குரு வாழ்க ! குருவே துணை !!

Property Legal Consultation||Construction||Buy-Sale Property|| Phone : 9600577755 || Email :covaimthangavel@gmail.com

Click Banner to see Properties for Sale

Sunday, January 30, 2011

யுத்தம் செய் திரைப்படமும் சாரு (நிவேதிதாவும்)சென்னையில் இருந்து வந்த நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்குள் நுழைந்த போது நிவேதிதா அழுது கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது, ஏதோ ஒரு குறும்புக்காக அம்மா பேசி விட்டார் என்பதால் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் நிவேதிதா. வழக்கம் போல மனைவிக்கு சில அர்ச்சனைகளை டீசண்டாக தூவினேன். கூட நண்பரும் அல்லவா இருக்கிறார்? சிறிது நேரம் கழித்து நிவேதிதா சாக்லேட் பாரை எடுத்துக் கொண்டு வர நான் மனைவியைப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்று சமையல் அறைக்குள் சென்று விட்டார் மனைவி.

நண்பர் சென்றதும், சாக்லேட் ஏன் கொடுத்தாய் என்று கேட்க, “ நான் அழுகையை நிறுத்தனும் என்றால் சாக்லேட் சாப்பிட்டாத்தான் அதுவா நிற்கும்” என்று நிவேதிதா சொன்னதாகவும், பேசிக் கொண்டிருப்பதால் அவளால் கவனம் சிதறி விடும் என்பதாலும் சாக்லேட்டைக் கொடுத்ததாகவும் சொன்னார் மனைவி.

இன்று காலையில், யுத்தம் செய் திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் ஆடிக் கொண்டிருந்த நிவேதிதாவைத்தான் நீங்கள் கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கின்றீர்கள்.

சாரு நிவேதிதா நடித்த காட்சியை மிஷ்கின் பாடலில் இருந்து நீக்கி விட்டார் என்று கேள்விப்பட்டேன். அதைக் கேட்டு வருத்தத்தில் இருக்கும் சாருவின் ரசிகப் பெருமக்களுக்கு இருக்கட்டுமே என்று இவ்வீடியோவை அளிக்கிறேன்.

1 comments:

Unknown said...

தங்களின் பதிவை இன்று தான் படிகின்றேன்..!
என்ன அம்முகுட்டி....
கலக்கறீங்க ! வாழ்த்துக்கள் !

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.