குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, September 17, 2022

நீதி கொல்லப்பட்ட நாள் 15.09.2022

நீதி கொல்லப்பட்ட  நாள் 15.09.2022

பார்ப்பனியத்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொல்லப்பட்டது. 

சுயநலத்தால் கொல்லப்பட்டது. 

அதிகாரத்தால் கொல்லப்பட்டது. 

அடக்குமுறையால் கொல்லப்பட்டது. 

தனி சாதியத்தால் கொல்லப்பட்டது. 

வன்மத்தால் கொல்லப்பட்டது. 

இந்தியாவின் ஆன்மா கொல்லப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டு நீதி சாதியின் காலில் வீழ்த்தப்பட்டிருக்கிறது.

நீதிமான்கள் தூங்குகின்றார்கள். சாதியின் முன்னாலே மெய், வாய் பொத்தி கூழைக்கும்பிடு போடுகிறார்கள்.

நீதி தேவதை கற்பழிக்கப்பட்டிருக்கிறாள்.

இந்தியர்களான நாம் வேடிக்கை பார்ப்போம். இனியும் வேடிக்கைப் பார்ப்போம்.  

ஆட்டு மந்தைகளான நாம் வேடிக்கைப் பார்ப்போம். 

பார்ப்பனர்களின் வெவ்வேறு ஜாதிகள் - மலைக்க வைக்கும் ஊடுறுவல்

இந்திய நாகரீகத்தை ஆரியர் நாகரீகமாக மாற்ற இதுவரை பார்ப்பனர்களால் கையாளப்படும் வழிகளாக தேவ நேயப்பாவாணார் எனும் தமிழறிஞர் தான் எழுதிய பண்டைத் தமிழர் நாகரீகம் எனும் நூலில் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

ஒரு நாட்டை போரில் வென்று ஆக்கிரமிப்பது வேறு, படிக்காதவர்கள் நிறைந்த இந்தியாவில், கல்வி அறிவு பெற்ற சமூகமாக இருந்த பார்ப்பனர்கள் தங்கள் சதியால் இந்திய நாகரீகத்தை அவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் என்று நிறுவ இன்றும் துடிப்பாக துல்லியமாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.
 • பழந்தமிழ் நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும்
 • பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல்
 • தமிழ் நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதகாலத்தினின்றும் தொடங்கல்
 • தென்னாட்டு பழங்குடி மக்களாகிய தமிழரை வந்தேறிகளாகவும் கலவையினமாகவுங் காட்டல்
 • குமரிக்கண்ட இடப்பெயர்களையும் தெய்வப்பெயர்களையும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டல்
 • கட்டுக்கதைகளையும் ஆரியச் சொற்களையும் புகுத்தி, இருபெருந்தமிழ்ச் சமயங்களாகிய சிவ நெறியையும், திருமால் நெறியையும் ஆரிய வண்ணமாக்கலும், தமிழைக் கோயில் வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளலும்
 • மூவேந்தர் பேதமையால் ஆரியம் வேரூன்றிய கடைக்கழகக் கால நூல்களினின்று ஆரியச் சார்பான சான்று காட்டல்
 • தமிழ் வடமொழிக்கிளையென்று அயலார் கருதுமாறு, அடிப்படைத் தமிழ்ச் சொற்கட்கெல்லாம் வலிந்தும் நலிந்தும் வடசொற் மூலங்காட்டல்
 • வடமொழி தேவமொழியென்றும், பிராமணர் நிலத்தேஅர் (பூசுரர்) என்றும், வேதக்கால ஆரியப் பூசாரியால் புகுத்தப்பட்ட ஏமாற்றுக் கருத்துகளையும், பிறப்புத் தொடர்பான குலப்பிரிவினையையும் தொடர்ந்து போற்றல்
 • சமயச்சார்பான சொற்பொழிவுகளாகாற் பொதுமக்களை அறியாமையில் அமிழ்த்துதல்
 • உண்மை கூறும் தமிழ்ப் புலவர்க்கு அலுவற் பதவியில்லாதவாறு செய்தல்
இவ்வாறு 1966 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதுகிறார். இந்தக் கால கட்டத்தில் நான் பிறக்கவே இல்லை. பார்ப்பன ஊடுறுவல்கள் இன்னும் இருக்கின்றன. வரும் காலங்களில் எழுதுகிறேன்.

ஆரியர்களின் ஊடுறுவல்கள் பல தளங்களில் கிடைத்தவை தொகுப்பாக:-  

வேத ஆரிய பிராமணர்களின் வேர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன். சரஸ்வதி நதிக்கு அருகில் தங்கியிருந்ததாகக் கூறப்பட்டதில் வரலாற்று  உண்மை என்னவென்றால் சரஸ்வதி நதி என்பது  ப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு அருகில் உள்ள ஹரஹ்வைதி நதி ஆகும். 

சரஸ்வதி பகுதியில் இருந்து கங்கை பகுதிக்கு வந்த பிராமணர்கள் தங்களை கௌட சரஸ்வத பிராமணர்கள் என்று அழைத்தனர்.

நாகர் பிராமணர்கள் முதன்முதலில் குஜராத்துக்கு கி.பி. 404 ஆண்டில் குடியேறினர். கிரீஸ், மாசிடோனியா, சிரியா அல்லது இந்த இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் நாகர் பிராமணர்கள் என  வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

இந்திய அறிஞர் ராமகிருஷ்ண கோபால் பண்டார்கர் சித்பவான்களின் பெயர்களுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள புவியியல் தளங்களுக்கும் இடையே ஒற்றுமையைக் காட்டியுள்ளார்.

கி.பி 1120 இல் அரேபியர்களுடன் கூட்டு சேர்ந்த பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார்.

1311 இல் மாலிக் காஃபூர் பாண்டிய பேரரசின் மீது போர் தொடுத்த பிறகு தமிழர்கள் அரசு முடிவுக்கு வந்தது. தாக்குதலுக்குப் பிறகு, பெரும்பாலான தமிழ் பிராமணர்கள் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.  கி.பி 1529 இல் மதுரை நாயக்கர் ஆட்சி நிறுவப்பட்டபோது மகாராஷ்டிராவிலிருந்து ஒரு புதிய பிராமணர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

சர் சிபி. ராமசாமி ஐயர் தனது வாழ்க்கை வரலாற்றில் தனது முன்னோர்கள் மகாராஷ்டிராவில் உள்ள தேஷ் பகுதியில் இருந்து குடிபெயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

நம்பூதிரி பிராமணர்கள் உத்தரபாஞ்சால நாட்டின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து அதாவது பண்டைய நேபாளத்திலிருந்து கர்நாடகாவிற்கு கடம்ப மன்னன் மயூரவர்மாவின் ஆட்சியின் போது கி.பி 345 இல் குடிபெயர்ந்தனர்.

கேரளா துளு-நேபாளத் தாய்வழி சாமந்த ஆட்சியாளர்கள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானகத்தால் வழங்கப்பட்டது. இதனால் கி.பி.1335ல் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் ஆதரவைப் பெற்ற நேபாள பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் கேரளா வந்தது.

நம்பூதிரிகளால் எழுதப்பட்ட கேரளோல்பத்தி மற்றும் கேரள மகாத்மியம் போன்ற அனைத்து நூல்களும் பண்டைய நேபாளத்தின் தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்தில் இருந்துள்ள தங்கள் தோற்றத்தைக் குறிப்பிடுகின்றன.

கிபி 1311 இல் பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மாலிக் காஃபூர்தான் துளு-நேபாள மக்களுக்கு அதாவது நம்பூதிரி நாயர் மற்றும் சாமந்தா ஆட்சியாளர்களுக்கு கேரளாவின் மேலாதிக்கத்தை வழங்கினார்.

பழைய செப்பேடுகளில் அக்ரஹாரம் என்பது ஊரிலிருந்து ஒதுக்குபுறமாக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகவே பதியப்பட்டிருக்கிறது. நாளடைவில் கோவிலை உருவாக்கி, பூசையை உருவாக்கி பாமர மக்களிடம் இல்லாத பொய்களையும், புரட்டுகளையும் புராணங்கள், வேதங்கள் என்றுச் சொல்லி ஏமாற்றி ஊரின் நடுவில் அமர்ந்து கொண்டனர்.

அதுமட்டுமல்ல, இந்தியா முழுமையும் நம்பூதிரி, ஐயர், ஐயங்கார், முகர்ஜி, பேனர்ஜி, சாட்டர்ஜி, சித்பவன் (ஆர்.எஸ்.எஸ் தலைமை வகிக்கும் பிராமணர்கள்), பண்டிட், பட்டேல், மிஸ்ரா என்ற பெயர்களில் தங்களை வேறு இனமாக காட்டிக்கொண்டு, இந்தியா முழுமையும் ஊடுறுவி இருக்கிறார்கள் என்று தொல் திருமாவளவன் பேசி இருப்பதைப் பாருங்கள்.


இந்தியாவை இவர்களிடமிருந்து மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானதா என்றால் எளிதுதான். 

தமிழர்களுக்கு பார்ப்பனிய நலனுக்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போல ஒரு அமைப்பும் இல்லை. 

பார்ப்பனியம் எப்படி ஒரு அமைப்பாக உலகெங்கும் சாதி வன்மத்தை இன்னும் முனை கருகாமல் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதற்கு 2002ம் ஆண்டில் வெளியான “The Foreign Exchange of Hate - IRDF and the American Funding of Hate" என்ற புத்தகத்தில் இருந்து ஒரு விளக்கப்படம் கீழே. 

காலத்தின் கட்டாயமாக அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு அமைப்பினை பார்ப்பன சதிகளுக்கு உட்படாமல் உருவாக்கிட வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் வாரிசுகள் படிப்பின்றி, கல்வியின்றி பார்ப்பன அடிமைகளாக கிடக்க நேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கும் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும். கோவில்களுக்குள் பூசை செய்தல் வேண்டும்.

மேற்கண்ட செய்திகள் எல்லாம் காலம் காலமாக பார்ப்பனியத்துக்கு, அதன் சாதிய வன்மத்துக்கு எதிராக மானுடத்தின் மீது அன்பு கொண்டவர்களால் எழுதப்பட்டது.  இது எதுவும் என் கருத்து அல்ல. நான் படித்தவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மை எதுவெனப் புரிந்து கொள்ள முயலுங்கள். 

தமிழ் பரப்பும் பெரியார் - மோடி - டாக்டர் கே.பி.இராமலிங்கம்

போற இடம் தெரியாமல், வாழ வழி தெரியாமல், தமிழ மக்களாலும், அரசியலிலும் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒருவர் கேபி ராமலிங்கம்.

பார்ப்பனர்களுக்கு ஊழியம் செய்வதற்காக கட்சி என்ற பெயரில் பிற இனத்தவரை அடிமையாக்கி, அவ்வப்போது பதவி கொடுத்து வரும் பி.ஜே.பி கட்சியில் இணைந்து ஏதோ ஒரு பதவியில் இருக்கிறார். 

ஒவ்வொரு மனிதரின் கடைசி புகலிடம் சுடுகாடு. வேற வழியே இல்லை.

தினமணியில் ஒரு கட்டுரை. தலைப்பைப் படித்ததும் ஆர்வமாகப் பார்த்தால், கேபி ராமலிங்கம் அவர்கள் பிரதமர் மோடியைச் சொரிந்து விடும் கட்டுரையைக் கண்டேன்.

பரிதாபம். வேறு வழி இல்லை போலும். 

தாயையும், தமிழையும் பழிப்போர் அற்றுப் போவர் என்பதை மறந்து போனார் போலும். இவரின் எதிர்காலமும், வாரிசுகளையும் நினைக்கையில் பரிதாபம்.

பசி காதடைத்து இருக்குமோ?

இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கார் என்றார். இன்ஸ்டண்டாக ஒரு எம்.பி பதவி பார்சல் ஆனது.

அதைப் போல பிரதமர் மோடியை பெரியார் என்றால் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார் போல. 

பெரியார் என்றால் ஒன்றும் கிடைக்காது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

கேபிராமலிங்கத்துக்கு ஒரு பழமொழி சொல்ல வேண்டும்.

நக்குகிற நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான். 

புரிந்தால் சரி.

இனி தினமணியில் வெளியான தமிழ் பரப்பும் பெரியாரின் அருமை பெருமைகளைப் படியுங்கள். சும்மா அள்ளும். பாவம் பிரதமர் மோடி அவர்கள். இவர்கள் சொரியும் சொரிக்கு எந்தப் பதவியைக் கொடுக்க வேண்டுமென குழம்பி நிற்கப் போகிறார்.

இதோ கேபி.ராமலிங்கத்தின் கட்டுரையில் ஒரு சொரி சொட்டு.

22 இந்திய மொழிகளில் தமிழும் இருப்பதை ஏட்டளவிலிருந்து நாட்டு மக்களிடம் கொண்டு சோ்த்திருப்பது மட்டுமல்லாமல், தமிழுக்கு உலக அரங்கில் ஏற்றம் தந்து புகழ்உச்சியில் மகுடம் சூட்டி மகிழ்பவா் நம் பிரதமா் மோடி!

தமிழுக்குப் பெருமைசோ்த்த அப்பெருமகனாரின் பிறந்த தினம் செப்டம்பா் 17. அவா் பல்லாண்டு வாழ்க என நாம் வாழ்த்தும்போது தமிழன்னையும் ‘தமிழ் வளா்க்கும் பெரியாா் மோடி’ வாழ்க என வாழ்த்துவாள்.

இத்தனை நாளாக தமிழ் உலகம் அறிந்திருந்திராத அரும் பெரும் உண்மையை, தமிழக இலக்கியவியாதிகள் கவனித்து, இனி நடக்கவிருக்கும் உலகத்திலே உயர்வான தமிழர்களின் புகழ் பரப்பும் ஒரே விருதான, ‘விஷ்ணுபுரம் விருது’ விழாவிலே நம் தமிழ் பெரியார் மோடியை அழைத்து வந்து விருது வழங்கும்படி செய்தல் வேண்டும்.

இதை ஒவ்வொரு தமிழரும் கடமையாகச் செய்தல் அவசியம். இல்லையென்றால் தமிழ் உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.

சொரிந்து விடுவதால் எம்.பி பதவி கிடைக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். சும்மா கிடைக்குமா பதவி?

கட்டுரையைக் கீழே இருக்கும் இணைப்பில் படியுங்கள்.மனைவியுடன் உறவு குற்றச் செயல்

ஆண்கள் உலகம் சந்திந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுள் பெரிது பாலியல் குற்றங்கள். வேறு வேலையே இல்லாமல் கையில் குஞ்சாமணியைப் பிடித்துக் கொண்டு, கண்களில் தென்படும் பெண்களை எல்லாம் கற்பழிக்கத் திரிவது போலவே ஆண்களால் நடத்தப்படும் ஊடகங்கள் காம வெறிபிடித்தவர்கள் ஆண்கள் என்பது போல செய்திகள் வெளியிட்டு வருவது சாபக்கேடு. 

ஆண்களுக்கு ஆண்களே விரோதி.

சில ஆண்கள் பெண்ணீயம் பேசுவார்கள். பெண்ணீயம் பேசும் ஆண் கொக்கி. சிக்கும் சிலைகளைச் சிதைப்பது நோக்கம். 

விஷ்ணுபுரம் விருது புகழ் இலக்கியவாதிகளின் கொக்கி போல.

பெண்கள் அழகு சாதனப் பொருட்களின் 2021 ஆம் ஆண்டின் மொத்த மதிப்பு 288 அமெரிக்க பில்லியன் டாலர்கள். உடைகள் வேறு கணக்கு. மயக்கம் வரும்.

மில்லியன் டாலர் கணக்கில் சுனோ, பவுடர் இத்தியாதிகளை அப்பிக் கொண்டிருக்கும் பெண்கள், யாருக்காக இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது இந்திய அரசியலமைப்புக்கே வெளிச்சம்.

ஆண்கள் மட்டுமே பெண்களின் மீதான கொடும் செயல்களைச் செய்வதாகச் சொல்கிறார்கள். 

பெண்கள் உத்தமர்களின் உருவமாய் திகழ்கிறார்களாம். நம்பிக் கொள்ள வேண்டும்.

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ஆண்கள் பாலியல் குற்றவாளிகளா? பெண்களா? என்று கேட்டால், அவர் தன் இனத்துக்குத்தான் ஆதரவாக இருப்பார். அவர் ஒரு ஜி.ஆர்.சு.

ஹெலிகாப்டர் வேண்டும், தனி வீடு வேண்டும், லட்சங்களில் சம்பளம் வேண்டும், மாமியார்-மாமனார் இருக்க கூடாது, அக்கா-தங்கை ஆகவே ஆகாது, இப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டு மணாளனைத் தேர்த்தெடுப்பார்கள் பெண்கள்.

கட்டிக்கிட்டு கூட்டிக்குப் போய் பெட்டில் படுக்க வைத்து, பூக்களால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டி, காலையில் ஒருவாட்டி, மாலையில் ஒரு வாட்டி, நடு இரவில் ஒரு வாட்டி என சாமி கும்பிட்டு கண்ணில் இட்டு பயபக்தியுடன் கும்பிடணும் போல. அப்படி கும்பிடுபவன் தன் நல்ல கணவன்.

கல்யாணம் கட்டிக் கிட்டு என்னதான் சுகத்தை ஆண்கள் அடைகிறார்கள்? கடைசி வரை பழிதான் சுமக்கின்றார்கள். 

ஒவ்வொரு மனைவிக்கும் முதல் எதிரி அவரவர் கணவன் மட்டுமே. 

என்னதான் செய்வது ஆண்கள்? சொன்னால் பளிச்சென்று கேட்டு விடுவான்கள் என்பார் என் தோழி.

ஆண்கள் தங்களின் இனத்துக்கு செய்யும் உபகாரமாக ஒரு வேண்டுகோள்.

இனிமேல் பெண்களைக் கவனிக்காதீர்கள், பார்க்காதீர்கள், பாராட்டாதீர்கள். நடிகைகளை நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்க்காதீர்கள். 

ஒரு மாதம் விரதம் இருந்துதான் பாருங்களேன். அட்லீஸ்ட் ஒரு வாரமாவது இருங்களேன் பார்ப்போம்.

என்ன கெட்டுப் போகப் போவுது? 

ஆண்களுக்கு கற்பு இல்லையா? என்ன கற்பா? அப்படின்னா என்னாப்பான்னு பிஜேபி குஷ்பூ கேட்பார். 

பீதி உண்டாகிறது டிவிக்காரனுவ குரைக்க ஆரம்பிப்பானுங்களே என.

கீழே இருக்கும் செய்தியைப் படித்து விட்டு தலையைப் பிய்த்துக் கொள்ளுங்கள். 

செய்தி: தினமணி 17.09.2022 கோவைப் பதிப்பு

மனைவியைக் கட்டாயப்படுத்தினால் குற்றம், கணவனைக் கட்டாயப்படுத்தினால் குற்றமில்லையாம்.  இதையெல்லாம் யார் கேட்பது?

நம்ம பிரபல நீதிபதி மாரிதாஸ் சவுக்கு சங்கர் புகழ் - ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களிடம் வழக்குப் போட வேண்டும். 

Thursday, September 15, 2022

தன் கருத்தை எதிர்ப்பவர்களை தேசத்துரோகிகள் என்கிறாரா பிரதமர் மோடி?

இந்தியா ஜனநாயக நாடு என்பதை  பதவிக்கு வந்த பிறகு பலர் மறந்து விடுகிறார்கள். எத்தனையோ பதவிகளையும், பதவிக்கு வந்தவர்களையும் இந்தியா கண்டிருக்கிறது.

எல்லோரும் எல்லா நேரமும் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அகங்காரம் அதிகமாகும் போது ஆணவம் தலை தூக்கும். அப்போது அழிவின் துவக்கம் ஆரம்பித்து விடும்.

ஒரு கூட்டம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவை தன் வசப்படுத்தி ஆண்டு வந்தது நிலை, தற்போது மாறிக் கொண்டிருக்கிறது என மக்களை மதத்தின் பேரால் சண்டை மூட்டச் செய்து வருகிறது. துரோகிகள் அவர்களுடன் பதவிக்காக ஆடு போல சேர்ந்து கொள்கிறார்கள் என்று பல ஜன நாயகவாதிகள் எழுதி வருகின்றார்கள்.

பிரதமர் மோடி அவர்கள், தான் சொல்லும் கருத்துக்கு எதிர்கருத்துச் சொல்பவர்களை தேசத்துரோகி என்றுச் சொல்கிறார் என ஒரு பத்திரிக்கை தலையங்கம் எழுதி இருக்கிறது. இதோ அந்தச் செய்தி. 

எதிர்கருத்துச் சொல்வது பார்லிமெண்ட் ஜன நாயகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா எவருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லை என்பதை பல அரசியல்வியாதிகள் மறந்து போய் விடுகின்றார்கள்.

சுப்ரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் செக்யூலர் வார்த்தையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என வழக்குப் போட்டிருக்கிறார். இதைப் போன்ற எண்ணற்ற வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அவாக்கள் வம்சம் தொடுத்திருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பின் மீது பார்ப்பனர்கள் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது செய்தி.

இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு - அமெரிக்க டாலருக்கு எதிராக குறைந்து கொண்டே போகிறது.  முன்பு இப்போதைய பிரதமர் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போவது ஊழல் என்று குற்றம் சாட்டினார். வீடியோ கீழே இருக்கிறது. இப்போது யார் ஊழல் செய்கிறார்கள் என்று அவர் தான் சொல்ல வேண்டும்.


இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது காங்கிரஸ் கட்சியின் ஊழல் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ( நன்றி )

அன்னியச் செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் நிதியமைச்சர் கோபமாக கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்கிறார் பிரபல ஆலோசகர் ஒருவர்.

இதோ அந்தத் தலையங்கம். காலம் எல்லாவற்றுக்கும் ஒரு பதில் வைத்திருக்கும். பார்க்கலாம் அதர்மமா? தர்மமா? என்று.


எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில் சமீபகாலமாக அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள் என்கிறது அந்தத் தலையங்கத்தின் அடுத்த பகுதி.

நன்றி : சரஸ் சாரல் பத்திரிக்கை - 01.09.2022 இதழ்

Monday, September 12, 2022

நிலம் (101) - நில விற்பனையில் அதிரடிக்கும் புதுவித மோசடி

நிலம் தொடரின் 101 வது பகுதி எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நான் எழுதிய பதிவுகள் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். எனது 20 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன், தற்போது நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கின்றார்கள். 

நேரமும், சூழலும் அமைந்தால் ஒருவரை அழித்துதான் ஆக வேண்டுமென்றால், மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு (அப்படி ஒன்று இருக்கிறதா?) மனம் கூசாமல் அழிக்கும் செயலைச் செய்கிறார்கள்.

இன்ஸ்டண்ட் பணம், மாயாஜாலமாக வந்து விடாதா என்று பரபரக்கின்றார்கள். 

பணம் தகுதி உடையவர்களிடம் வந்து சேரும். அந்தத் தகுதியை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை? இந்த உலகம் அதைச் சொல்லித் தருவதும் இல்லை.

உடனே ஐ.டி, இஞ்சினியர், டாக்டர், படிப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். படிப்பு என்பது ஒரு தகுதி. அவ்வளவுதான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 

அனுபவம் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. இரண்டுக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறது. படிப்பறிவு பட்டறிவாக மாற வேண்டும். 

வேலைக்குச் செல்வது, செக்குமாடு போல குரலுக்கு அடிபணிந்து வேலை செய்வது என்பது பாதுகாப்பான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதுவல்ல வாழ்க்கை என்பது ரிட்டயர்ட் ஆன பிறகு தான், தான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது எனத் தோன்றும்.

கார், வீடு, பணம் எல்லாம் இருக்கும். ஆனால் வாழ்க்கை ஓடிப்போயிருக்கும். கண் முன்னால் நோயும், மரணமும் நின்று கொண்டிருக்கும். 

வேதாந்தம் பேசாதே, மாதச் சம்பளம் தான் பாதுகாப்பான வாழ்க்கை என நினைப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது. 

விசித்திரமான வாழ்க்கையில் நாம் எவரும் நம் வாழ்க்கையை வாழவே இல்லை என்பது சாபக்கேடு. அதை உணர்ந்து கொள்ளவே முடியாத அறிவுதான் நாகரீகம் என்பது அதை விடக் கொடுமை.

இனி அதிரடிக்கும் புதுவித மோசடி என்னவென்று பார்க்கலாம்.

சென்னையில் இருக்கும் ஒரு வாடிக்கையாளார் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு விலை பேசி, அட்வான்ஸ் கொடுத்து விட்டு, பேப்பர்களை வாங்கி என்னிடம் லீகலுக்குக் கொடுத்தார். நானும் லீகலுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று, ஆவணங்கள் ஆய்வு வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் நில உரிமையாளார் அட்வான்ஸ் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நில உரிமையாளரிடம் கையொப்பம் பெறச் சென்றேன். 

அவர் நான் கொடுத்த பேப்பரில், என்ன எழுதி இருக்கிறது என்றுப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டார்.  உள்ளே அலாரம் அடித்தது. ஏதோ சரியில்லையே எனத் தோன்றியது.

வாடிக்கையாளருக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கலாம். எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாமென்று நினைத்தேன்.

அடுத்த ஒரு மாதத்தில் கிரையப்பத்திரம் தயார் செய்து விட்டு, வாடிக்கையாளருக்கு அழைத்தால் கிரையம் நடக்கவில்லை என்றார். 

காரணமென்ன என விசாரித்தால், நில உரிமையாளரின் அம்மா, நிலத்தை விற்க வேண்டாமென்றுச் சொல்லி விட்டதால், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தருவதாகச் சொல்லி விட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார். அம்மா சூசைடு செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் திரைக்கதை எழுதி இருக்கிறார் நில உரிமையாளர்.

ஆனால் அது காரணம் அல்ல என்று எனக்குத் தெரிந்து விட்டது.

அந்த நில உரிமையாளரின் மொத்தச் சொத்து வரலாறும் என்னிடம் இருந்தது. அதில் ஒரு சொத்து வங்கியில் அடமானக்கடனில் இருந்தது. வங்கியில் நண்பர் மூலமாக விசாரித்தேன். வங்கி மேனேஜர் நில உரிமையாளரை பாராட்டி மகிழ்ந்தார். ஏலம் போக இருந்த சொத்தினை மீட்டு விட்டார் இந்தப் பணத்தை வைத்து. அடுத்தக் கடன் வேறொரு வங்கியில் வைத்து வாங்கிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவார். 

வட்டி இல்லாக் காசு ஆறு மாதத்திற்கு. கொஞ்ச நஞ்ச தொகையில்லை சுமார் இருபது லட்சம். அத்தனையும் அக்கவுண்டில் வாங்கினார். அந்த அக்கவுண்டில் இருந்து  லோன் அக்கவுண்டுக்கு பணம் கட்டி சொத்தினை மீட்டு விட்டார்.

இப்படித்தான் இப்போது பெரும்பாலும் நடக்கிறது. இனி நடையாய் நடந்து  அப்பணத்தை வாங்க வேண்டும். கோர்ட்டில் வழக்குத் தொடுத்தால் என்ன ஆகும் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மொத்தப் பணமும் வருவதற்குள் எல்லாம் செலவாகி இருக்கும். மன உளைச்சல் வேறு.

இப்படி ஒரு பகீர் திட்டத்தை இந்தியாவெங்கும் பலரும் செயல்படுத்தி வருவதாக பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன்.

சொத்தினை விலை பேசி அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்வதற்குள், வேறொரு புரோக்கர் ஒரு ஆளைச் செட் செய்து, அதிக விலைக்கு கேட்பார்கள். அதை நம்பும் நில உரிமையாளர் விலையை அதிகம் சொல்வார். இல்லையென்றால் அட்வான்ஸைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பார். 

ஒரு புரோக்கர் சம்பாதித்து விடக்கூடாதே என்று இன்னொரு புரோக்கர் இந்த தகிடுதத்தைச் செய்வார். இப்படித்தான் பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகாமல் கிடக்கின்றன.

கடன் இருக்கா, சொத்தினை விற்பனை செய்கிறேன் எனப் புரோக்கர்களிடம் சொல்ல வேண்டியது. எவனாவது ஏமாந்தால் அவனிடமிருந்து தொகையைப் பெற்று கடனைக் கட்டி விட்டு, ஒரு சிலர் கம்பி நீட்டி விடுவார்கள். இதில் ஊர் பிரசிடெண்ட், கவுன்சிலர், மாவட்டம், ஒன்றியம், கிளை, வட்டம், யெம்ம்ல்லே, மினிஸ் என்று எவராவது உள்ளே வந்து விட்டால் அதோகதிதான்.

இப்போதெல்லாம் நிலம் வாங்க வரும் ஆள் எப்படி என கணித்து விடுவார்கள். அவர்களுக்கு ஏற்ப ஸ்கெட்ச் தயாராகி விடும். இதுவெல்லாம் அறியாமல் விட்டில் பூச்சிகளாய் விடுவர் ஒரு சிலர்.  இன்னும் ஊட்டியில் நாற்பது இலட்சத்தை அட்வான்ஸாக கொடுத்தவருக்கு கிரையமும் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை, நிலத்தின் உரிமையாளரையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை. நடையாய் நடக்கிறார். முன்பே இது பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன்.

இந்தபதிவினை விழிப்புணர்வுக்காக எழுதி இருக்கிறேன். எவரையும் குறை சொல்லவோ அல்லது குற்றம் சாட்டவோ எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பதிவு செய்திருக்கிறேன். 

சமீபத்தில் கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்தவர் ஒருவர், நான் அதை எழுதிக் கொடுக்கவே இல்லை என வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் பாருங்கள். பணம் கொடுத்த ஆளுக்குத் தூக்கம் வருமா? நினைத்துப் பாருங்கள். இனி வழக்கு, புகார் என்று போனால் எத்தனை வருடமோ? இதில் மற்றுமொரு பிரச்சினை - ரொக்கமாகக் கொடுத்த தொகை என்னவாகும்?

நாமம் தான்.

இனி கவனமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். 

யாரைத்தான் நம்புவதோ? எப்படித்தான் நிலம் வாங்குவதோ? என்று தோன்றும். சின்ன விஷயம் தான். மிகச் சரியாகச் செய்ய வேண்டும். அது என்ன? அது என் தொழில்? அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்?

வாழ்க வளமுடன்...!

எனது “கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகம் டிஜிட்டல் வடிவில் அமேசானில் விற்பனைக்கு இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். நிச்சம் அந்தப் புத்தகம் உங்களுடன், உங்கள் மனதுடன் பேசும் என நம்புகிறேன். 

புத்தகத்தின் விலை ரூ.120/-

படத்தினைக் கிளிக் செய்தால் அமேசான் லிங்க் கிடைக்கும்.

Saturday, September 10, 2022

ஸ்டாலினிசம் (3) - உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே

1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதல் மேயர் சர்.பி.டி.தியாகராசர் வெற்றி பெற்றார். அந்த காலத்தில் நீதிகட்சி ஆட்சியிலிருந்தது. 1920 ஆம் ஆண்டுகளில் தான் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்க் மதிய உணவு அளிக்கப்பட்டது. 

அப்போதைய காலத்தில் அரசாங்கப் பள்ளிக் கூடங்களுக்கு தலையில் குடுமியுடனும், பஞ்சகச்சத்துடன் பள்ளிக்கு மிடுக்காகச் சென்று கொண்டிருந்த பிராமணப் பையன்களுடன், பிராமணர்களால் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களும் பள்ளிக்குச் சென்றனர். இதைக்கண்டு பொறுக்காத ஆட்சியில் அப்போது இருந்த பிராமணர்களும், பிராமண பத்திரிக்கைகளும் அரசில் நிதி இல்லை என்றும், இன்னும் பல்வேறு காரணங்களைச் சொல்லும் 01-04-1925 ஆம் ஆண்டு இந்த மதிய உணவுதிட்டம் நிறுத்தப்பட்டது. 

பிராமணர்களின் நய வஞ்சகத்தால் மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டவுடன் பள்ளிக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வருகை குறைந்தது. 

கல்வி கற்க இப்போது ஒன்றிய பிராமணிய ஜாதி கட்சி கொண்டு வரும் நுழைவுத் தேர்வுகள் இத்தகைய தடைகளே! பிரதமருக்கும், மந்திரிகளுக்கும் நுழைவுத் தேர்வு இல்லை. 

ஆனால் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு. 

ஏன்? ஏன்? 

ஒரே காரணம் பிராமணீயம். அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பிராமணிய அதிகாரிகளும், பி.ஜே.பி மட்டுமே.

அதன் பிறகு பல்வேறு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது நீதிக்கட்சி.

அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற கல்வி வள்ளல், எளிய மனிதர் காமராஜர் அரசு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. தமிழர்களுக்கு கல்வியே உயர்வினைத் தரும் என்று காமராஜர் நம்பினார். 

பஞ்சமும், பட்டினியுமாய் இருந்த இந்தியாவில் கல்வி கற்க வா என்றால் பசியா? கல்வியா என்று பார்க்கும் போது பசியே முன்னிலையில் நிற்கும். மதியம் சோறு போடுகிறோம், பிள்ளைகளைப் படிக்க அனுப்புங்கள் என்று தமிழக மக்களைக் கேட்டார். 

கல்விச்சாலையில் அறிவுப் பசியுடன், வயிற்றுப்பசியும் தீர்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த திராவிட கட்சியின் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவு சத்துள்ளதாக மாற்றப்பட்டது. கலைஞர் ஆட்சியில் இன்னும் கூடுதலாக மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டது.

இந்தியாவில் சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம். ஆனால் தமிழ் நாடு அதற்கு முன்பே கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்க ஆரம்பித்து விட்டது. பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

கொரானாவினால் சுமார் 40 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டதையும், ஒன்றிய அரசின் வரிக்கொள்ளையினாலும், ஒருவர் மட்டுமே உலகப் பணக்காரராய் இருக்க வேண்டுமென்பதற்காக பணிபுரியும் அரசினாலும் மக்கள் படும் துயரங்களைப் பட்டியலிட முடியாது.

பார்ப்பனிய ஜாதி கட்சியின் வரிப்பிடுங்கல் சட்டத்தினால், மக்களிடமிருந்து கட்டாயப்படுத்திப் பிடுங்கப்படும் பணத்தினாலும், உணவுப் பொருள்களின் விலை உயர்வினாலும், வேலை இன்றி தவிப்பதாலும் அவர்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் அளவு குறைந்திருப்பதை திரு.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்துள்ளார்கள். 

ஒன்றிய அரசு மக்களை வறியவர்களாக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி இலவசமே வழங்கக் கூடாது என்கிறது. 

பார்ப்பனிய ஜாதிக் கட்சி உறுப்பினரை வைத்து, இலவசம் எந்த மாநில அரசும் இலவசம் வழங்கக் கூடாது என உத்தரவிடக்கோரி,  உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, வரி செலுத்த மட்டுமே மக்கள் என்கிறது ஒன்றிய அரசு. அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்கிறது.

ஒன்றிய அரசினால் ஏழையாக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள், தற்போது அரசுப் பள்ளிகளில் படிப்பதற்கு வருகின்றார்கள். இந்த நிலையில் சதியால் ஏழைகளாக்கப்பட்ட இந்திய மக்களால் தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தான உணவினை எங்கனம் வழங்க முடியும் என்று மக்களின் வலியை உணர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின்.

மக்களை நேசிக்கும் ஒரு தலைவரால் தான், அவர்களுக்கு உள்ள சிரமம் பற்றி அறியமுடியும். 

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழர்களின் கஜானாவைக் கொள்ளை அடித்த நயவஞ்சக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஐந்து லட்சம் கோடி கடனையும் கருதாது, மக்கள் நலனே முக்கியம் என்ற மனிதாபிமானத்தில் உருவாக்கப்பட்டது தான் காலைச் சிற்றுண்டி உணவு திட்டம்.

விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்கான சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆரோக்கியத்துக்கான புரதச்சத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமினும் தாதுப்பொருட்களும் நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க வேண்டும். உணவிலிருந்து பெறக்கூடிய சத்துக்களில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ‘போலேட்’, ‘பி12’ மிக முக்கியமானவை. இரும்புச்சத்து மற்றும் ‘போலேட்’ உடலுக்கான ரத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு உகந்தது என்கிறது உணவு ஆராய்ச்சி.

இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டசத்து நிலை பற்றி எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10% வரை ரத்தசோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41% பேர் ‘போலேட்’ பற்றாக்குறையும், 7% பேர் ‘பி 12’ பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 

தற்சமயம் ஆரம்பப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும் 12 கிராம் புரதமும் கொடுக்கப்படுகிறது.  வாரத்தில் ஐந்து நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகிறது. முதல் ஐந்து நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார், கறிவேப்பிலை சாதம் வழங்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்கள் சாம்பார் சாதம், சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘மீல் மேக்கர்’ சேர்க்கப்பட்ட சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது.

இது போதாதென்று முதல்வர் நினைக்கிறார். இளம் சிறார்களுக்கு ஊட்டச்சத்து காலையிலேயே கொடுத்தல் அவசியம் என்று தகப்பன் நிலையிலிருந்து சிந்திக்கிறார். சட்டமன்றத்தில் 08.05.2022 அன்று காலை உணவுத் திட்டத்தினை அறிவிக்கிறார்.

அவரின் கடமை இதுவென நினைக்கிறார். திமுகவின் கொள்கையில் கடமை முதலில்.

தமிழகத்தில் மாநில அரசின் முழுமையான நிதியைக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37 ஆயிரத்து 740 மாணவ, மாணவிகளுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 

காலைச் சிற்றுண்டியாக அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாறி மாறி வழங்கப்படவுள்ளன. 

வாரத்தில் குறைந்தது 2 நாள்கள் உள்ளூா் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி தயாா் செய்யப்பட்டு வழங்கப்படும்.

அதுமட்டுமல்ல,  நுண்சத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டவும், மாணவர்களுக்குக் காய்கறி வளர்ப்பதற்குப் பயிற்சி அளிக்கவும், 10,000 பள்ளி வளாகங்களில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார். 

இதன்படி மதிய உணவு வழங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாணாக்கர்களுக்கு காய்கறிகள் வளர்க்கும் பயிற்சியும், அத்துடன் ஊட்டச்சத்துக்கு தேவையான உணவை ஒவ்வொரு பள்ளியும் உற்பத்திச் செய்து கொள்ளும் தன்னிறைவு உணவு உற்பத்தி செய்யும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.

இதுவரை எந்த அரசும் செய்யாத, எதிர்கால இந்தியாவிற்கு ஒப்பற்ற மக்களை ஒப்படைக்கும் கடமையாக இந்தக் காலைச் சிற்றுண்டி உணவு முதலிடம் வகிக்கும்.

தமிழர்களின் குழந்தைகளுக்கு எல்லாமும் கிடைத்து நிறைவு வாழ்க்கை வாழ வேண்டுமென்பது ஸ்டாலினிசம்.

ஸ்டாலினிசம் தமிழர்களின் உயர்வுக்கானது. ஸ்டாலின் எனும் ஒப்பற்ற தலைவரின் மனிதாபிமானத்தின், அற உணர்வின் வெளிப்பாடே ஸ்டாலினிசம்.

காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரையில் வரும் 15-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளாா்

ஸ்டாலினிசத்தின் ஒப்பற்ற திட்டமே சிறார்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம்.

திருக்குரானில் ஹிஜாப் - உச்ச நீதிமன்றத்துக்கு மத விடயங்களில் தலையிட அனுமதி உண்டா? ஓர் பார்வை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் ஆகிய இறைவனை வணங்கி இந்த பதிவைத் தொடங்குகிறேன்.

ஆதம் முதலாய் உலகிற்கு அருளப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக இறைவன், இறைத்தூதர்கள் வழியே மனிதர்களின் வாழ்க்கை ஒழுங்கு நெறிக்கு பல அறிவுரைகளை வழங்கி வந்து இருக்கிறார்.

அந்த வகையில் கி.பி.570 ஆண்டுகளில் முஹம்மது என்று அழைக்கப்படும் ஸல் நபிகள் நாயகத்தின் வழியாக, இறைவனால் வழங்கப்பட்ட ஒப்பற்ற ஒரு மார்க்கத்தின் விளக்கம் தான் திருக்குரான்.

திருக்குரான் நபிகள் வழியாக உலகிற்கு வழங்கப்படும் முன்பு, மக்களின் வாழ்க்கையை படியுங்கள் அன்பர்களே!

உயிரை நடுங்கச் செய்யும் பழக்க வழக்கங்களை வாழ்க்கையாக மக்கள் வாழ்ந்து வந்தனர். விலங்குகளை விட கொடிய, கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். 

 • கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்.
 • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
 • குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்.
 • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்.
 • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்.
 • தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது.
 • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது.
 • ஒரு குலம் மட்டுமே உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் என்றார்கள்.
 • அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழிவெறியில் மயங்கிக் கிடந்தனர்.
 • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.
 • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காமல் விடமாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

கி.பி.570 வருடங்களில் மக்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. இதைக் கண்ட ஸல் - நபிகள் அவர்கள் ஹிரா குகைக்குள் சென்று தனிமையில் இருக்க ஆரம்பித்தார். அந்த நாட்களில் அவர் இறைவனின் தூதராக அறிவுறுத்தப்பட்டு, அவர் மூலம் திருக்குரான் மக்களுக்கு அருளப்பட்டது.

தற்போது உலகில் பெரும்பான்மையான மக்களால் வாழப்படும் மார்க்கமாக இஸ்லாம்  திகழ திருக்குரானின் வசனங்களே ஆதாரமாய் உள்ளது.

சமீபத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றம், இஸ்லாமிய பெண்கள் பள்ளிகளுக்கு வரும் போது ஹிஜாப் அணியக் கூடாது எனத் தடை விதித்தது.  ஏனென்றால் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உபகிளையான பிராமணிய ஜாதிய கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இந்தப் பிரச்சினை உருவாக்கப்பட்டது. 

இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதி கொண்ட அமர்வில் இந்தத் தடை பற்றிய விசாரணை நடக்கிறது. விசாரணையின் போது நீதிபதிகள் சொல்லியதாக பல கருத்துகள் பத்திரிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

வக்கீல் பாட்ஷா என்பவர் குஜாராத் சீக்கிய மதத்தினர் தலைப்பாகை அணிவது போலத்தான், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர் என்று வாதிடும் போது, அதுவும் இதுவும் ஒன்றல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சீக்கியர் மதம் வேறு, இஸ்லாம் மதம் வேறு. சீக்கிய ஆண்கள் தலைப்பாகை அணிவதும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதும் ஒன்றல்லவாம்.

Thanks to : Times of India.

ஹிஜாப் பற்றிய தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்து விட்டது நீதிபதிகளின் கருத்துகள். மை லார்டுகள், கேள்வி கேட்க முடியுமா?   

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மட்டுமே கருவறைக்குள் அர்ச்சனை செய்ய வேண்டும், அது ஆகமம் என்றொரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பதை நினைவில் கொள்க. மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூடுதல் அறிவுறுத்தலும் இருக்கிறது.

சாதிய வன்முறையினை ஊக்குவிக்கும் ஆகமங்கள் உயர்ந்தது என்ற பார்வையில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். இறைவன் முன்னால் மனிதர்களில் வேறுபாடு இருக்க முடியுமா? 

இறைவன் மனிதர்களுக்குள் வேறுபாடு வைத்தா படைத்திருக்கிறான்? இல்லையே? 

தீண்டாமை குற்றம் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்தச் சட்டம் கோவிலின் கருவறைக்குள் செல்லாத ஒன்றா? எழுபது ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

சாதி வெறியர்களிடமிருந்து இன்னும் நடராஜர் கோவிலை மீட்க முடியாமல் உலகிற்கே மறை சொன்ன தமிழர் இனம் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கட்சி மற்றும் மதச்சார்பு கொண்டிருப்பது சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது என்கிறது செய்திகள்.

மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு அனுமதி இல்லையெனில் நீதிமன்றத்துக்கு எந்தச் சட்டத்தின் படி அரசியல் சட்டமைப்பு அதிகாரம் கொடுத்திருக்கிறது என்றும் தெரியவில்லை. 

சிதம்பரம் நடராஜர் கோவிலும் ஆகமும், மதமும் ஒன்றெனில் இஸ்லாம் மதமும், ஹிஜாப்பும் வேறா? 

இஸ்லாம் மத விவகாரத்தில் தலையிட அரசுக்கோ அல்லது  நீதிமன்றத்துக்கோ அனுமதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலும் மதம் தொடர்பானதே அல்லவா? ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான விதிகள் உள்ளனவா என்றும் தெரியவில்லை.

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. திருக்குரானில் ஹிஜாப் பற்றி ஏதும் இறை வசனங்கள் உண்டா?  கேள்விக்கு விடை தேடினேன். 

திருக்குரானில் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறை வசனங்கள் 114 அத்தியாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் 24வது அத்தியாயத்தில் அந் நூர் (அந்த ஒளி) என்ற பகுதியில் 31வது வசனமாக ஹிஜாப் பற்றி இப்படித் தெரிவித்திருக்கிறார் அல்லாஹ்.

24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

ஆகையால் திருக்குரானில் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வசனங்களில் பெண்கள் முக்காடுகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.

அரசாங்கத்தில்  மதச்சார்பு உடையவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இறைவனின் அருளுரையில், வஞ்சக எண்ணத்துடன், மத அத்துமீறல்களை நிகழ்த்துவதென்பது வாடிக்கையாக இருப்பது வேதனை. 

நீதியும், நீதிமன்றங்களும் தெய்வத்தின் இருப்பிடமாகக் கருதப்படுபவை. அந்த அமைப்பில் மதச்சார்புடையவர்கள் தன் சுயநலத்துக்காகவும், எதிர்கால எம்.பி.பதவிகளுக்காகவும் இறைவனால் உலகிற்கு அருளப்பட்டவைகளை விசாரணை செய்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கடவுள் எப்போதும் இருப்பவர். அவரால் படைக்கப்பட்டவர்களின் காலமும் நேரமும் அவனின் கைகளில் உள்ளது. 

நீதிபதிகளை மக்கள் இறைவனின் பிரதிநிதியாகப் பார்க்கின்றார்கள்.  தங்களின் பொறுப்பு எதுவோ அதை உணர்ந்தவர்கள் தன் உயரத்தை அறிவர்.  தன் உயரம் அறிந்தவர்கள் தன் எல்லையை அறிவர். அறியாதவர்களும் அவர்களின் வாரிசுகளும் தர்மத்தின் முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

தங்களை மன்னர்களாக கருதிக் கொள்வர்களுக்கும் ஒரு நாள் இறைவன் தேதி குறித்திருப்பான் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

எதை விதைக்கின்றார்களோ அதை அறுவடை செய்தே தீர வேண்டியவர்கள் மனிதர்கள். அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் மனிதர்களின் செயல்களுக்கு தகுந்த தீர்ப்பினை நாடிடுவான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இறுதியாக அல்லாஹ்வின் இறை வசனத்தோடு இப்பதிவினை முடிக்கிறேன்.

24:64. கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. எதில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை அவன் அறிவான். அவனிடம் அவர்கள் கொண்டு செல்லப்படும் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

எல்லாப் புகழுக்கும் உரியவர் அல்லாஹ் ஒருவரே!

வாழ்க வளமுடன் - ஒன்றே குலம், ஒருவனே தேவன்!

Friday, September 9, 2022

பெண்களும் - சாதி வெறியர்களும் - இஸ்லாம் மார்க்கமும்


(பெண்கள் படிக்க வேண்டிய அவசியமான புத்தகம் இது)

மனுஸ்மிருதியில் மனு என்ற மகான் பெண்களும், அவர்களைக் கையாளும் விதம் பற்றி எழுதி இருக்கிறார். பார்ப்பனிய இனம் தான் உயர் சாதி என்றுத் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது. 

மனுவின் தர்மத்தைப் பற்றிக் கீழே படியுங்கள். இந்த உயர் சாதி என்று உளறிக் கொண்டிருக்கும், இவர்களைத் தான் ஆகமம எனச் சொல்லி கோவில் கருவறைக்குள் பூசை செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியது. மனிதாபிமானம் அற்ற விதிகள் ஆகமம். மனிதனுக்குள் உயர்வு தாழ்வு உண்டாக்கும் விதிகள் தான் உயர்ந்ததாம்.

எவனோ ஒரு பரதேசி எழுதிய விதிகளை மெய் வாய் பொத்தி கேட்க தமிழர்கள் என்ன கேனயர்களா?

இன்னும் எத்தனை நாள் தான் ஏமாறுவீர்கள் இளிச்சவாய் தமிழர்களே...! வெட்கமில்லையா? மானமில்லையா? நெஞ்சுக்குள் ஈட்டி நுழைந்ததை வீரமெனக் கருதிய தமிழன் செத்துப் போனானா? இப்படியா ஒரு பிழைப்பு பிழைப்பது?

நம் சொத்துக்களைப் பிறரை அனுபவிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பதா?விழுந்து கும்பிடுவதா? இதுவா வாழ்க்கை? இதுவா ஆன்மீகம்? கொடுமை.

உயர் சாதியில் பிறந்த மனு பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் எனப் படியுங்கள்.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;" என்கிறது, இந்து தர்மம்.

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்" ( நன்றி : பதிவுத் தொகுப்புகள்)

மேலும் மனு எழுதிய பெண்கள் பற்றி மிக மோசமான விதிகளைப் படிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்.


போதுமா? இன்னும் இருக்கிறது எழுத நான் என் அம்மாவின் கருவறையில் இருந்தவன். அவளிடமிருந்து உயிர் பெற்று வாழ்ந்தவன். எவன் பெண்களைப் பற்றி இழிவாகவும், விதிகள் அதுகள் என்று பேசினாலும் அவனொரு மன நோயாளி. ஒரு மன நோயாளி எழுதியதைத் தான் இந்து தர்மம் என்றுச் சொல்லித் திரிகிறது ஒரு கூட்டம். 

* * *

இஸ்லாம் என்பது மதமல்ல. அது ஒரு மார்க்கம். ஊருக்குச் செல்லும் போது பஸ் எந்த மார்க்கமாகப் போகிறது என்று கேட்பார்கள். அது போல ஒன்றே கடவுள் என்று சொல்லும் உன்னதமான ஆன்மீக பாதை இஸ்லாம். நபிகள் நாயகம் இஸ்லாத்தின் முதல் மனிதர். நபிகள் பெருமானார் எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவர் கடவுளின் மகிமையைப் பற்றி மட்டுமே பேசினார்.

இஸ்லாம் மார்க்கத்தில் கடவுள் மட்டுமே. பூசாரி இல்லை, குருமார்கள் இல்லை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரோக்கர்கள் இல்லை. சடங்குகள் இல்லை, சாதி இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை. கீழ், மேல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அதனால் தான் இஸ்லாம் உலகமெங்கும் பரவுகிறது.

இஸ்லாத்தில் கொலை செய்தவனுக்குத் தண்டனை கொலையே. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தான் கொலையாளியை மன்னித்து, பகர் பெற்றுக் கொண்டால் மன்னிப்பு உண்டு என்கிறது.

இதுதான் மார்க்கத்துக்கும் சாதி வெறிக்கும் உள்ள வித்தியாசம்.

* * * 
தமிழர்கள் உலகிற்கு இஸ்லாம் மார்க்கம் சொல்வதை முன்பே அறிவித்தவர்கள்.

’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று எழுதியது தமிழன் தான். உலகில் மனிதன் தோன்றிய பிறகு மனிதன் பேசிய மொழி தமிழ் தான் என்கிறது வரலாற்று ஆராய்ச்சி நூல்கள்.

உலகிற்கே முன்னுதாரனமாய் விளங்கிய தமிழர்களின் நாகரீகமும், அறிவும், செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமல்ல, மடைமாற்றியது யாரென்று இனியும் உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

தமிழர்களின் கோவில்களில் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும். அந்த நாளே தமிழர்கள் வீறு கொண்ட நாளாக இருக்கும். 

நாம் வீட்டைக் கட்டி விட்டு, வேறொவனுக்கு அனுபவிக்க கொடுப்பதா ஆகமம்? நியமம்? தர்மம்?

வாழ்க வளமுடன்...!

Thursday, September 8, 2022

தமிழர்களின் சதிராட்டம் பிராமணர்களின் பரதநாட்டியமானதன் நயவஞ்சக வரலாறு (1)

சதியால் சதிராட்டம் எப்படி பரத நாட்டியமாக மாற்றப்பட்டது என பார்க்கலாம். தமிழர்களின் நாட்டியக்கலையை வந்தேறி பார்ப்பனர்கள் தங்களின் சொத்தாக மாற்றி வெற்றி கண்ட அவலம் இது. சூடு, சுரணையற்ற தமிழர்களின் நிலையை எடுத்துக் காட்டும் வரலாற்று உண்மை இது. 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை செய்த சண்முக ஷர்மா ஜெயபிரகாஷ் என்பவர் (கவனிக்க ஷர்மா என்பது பிராமண இனத்தின் ஒரு பெயர்) நவரசம் - நடனத்தின் அழகிய அனுபவம் என்ற கட்டுரையினை இலங்கையிலிருந்து வெளி வரும் கலைக்கேசரி என்ற பத்திரிக்கையில் எழுதி இருந்தார். அதில் வரும் ஒரு பத்தி கீழே.


மேற்கண்ட பத்தியில், இந்திய சாஸ்திரீய நடனங்கள் பரத நாட்டியம், கதகளி, மோகினியாட்டம், கதக், குச்சுப்புடி போன்ற நடனங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆண்ட போது, அரசவையில் நடன மகளிர் ஆடிய நாட்டியத்தின் பெயர் சதிராட்டம். 

அதை ஏன் இந்த ஷர்மா குறிப்பிடவில்லை?  என்ன காரணம் தெரியுமா?

டி.ராஜேந்தர் அவர்களின் மனைவி உஷா அவர்களின் சகோதரி சுவர்ணமுகி. எலும்பே இல்லாத பெண்மணி என்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டப்பட்டவர். சதிராட்டத்தில் நூறு கர்ணங்கள் உண்டு. அந்த நூறு கர்ணங்களையும் ஆடியவர் சுவர்ணமுகி. இவரின் தந்தை தான் இவருக்கு குரு. தந்தை பெயர் நினைவில் இல்லை.

சுவர்ணமுகியைக் கவுரவிக்க முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், சுவர்ணமுகியை அரசு நர்த்தகி என்ற பட்டம் கொடுத்து சதிராட்டத்தை அங்கீகரித்தார்.

சுவர்ணமுகி ஆடிய தமிழர் நடனத்தின் பெயர்.”சதிராட்டம்”. அதிலொன்று பாம்பு, மயில் நடனம். இவ்வாறு பிரபலமாக இருந்த சதிராட்டத்தை ஒரு பெண்மணி பிராமணர்களின் சொத்து என்பது போல மாற்றினார்.

அந்தக் காலத்தில் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒரே காரணத்தால் படிப்பறிவு பெற்ற பார்ப்பனர்கள், தமிழர்களின் வரலாற்றை தமிழை வைத்தே மாற்றி எழுதினர்.

தமிழர்களின் வாழ்வியலை, ஒவ்வொருவரும் திட்டமிட்டு மறைத்து எழுதினர். எந்த வகையிலும் தமிழர் பூமியில் தொடர்பு இல்லாதவர்கள் தங்களை, தமிழர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய ஆதாரங்களை நூல் வடிவில் கொண்டு வந்தனர். 

அந்தக் கால பட்டயங்களில் அக்ரஹாரம் என்பது அவர்கள் பகுதியாக இருந்தது. அதில் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்து கொண்டு வேதம், மந்திரம் போன்ற அடாத செயல்களைச் செய்து வந்தனர். காலப் போக்கில் தமிழர்களை ஊருக்கு ஒதுக்குப் புறமாய் மாற்றி விட்டனர்.

சரி, சதிராட்டம் என்கிறாயே, உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்பீர்கள். 

இலங்கையில் இருந்து வெளிவரும் கலைக்கேசரி ஜனவரி 2020 பத்திரிக்கையில் கார்த்திகா கணேசர் என்ற நாட்டியப் பெண்மணி எழுதிய கட்டுரையினை கீழே படியுங்கள். இக்கட்டுரையில் கூட சதிராட்டம் என்பதை வசதியாக மறைத்து எழுதி இருக்கின்றார் கார்த்திகா கணேசர். அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனாலும் அவர் எழுதவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

தமிழகத்திலிருந்து வெளி நாடுகள் சென்ற நாட்டிய பெண்களைப் பற்றிப் படியுங்கள்.  நன்றி : கலாக்கேசரி இதழ் மற்றும் நாட்டிய கலா நிதி கார்த்திகா கணேசர்.
தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு அரசுகள் சதிராட்டத்தைப் பாதுகாக்கவில்லை என்பதோடு கடந்து விடுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 

ருக்மணி தேவி அருண்டேல் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட சதியின் தொடர்ச்சியாக சதிராட்டம் அழிக்கப்பட்டது.  

தமிழனின் அற்புதமான நடனத்தை அழித்து, அதை தமிழர்களின் பூமியிலேயே வேறொரு பெயரில் மாற்றி, அதற்கொரு கலாசேத்ரத்தை உருவாக்கி, இன்னும் அகங்காரத்தோடு பரத நாட்டியம் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

முட்டாள் தமிழர்களும், மூளைகெட்ட இன துரோகிகளும் தன்னை நானொரு கன்னெடிகா என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் எட்டப்பன்களும் இருக்கும் தமிழ் நாட்டின் சாபக்கேடு இதுதான்.

எழுபது ஆண்டுகாலமாக ஒரு கோவிலுக்குள் சென்று இறைவனைப் பிரார்த்தனை செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வீரத்தை என்ன சொல்லி மெச்ச? மானம் கெட்டுப் போனவர்களாய் தமிழர்கள் கிடப்பதை எண்ணி வேதனை தான் விஞ்சுகிறது.

விரைவில் தொடரும்