குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 9, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 2


உடம்பில் சேரும் கொழுப்பு ரத்தத்தில் சென்று சேர்கிறது. தண்ணீர் பைப்பிற்குள் உப்பு நீர் தொடர்ந்து சென்றால் பைப்பைச் சுற்றியும் உப்பு படிந்து பைப்பின் சுற்றளவைச் சுருக்கி விடும். அது போல கொழுப்பு நிறைந்த ரத்தம், நரம்புகளில் உட்புறச்சுவரில் படிந்து ரத்தக்குழாயின் விட்டத்தைப் படிப்படியாக குறைத்து விடும்.ரத்தம் செல்லும் பாதையின் அளவு குறுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல், ரத்தக்குழாய் விரிந்து கொடுக்கும் தன்மையானது. இந்தக் கொழுப்பு படிவதால் ரத்தக்குழாய் தடித்து விரைப்பாய் மாறி விடும். உங்கள் கையில் இருக்கும் ஏதாவதொரு நரம்பினை அழுத்தினால் துடிப்பினை நாம் அறியலாம். அந்தத் துடிப்பினை உணர விடமால் ரத்தக் குழாயினை கொழுப்பு அடைத்து விரைப்பாய் மாற்றி விடும். வேறு வழி இன்றி உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைச் செலுத்த இதயம் படுவேகமாக இயங்கும். இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயிலும் கொழுப்பு அடைத்துக் கொண்டால் ரத்தம் வெளியேற முடியாமல் இதயம் மூச்சு வாங்கும் போது நெஞ்சு வலி உண்டாகும். அது தான் ஹார்ட் அட்டாக்.

டாக்டர்கள் பாசையில் சொல்லாமல், அனைவ்ருக்கும் புரியும் படி எழுதி இருக்கிறேன்.இனி கொழுப்பு எப்படி உருவாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள் என் இனிய நண்பர்களே !

நாம் கொழுப்பினை மட்டும் தான் சாப்பிடுகிறோம். மட்டன், சிக்கன் மட்டுமல்ல வெள்ளை வெளேர் அரிசியிலும் கொழுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு சமையலிலும் நாம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவதே இல்லை. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு மூன்று ஸ்பூன் எண்ணெய் போதுமானது என்றாலும் அதற்கு மேல்தான் நாம் சாப்பிடுகிறோம். பால் சாப்பிடுகின்றோம் அல்லவா அதில் இருக்கும் கொழுப்பு மிக அதிகமானது. பால் ஜெரிக்க கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பிடிக்கும்.பால் வயிற்றுக்குள் சென்று, திரிந்து பின் தயிராகி அதன் பிறகுதான் சீரணமாகிறது. டீயுடன் வடை சாப்பிடும் போது நம் உடம்பிற்கு தேவைக்கும் மேலான எண்ணெயினை நாம் சாப்பிடுகிறோம். 

அதுமட்டுமல்ல, உருளைக்கிழங்கு, அரிசி வகைகளை சேர்த்துச் சாப்பிடும் போது, மாவு வகைகளான இவைகளிலிருந்து கிடைக்கும் கொழுப்பும் சேர்ந்து விடுகிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாம் சாப்பிடும் உணவுப் பொருள் “கொழுப்பு” மட்டுமே என்று உங்களுக்குப் புரிய வரும்.

இவ்வாறு சாப்பிடுவதால் தான் உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு மாரடைப்புகள் உண்டாகின்றன என்றுச் சொல்கின்றார்கள்.

கோக் குடிக்கின்றீர்கள் அல்லவா அதில் இருக்கும் சர்க்கரை இருக்கிறதே கொடுமை.இந்தச் சர்க்கரை முற்றிலும் கெமிக்கல்கலால் தயாரிக்கப்படுகிறது.  ஃபாண்டசிக்காக அனைவரும் குளிர்பானங்களை வெளுத்து வாங்குகிறோம். கோக் மற்றும் இதர குளிர் பானங்கள் அனைத்துமே உடலுக்கு மிக அதிக கொடுமை செய்யும் வைரஸ் கிருமிகள். ஆனால் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும் கூட குளிர்பானங்களை குடித்துத் தள்ளுகின்றார்கள். அதுமட்டுமின்றி பீட்சா, பர்கர் போன்ற உப்பும், கொழுப்பும் நிறைந்த உணவினை விழுங்கி தன் வாழ் நாளில் ஒரு சில நாட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்ளும் போது, அந்த உணவிற்கு எதிராய் நம் உடம்பு பெரும் போராட்டத்தினை நிகழ்த்தி சரிசம நிலைக்கு வருமாம். இப்படியே எத்தனை நாளைக்குத்தான் உடம்பு போராடும். நம் உடம்பினை நாம் மிகப் பெரிய எதிரியாகக் கருதி தேவையற்ற உணவுகளை நாக்கிற்கு அடிமையாய் மாறி விழுங்கிக் கொண்டே இருக்கிறோம். மனிதன் தன் உடம்பினை மாபெரும் எதிரியாய் நினைத்து, உடம்பினைக் கொல்ல போராடிக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்த்தீர்களா? என்ன ஒரு கொடுமையான செயல் இது????

சரி, இனி ரத்தத்தில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன உணவினைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

கேரளா பக்கம் சமையலில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். இந்த விஷயத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். தேங்காய் எண்ணெயில் கொழுப்பினை தவிர வேறொன்றும் இருக்காது என்பதையும் தெரிந்து வைத்திருப்பின்றீர்கள். கொழுப்பு நிறைந்த எண்ணெய் கிடைக்கும் இடத்தில், அந்தக் கொழுப்பினைக் குறைக்க இயற்கையே “கொடம்புளி” என்ற புளியை கேரளாக்காரர்களுக்கு வழங்கி இருக்கிறது. இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று. கேரள மக்கள் சமையலில் சேர்க்கும் கொடம்புளி இருக்கிறதே அது ரத்தத்தில் இருக்கும் கொழுப்பினை உறிஞ்சி எடுத்து கொழுப்பினைச் சேர விடாது. 

கொடம்புளியினை ரசமாகவோ அல்லது குழம்பிலோ சேர்த்து சாப்பிட்டு வர, உடம்பில் இருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ரத்தத்திலிருந்து கொழுப்பு எரிக்கப்பட்டு நீங்கி விடும். இந்தக் கொடம்புளியின் ஆங்கிலப் பெயர் பிரிண்டல் பெரி. இந்தக் கொடம்புளியினைத் தான் வெளி நாட்டுக்காரர்கள் வாங்கி, உடல் குறையும் மாத்திரைகளில் பயன்படுத்துகிறார்கள். கூக்கிளில் தேடிப்பாருங்கள். கொடம்புளியினைப் பற்றிய அருமை பெருமைகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இரண்டே மாதங்களில் உடல் பருமன் குறையும் என்று விளம்பரப்படுத்துகின்றார்களே அந்த மாத்திரைகளில் இந்தக் கொடம்புளிதான் எக்ஸ்ட்ராக்ட் செய்து சேர்க்கப்பட்டிருக்கும்.

உடல் பருமனாய் இருப்பவர்கள். அதிக கொழுப்பு உணவினைச் சேர்த்துக் கொள்ளுபவர்கள் உணவினில் கொடம்புளியினை சேர்த்தால், ரத்தத்தில் கொழுப்புச் சேராது. இதய நோய் வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.உடல் உழைப்பு அதிகமில்லாதவர்கள் அனைவரும் இந்தக் கொடம்புளியினைச் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள். வாரம் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கொடம்புளி கோவை உக்கடம் புது மீன் மார்க்கெட்டில் இருக்கும் கருவாட்டுக் கடை ஒன்றில் கிடைக்கின்றது. இதன் விலை கிலோ 200 ரூபாய் என்றுச் சொன்னார் அந்தக் கடைக்காரர். அல்லது கொச்சின் பக்கமாய் ஏதும் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி விடுங்கள். வாங்கி அனுப்பி வைப்பார்கள். கொடம்புளி ஆரஞ்சு சுளை போல இருக்கும். இந்த சுளையில் இரண்டு கீற்றுக்களை எடுத்து சுடு நீரில் போட்டு வைத்தால் கரையும். ஆனாலும் முழுமையாக கரைந்து விடாது. புளிப்பும், துவர்ப்பும் இருக்கும். ஆரம்பத்தில் தக்காளியை அதிகம் சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் பிறது அதன் சுவை நாக்கிற்கு பழகி விடும். உடம்பிற்கு துவர்ப்பு அதிகம் தேவை என்பதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.

வேறு எந்த வழியிலும் வாங்க முடியாதவர்கள், இந்தக் கொடம்புளி தேவையென்றால் என்னைத் தொடர்பு கொள்ளவும். கடையிலிருந்து வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கிறேன். தொடர்பு விபரங்கள் தளத்திலேயே இருக்கின்றன.

விரைவில் வாய்ப்புண் ஏற்பட்டால் மாத்திரைகள் ஏதுமின்று சரிசெய்வது எப்படி என்பதையும், மூலம் வராமல் தடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்பதையும் பார்க்கலாம்.


2 comments:

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையான தகவல்.கட்டாயம் இந்த புளியினை குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே பழக்கிவிட்டால் அவர்களுக்கு பின்னாளில் கொழுப்பு ப்ராபளம் இல்லாமல் போகும்.தகவலுக்கு நன்றி..

Unknown said...

எனக்கு கொடம்புளி கிடைக்கிறது. ஆனால் அதன் மணம் சாம்பலைப் போன்றோ அல்லது எரிக்கப்பட்டது போன்ற புகை மணத்துடன் இருக்கிறது. இப்படித்தான் இதன் மணம் இருக்குமா? இல்லையேல் மணமின்றி இருக்குமா?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.