இன்ஸ்டாகிராமைத் திறந்தாலே திறந்த வெளி மைதானம் போல எல்லாவற்றையும் திறந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மட்டும் அப்படித்தான் வரும் போல. ஆப் இன்ஸ்டால் செய்வதில்லை. பிரவுசர் மூலம் பார்ப்பதுண்டு. ஃபேஸ்புக்கும் அப்படித்தான்.
மசாலாக்கள், பொடிகள், தொக்குகள் விற்பனை ஜோராக நடக்கிறது. தொன்னை ஃபுட்ஸ் குழம்பு பொடி வாங்கினேன் ஒரு தடவை. காசுக்கு ஏற்ற பொருள் அல்ல அது. கொத்தவரங்காய் வற்றல் கேட்ட போது ஒரு கிலோ 800 ரூபாய் என்றார்கள். மார்க்கெட்டில் 200 ரூபாய்க்கு கிடைக்கிறது.
திருச்செந்தூர் ஆள் யாரோ ஒருவர் கேள்வி கேட்க - அது போலீஸ் வரைக்கும் சென்றிருக்கிறது. விற்பனை, வியாபாரப் பிரச்சினை.
தொக்கு மார்க்கெட்டில் தொய்வு.
தமிழர்களுக்கு நாக்கு நீளம். சாப்பாடு என்றால் போதும், செத்த பிணமே எழுந்து போய் சாப்பிட்டு வந்து மீண்டும் படுத்து விடும்.
காமம் தீராதவர்கள் ஆட்கள் அனேகம். கேரளா ஆட்கள் இருவர் இணையதளத்தில் சூடான வியாபாரப் பொருள். கார் வாங்கி விட்டார்களாம். அதற்கொரு வீடியோ. கலி முத்துப்பேச்சி. காலம் காலமாக இதே பேச்சு.
காசு வேணும் கலியாயிருந்தாலும் கிலியாக இருந்தாலும் வாழ. சினிமா நடிகைக்கும், அந்த இரு கேரளா ஆட்களுக்கும் வேறுபாடு இல்லை. தெரிந்தும் தெரியாமலும், எல்லாம் தெரிந்தும். அம்புட்டுதான்.
முன்பெல்லாம் வெளியூர் செல்வதாக இருந்தால், வீட்டுச் சாப்பாடு பார்சல் ஆகி விடும். இப்போது வழியின்றி ஹோட்டல் உணவு. வெச்சு செய்கிறார்கள் ஹோட்டல்காரர்கள். வீட்டு முறைப்படி சமையல் என்றொரு அடிக்குறிப்பு - கடுகுக்குப் பதிலாக கிடுகு போடுவார்கள் போல. தோசை வீட்டிலும் ஹோட்டலிலும் ஒன்று போலத்தானே இருக்கும்?
தேர்தல் கமிஷன் தேர்தலையே திருடி விட்டது என்கிறார்கள். மிகக் கடுமையான முறையில் காவல்துறை இளைஞர்களை அடக்கி ஒடுக்கி வருவது - கொடுமையிலும் கொடுமை. காவல்துறை எப்போதும் ஆளும் நபர்களுக்கு மட்டுமே வேலை செய்யும். அது மக்களுக்கானது அல்ல என்ற வரலாறு எப்போதும் மாறப்போவதில்லை. போதாதற்கு நீதிமன்றம் இளைஞர்களின் நியாயமான உரிமைகளை மிக நாசூக்காக ஒடுக்குகிறது. மீடியாக்கள் பொய்களைப் பரப்புகிறது. எங்கு நோக்கினும் பொய்கள். மீடியாக்களில் உண்மை என்பது 1 சதவீதம் இல்லை. சோஷியல் மீடியாக்களோ பொய்களின் உலகம். ஒரு பிரபலமான வக்கீல் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்கிறார். மனது வெறுத்து போய் விட்டது என்கிறார்.
இந்தியாவின் பொருளாதாரம் - அது ஒரு மர்மக் கோட்டையாக மாறி விட்டது. புரிந்து கொள்ளவே முடியவில்லை. 1200 பொன்னி அரிசி விலை 1800 ரூபாயாக மாறி விட்டது. ஆனால் விலைவாசி ஏறவே இல்லை என்கிறார்கள்.
இப்படியான சூழலில் பிக்பாஸ் 10. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு, கைகளை குவித்து லவ் காட்டிக் கொண்டிருக்கிறார் நாளைய இந்தியப் பிரதமர் விஜய் சேதுபதி. அதை ஒரு கூட்டம் உட்கார்ந்து கைதட்டிக் கொண்டிருக்கிறது.
அரைத்த மாவு. புளித்துப் போச்சு. எண்டமோல் சைன் இந்தியா பிக்பாஸை விட்டு விடுவது மக்களுக்கு நலம். இதற்கு மேல் அரைக்க ஒன்றுமில்லை. பிக்பாஸ் சோசியல் மீடியா ஃபாக்டரி அலுவலர்கள் பணி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பிக்பாஸ் விஜய் சேதுபதிக்கு மட்டும் வருமானம் தருவதில்லை. பாக்டரி ஆட்களுக்கும் கிடைக்கிறது. என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். பிக்பாஸ் தொழிற்சாலை இலவச வேலைக்காரர்களுக்கு வருமானம் குறைவாம் இந்த தடவை.
அடுத்து ஜெயிலர் 2 பாக்டரி வேலைக்காரர்கள். இத்தனை கோடி வசூல் என்று சன் டிவிக்கு ஆடிட்டராகி விட்டார்கள். சோஷியல் மீடியாக்கள் பாக்டரி போலவே நடக்கிறது. இலவச வேலையாட்கள். 40 சதவீத கமிஷன்.
தன்னுடைய கொழுந்தியாள் மகனுக்கு சன் டிவி உரிமையாளர் பெண்ணை நிச்சயம் செய்து மகிழ்ந்திருக்கிறார் தலைவரு நிரந்தரம்.
சோனி லிவ்வில் புதிய நிகழ்ச்சி - மாஸ்டர் செஃப்.
அக்கார்டு ஹோட்டல் முதலாளி திருப்பூர் பாத்திரக் கம்பெனியுடன் சேர்ந்து - 1000 ரூபாய் பாத்திரத்தை 5000 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார். பிராண்டிங்க்.
விஜய் டிவியிலிருந்து சம்பளப் பிரச்சினையால் வெளியேறினாரோ என்னவோ தெரியவில்லை. இப்போது சோனி லிவ்வில் மாஸ்டர் செப்பில் ஜட்ஜ்.
இந்த ஜட்ஜ் வார்த்தை இருக்கிறதே அது இவ்ளோ மட்டமாகப் போகும் என நினைக்கவே இல்லை. என்ன செய்வது காலத்தின் கோலத்தில் இதுவும் ஒன்று.
மாஸ்டர் செப் சமையல்காரர்கள் புதிய பொருளை சமையலில் பயன்படுத்துகிறார்கள்.
அதன் பெயர் சாம் என்கிற சமந்தா.
பல்லாவரத்துப் பைங்கிளி.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுறவின் உச்சத்தில் வரக்கூடியதை உடம்பெல்லாம் வழியவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சோனி லிவ் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில். டன் கணக்கில் பவுடர்களும், மேக்கப் சாமான்களும், இன்ன பிற அயிட்டங்களும் ஒவ்வொரு ஆட்கள் முகத்திலும் நிரம்பி வழிகிறது.
கத்தரி, வெண்டைக்காய் வரிசையில் இனி சமந்தா ஒரு நான் வெஜ் சமையல் பொருள். சமந்தா மசாலா பிராண்ட் இன்னும் பேட்டண்ட் ரைட் வாங்கவில்லையாம். முயற்சியுங்கள். எதிர்கால சந்தியினர் சமந்தா ஒரு நான் வெஜ் சமையல் பொருள் என்று நம்புவார்கள். நம்புங்கள் நம்பிக்கைத்தான் வாழ்க்கை.
சமந்தா நாளை தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருவார். வந்தே தீருவார்.
முதல் ஓட்டு - நானே...! வழக்கம் போல. எனக்கு சினிமா ஹீரோவும், ஹீரோயினும் தான் முதல் கடவுள். கண்ணுக்குத் தெரிந்த கடவுள்கள்.
வளமுடன் வாழ்க.

0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.