கம்ப்யூட்டரில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கும் உடல் சூடு அதிகமாகும். அச்சூடு அதிகரித்தால் உடலில் பலவித நோய்கள் உருவாக ஆரம்பிக்கும். உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடற் சூட்டைத் தணிக்க சில சிறிய வழிகளை தொடர்ந்தால் உடற்சூடு ஏற்படாது.
சாப்பாட்டில் தூள் உப்பின் உபயோகத்தை நிறுத்தி, கல் உப்பினைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இரண்டாவதாக எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி விட வேண்டும். மூன்றாவது பெப்சி, கோக், லெமன் என்று குளிர்பானங்களையும், பீட்சா, பர்கர் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். சர்க்கரை உபயோகப்படுத்துவதற்குப் பதிலாய் பனங்கற்கண்டு, பனைவெல்லம்(கெமிக்கல் சாராதது) பயன்படுத்துங்கள். பால், பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து விடுங்கள்.
இனி உடற் சூட்டைத் தணிக்க என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்கிறேன். வாரம் இரண்டு முறை தலையிலிருந்து கால் வரை அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆக வேண்டும். அப்படிக் குளிக்கவில்லை என்றால் உடற்சூடு குறையாமல் நோய்கள் வர ஆரம்பிக்கும். ஏசியில் அமர்ந்தால் சூடு குறைந்து விடும் என்று நினைக்காதீர்கள். அதில் அமர்ந்தால் உடற்சூடு அதிகரிக்கும்.
உடற்சூட்டைத் தணிக்க சீரக எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கவும். நல்லெண்ணெயை நன்கு காயவைத்து அதில் சீரகத்தை போட்டு பொறித்து வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயை தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்தி வந்தால் உடற்சூடு குறைந்து உடல் காற்றுப் போல இருக்கும்.
அடிக்கடி பப்பாளி, கொய்யா, மாதுளை பழங்களைச் சாப்பிட்டு வரவும். வாரத்துக்கொருமுறை அவசியம் கொவ்வைக்காய் உணவில் சேர்க்கவும். அகத்திக்கீரை சிகரெட் பிடிப்பவர்கள் சேர்த்துக் கொள்ளவும். அகத்திக் கீரையில் நிகோடினைக் குறைக்கும் பொருள் இருக்கிறது.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.