குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, July 25, 2011

பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோரின் கன்சல்டேஷன் பகுதி இரண்டு


டீலரிடமிருந்து வரக்கூடிய சரக்குகளைக் கையாளும் இடத்திற்கு விடிகாலையில் சென்று விட்டேன். அங்கு சேர்மனின் மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் மேற்பார்வையில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அந்தக் குறிப்பிட்ட டீலரிடமிருந்து சரக்குகள் வந்திருக்கின்றனவா என்று பார்வையிட்ட போது ஒன்றையும் காணவில்லை. பார்கோடிங் எப்படி அடிக்கப்படுகிறது, விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, எத்தனை பர்சண்டேஜ் (ரகசியம் !!!!) கிடைக்கும் என்றெல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டு, நானும் அவரும் ஹோட்டலுக்குத் திரும்பி விட்டோம்.

அன்றைக்கு அதன்பிறகு வேலை இல்லை. சேர்மனிடம் சொல்லி விட்டு, பர்சனல் வேலையாக வெளியில் சென்று விட்டேன்.

அடுத்த நாள் காலையில் சேர்மனின் அறையில் அமர்ந்து கொண்டு, அன்று வந்த சரக்குகள் லிஸ்ட்டினை ஸ்டோர் திறக்கும் முன்பே எடுத்து பார்வையிட்டபோது, குறிப்பிட்ட டீலரிடமிருந்து பில் ஒன்று வந்திருந்தது. 100 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அன்று ஸ்டோருக்கு அனுப்பி இருந்ததாக பில் சொல்லியது.உடனே ஸ்டாக் வைத்திருந்த இடத்திற்கு நானும் சேர்மனும் சென்றோம். அங்குக் குறிப்பிட்ட அந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களின் எண்ணிக்கையை செக்கிங் செய்த போது, 20 பாட்டில்கள் குறைந்திருந்தன. சேர்மனின் முகம் அஷ்டகோணலாகியது. 

நான் வந்த வேலை முடிந்து விட்டதாக சேர்மன் சொல்ல, ”10% முடிந்திருக்கிறது” என்றேன். இதயத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியாய் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். பிரஷர் அதிகமாகி விட்டது. அவரை அப்படியே வெளியில் கொண்டு வந்து, அவரின் தனிப்பட்ட ஹெஸ்ட் ஹவுசிற்குள் வந்து விட்டோம். வரும் வரையிலும் “அவனா இப்படி????” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார். 

நாங்கள் செக்கிங் செய்த போது, அந்த உறவினர் வேறு வேலையாக வெளியில் சென்றிருந்தார்.

“தங்கம், மீதி 90% என்ன?”

“அவசரப்படாதீர்கள். இன்னும் ஒரு நாள் அவகாசம் வேண்டும் “

“சரி மெதுவாகச் செய்யுங்கள், யாரிடமும் சொல்லி விட வேண்டாம்”

“ நான் உங்களுக்காக வந்திருக்கிறேன்” என்றுச் சொல்லி சிரித்தேன். அன்று இருவரும் வெளியில் சென்று விட்டு, மாலையில் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

மறு நாள் காலையில் சாஃப்ட்வேர் செக்‌ஷனுக்குள் நுழைந்தேன்.

ஸ்டாக் எவ்வளவு இருக்கிறது என்பதை பில்லிங்க் போடும்போதே தெரியும் படி ஏன் சாஃப்ட்வேர் உருவாக்கவில்லை? என்ற கேள்வியைக் கேட்ட போது, சாஃப்ட்வேர் ஆள் நடு நடுங்க ஆரம்பித்தார். 

“அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை சார், உடனடியாக மாடிஃபிகேஷன் செய்தால் போதுமானது, உங்களுக்கு தரக்கூடிய சாஃப்ட்வேரில் இணைத்து விடுகிறோம்” என்றார்.

“ஓகே, அப்படியே செய்து விடுங்கள்” என்றுச் சொல்லி மேலும் சாஃப்ட்வேரில் இருக்கும் குறைபாடுகளை பார்வையிட ஆரம்பித்தேன்.

மிகவும் திட்டமிட்டு, யாருக்கும் தெரியாத வண்ணம் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டிருந்தது. மேற்பார்வைக்கு எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு ஆஃப்சனை வைத்து, அட்ஜஸ்ட் செய்யும் படியான முறையில் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டிருந்ததை எளிதில் கண்டுபிடித்தேன்.

அதாவது டீலர்களிடமிருந்து வரக்கூடிய சரக்குகள் அக்கவுண்ட் செக்‌ஷனுக்குச் செல்லும் போது பில்லின் படியே சென்று சேரும். அதன்படியே டீலருக்கான பணம் செலுத்தப்பட்டு விடும். ஆனால் சரக்குகள் விற்ற பின்னர் அனைத்தும் மாற்றப்படும். எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

அங்குமட்டுமல்லாமல் காய்கறியை மொத்தமாக வாங்கும் போது மிக அதிக சரக்குகள் வாங்கப்பட்டதாகச் சொல்லப்படும். ஆனால் உண்மையில் வந்தது கொஞ்சம் மட்டுமே. அதே போல முந்திரி வகையறாக்கள். இதே போல இன்னும் வெளியில் சொல்ல முடியாதவாறு திருட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்தத் திருட்டினை ஒரு சாதாரண ஆடிட்டர் கண்டிபிடிக்கலாம். ஆனால் ஏன் செய்யவில்லை? பெரிய லிங்க்ட் நெட்வொர்க் ஆடிட்டர் வரையிலும் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறது. ஆடிட்டர் முதற்கொண்டு அனைவரும் திருடிக் கொண்டிருந்தனர். கொஞ்ச நஞ்சமல்ல. கோடிகளில் கொள்ளை நடந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் இரண்டு சேர்மன்களின் போர்டு மீட்டிங்கில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளையும், களைய வேண்டிய வழிகளையும் தெளிவாக எடுத்துரைத்தேன். கண்கள் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். படிப்படியாக மாற்றப்பட வேண்டியதையும் சொல்லி விட்டு, ஹோட்டலுக்கு வந்து விட்டேன். அன்று இரவு ஏழு மணி அளவில் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, சேர்மன் எனது ஃபீசைக் கொண்டு வந்து கொடுத்தார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ந்தது பற்றிய பிளாஷ் நியூஸ் டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.* * *
இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். அன்றைக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு என்பது அதிகமாக இல்லை. காரணம் விலை. சாஃப்ட்வேர்கள் எல்லாம் மிக அதிக விலையாக இருந்தன. டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருந்த சமயம்.  அதனால் தான் இத்தகைய திருட்டுகளை நடத்த முடிந்தது. 

இன்றைக்கும் கூட, இந்தியா முழுவதும் பிரபலமான ஸ்டோர் ஒன்றில் என் கண் முன்னே ஸ்டோரின் மேனேஜர் ஒருவர் திருட்டுப் பிளானை செய்து கொண்டிருந்தார். 

படித்தவர்கள் தான் இன்றைக்கு பெரிய திருட்டுக்களைச் செய்து வருகிறார்கள்.படிக்காதவர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் திருட்டு வேலையைச் செய்து வருகிறார்கள்.ஏன் இந்த நிலைமை வந்தது? அதற்கும் இந்த கோடீஸ்வர முதலாளிகளே காரணம். மெட்டீரியலைஸ்டு வாழ்க்கையை மிகச் சிறந்த ஒன்றாக மக்களின் மூளைகளில் மீடியாக்கள் மூலம் பதிவு செய்கிறார்கள். அதனால் அதிகம் சம்பாதிக்க இயலாதவர்கள் திருட முற்படுகின்றார்கள்.

சும்மா இருப்பதற்காக கார்பொரேட் சாமியார்களிடம் சம்பாதிக்கும் சொத்துக்களை கொடுத்து பயிற்சி பெற வேண்டிய அவல நிலையில் மானிடம் இருக்கிறது. 

* * *

2 comments:

Amudhavan said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி; படித்தவர்கள்தான் இன்றைக்குப் பெரிய திருட்டுக்களைச் செய்துவருகிறார்கள். கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தாலும் ஆயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில் என்று சுருட்டிவிடுகிறார்கள். மக்களுக்குத் தெரிவதெல்லாம் வெறும் அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்பதுதான். படிக்காதவர்களும் மோசமில்லை,அவர்களுக்கு உகந்த அளவில் திருடவோ மோசம் செய்யவோ முனைகிறார்கள்.படித்தவனோ, படிக்காதவனோ தன்னளவில் யோக்கியமாய் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தானானால் மட்டுமே அவன் சரியானவனாக இருக்கிறான். நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

HajasreeN said...

adadaa enna oru kandu pidippu ninga enna padichirukinga?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.