குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, July 25, 2011

ஸ்லோ பாஸ்சன் - பிராய்லர் கோழிக்கறி



செட்டி நாடு சிக்கன் 


செட்டிநாடு பெப்பர் சிக்கன்







நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகையினால் நானும் மகளும் சாந்தி கியர் குழந்தைகள் பார்க்கிற்கு சென்றோம். அம்மு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அங்கு எனது நண்பர் வந்தார். கோழிக்கறி பிசினஸ் செய்து வருகிறார். பண்ணையில் இருந்து கோழிகளை வாங்கி, கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். 

”வீட்டுக்குப் போகும் போது கோழிக்கறி அரைகிலோ வாங்கனும்” என்றேன்.

”யாருக்கு? அம்முக்கா? “ என்றார்.

“ஆமாம்... !”

“வேண்டாம்.. வேண்டாம் “ என்று அலறினார்.

வாயைக் கிளறினேன். கொட்டினார். இதோ பதிவாய் உங்களுக்காக.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறதாம். விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறதாம். வாக்சின் போடப்படுகிறதாம். நோய் வராமல் தடுக்க மருந்து அடிக்கப்படுகிறதாம். சில கெமிக்கல்ஸ் வேலை செய்யவில்லை என்றால் கோழியின் குடலுக்குள் புழுக்கள் உருவாகி விடுமாம். கிட்டத்தட்ட ஒரு கோழியில் 600 கிராம் கெமிக்கல்ஸ் இருக்குமாம். அதுமட்டுமல்ல பல ஹோட்டல்களில் செத்து போன கோழியைத்தான் வாங்குவார்களாம். பெரிய ஹோட்டலுக்கு மரபணு பிரச்சினை,ஊனமுற்ற கோழிகள் கறியாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறதாம். 

அதுமட்டுமா, முட்டைக்கோழிகளுக்கு முட்டை போட பலவித வளர்ச்சியை ஊக்குவிக்கும் கெமிக்கல்ஸ் கொடுக்கப்படுகிறதாம். நாட்டுக்கோழி என்ற போர்வையில் தற்போது அந்தக் கோழிகளுக்கு கெமிக்கல்ஸ் கலந்த உணவுப் பொருட்கள் கொடுத்து, கடைகளுக்கு கொண்டு வருகின்றார்களாம்.

எனக்கு கிர்ரடித்துப் போய் விட்டது. கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் எவரும் சிக்கனை முகர்ந்துகூட பார்க்கமாட்டார்கள் என்றார். 

ஆட்டுக்கறியில் என்னென்ன கலக்கின்றார்களோ தெரியவில்லை.

பார்க்கிலிருந்து வரும் போது, பாப்கார்ன் ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்தேன். வரும் போது ”அம்மா கோழிக்கறி வாங்கச் சொன்னாங்களே அப்பா” என்று கேட்டுக் கொண்டே வந்தது அம்மு.

பிள்ளைக்கு விஷத்தையா வாங்கிக் கொடுக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள். நான் செய்தது சரிதானே ?

* * *



3 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏற்கனவே அரசல்புரசலாக கேள்விப்பட்டதுதான். அது என்னென்ன கெமிக்கல்ஸ் என்று அந்த நண்பரிடம் விபரம் வாங்கி எழுதினால் நன்றாக இருக்குமே?

HajasreeN said...

100% correct

Karthikeyan Rajendran said...

ஐயோ இப்படியெல்லாம் நடக்குமா.............

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.