அந்த வளாகம் பரபரப்பாய்
இல்லை. முகத்தில் மாஸ்க் கட்டியபடி அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் இருவர்.
மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில்
நீதிபதி சங்கர் வந்தார்.
டவாலி தன் கையில்
இருக்கும் குச்சியை தள்ளிப் பிடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தும் பயம் அவனுக்கு.
வழக்கு எண் சிபி1/2020,
வாதி எப்படிச்சாவேன், பிரதிவாதி கொரானா என்று சத்தமாக அழைத்தான் டவாலி.
காவல்துறை அதிகாரிகள்,
அரசு வழக்கறிஞர் ஆகியோருடன் எப்படிச்சாவேன் வாதி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
வாதியின் வழக்கறிஞர்
அமித் டெல்லியில் இருந்து ரகசியப் பயணமாய் தனி பிளைட் பிடித்து வந்திந்தார்.
பல டிவி சேனல்களின்
கேமராக்கள் நீதிமன்றத்தை உற்று நோக்கின. நீதிபதிக்கு சினிமாவின் மீதும், சினிமா நடிகை
பூஜா ஹெக்டேவின் மீது அபார மோகம். அதனால் இந்த வழக்கை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும்
என்பதற்காக அனுமதி வழங்கி இருந்தார்.
டிவி ஆட்களும்
எவன் வந்து தும்முவானோ, எப்படி வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இருந்ததால், தெருத்தெருவாய்
அலைவதை விட, அறைக்குள் அமர்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்காக, உடனடியாக இந்த லைவ் புரோகிராமிற்கு
ஆதரவு தெரிவித்து கேமராக்களையும், மைக்கையும் கொண்டு வந்து நீட்டி விட்டார்கள்.
போன மாதம் எதிர்
கட்சி அரசியல் தலைவர் மீது, ஆளும் கட்சி சி.யெம்முக்காக வக்கீல் சொட்டையனால் தொடுக்கப்பட்ட
வழக்கை விசாரித்தார் நீதிபதி சங்கர். ஆளும் கட்சி சார்பில் ‘என்ன வேண்டுமானாலும் செய்து
தர தயார்’ என அரசு வழக்கறிஞர் பன்னி மூலம் செய்தி தரப்பட்டது.
சங்கர்
போனவாரம் டி.ஜேன்னு ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஹீரோயினைப் பார்த்ததும் அவரின்
அல்லக்கை துடியாய் துடித்த வேதனை தாளாமல், ;கொஞ்சம் பொறு உனக்கு ஏதாவது வழி பிறக்கும்’ என சமாதானம் செய்து கொண்டார்.
’என்ன வேண்டுமானாலும்’ செய்தி
காதுக்கு வந்ததும், டவாலி மூலம் பன்னிக்கு இமயமலையில் வழக்கு தொடர்பாக ஆன்மீக டிஸ்கசனுக்கு
ஏற்பாடு செய்தால் அரஸ்ட் வாரண்ட் ரெடி என்று தகவல் தரப்பட்டது.
மறு
நிமிடமே, பன்னி மூலம் டிஸ்கஸனுக்கு நாள் குறிக்கப்பட்ட விஷயம் நீதிபதிக்கு டவாலி வழியாக தெரிவிக்கப்பட்டது. அந்த நாள் தான் 22.03.2020.
நீதிபதியின் அல்லக்கை துடியாய்
துடிக்க ஆரம்பித்தான். ’பொறுத்தார் பூமி ஆள்வார் என உனக்குத் தெரியாதா தம்பி. பொறுத்திரு.
கடமையை முடிப்போம். பின்னர் கச்சேரியை வைப்போம்’ என்று சமாதானப்படுத்தினார் நீதிபதி.
டிஸ்கஸனில் நடிகையின் அதை ஒரு கடி கடித்து விட்டு தான் அடுத்த வேலை உனக்கு என அல்லக்கையை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.
வாதியின்
வழக்கறிஞர் ஒரு மாதமாக ரெஸ்ட்டில் இருந்தார். ஆகவே இது என்ன வழக்கு என புரிந்து கொள்ள
இயலாமல் கசகசப்பாய் சரவணம்பட்டி காவல் அலுவலக ஏட்டு எழுதிய எஃப்.ஐ.ஆரை படித்துக் கொண்டிருந்தார்.
பிரதிவாதிக்கு
ஆதரவாக ஆஜர் ஆக யார் வரப்போகிறார்கள் என்று இது வரையிலும் தெரியவில்லை. அரசின் வழக்கறிஞருக்கு
எரிச்சலோ எரிச்சல். வழக்குப் போட்ட வாதி எப்படிச்சாவேனை கொலை வெறியுடன் பார்த்துக்
கொண்டிருந்தார்.
உலகமே
டிவியின் முன்னால் உட்கார்ந்திருந்தது. கொரானாவுக்கு ஆதரவாக யார் ஆஜராகி வாதாடப்போகின்றார்கள்
எனத் தெரியாமல் கண் இமை மூடாமல் கேமராக்கள் வழியே கேமராமேன்கள் பார்த்துக் கொண்டிருக்க,
வளாகத்துக்குள் கார் ஒன்று வந்து நின்றது.
(சினிமா உலகிற்கு கலைச் சேவை செய்து, கலைமாமனி, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை எதிர்காலத்தில் வாங்கப் போகும் கலைத்தாய் பெற்ற மரகதம் பூஜா ஹெக்டே இவர் தான்)
இந்தக்
கொரானா வழக்கு தன்னால் தான் நீதிமன்ற விசாரணைக்கே வந்தது என்றுத் தெரியாமல் பூஜா ஹெக்டே
பெடிக்கியூர், மெனிக்கியூர் செய்து கொண்டிருந்தாள்.
விளம்பர
இடைவேளை முடிந்ததும் தொடரும் வழக்கு விசாரணை…..
முக்கியமான குறிப்பு:
இது நகைச்சுவைக்காக எழுதப்படுகிற நாவல். இதன் கான்செப்ட் உரிமை எனக்கு மட்டுமே. மற்றபடி இது எவருக்கும் எதிரான நாவல் இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நாவல் எழுதும் போது புளொவில் வந்தது. ஆகவே எவராவது மனம் கோணினால் தாங்களே நேராக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலில் வரும் சம்பவங்களும் யாரையும், எவரையும் குறிப்பிடுவன இல்லை.