குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, January 11, 2011

கோவை ஹோப் காலேஜ் சாலையில்....

காலையில் கையின் மேற்புறம் காயமாகி விட்டது. அதன் மீது மருந்து தடவி இருந்தேன். ஒரே வலி. ரத்தமும், மருந்தும் காய்ந்து போய் இருந்தது.

எனது வண்டியில் இருக்கும் சைலென்சர் வெயிட் அதிகமாதலால் அடிக்கடி கழண்டு விடும். அதற்கொரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் அல்லாடிய போது, எனது நண்பர் பிஎஸ் ஆரின் அறிவுறுத்தலின் படி, மாலையில் ஹோப் காலேஜ் மெக்கானிக்கிடம் சென்றேன்.

அவர் ஒவ்வொரு பாகமாய் கழட்டி எடுத்து, கிட்டத்தட்ட அரைமணி நேரமாய் உட்கார்ந்து ஏதேதோ கணக்குகளைப் போட்டு, ஒரு வழியாய் ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி வந்து, சைலென்சரைப் பொறுத்தினார்.

நான் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சாலை வழியே சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர் என் அருகில் வந்தார். என் முகத்தினைப் பார்த்தார். கையைப் பிடித்து ”காயமாயிடுச்சா?” என்றார். நான் ஆம் என்பது போல தலையை ஆட்டினேன். காயத்தைச் சுற்றி விரல்களால் தடவி விட்டார். “காயம் சீக்கிரம் ஆறிடும்” என்றார். ”எல்லாம் சரியாகி விடும்” என்றார் தொடர்ந்து. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”மட்டன், சிக்கன் சாப்பிடாதீர்கள்” என்றார்.

நான் இவை இரண்டுமே சாப்பிடுவதே இல்லை. சிரித்தார் சென்று விட்டார்.

”யார் அவர்?” என்று கேட்டார் மெக்கானிக். 

“தெரியவில்லை” என்றேன் குழப்பமாய்.

யார் அவர்? ஏன் என் அருகில் வந்தார். ஏன் அப்படி நடந்து கொண்டார்? ஒன்றுமே தெரியவில்லை.0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.