இன்றைய (23.12.2022) தமிழ் திசையில் பத்திரிக்கையில் பன்முகப் பரிமாணம் கொண்ட அறிஞர் தொ.பரமசிவன் அவர்களைப் பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் எழுதியது கீழே.
Friday, December 23, 2022
ராம் சேது - ஹிந்தி திரைப்படம் - தமிழர்கள் மீதான இனவழிப்பு சதி
Friday, December 16, 2022
நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை
பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான்.
சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.
சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.
அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.
உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.
உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.
ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.
Tuesday, December 13, 2022
நிலம் (103) - புதுச்சேரி மாமல்லபுரம் விரைவுசாலைக்காக 22 கிராமங்களின் நிலமெடுப்பு விபரம்
அன்பு நண்பர்களே,
சென்னை அருகில் புதுச்சேரி - மாமல்லபுரம் விரைவுச்சாலை அகலப்படுத்துதலுக்காக இருபத்திரண்டு கிராமங்களில் நிலமெடுக்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. நில உரிமையாளர்களுக்கும், அப்பகுதியில் நிலம் வாங்க விரும்புவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற நினைப்பில் செய்திதாளில் வந்த நிலமெடுப்பு விவரங்களைப் பதிவிட்டு இருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு அதிக அளவில் இழப்பீட்டு தொகை வழங்குகிறது. அதுபற்றிய விபரங்களையும், சட்டங்களையும் நன்கு படித்து விட்டு, இழப்பீட்டுத் தொகை கணக்கீட்டின் போது துல்லியமாக கணக்கிட்டு இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி இந்தக் கிராமங்களில் இருக்கும் சர்வே நம்பர்களில் உள்ள நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளுங்கள். அரசு பழைய பட்டாக்களின் படி நிலமெடுப்பதற்கான அறிவிப்பாணையை அனுப்பும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வாழ்க வளமுடன்.
Monday, December 12, 2022
நிலம் (102) - வெளிநாட்டு மக்களின் சொத்துக்கள் நூதன திருட்டு
Sunday, December 11, 2022
நாசமாகிக் கொண்டிருக்கும் தமிழினப் பெண்கள்
Thursday, December 8, 2022
எழுபதாயிரம் கோடி வர்த்தகம் ஆன்லைன் ரம்மி விளையாட்டு - ஆளுநர் ரவியின் ரகசிய சந்திப்பு
பிசினஸ் ஸ்டாண்டர் டிசம்பர் 8, 2022 பத்திரிக்கையில் ஆன்லைன் விளையாட்டில் 2027 ஆண்டில் மதிப்பு எழுபதாயிரம் கோடி ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. 2022ம் வருடத்தில் 4500 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி இருக்கிறது கேமிங்க் நிறுவனங்கள். இன்றைய நாள் வரை நான்காயிரம் கோடி மக்கள் ஆன்லைன் கேம் விளையாடுகிறார்கள். இந்த ஆன்லைன் கேமில் 900 கம்பெனிகள் ஈடுபட்டிருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை ஆன்லைன் ரம்மி - விளையாட்டு கேம்களை இந்தியர்கள் 1,20,000 கோடி அளவுக்கு தரவிரக்கம் செய்துள்ளார்கள். இந்தியர்கள் வாரத்துக்கு சுமாராக 8 மணி நேரம் ஆன்லைன் கேமில் நேரத்தைச் செலவழிக்கின்றார்கள்.
தமிழகத்தில் இதுவரை 23 நபர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் கமிட்டி அமைத்து, ஆய்வறிக்கைப் பெற்றார்கள். அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டத்தை தமிழக சட்டமன்றம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுவரை ஆளு நர் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டத்துக்கு அனுமதி தராமல் இழுத்தடித்த காரணத்தால் சட்டம் காலாவதி ஆகி இருக்கிறது. இன்னும் எத்தனை தமிழர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென ஆளுநர் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. விவசாய சட்டம் எதிர்ப்பின் போது சுமார் 700 விவசாயிகள் கொல்லப்பட்டார்களே அதே போல ஆயிரமாயிரம் தமிழர்கள் தற்கொலை செய்து கொண்டால் தான் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கு ஆளுநர் ரவி அனுமதி கொடுப்பாரா?
அதுமட்டுமல்ல ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள் என்று நடிகர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பல நடிகர்கள் ரசிகர்களை அழிக்கும் இந்த கேம்களை விளையாடச் சொல்கிறார்கள். நடிகர்களின் ஒரே நோக்கம் ரசிகனை அழிப்பது மட்டுமே. அயோக்கியத்தனமான - செய் நன்றி அறியா மூடர்கள் இவ்வகை நடிகர்கள். இவர்கள் ஹீரோக்கள் அல்ல - மக்களின் வில்லன்கள்.
இவர்கள் நன்றி மறந்த கயவர்கள். காசுக்காக எதிர்காலத்தில் மனித கறியை விற்கும் விளம்பரங்களிலும் நடிப்பார்கள். தங்களை வாழ வைத்த அப்பாவி ரசிகனை படுகுழிக்குள் தள்ளி விடுகிறோம் என்ற மனசாட்சி இல்லாத சுய நலத்தின் பேய்கள். இவர்களை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இவர்களின் திரைப்படங்கள் - நடிக்கும் விளம்பரம் பொருட்கள் ஆகியவைகளை வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தாலேனும் எதிர்காலச் சந்ததியினருக்கு நன்மை செய்யலாம். மறந்து விட வேண்டும். நாம் தான் துவக்கி வைக்க வேண்டும். இனி இவர்களையும், இவர்களால் விளம்பரப்படுத்தப்படும் நிறுவனங்களின் பொருட்களையும் உதாசீனப்படுத்தி - வாங்காமல் தவிருங்கள். அது ஒன்றே நம்மை வாழ வைத்த இந்த சமூகத்திற்கும் - எதிர்கால இந்தியாவின் புதல்வர்களுக்கும் நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
வருடம் எட்டு கோடி ரூபாய் தமிழ் மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் - தமிழக அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்ட - ஆளுநர் ரவி - ஆன்லைன் கேமிங் நிறுவனக்கூட்டமைப்பினரைச் சந்தித்திருப்பதாக முரசொலியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆளுநருக்கு என தனிப்பட்ட முன் முடிவுகள் இருக்கக் கூடாது. ஆளு நர் - அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் எனச் சட்டம் சொல்கிறது. ஆளுநர் ஆவதற்கு எந்த வித தகுதியும் தேவை இல்லை. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபரும் அல்ல.
ஒன்றிய அரசின் பிரதிநிதியாக - ஆளும் ஆட்சிக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்படுபவர்.
ஆளுநருக்கு சட்ட மசோதாக்களில் சந்தேகம் வேறு எழுகிறதாம். அதை விளக்கமாகப் பெற்ற பிறகு அனுமதி கொடுப்பாராம் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதி நிதிகள் சட்டமியற்றினால், கொல்லைப்புறமாக வந்து அமர்ந்து கொண்டு சட்டத்தை நிறைவேற்ற விடமாலும், தமிழக மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர்கள் தன்னிலை மறந்து - தங்களை நியமித்த ஒன்றிய அரசின் கைப்பாவையாக மக்களை உதாசீனப்படுத்தி - மக்கள் நலத்திற்காக உருவாக்கும் சட்டங்களை கிடப்பில் போட்டு - உண்டு கொழுத்திருப்பது எங்கனம் தர்மமாகும்? அறமாகும்? சட்டத்திற்கு உட்படாமல் - தன் இஷ்டத்துக்கு தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்தப் போக்கு இன்னும் எத்தனை நாள் தான் தொடருமோ?
ஆன்லைன் கேம் கூட்டமைப்பினரை ஆளுநர் சந்தித்த செய்தியைக் கூட பொதுவில் வெளியிடவில்லை என்கிறது முரசொலி. இதனால் ஆளுநருக்கோ அல்லது ஆளுநரை நியமித்த ஒன்றிய அரசின் அதிகார மையங்களுக்கோ தனிப்பட்ட வகையின் நன்மை இருக்கலாலோ என்ற சந்தேகம் எழுவதை தடுக்க முடியவில்லை.
ஆளுநர்களின் தகுதி - அவர்களின் பணி என்னவென்பதை உச்ச நீதிமன்றம் பல முறை மண்டையில் குட்டி இருக்கிறது. ஆனாலும் இன்னும் சரியாகவில்லை என்கிற போது - ஆளுநர் நியமனச் சட்டத்தில் திருத்தம் தேவை என்பது அவசியமாகிறது.
ஆகவே திமுக அரசு ஆளுநர் நியமனத்திற்கு என தனிப்பட்ட வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர - ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் பாதிக்கப்பட்ட இதர மாநில மக்களையும் - அரசுகளையும் ஒன்றிணைத்து, அதற்கான முன்னேற்பாடுகளைத் துவங்குதல் அவசியம்.
இனியும் பொறுத்திருந்தால் மக்களின் கோபத்துக்கு ஆளுநர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற நிலை உண்டாகி விடுமோ என்ற வருத்தமேற்படுகிறது.
நன்றி - முரசொலி - 08-12-2022
Wednesday, December 7, 2022
200 கோடி வரிபாக்கி - விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை இல்லை ஏன்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல என்பதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவும் ஆன புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஒருவரே சாட்சி. இதற்கு பத்திரிக்கைச் செய்திகளே சாட்சி.
அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 2011ம் வருடத்திலிருந்து 2019ம் வருடம் வரை அவரின் வருமானத்தைக் கணக்கிட்டு வருமான வரித்துரை 206 கோடி ரூபாய் வரி விதித்தது. கவனிக்க 206 கோடி வரி என்றால் வருமானம் எவ்வளவு இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
03.12.2022ம் தேதியன்று தினத்தந்தியில் வெளியான செய்தியை அப்படியே தருகிறேன். படித்துப் பார்க்கவும்.
தொழிலதிபர் சேகர்ரெட்டி, குட்கா உற்பத்தியாளரிடம் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறைத்துள்ளதாக வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையின்படி, 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை நிர்ணயம் செய்து, அவருக்கு ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.
இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தாததால், அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கிற்கு வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- குவாரி வருமானம் மறைப்பு விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவருடைய குவாரியில் 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.66 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 945 செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த குவாரியில் இருந்து வருமானமாக ரூ.122 கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 41 கிடைத்துள்ளது. இந்த விவரங்களை விஜயபாஸ்கர் மறைத்துள்ளார்.
இதுதவிர சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்திடமிருந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரூ.85 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 765 பெற்றுள்ளார்.
குட்கா பணம் இதே காலகட்டத்தில் பான் மசாலா குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் பெற்றுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான வாடகை கட்டணமாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தை விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார்.
அதேபோல ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்ட தொகை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நயினார் முகமது என்பவரது வீட்டில் ரூ.2 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையுடன் சேர்த்து விஜயபாஸ்கரிடம் ரூ.15 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.339 கோடி விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் புதுக்கோட்டை வீடுகளில் இருந்து ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் அவருக்கு கிடைத்த வருமானம் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த வரவு-செலவு இனங்கள் மூலமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதன்காரணமாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ரூ.206.42 கோடி வரிபாக்கிக்காகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, November 26, 2022
மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது - மனிதாபிமானம் அற்ற சிந்தனை
உலகின் மக்கள் தொகை 800 கோடியாம். அதில் 799 கோடி தீயவர்களிடமிருந்து ஒரே ஒரு கோடி கூட இல்லாத நல்லவர்கள் என்ற சிறுபான்மையினரைக் காக்க மீதமுள்ள 799 கோடி தீய எண்ணமுடையவர்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதுதான் ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம். இக்கருத்து தவறு என எவரால் மறுக்க முடியும்?
எத்தனையோ கடவுள் இருக்கின்றனர். எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. இருந்தும் மனிதன் திருந்தி விட்டானா? இன்றைக்கும் அதிகாரத்துக்கும், பேராசைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும், தனக்கென தனி சட்டம் வைத்திருக்கின்றானே? இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா?
கேரளாவில் முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் அதிகமாயிருப்பதன் காரணமென்ன என்ற எனது பதிவினைக் கீழே படியுங்கள்.
கேரளாவில் நடந்த தீண்டாமைக் கொடுமைகள்
படித்து விட்டீர்களா?
தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் செல்லக்கூடாது, மார்புக்கும் மேலே உடையும் உடுத்தக் கூடாது, செருப்பு போடக்கூடாது, குளத்தில் குளிக்க கூடாது இப்படி மேல் சாதி என்றுச் சொல்லிச் சொல்லி மக்களை தன்மானத்துடன் வாழ விடாமல் அதிகாரத்துடன் சேர்ந்து கொண்டு அக்கிரமங்கள் செய்த காலத்தில், முஸ்லிம் மதத்திலோ, கிறிஸ்தவ மதத்திலோ சேர்ந்தாலாவது நம்மை மதிப்பார்கள் என்ற நோக்குடன் மதம் மாறியவர்களுக்கு, படிக்க வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என்றுச் சொல்வது எவ்வளவு கொடூரம்?
பார் புகழும் (??) பிரதமர் மோடி அரசு இப்படித்தான் உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறது.
தன்மானத்துடன் வாழவும் விடமாட்டோம், மானங்கெட்ட வாழ்க்கையைத்தான் வாழ விடுவோம், வேறு வழி இல்லையென்று மதம் மாறினாலும் முன்னேற விடமாட்டோம் என்றுச் சொல்லும் அரசின் பதில் மனிதாபிமானம் அற்ற கொடுஞ்செயல் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
ஒரு பொய்யனால் தினமணியில் ஆ.ராசா என்பவர் முன்னேறி விட்டாராம். ஆகையால் அவர்களுக்கு இட ஓதுக்கீடு கூடாதாம் என்று எழுதப்பட்ட கட்டுரையினைப் படித்த போது, உயர் சாதியினரின் வன்மன் எத்தகையது என்று புரிந்து கொள்ளமுடிகிறது.
பார்ப்பனியத்தின் மாயையினால் கீழ் சாதியினர் என்று அவர்களால் விழிக்கப்படும் சூத்திரர்கள் மதிகெட்டு, அறிவழிந்து, தன்னிலை அற்று, அடிமைகள் போல அவர்களின் பொய்களுக்குக் கட்டுப்பட்டு சேவகம் செய்து வரும் கொடுமைகள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நடக்குமோ தெரியவில்லை.
உயர் ஜாதியினரால் நிர்வகிக்கப்படும், உலகத்தின் ஒப்புயர்வற்ற தலைவரைக் கொன்றதாக வரலாறு சொல்லும் இயக்கத்தின் சார்பு கொண்டு ஒன்றிய அரசின் இந்த வகையிலான பதில்கள், சமீபத்தில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட மனித உரிமை கூட்டத்திற்கு எதிரானது அல்லவா?
சமூக வேறுபாடுகளை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தி, தன் அரசியலுக்குப் பயன்படுத்துவர்களை சட்டம் மன்னிக்காது என்றெல்லாம் செய்திகளை வெளியிடுகிறார்கள் பார்ப்பனீய உயர் சாதி பத்திரிக்கைகள்.
சமூக வேறுபாடுகளை அரசிடம் கொண்டு சேர்க்க போராடாமல் என்ன தான் செய்வதாம்? அவ்வாறு செய்தால் சட்டம் மன்னிக்காதாம் இப்படியெல்லாம் போராடுபவர்களை ஒடுக்கி அழித்துக் கொண்டிருக்கிறார்கள் உயர் சாதியினர்.
இன்றைக்கும் சாதிய வேறுபாடுகளால் தன் மானம் இழந்தவர்கள் மட்டுமே, மதம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கோவிலுக்குள் பூசை செய்ய அனுமதிக்காத சட்டம், சமூக வேறுபாடுகளைப் பற்றிப் பேசுகிறது என்பது காலத்தின் கொடுமை.
தன் மானத்துடன் வாழவும் விடமாட்டோம், சாகவும் விடமாட்டோம் என்கிறார்களா ஒன்றிய அரசினர்? அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கின்றனவா?
உயர் ஜாதி எனச் சொல்லிக் கொள்ளும் திருடர்களின் வசம் சிக்கி இருக்கும் இந்தியாவை இனி மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்திதான் மீட்க வேண்டும். அதுவரை இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிப்பார்கள். இதோ கீழே இருக்கும் ஒரு செய்தியே சான்று.
இந்தியாவின் ஜன நாயக அமைப்பான தேர்தல் கமிஷன், இன்று உச்ச நீதிமன்றத்தால் கேலிக்கைப் பொருளாகி நிற்கிறது. ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தை, “வாயை மூடி இருக்கவும்” என்றுச் சொல்கிறது. ஆதாரம் கீழே. இந்தியாவின் ஒவ்வொரு அமைப்பும் அழிக்கப்படுகிறது என்பது செய்திகள் சொல்லும் உண்மை.
ஆதாரமின்றி எதையும் எழுதுவதுமில்லை, பேசுவதும் இல்லை. மேலே இருக்கும் செய்திகளை தொடர்புடைய இணையதளங்களில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
மூழ்கப் போகிறதா இந்தியாவின் பொருளாதாரம்?
Thursday, November 3, 2022
சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழர் சொத்து
சிதம்பரம் நடராஜர் கோவில் இருப்பது தமிழ் நாட்டில். பராமரிப்பதும், பக்தர்களும் தமிழ் நாடு. ஆனால் கோவிலில் தமிழில் இறைவனுக்கு வழிபாடு செய்யக்கூடாது. தமிழுக்கு தமிழ் நாட்டில் இடமில்லையாம். நிர்வகிக்க அரசுக்கு அனுமதியில்லையாம். இப்படி ஒரு அக்கிரமம் எங்கேனும் இந்த உலகில் நடக்குமா? நடந்திடத்தான் முடியுமா? ஆனாலும் தமிழர்கள் இன்னும் அமைதிகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் தமிழில் இறை வழிபாடு செய்யமுடியாது என்றொரு கோவில். அதுவும் தமிழர்களின் சொத்தில் இருக்கிறது. என்ன ஒரு கொடுமை இது?
மக்கள் ஒன்று திரண்டால், ஒரே நாளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழர்களின் நிர்வாகத்துக்குள் வந்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு குலைந்து விடக்கூடாது என்பதற்காக, சட்டத்தை மதிக்க வேண்டுமென்பதற்காக தமிழர்கள் அமைதி காத்து வருகிறார்கள். ஊழல்ராணி ஜெயலலிதா இந்த நிகழ்வு நடக்கும் போது அமைதியாக இருந்தார். அதன் காரணமாக தீட்சிதர்கள் சிறு பெண்குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் அளவுக்கு, குற்றச்செயல்கள் செய்திருக்கின்றனர்.
தமிழக அரசு எடுத்திருக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுக மற்றும் இதர கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழர் சொத்து. தமிழர்கள் தான் நிர்வகிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் முதல்வருக்கும் - அரசுக்கும்.