குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சவுக்கு சங்கர். Show all posts
Showing posts with label சவுக்கு சங்கர். Show all posts

Wednesday, May 22, 2024

சவுக்கு சங்கர் - ஃபெலிக்ஸ் ஜெரால்டு - உண்மை என்ன?

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. சவுக்கு சங்கரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, காவல்துறையில் பணிபுரியும் பெண்களைப் பற்றி தவறாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி என்கிறீர்களா?

சங்கரின் ஆரம்பகாலத்திலிருந்து நான் அவரைக் கவனித்து வருகிறேன். அவரின் கட்டுரைகளைப் படித்தும் வருகிறேன். முன்னாள் நீதிபதி செல்வத்தைப் பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து, த ரிப்போர்ட்டர்ஸ் கலக்டிவ் எனும் இணையதளத்தில் வெளியாகும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, சவுக்கு ஆன்லைனில் பதிப்பித்த போதெல்லாம் படித்திருக்கிறேன்.

சங்கர் தன்னை ஒரு பிராண்டாக உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை ஊழல் உளவு அரசியல் புத்தகத்தைப் படித்த போது அறிய முடிந்தது. இந்தப் புத்தகத்தை அவன் பட்டும்படாமல், சொல்ல வந்த எதையும் சொல்லாமல், ஒப்புக்குச் சப்பாணியாக வெளியிட்டிருந்தான். படித்த போதே தெரிந்தது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறான் இவன் என்பது.

தொடர்ந்து அவனின் அடுத்த கட்டம் அரசியலை நோக்கியும், தனியார் செய்திகளில் அடிபட்ட பணக்காரர்கள் பக்கம் திரும்பியது. சோர்ஸ் என்றொரு வார்த்தையை வைத்துக் கொண்டு, பலரையும் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருந்ததை நாமெல்லாம் பார்த்தோம்.

ஒரு வருடத்திற்கு முன்பு, நினைவில் இல்லாத ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக ஃபெலிக்ஸிடம் பேசிய போது, நானொரு ஏழை என்று என்னிடம் சொன்னான்.  ஆனால் இப்போது கோடிக்கணக்கில் சொத்துக்களை அதுவும் ஒருவருடத்திற்குள் வாங்கி வைத்திருக்கிறான் ஃபெலிக்ஸ் என்று செய்தி வெளியாகி உள்ளது.

ஃபெலிக்ஸின் யூடியூப் சானலில் சங்கர் பேசிய போது, இதன் பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது என்று புரிந்தது. அன்றிலிருந்து அவனது வீடியோவைப் பார்ப்பதுமில்லை. அவனது இணையதளத்தினைப் படிப்பதும் இல்லை.

ஒவ்வொரு தேர்தலும் தான் இவனைப் போன்றவர்களுக்கு டார்கெட். 

தேர்தல்களின் போது சோஷியல் மீடியா மூலம் அரைகுறை அல்லு சில்லுகளை இவர்களால் டார்கெட் செய்யப்படும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட விடாமல் செய்யலாம் என்ற திட்டத்திற்காக, வாட்சப் வாலிப வாலிபிகளை மூளைச் சலவை செய்வதற்காக - இவர் தன்னை ஒரு உண்மை பத்திரிகைகாரராக பதிவு செய்து வந்திருக்கிறார். வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில் கார்டியன் பத்திரிக்கையில் ஃபேஸ்புக் மெட்டா நிறுவனம் போலி செய்திகளை விளம்பரமாக்கியதை அனுமதித்துள்ளது என்ற கட்டுரை வெளியாகி உள்ளது.


https://www.theguardian.com/world/article/2024/may/20/revealed-meta-approved-political-ads-in-india-that-incited-violence#:~:text=Revealed%3A%20Meta%20approved%20political%20ads%20in%20India%20that%20incited%20violence,-Exclusive%3A%20Ads%20containing&text=The%20Facebook%20and%20Instagram%20owner,shared%20exclusively%20with%20the%20Guardian.

மேலே இருக்கும் இணைப்பினைச் சொடுக்கி கட்டுரையைப் படித்துக் கொள்ளுங்கள்.

இப்படி பலரைப் பற்றியும் வதந்திகளையும், போலி செய்திகளையும் பரப்பி, உண்மையை தெரிந்து கொள்ள விடாமல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் கொடுக்கும் காசுக்கு தன்னை நம்பிய மக்களின் முதுகில் குத்தியிருக்கிறார்கள் இந்த இருவரும்.

உள் அரசியல் பற்றி அறிந்து கொள்ள முடியாத, தெரியாத மக்களை சப்ஸ்கிரைப் செய்ய வைத்தும், இன்னும் பல ரகசியமான வேலைகளைச் செய்து, பாலோயர்களை அதிகப்படுத்தியும் வந்திருக்கிறார்கள் இருவரும்.

இவர்களுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உண்டு என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, அதன் காரணமாக கட்சிகளிடம் பணம் பெற்றிருக்கிறார்கள் என்கிறது செய்திகள்.

ஒரு துரோகியின் கட்சியும், ஒரு இனத்துரோகியின் கட்சியும் இவனுக்கு கோடிக்கணக்கான ரூபாயை - திமுகவைப் பற்றி அவதூறு பேசவும்,  ஓட்டுக்கள் கிடைக்கா வண்ணம், சாமர்த்தியமாக போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் மற்றும் பல யூடியூப் சேனல்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்து விட்டதை அறிந்த பின்னால், காசு கொடுத்தவர்கள் கணக்கு கேட்டால் சொல்ல வேண்டுமே என்பதற்காக, பக்காவாக பிளான் போட்டு, ஒரு அவதூறு வீடியோவை வெளியிட்டு, கைது செய்ய வைத்து, காவல்துறைப் பாதுகாப்புடன் ஜெயிலுக்குள் அடைக்கலமாகி விட்டனர் என்றே நம்பத் தோன்றுகிறது.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம். இவர்களைப் போன்ற மக்களை ஏமாற்றி போலிப் பிம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் துரோகத்தையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்களை நம்பவே கூடாது.

திருடனுக்கு தேள் கொட்டியது போல அந்த இரு கட்சி துரோகிகளும் கள்ள மவுனத்தில் இருப்பர். இவர்கள் இருவரும் கணக்கு கொடுக்காமல், எல்லாம் செலவாகி விட்டது என்றுச் சொல்லி விடுவார்கள்.

அடுத்த தேர்தலுக்கு மற்றொரு கட்சியிடமிருந்து பணம் பெற்று, வழக்கம் போல அறியாமையால் கிடக்கும் மக்களை ஏமாற்றுவர்.

மேலும் இதோ தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி. படித்து வையுங்கள்.

Tuesday, September 27, 2022

அதிரும் சென்னை உயர்நீதிமன்ற முறைகேடு - தீர்ப்புகள் திருத்தப்பட்டன - உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

சவுக்கு சங்கர் நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று சொல்லியதற்காக தண்டிக்கப்பட்டு சிறைவாசம் - ஜனநாயகப் பரிசு. சட்டம் வழங்கிய மேல் முறையீடு வசதியைக் கூட அனுமதிக்கவில்லை நீதிபதிகள். அந்தளவுக்கு நீதிமன்றத்தின் மாண்பு மீது அக்கறை.

நல்லது.

சவுக்குக்கு தண்டனை கொடுத்து இன்றோடு பனிரெண்டு நாட்கள் ஆகி விட்டன. ஒரு சாமனியனுக்கு தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் நீதி மறுக்கப்பட்டது - பிரிட்டிஷ் ஆட்சியில் கூட சட்டம் சாமனியனுக்கு கிடைக்கும்படி மதிக்கப்பட்டதாம்.

ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்கிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

மதுரைக்கிளை நீதிமன்றம் - வழங்கிய தீர்ப்பினால் நீதிமன்றத்தின் மாண்பு பாதுகாக்கப்பட்டது. மக்கள் நம்பும் நீதிமன்றம் கேலிபடக்கூடாது.

ஒரு சாமானியனின் கருத்துரைக்கு எதிரான இந்த வழக்கின் அதிர வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட சூடு இன்னும் குறையவில்லை. அதற்குள் ஒரு பிரச்சினை

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த முறைகேடு. குற்றச் செயல், திருட்டு, ஊழல் இப்படி எந்த வார்த்தைகளாலும் அழைக்கும் தரமுள்ள அக்மார்க் குற்றம்.

இந்தச் செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் வெளி வந்ததா என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு எண்: CMP 13117/2002 - CMP :7981/2022. ஒரிஜினல் வழக்கு - O.S.A.No.101/2014. 

இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு 01.09.2022ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தீர்ப்பு நீதிமன்றத்தில் 01.09.2022ம் தேதி படிக்கப்பட்டு, வழங்கப்பட்டது. தீர்ப்பின் நகல் உயர்நீதிமன்றத்தின் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டு விட்டது. 

இதுவரைக்கும் பிரச்சினை இல்லை. 

ஒரு வாரம் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பினை டவுன்லோடு செய்து பார்த்தால் தீர்ப்பு திருத்தப்பட்டிருக்கிறது. படிக்கப்பட்ட தீர்ப்பும் - டவுன்லோடு செய்யப்பட்ட தீர்ப்பும் - ஒரு வாரத்தில் மாற்றப்பட்டு அப்லோடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்திற்குச் சென்று தீர்ப்பினைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. இந்த தீர்ப்பினை 01.09.2022ம் தேதி வழங்கிய நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகிய இருவர்.

ஜனநாயகத்தின் தூணில் ஒரு மெகா ஓட்டை. ஓட்டை அடைக்க சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றார்கள்.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. யார் இதைச் செய்தது எனக் கண்டுபிடிக்க சென்னை நீதிமன்றப்பதிவாளருக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது.

பலர் முன்னிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரே வாரத்தில் மாற்றப்பட்டிருப்பது குற்றச் செயல். தேசத்துரோகம். என்ன சொன்னால் என்ன? அது கோர்ட்டு சமாச்சாரம்.

நீதிமன்ற பதிவாளர் எப்படி விசாரிப்பார்? அவருக்கு குற்றச் செயல்களை விசாரிக்கும் படி சட்டம் அனுமதி வழங்கி இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியது யார்? யாருக்காக மாற்றப்பட்டது? யாரால் அப்டேட் செய்யப்பட்டது? இதன் பின்னால் இருக்கும் ஊழல் என்ன?  கேள்வி கேட்க முடியுமா சாமானியனால்.

என்ன காரணத்துக்காக தீர்ப்பு எடிட் செய்யப்பட்டது? எடிட் செய்யப்பட்ட தீர்ப்பினால் பலன் அடைந்தது யார்?  இப்படி எந்தெந்த தீர்ப்புகள் மாற்றப்பட்டனவோ? கேள்விகள் பல. பதில் கேட்க முடியாது. 

பரிசு கிடைக்கும்.  நீதிமன்ற அவமதிப்பு அதன் பெயர்.

டிஜிட்டல் மயமாக்கத்தின் பின் விளைவு - எப்போ வேண்டுமானாலும் டெலீட் செய்யலாம் - எடிட் செய்யலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுறுத்தல்களை நிதியமைச்சகம் செய்வது போல. சட்டமா? சட்டசபையா? ஒப்புதலா? அதெல்லாம் என்ன? இது யார் ஆட்சி? என்ன கேள்வி?

அரசு நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆவணங்களை அழித்து விடலாம் என்கிற நிலை. எல்லாம் இந்திய தேச மக்களின் நன்மைக்காக - டெவலப்மெண்டுகளுக்காக.

அரசியல் எதிரிகளை அரசு என்னவெல்லாம் செய்யுமோ என்று நினைக்கவே கூடாது. தேசத்துரோகிகள் அவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நேரு இந்தியாவை நாசம் செய்து விட்டார். பெரும் கடமை முன்னால் இருக்கிறது. நாடு நாடாக சென்று திட்டமிடல் அவசியம். டிஜிட்டல் இந்தியா. இந்தியா வளர்கிறது. 

ஓப்பன் கோர்ட்டில் படிக்கப்பட்ட தீர்ப்பையே மாற்றி அப்லோடு செய்கிறார்கள் என்றால் நீதிதுறையில் என்ன நடக்கிறது என்பதை யார் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்?

அதே நீதித்துறையில் இருப்பவர்களே கண்டுபிடிப்பார்களா?

இந்த வழக்கை மக்கள் எவரும் மறந்து விடக்கூடாது. என்ன அவசியம். மறக்காமல் இருந்தால் பசியா தீரப்போவுது? என்கிறீர்களா? பசி தீர்ந்து விடும் நோயா என்ன?

இந்த வழக்கின் விசாரணை எப்படி நடக்கிறது? குற்றவாளி யார்? என்பது பற்றி மக்கள் கவனமுடன் கவனிக்க வேண்டும். சொல்லி வைக்கிறேன். கேட்பதும் கேட்காதது அவரவர் முடிவு.

சென்னை உயர் நீதித்துறையில் நடக்கும் மர்மங்கள், குற்றச்செயல்கள் பற்றி - மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நீதிபதிகள் வெளிப்படையாக மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

வேறு எந்த உயர் நீதிமன்றத்திலும் நடக்காத குற்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதை வழக்காக எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஆணை பிறப்பிப்பது என்பது நீதிமன்றத்தின் மாண்பினை குலைக்காதா? நீதிமன்றத்தீர்ப்புகளை மாற்றினால் எப்படி ஆவணங்களை நம்புவது? இனி கோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் எப்ப்டி நம்புவார்கள்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த குற்றம் பற்றி விசாரித்த, உச்ச நீதிமன்ற உத்தரவு கீழே இருக்கிறது. 

ஊழல் இல்லையென்று சொல்லு முடியுமா? இல்லை தவறுதலாக நடந்தது என்று சொல்ல் முடியுமா? 

சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுக்கு இந்த வழக்கு ஒரு சாட்சியாக இருக்கிறதே? 

இந்த வழக்கைப் படிக்கும் போது இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன. 

எனது நோக்கம் நீதிமன்றத்தினை குற்றம் சொல்வது அல்ல. கடவுளைப் போன்ற நீதிபதிகள் சட்டத்தின் படி செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கிறேன். நீதிபதிகளுக்கு மக்களும், இந்திய அரசியல் சாசனமுமே கடவுள்கள் ஆவர். ஒவ்வொரு சாமானியன் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறோம் என்ற சிந்தனை ஒவ்வொரு அரசு அலுவலருக்கும் இருக்க வேண்டும். அரசு அலுவலர் என்பவர் மக்களின் பணியாளர்கள்.





விசாரணை உத்தரவைப் படித்து விட்டீர்களா? இனி செய்தி கீழே. இந்த வழக்கில் தொடர்புடைய மகாசேமம் டிரஸ்ட்டின் (mahasemam trust) வரலாற்றினை நெட்டில் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். 

நீதிமன்றம் - அதுவும் சென்னை உயர் நீதிமன்றம் - என்ன சொல்வது?




Thursday, September 22, 2022

நீதிபதிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா? ஓர் பார்வை

ஜூனியர் விகடனில் சவுக்கு சங்கர் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தி ஆகிய இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதினைந்து நாட்களுக்குள் விசாரணை செய்து, தண்டனை கொடுத்து, அப்பீலுக்கும் போகக்கூடாது என்று உத்தரவு இட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

தண்டனையை எதிர்த்து அப்பீல் போக விடாமல் செய்தது மாபெரும் சட்ட விதிமீறல் என்கிறது ஜூ.வி. 

இந்தச் சூழ்நிலையில்தான் சவுக்கு சங்கர் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டிகளை வைத்துத்தான் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தியும் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளனர். அப்படிப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரிவு 19-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய சங்கருக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்திவைக்கும் அதிகாரம் தண்டனையளித்த நீதிபதிகளுக்கு இருந்தபோதும் அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. என்றைக்கு ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு இறுதியானது அல்லவோ... அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதோ... அப்போது தண்டனையை நிறுத்திவைப்பதுதான் முறை. இல்லையென்றால், வாரக் கடைசியில் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்து, ‘உன்னை இரண்டு நாள்களாவது சிறையில் வைப்பேன்’ என்று வீம்பு செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. (ஜூவி கட்டுரையில் ஒரு பகுதி)

எந்த ஒரு குற்றச் செயலுக்கும் தண்டனை விதிக்கப்பட்டால், உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, அப்பீல் போக விடாமல் தண்டனை கொடுப்பது கொடுஞ்செயல்.

பேச்சுரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமையாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விதிவிலக்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறப்பட்டிருப்பதும், ஒரு கட்டுரையோ (அ) சொற்பொழிவோ நீதிமன்ற அவமதிப்பு வரையறைக்குள் வரும் என்பதும், அதனால் நீதிமன்ற மாண்பு குலைந்துவிட்டது என்று கூறி தனிப்பட்ட நீதிபதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முற்படுவதும் எப்படி நியாயமாகும்?

அதேபோல் ஒருவரை தண்டிப்பதற்கு முன்னால் முறையான நடைமுறைகளைக் கையாள மறுத்து, ராணுவ நீதிமன்றங்கள்போல் சட்ட நியாயங்களுக்கு விரோதமாகச் செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது.

மேலும் தண்டனை என்பது ஒருவரை அவரது குற்றத்தை உணரவைத்து, சீர்திருத்தி மறுபடியும் மைய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டது. அப்படியிருக்கும்போது தவறு செய்தவரையும் தண்டிக்காமல், மன்னிப்பதன் மூலம்தான் நீதிமன்றத்தின் மாட்சிமை பெருகுமேயொழிய பழிக்குப் பழி என்பது அதன் தீர்வாகாது. இதை நீதிபதிகள் உணர்வதோடு, ஒரு சிலர் தவறாகப் பேசிவருகிறார்கள் என்பதற்காக மாபெரும் அதிகார வரையறையை மேற்கொள்வது ஒரு கொசுவை நசுக்குவதற்கு உலக்கையைப் பயன்படுத்துவதுபோல் உள்ளது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மதுரை நீதிபதிகள் தாங்கள் அளித்த தண்டனையைச் சுயமாக திரும்பப் பெற்று, சவுக்கு சங்கரைச் சிறையிலிருந்து விடுவிப்பதுதான் உத்தமமான செயலாக இருக்கும்! (ஜூவியில் ஒரு பகுதி)

நன்றி:ஜூனியர் விகடன்

முழு கட்டுரை இணைப்பு கீழே உள்ள இணைப்பில் இருக்கிறது.

https://www.vikatan.com/news/general-news/journalist-savukku-sankar-arrest-issue

கட்டுரையின் இறுதிப் பகுதியில் இப்படி முடித்திருக்கிறது ஜூ.வி.

நீதிபதிகள் ஊழலே செய்யவில்லையா?  என்னிடம் இருக்கும் லிஸ்ட்டை கட்டுரையின் இறுதியில் தருகிறேன். அதற்கு முன்பு குற்றச் செயலில் ஒரு நீதிபதி ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை எப்படி எடுக்கலாம் எனப் படியுங்கள். அதிர்ச்சி தான் உண்டாகும். நாம் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் மக்களின் பணியாளர்கள் நீதிபதிகள் என்பதை படிப்பவர்கள் கவனத்தில் கொள்க. 

ஊழல் செய்யும் நீதிபதிகள் மீது சாமானியன் ஒருவனால் எளிதில் நடவடிக்கை எடுக்க இயலுமா? இதோ கீழே படியுங்கள். நீதிபதிகள் மீது புகார் தெரிவிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை.

  • Judiciary is an independent organ of the State under the Constitution of India. Government of India does not interfere in the functioning of the Judiciary.
  • The administrative/ disciplinary control over the members of subordinate judiciary in the States vests with the concerned High Court and the respective State Government. The State Government frames Rules and Regulation in consultation with the respective High Courts.
  • Central Government neither maintains records related to any court proceedings/ decisions / judgments nor does it have and can have a mechanism to monitor the action taken on them.
  • No administrative action can be taken on a grievance; subject matter of which is subjudice.

  • Government cannot ask a Court of Law to expedite proceedings of any particular case. Therefore, no action can be taken by the Government where the petitioner is aggrieved of the fact that there has been inordinate delay in disposal of the case.
  • A judicial order can be challenged only before appropriate Court of Law as per prescribed legal procedure. Therefore, it is a futile exercise to file a grievance against a judicial order/judgement.
  • A grievance regarding a complaint against a Judge can be taken up for inquiry by the concerned High Court or Supreme Court as per in-house procedure adopted by them. There is no role of Government in disposal of such grievances.
  • Detailed guidelines on grievances received in the Department of Justice are available on this Department’s website doj.gov.in. As per guidelines issued by the Supreme Court of India, grievances against Judicial Officers are required to be sent on sworn affidavit with verifiable facts to the Registrar General of the concerned High Court.
  • Petitions, applications and other documents to be filed before a Court of Law should not be forwarded alongwith grievances as these are to be presented in person or by a duly authorised agent or by an advocate on record duly appointed for the purpose.
  • As Judiciary is independent and Government does not interfere in the functioning of the Judiciary, no further follow-up or correspondence is made by the Government after forwarding of grievance to the concerned High Court or Supreme Court, as the case may be.
  • As the citizens can lodge their grievances online on pgportal no action is being taken on the grievances received through e-mail. pgportal.gov.in has been specifically created for lodging of grievances by the citizens.
  • Once final reply is given on a grievance, it should not be repeated again.
  • Thanks to www.doj.gov.in

மேலே இருப்பவைகளை இந்த இணையதளத்தில் படிக்கலாம். 


ஒரு சாமானிய இந்தியன் தனக்கு அநீதி வழங்கப்பட்டதாகக் கருதினால் எங்கனம் நடவடிக்கை எடுக்க இயலும்? நீதிபதிகள் மேல் புகார் தெரிவித்தால், அதை நீதிபதிகளே விசாரணை செய்வது சரியாகுமா? மனசாட்சி இருப்பவர்கள் யோசித்துப் பாருங்கள். எல்லோரும் மனிதர்கள் தானே.  அரசு நீதிபதிகளைக் கேள்வி கேட்க முடியாது. மக்களுக்கும் இத்தனை கட்டுப்பாடுகள். வக்கீல்களின் நிலையோ வாய்ப்பூட்டு. கேள்விகளுக்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் நீதிபதிகளுக்கு விதிவிலக்குக் கொடுத்திருக்கிறதா என்ன?

கீழே படியுங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டம் 1971 என்ன சொல்கிறது என. 


படித்துப் பாருங்கள். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட தண்டனை எப்படிப்பட்டது என்று புரியும்.

28 ஆண்டுகாலம் நடந்த ஊழல் வாதி ஜெயலலிதாவுக்கு நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை ரத்துச் செய்தாரா நீதிபதி குமாரசாமி, அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, நீதிபதி குன்கா வழங்கிய உத்தரவை உறுதி செய்ததே? 

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு தவறு? என்றால் வழங்கிய நீதிபதிக்கு என்ன தண்டனை? ஏன் அவர் தவறான தீர்ப்பினை வழங்கினார்? சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து கொண்டு தப்பித்து விடுவதை பலரும் செய்து வருகின்றனர்.

எந்த நீதிபதி ஊழல் செய்தார்? ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்பவர்கள், மெயில் டுடேவில் வெளியான கட்டுரையினைக் கீழே படிக்கவும்.

படித்து விட்டீர்களா? நீதிபதிகள் என்றாலும் அவர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. மக்கள் தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விமர்சிக்க வேண்டும். வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நீதிபதிகளின் தீர்ப்புகள் ஆராயப்பட வேண்டும். தீர்ப்புப் பழி வாங்குதலுக்காகவோ அல்லது இதர பலன்களுக்காக வழங்கப்பட்டிருந்தால், தண்டிக்கப்படல் அவசியம்.

இது ஒன்றும் ராஜா / மன்னர் காலம் அல்ல என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.