காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்குள் வரும் நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாக மக்கள் காணும் வகையில் FCRA - இணையதளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
fcraonline.gov.in என்ற இணையதளத்தில் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் எவை - அவை எவ்வளவு நன்கொடைகளைப் பெற்றிருக்கின்றன என்ற தகவல்கள் எல்லாம் இருந்தன.
திடீரென்று 2022 - ஜூலை மாதம் 13ம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு செய்தி. FCRA ஆன்லைன் வெப்சைட்டில் இருந்த தொண்டு நிறுவனங்கள், அவைகள் பெறும் நன்கொடை விபரங்கள் - அனுமதி பெற்ற தொண்டு நிறுவனங்கள் எவையெவை? - அனுமதி இல்லாதவை எவையெவை? - அனைத்து விபரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி வெளிநாட்டு நன்கொடைச்சட்டத்தில் ஒரு உப பிரிவு டெலீட் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.
என்ன காரணத்துக்காக அத்தகவல்கள் நீக்கப்பட்டன? வெளிப்படைத்தன்மை எங்கே போயிற்று? என்ன மர்மம்? யாருக்காவது தெரியுமா?
இதே போலத்தான் பல இணைய விபரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.
வெளிப்படையான நிர்வாகம் என்று பேசும் பிரதமர் மோடி - ஏன் இந்த தகவல்கள் இணையதளத்தில் இருக்கு நீக்கப்பட்டு - மறைக்கப்பட்டது என்பதினை மங்கி பாத்தில் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
ஒரு நல்ல ஆட்சியாளன் காதில் எல்லா சத்தங்களும் கேட்க வேண்டுமென்பார்கள்.
கீழே இருக்கிறது படித்துக் கொள்ளவும்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.