குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, January 14, 2011

வீடு பற்றிய தொடர் - 3 (அனைவருக்குமானது)

வடக்குத் திசையில் தலைவாயில் கொண்ட வீடுகள் பற்றிப் பார்ப்போம். வடக்குத் திசைக்கு அதிபதியானவர் குபேரன். இவனின் தேகம் பலவீனமானது. ஆகையால் உள்ளமும் சாந்தமானது. ஆனால் செல்வத்தில் பெரியவன். வியாபாரம் செய்வதில் இவனுக்கு நிகர் எவருமில்லை. திசைக்கு அதிபதியைப் பற்றிப் பார்த்தோம். இனி இந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று பார்க்கலாம். 

மிகவும் பண ஆசை பிடித்தவர்களாய் இருப்பார்கள். வடக்கு காற்றில் ஈரமும், பிசுபிசுப்பும் இருப்பதால் சளிக்காய்ச்சல் நோயால் அவதிப்படுவார்கள். இவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வீட்டிலுள்ளவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய விரும்பமாட்டார்கள்.

வடகிழக்கு திசைக்கு ஈசானிய மூலை என்றுச் சொல்லுவார்கள். இந்தத் திசைக்கு அதிபதி ஈசுவரன். இத்திசையில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடம் அடிக்கும் பாக்கியம் உண்டு. மிகவும் கோபமானவர்களாகவும், எவரையும் எளிதில் நம்பாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக வழியில் ஈடுபடுவார்கள். கல்வியில் சிறந்தவராய் இருப்பார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள்.

இனி ஃபார்ச்சூன் பிரிக்சின் மிக முக்கியமான சர்வீஸ் ஒன்றினைப் பார்க்கலாம். வெளி நாடுகளில் வசிக்கும் பலருக்கு இந்தியாவில் வீடோ அல்லது வேறு சொத்துக்களோ இருக்கும். இச்சொத்துக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எவராவது அத்துமீறி சொத்தினை ஆக்கிரமித்து விடுவர். ஆக்கிரமிப்பினை அகற்ற பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். காலமும், பணமும் விரயமாவதுடன், பெரும் வேதனையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி சொத்துக்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தங்களது நேரடிப்பார்வையில் கொண்டு வந்து அதை மெயிண்டெய்ன் செய்து வருகிறது. தற்போது கோவையிலும், திருப்பூரிலும் மட்டும் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேவையின் முக்கியமான சில அம்சங்களைக் கீழே பார்க்கலாம்.

1) வீடு என்றால் வாடகைக்கு விட்டு மாதா மாதம் பணம் வசூல் செய்து, சொத்தின் உரிமையாளரின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீதை ஆன்லைனில் அப்டே ட் செய்கிறோம்.


2) அட்வான்ஸ் தொகை முழுவதையும் அவ்வாறே செய்கிறோம்


3) வீட்டுக்கு பெயிண்ட் மற்றும் இதர மராமத்து வேலை, தோட்ட வேலை போன்றவற்றையும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களை வைத்து செய்கிறோம்.


4) பிற வகைச் சொத்துக்களையும் விவசாய பூமியென்றால் அதை வேலியிட்டு, தகுந்த பயிர் செய்ய குத்தகைதாரரை ஒப்பந்தம் செய்து, அதன் பலனையும் வருடம் தோறும் உரிமையாளருக்கு பெற்றுத் தருகிறோம்.


5) வெறும் இடமென்றால் வேலியிட்டு அதை பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்.


6) வரி மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்தி அதை ஆன்லைனிலே உரிமையாளர் மட்டும் பார்க்கும் படியும் செய்கிறோம்.


7) மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சர்வீஸ்களையும் வழங்கி வருகிறோம். 

இதனை ப்ராபர்ட்டி மெயிண்டனன்ஸ் என்று நாங்கள் அழைக்கிறோம். இது பற்றிய இதர விபரங்களை எங்களது நிறுவன இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படிச் சேவைக்கு வருடம் தோறும் ஒரு சிறிய கட்டணத்தை சர்வீஸ் சார்ஜாக வசூல் செய்கிறோம். மேலே பட்டியலிடப்பட்ட சர்வீஸ் தவிர வேறு எந்த சர்வீஸ் என்றாலும், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்
தொடர்புக்கு : +91 422 4275976

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.