குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, June 8, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 1

கணிணியில் வேலை செய்வோருக்கு உடல் சூடு அதிகம் ஏற்பட்டு விடும். ஏசியில் இருந்தாலும் கூட. குளிர்பானங்கள், நிறைய தண்ணீர் குடித்தாலும் சிலருக்கு அதிக உடல் சூடு உண்டாகி விடும். 

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று நினைப்போருக்குத்தான் இந்தப் பதிவு.

வாரம் இரண்டு முறை நற்சீரகத்தைலத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடற் சூடு குறைய ஆரம்பிக்கும். எப்படி இந்த சீரக தைலத்தை தயாரிக்க வேண்டுமென்பதை சொல்கிறேன்.

200 மிலி நல்லெண்ணெயை எடுத்து அடுப்பில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் போது 50 கிராம் சீரகத்தை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து ஆர வைத்து, அதன் பிறகு வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். சீரகத்தைலம் தயார்.

வாரம் ஒரு முறை கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மூல வியாதி வருவதை தடுக்கும் அற்புத உணவு.

உடல் உழைப்பு அதிகமில்லாத காரணத்தால் உடலில் கொழுப்பும் அதிகம் தேங்கி விடும். அவ்வாறு கொழுப்பு அதிகம் உடலில் தேங்க ஆரம்பித்தால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை தொடர்ந்து ஹார்ட் அட்டாக் வந்து விடும். உடற்சூடு அதிகமானால் வயிறு கெட்டு, கழுத்து வலி வர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையெல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உடலில் சேரும் கொழுப்பு எப்படி இருதய நோயினை உண்டாக்கும் என்பதையும், கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையும் நாளைய பதிவில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.