இனி வீடுகளின் வாசல்கள் பற்றிய பலன்களைக் காணலாம்.
கிழக்கு தலைவாசல் :
கிழக்கு திசையிலிருந்து வரும் காற்று, மழை, வெப்பம் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இத்திசைக்கு உரியவர் இந்திரன் என்றுச் சொல்லுவார்கள். இவர் தேவர்களுக்கு அரசர். இவர் அதிக செல்வமும், கல்வி, தொழில், அமைதி போன்றவற்றை அளிப்பவர் என்றுச் சொல்லுவார்கள். சுகபோகமான, சந்தோஷமான வாழ்க்கை வாழ நல்ல பலன்களைத் தர வல்லது இந்த கிழக்குத் திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள். அதிகமான சுப பலன்களைத் தரக்கூடிய வலிமை வாய்ந்த கிழக்குத் திசை வீடுகள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.
மேற்கு தலைவாசல :
மழைக்கு அதிபதியான வருண பகவானின் திசை என்றும், மனித குலத்தை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் தேவையான மழை பொழிபவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். மேற்குத் திசையில் தலைவாசல் வைத்திருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் விவசாயத்தில் செழிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். மேலும் நல்ல திடமான மனது, தன்மானம், ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி போன்றவற்றில் ஆர்வமுடையவர்களாய் இருப்பார்கள். அது மட்டுமின்றி மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று வெப்பமுடையதாய் இருக்கும். சூடு அதிகமானால், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் உருவாகும். இவ்வகை வீடுகளில் வசிப்போய் சூடு சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படுவார்கள் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
நாளை மற்ற வாசல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
ஊட்டியில் உள்ள சொத்துக்களை வாங்க விரும்புவோர் கவனத்திற்கு
ஊட்டியில் மிக நல்ல பங்களாக்களும், டீ எஸ்டேட்டுகளும்,நல்ல வருமானம் தரும் காட்டேஜ்ஜுகள், ஹோட்டல்களும் விற்பனைக்கு எங்களிடம் கிளையண்டுகள் கொடுத்திருக்கின்றார்கள்.
எந்த சொத்திலும் எந்த விதமான வில்லங்கங்களும் கிடையாது. மார்கெட்டு விலைக்கு ஏற்ப மிக நல்ல விலையுடன், உடனடிக் கிரயத்திற்கு தயாராய் இருக்கின்றன. இச்சொத்தை பார்வையிட விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தர ஆர்வமாயிருக்கின்றோம்.
10 ஏக்கரிலிருந்து 3000 ஏக்கர் வரையிலான டீ எஸ்டேட்டுகள், மிக நல்ல வருமானம் தரக்கூடிய ஹோட்டல்கள், காட்டேஜ்ஜுகள் இருக்கின்றன. தனி பங்களாக்களும் எங்களிடம் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்க.
மேற்படிச் சொத்துக்களை பார்வையிட விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன், தங்களுக்குத் தேவையான அல்லது விரும்பக்கூடிய சொத்துக்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். போன் மூலமும் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண் : + 91 422 4275976
மிக்க அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்சூன் பிரிக்ஸ் / ஃபார்சூச் எண்டர்பிரசைசஸ் / ஃபெமொ மாடலிங் கம்பெனி
எங்களது நிறுவன இணையதளங்கள்
===================================