்கள்.

’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று எழுதியது தமிழன் தான். உலகில் மனிதன் தோன்றிய பிறகு மனிதன் பேசிய மொழி தமிழ் தான் என்கிறது வரலாற்று ஆராய்ச்சி நூல்கள்.

உலகிற்கே முன்னுதாரனமாய் விளங்கிய தமிழர்களின் நாகரீகமும், அறிவும், செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமல்ல, மடைமாற்றியது யாரென்று இனியும் உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

தமிழர்களின் கோவில்களில் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும். அந்த நாளே தமிழர்கள் வீறு கொண்ட நாளாக இருக்கும். 

நாம் வீட்டைக் கட்டி விட்டு, வேறொவனுக்கு அனுபவிக்க கொடுப்பதா ஆகமம்? நியமம்? தர்மம்?

வாழ்க வளமுடன்...!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.