குரு வாழ்க ! குருவே துணை !!

Sunday, July 3, 2011

மக்களை ஏமாற்றும் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பாக வாங்கிய வீடியோகான் ஃப்ரிட்ஜ் தன் ஆயுளை முடித்துக் கொண்டது. கம்ப்ரஷர் மாற்றலாமா என்ற யோசனையை நிராகரித்து, புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தேன்.பத்து நாட்களுக்கும் மேலாய் இணையங்களை அலசி ஆராய்ந்து, ஏகப்பட்ட விசாரணைகள் செய்து ஒரு வழியாய் ஒரு கம்பெனியின் ஃப்ரிட்ஜை வாங்கலாம் என்று முடிவெடுத்து, கடைகளில் விசாரணைப் படலத்தை ஆரம்பித்தோம்.

கோவையில் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஒவ்வொன்றிலும் விசாரணையை ஆரம்பித்தவுடன் மிகப் பெரும் அதிர்ச்சியை சந்தித்தேன். இணைய தளங்களில் ஒரு விலை, ஷோரூம்களில் ஒரு விலை என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் வித்தியாசம் இருந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர்கள் 30 பர்சண்டேஜ் கமிஷன் வழங்குகிறார்கள். அதற்கு மேலும் நான்காயிரம், ஐந்தாயிரம் என்றால் வரக்கூடிய லாபம் தயாரிப்பாளர்களை விட, விற்பனையாளருக்கு கிடைக்கிறது என்பது தான் என் அனுபவத்தில் கண்ட ஸ்பெஷல் செய்தி.

அதுமட்டுமா, ஆளைப் பார்த்து பொருளுக்கு விலை சொல்லும் கலாச்சாரத்தை ஒவ்வொரு கடையிலும் கண்டேன்.அசந்து போய் விட்டேன். கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல், பகல் கொள்ளையை விட மோசமானதாய் மேற்படி கோயமுத்தூர் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சிலர் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். மக்களின் உழைப்பை உறிஞ்சும் இவ்வகை டீலர்களுக்கிடையில் ஏதோ சில பேராவது நாணயத்தோடு தொழில் செய்பவர்கள் இருப்பார்களே அவர்களைத் தேடலாம் என்று ஒரு நாள் மாலையில் கண்டு பிடித்தேன்.

கிட்டத்தட்ட நான் விசாரித்த ஃப்ரிட்ஜை பிரபல எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சொன்ன விலையிலிருந்து 5000 ரூபாய் குறைவாக, புத்தம் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கினேன் வெகு நேர்மையாக தொழில் செய்யும் அந்த டீலரிடமிருந்து. கடந்த பத்து வருடத்திற்கு முன்னால் அவரிடம் தான் ஃப்ரிட்ஜை வாங்கி இருந்தேன். அந்த ஃப்ரிட்ஜ் கடந்த பத்து வருடங்களாய் எந்த வித பிரச்சினையும் தராமல் வேலை செய்தது. டீலரிடம் மேற்படி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு, அவர் கம்பெனி கொடுத்த ரிசீப்டைக் காட்டிய போது மகிழ்ச்சியா மேலும் தள்ளுபடி கொடுத்தார்.

ஒரு ஃப்ரிட்ஜ்க்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வைத்து விற்பனை செய்கிறார்கள் என்றால், ஒரு நாளைக்கு கோவையில் எத்தனை ஃப்ரிட்ஜுகள் விற்கின்றார்கள் என்பதையும், எவ்வளவு பணத்தை மக்களிடமிருந்து திருடுகிறார்கள் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கோவையிலே இவ்வளவு திருட்டு என்றால் பிற ஊர்களில் எல்லாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தலையே சுற்றும்.

இந்த வகைத் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி என்று நினைப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பொருள் வாங்கும் போது விலை குறைவான பொருட்களை வாங்க முயலுங்கள். நேற்றைக்கு எல்சிடி பிரபலமாய் பேசப்பட்டது. இன்றைக்கு எல்யிடி, த்ரீடி என்றுச் சொல்கிறார்கள். 60,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி டிவியை மாற்ற வேண்டுமென்று நண்பரின் வீட்டில் பிரச்சினையாகி விட்டது. எந்தப் பொருள் என்ன பயன் என்று முடிவு செய்தவுடன், வெப்சைட்டுகளில் தேடிப்பார்த்து அதன் விலையினை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு டீலரிடம் செல்லுங்கள். சில ஆயிரமாவது மிச்சமாகும்.


8 comments:

Anonymous said...

plz tell me the name of that elecctronics store, will be useful for us..thanks..

கோவை நேரம் said...

என்ன கம்பெனி , விலை, டீலர் இதனை கூட பகிர்ந்திருக்கலாம் ...எங்களுக்கு உபயோகமாய் இருந்திருக்கும்

பாவா ஷரீப் said...

pease tell me the name of that elecctronics store, will be useful for us..thanks..javascript:void(0)

Karthikeyan Rajendran said...

சார் நானும், டி.வி, பிரிட்ஜ் , போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சர்வீஸ் செய்பவன்தான் எங்களையே சில நேரம் ஏமாற்றி விடுகின்றனர், அவசர பட்டு வேறு பிரிட்ஜ் வாங்கிவிட்டீர்கள் என்பது என் கருத்து.

Thangavel Manickam said...

கார்த்தி, கிட்டத்தட்ட நான்கு சர்வீஸ் செய்யும் நண்பர்கள் வந்து பார்த்து விட்டு, கம்ப்ரசர் போய் விட்டது என்று ஒரே மாதிரியாகச் சொன்னார்கள். பத்து வருடம் ஆகி விட்டது, ரிஸ்க் வேண்டாமென்றார்கள். ஆகவே மாற்றி விட்டேன் கார்த்தி. நீங்கள் ஏன் இதுபற்றிய ஒரு பதிவொன்றினை எழுதக்கூடாது? செய்யுங்களேன்...

Anonymous said...

Please give the details of the Dealer. We really appreciate who is doing business in good terms.

Regards
Jagan

(OR)

Where you bought your fridge ten years back? :)

Karthikeyan Rajendran said...

அன்பிற்கினிய நண்பருக்கு, உங்கள் மறுமொழி கண்டேன் மகிழ்ச்சி. உங்கள் விருப்பப்படியே விரைவில் எனது பதிவை வெளியிடுகிறேன். அதற்க்கு முன் உங்கள் மறுமொழியைகருத்துரை இட்டோரின் மெயிலுக்கும் அனுப்பினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் நான் ஞாபகமாக வந்து பார்த்ததனால் உங்கள் மறுமொழிஎனக்கு தெரிந்தது இல்லையென்றால் புதிய பதிவை மட்டும் பார்த்து விட்டு சென்று இருப்பேன். தயவு செய்து மெயிலில் ரிப்ளை கொடுக்கவும் , தயவு செய்து இந்த கருத்திற்கு பதில் தரவும்

KANNAA NALAMAA said...

அதை என் கேட்கிறீர்கள்?
என் விசயத்த கேளுங்க
என்னுடைய DVD player,Philips,LG,Onida,போன்று பிரபல நிறுவனம் தயாரித்தது.
அதில் உள்ள மொட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள ரப்பர் ரிங் (ரப்பர் வாஷர் போன்று இருக்கும்). கேசட் பிளேயரை பல நாட்கள் பயன் படுத்தாமல் விட்டுவிட்டதால் உருகி அருந்ததுவிட்டது.நான் ஒரு BE படித்த பொறியாளன்.நானே அதை சரிசெய்துவிடலாம் என்று கலட்டி பார்த்ததில் இது தெரிந்தது.கோவையில் உள்ள ஒரு பிரபல கம்பெனியின் சர்வீஸ் சென்டரில்கொடுத்து சரி செய்து கொடுக்கும்படி கொடுத்தேன்.
சரி செய்ததற்கு ரூபாய் 820/-என பில் செய்தார்கள்.நான் ஒருவாஷர் மாட்டியதர்க்கு இவ்வளவா என கேட்டுவிட்டு 820/- கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் பணம் கொடுத்தேன்.
பின் அங்கேயே அதை டெலிவரி எடுக்கும்போது டெஸ்ட் செய்தால் மோட்டார் ஓடவில்லை.
என்னாங்க இது என்று கேட்டதில் நாளைக்கு வாங்க சரிசெய்து வைக்கிறேன் என்றார்கள்
எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் பாருங்கள்
இது கொஞ்சம்தான். முழுவதும் இங்கு எழுத முடியவில்லை
நான் முடிவு செய்துவிட்டேன் இனி ஏதாவது ரிபேர் ஆகிவிட்டால் தூக்கி எறிந்துவிட்டு புதியதாக வாங்கிவிடவேண்டும் என்று.

Er.கணேசன் / கோயம்புத்தூர்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.