களவாணி படம் பார்த்திருப்பீர்கள். படம் முடிந்து எழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் போது சரண்யா, இளவரசுவிடம் வெளி நாட்டில் வேலை செய்யும் மகனைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருப்பார்.
”தனியா வீடு கொடுத்திருக்காங்களாம், கார் கொடுத்திருக்காங்களாம், வெள்ளிக்கிழமையானா வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடுறாங்களாம்” என்று ஏகப்பட்ட ஆம்களைப் போட்டுக் கொண்டிருப்பார். தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணிப் பக்கமாய் இப்படித்தான் இழுவை போடுவார்கள்.
யாராவது ஒருவர் வெளி நாடு போய் சம்பாதித்து கொஞ்சம் சொத்து வாங்கினால் என்றால் போச்சு, சொல்லி வைத்த மாதிரி அனைவரும் வெளி நாடு போய் விடுவார்கள். என் ஃபிரண்டு ஒருத்தன் கூல் ட்ரிங்க்ஸ் கடை போட்டா ஓடுமாடான்னு கேட்டான், என்ன விஷயம் என்று விசாரித்தால், நண்பனின் எதிர்த்த வீட்டுக்காரன் கேரளாவில் கூல்டிரிங்க்ஸ் கடை போட்டு, வீடு கட்டிட்டானாம். இவனுக்கு ஆசை வந்து விட்டது. இதே மாதிரி எங்களூர் பக்கம் ஒருவர் கோன் ஃபாக்டரி போட்டு, சம்பாதித்து வீடு கட்டி விட்டார். உடனே ஊரில் பல பேர் சொத்து பத்துக்களை விற்று கோன் ஃபேக்டரியைப் போட்டு சம்பாதிக்கின்றார்கள். கோன் ஃபாக்டரி போட்டவரில் ஒருவர் பொட்டென்று போய் விட்டார். நானும் ஹோட்டல் நடத்துறேன்னு ஊரில சொல்லிக்கிட்டு திரிவார்கள். என்ன ஹோட்டல்னு போய் பார்த்தா காக்கா பிரியாணி ஹோட்டலா இருக்கும். மத்தவனுங்க கிட்ட லந்து விடுவதில் இருக்கிற அக்கரை உடல் நலத்தில் இருப்பதில்லை.
எனது பள்ளிக்கூட நண்பனொருவன் போனில் பேசிய போது சொன்னான்.“ஐந்து வருடம் வெளி நாட்டில் இருந்து படாத பாடு பட்டு சம்பாதித்தேன் தங்கம், வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை, எப்போ போறீங்கன்னு மனைவி கேட்கிறாள்டா ” என்றான். ”சொந்த பந்தமெல்லாம் கேவலமா பேசுறானுங்கடா, இந்தப் பொழப்பு பொழக்கிறதுக்கு எதுக்குடா மனுசனா பொறந்தோம்னு இருக்குடா” என்றான். இவனை மாதிரி இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.
இப்போதும் எங்களூர் பக்கம் ஃபேமஸ் வெளி நாட்டுக்குப் போவது. அங்கே என்ன வேலைன்னாலும் பார்க்கலாம். இங்கே கல்யாணப் பத்திரிக்கையில் பையன் பெயருக்குப் பின்னால் “கேம்ப் : மலேசியா” என்று போல்ட் லெட்டரில் போடுவார்கள்.இதுல ஒரு பெருமை. பையன் எங்கேன்னு கேட்டா, மலேசியாவில இருக்கான்னு சொல்லிக்கிட்டு திரிவார்கள்.
நேற்றைக்கு எனது சினிமா தயாரிப்பாளர் நண்பருக்கு கொரியர் ஒன்றினை அனுப்ப, கொரியர் ஆஃபீஸ் சென்றிருந்தேன். முன்பக்கம் கூல் டிரிங்க்ஸ் கடை ஒன்று இருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தேன். இந்தக் குளிரில் கூல்டிரிங்க்ஸ் குடிக்க வருவார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி பாக்கெட்டில் கலராக இருந்த தண்ணீர் போன்ற வஸ்துவை வாங்கினார். அதைப் பாக்கெட் போட்டது ஒரு குட்டிப் பையன். முகமெல்லாம் சிரிப்பு. ”எந்த ஊர்?” என்று கேட்டேன். ”பேராவூரணிப் பக்கம்” என்றான். ”என்ன சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டேன். ”அதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னா, அண்ணா பேசி விட்டாக” என்றான். படிக்கும் வயதில் எதிர்கால வாழ்க்கையை இழந்து கூல்டிரிங்க்ஸ் கடையில் உழைத்துக் கொண்டிருக்கின்றான் அந்தச் சிறுவன். அவனின் சுறுசுறுப்பான செயல்பாடுகளைப் பார்த்தேன். இந்தப் பதிவு எழுதிவிட்டேன்.
எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பது எப்படின்னு இப்போது பார்க்கலாம்.
நன்றி : சுட்டி இதழ் மற்றும் சுட்டி பாரதி.
4 comments:
ரைட்டு..
Nandri
நம்ம நாட்டுல இல்லாத வேலை வாய்ப்புகள் இல்லை. சொந்த தொழில் கூட செய்யலாம், ஆனா வெளிநாடு போயி ஏசி யிலே உக்காந்து வேலை செஞ்சாலும் ஊருக்கு வந்ததும் நண்பர்கள் கேட்கும் கேள்விகள் கேக்றான் மேக்கின் கம்பனி தானே என்பது, நமது உழைப்பு நம் நாட்டுக்கு என்பது பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு சொல்லி தரவேண்டியது, என்பது என் தாழ்மையான கருத்து
சுண்டக்கா கா பணம், சுமை கூலி முக்கா பணம் அப்படிங்கற மாதிரி.. சுறுசுறுப்பு குறிப்பு கம்மி.. அதுக்கு குடுத்துருக்கற இன்ட்ரோ ஜாஸ்த்தி.. ஆனாலும், சுவையா எழுதியிருக்கீங்க..
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.