மூன்று நாட்களுக்கு முன்பு, அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் மெயில் செக் செய்து கொண்டிருந்த போது, எனது மிக முக்கிய பெர்சனல் ஜிமெயில் ஐடி ராலோ ஹேக்கிங் செய்யப்பட முயற்சிக்கப்பட்டதைக் கண்டு பிடித்தேன். ஏற்கனவே எனது மொபைல் எண்ணை ஜிமெயில் அக்கவுண்ட்டுடன் இணைத்திருப்பதால் வெரிபிகேஷன் கோடு எனக்கு வர, அலர்ட் ஆனேன். தொடர்ந்து ஸ்டெப் 2 வெரிபிகேஷன் ஆக்டிவேட் செய்து, ஒவ்வொரு தடவை ஜிமெயில் அக்கவுன்ட் உள்ளே செல்லும் போது, வெரிபிகேஷன் கோடு வந்த பிறகுதான் ஆக்சஸ் கிடைத்தது. கேள்விகள் அனைத்தையும் மாற்றி ஓரளவிற்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறேன்.
பெரும்பாலும் எனக்கு வரக்கூடிய மெயில்களை அவுட்லுக்கின் மூலம் கணிணிக்கு இறக்கி விடுவேன். அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா? ஜிமெயில் அக்கவுண்டுகளை நான் ஒரு கேட்வே ஆகத்தான் பயன்படுத்தி வருகிறேன். அதையும் ஹேக்கிங் செய்ய முயற்சிக்கின்றார்கள். ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது மொபைலை அக்கவுண்டுடன் இணைத்து விடுங்கள்.
ஸ்டெப் 2 வெரிபிகேசன் ஆப்சனை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே இருக்கும் இணைப்பில் கண்டுகொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.