குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 17, 2022

பெரியாரை பின்பற்றுவோம் - மனிதாபிமானத்தைப் போற்றுவோம்

அன்பே கடவுள் அவ்வளவுதான். சக மனிதனின் வளர்ச்சியிலும், அவனின் நலனிலும் அக்கறை கொள்பவன் எவனோ அவனே இறைவன். பேராசைப்படாமலும், பொறாமைப்படாமலும் இருப்பவன் எவனோ அவனே மனிதன். 

உயர் சாதி நாங்கள் என்று எவன் பேசினாலும் அவன் மனித குலவிரோதி. ஆக பிராமணியம் மனித குலத்தின் எதிரி என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் அவர்களும் மிருகங்களே.

மனிதாபிமானத்தைப் பற்றிப் பேசும் பெரியாரை, அவர் வழி நின்று எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் வண்ணம் அவரின் பிறந்த நாளில் இன்று உறுதியேற்போம்.


பெரியாரின் கருத்துக்கள் மேலே இருப்பவை. இவற்றை எவன் மறுதலிக்கின்றானோ அவனே மனிதனின் எதிரி.



மனைவியுடன் உறவு குற்றச் செயல்

ஆண்கள் உலகம் சந்திந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுள் பெரிது பாலியல் குற்றங்கள். வேறு வேலையே இல்லாமல் கையில் குஞ்சாமணியைப் பிடித்துக் கொண்டு, கண்களில் தென்படும் பெண்களை எல்லாம் கற்பழிக்கத் திரிவது போலவே ஆண்களால் நடத்தப்படும் ஊடகங்கள் காம வெறிபிடித்தவர்கள் ஆண்கள் என்பது போல செய்திகள் வெளியிட்டு வருவது சாபக்கேடு. 

ஆண்களுக்கு ஆண்களே விரோதி.

சில ஆண்கள் பெண்ணீயம் பேசுவார்கள். பெண்ணீயம் பேசும் ஆண் கொக்கி. சிக்கும் சிலைகளைச் சிதைப்பது நோக்கம். 

விஷ்ணுபுரம் விருது புகழ் இலக்கியவாதிகளின் கொக்கி போல.

பெண்கள் அழகு சாதனப் பொருட்களின் 2021 ஆம் ஆண்டின் மொத்த மதிப்பு 288 அமெரிக்க பில்லியன் டாலர்கள். உடைகள் வேறு கணக்கு. மயக்கம் வரும்.

மில்லியன் டாலர் கணக்கில் சுனோ, பவுடர் இத்தியாதிகளை அப்பிக் கொண்டிருக்கும் பெண்கள், யாருக்காக இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது இந்திய அரசியலமைப்புக்கே வெளிச்சம்.

ஆண்கள் மட்டுமே பெண்களின் மீதான கொடும் செயல்களைச் செய்வதாகச் சொல்கிறார்கள். 

பெண்கள் உத்தமர்களின் உருவமாய் திகழ்கிறார்களாம். நம்பிக் கொள்ள வேண்டும்.

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ஆண்கள் பாலியல் குற்றவாளிகளா? பெண்களா? என்று கேட்டால், அவர் தன் இனத்துக்குத்தான் ஆதரவாக இருப்பார். அவர் ஒரு ஜி.ஆர்.சு.

ஹெலிகாப்டர் வேண்டும், தனி வீடு வேண்டும், லட்சங்களில் சம்பளம் வேண்டும், மாமியார்-மாமனார் இருக்க கூடாது, அக்கா-தங்கை ஆகவே ஆகாது, இப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டு மணாளனைத் தேர்த்தெடுப்பார்கள் பெண்கள்.

கட்டிக்கிட்டு கூட்டிக்குப் போய் பெட்டில் படுக்க வைத்து, பூக்களால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டி, காலையில் ஒருவாட்டி, மாலையில் ஒரு வாட்டி, நடு இரவில் ஒரு வாட்டி என சாமி கும்பிட்டு கண்ணில் இட்டு பயபக்தியுடன் கும்பிடணும் போல. அப்படி கும்பிடுபவன் தன் நல்ல கணவன்.

கல்யாணம் கட்டிக் கிட்டு என்னதான் சுகத்தை ஆண்கள் அடைகிறார்கள்? கடைசி வரை பழிதான் சுமக்கின்றார்கள். 

ஒவ்வொரு மனைவிக்கும் முதல் எதிரி அவரவர் கணவன் மட்டுமே. 

என்னதான் செய்வது ஆண்கள்? சொன்னால் பளிச்சென்று கேட்டு விடுவான்கள் என்பார் என் தோழி.

ஆண்கள் தங்களின் இனத்துக்கு செய்யும் உபகாரமாக ஒரு வேண்டுகோள்.

இனிமேல் பெண்களைக் கவனிக்காதீர்கள், பார்க்காதீர்கள், பாராட்டாதீர்கள். நடிகைகளை நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்க்காதீர்கள். 

ஒரு மாதம் விரதம் இருந்துதான் பாருங்களேன். அட்லீஸ்ட் ஒரு வாரமாவது இருங்களேன் பார்ப்போம்.

என்ன கெட்டுப் போகப் போவுது? 

ஆண்களுக்கு கற்பு இல்லையா? என்ன கற்பா? அப்படின்னா என்னாப்பான்னு பிஜேபி குஷ்பூ கேட்பார். 

பீதி உண்டாகிறது டிவிக்காரனுவ குரைக்க ஆரம்பிப்பானுங்களே என.

கீழே இருக்கும் செய்தியைப் படித்து விட்டு தலையைப் பிய்த்துக் கொள்ளுங்கள். 

செய்தி: தினமணி 17.09.2022 கோவைப் பதிப்பு

மனைவியைக் கட்டாயப்படுத்தினால் குற்றம், கணவனைக் கட்டாயப்படுத்தினால் குற்றமில்லையாம்.  இதையெல்லாம் யார் கேட்பது?

நம்ம பிரபல நீதிபதி மாரிதாஸ் சவுக்கு சங்கர் புகழ் - ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களிடம் வழக்குப் போட வேண்டும். 

Monday, September 12, 2022

நிலம் (101) - நில விற்பனையில் அதிரடிக்கும் புதுவித மோசடி

நிலம் தொடரின் 101 வது பகுதி எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நான் எழுதிய பதிவுகள் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். எனது 20 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன், தற்போது நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கின்றார்கள். 

நேரமும், சூழலும் அமைந்தால் ஒருவரை அழித்துதான் ஆக வேண்டுமென்றால், மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு (அப்படி ஒன்று இருக்கிறதா?) மனம் கூசாமல் அழிக்கும் செயலைச் செய்கிறார்கள்.

இன்ஸ்டண்ட் பணம், மாயாஜாலமாக வந்து விடாதா என்று பரபரக்கின்றார்கள். 

பணம் தகுதி உடையவர்களிடம் வந்து சேரும். அந்தத் தகுதியை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை? இந்த உலகம் அதைச் சொல்லித் தருவதும் இல்லை.

உடனே ஐ.டி, இஞ்சினியர், டாக்டர், படிப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். படிப்பு என்பது ஒரு தகுதி. அவ்வளவுதான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 

அனுபவம் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. இரண்டுக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறது. படிப்பறிவு பட்டறிவாக மாற வேண்டும். 

வேலைக்குச் செல்வது, செக்குமாடு போல குரலுக்கு அடிபணிந்து வேலை செய்வது என்பது பாதுகாப்பான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதுவல்ல வாழ்க்கை என்பது ரிட்டயர்ட் ஆன பிறகு தான், தான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது எனத் தோன்றும்.

கார், வீடு, பணம் எல்லாம் இருக்கும். ஆனால் வாழ்க்கை ஓடிப்போயிருக்கும். கண் முன்னால் நோயும், மரணமும் நின்று கொண்டிருக்கும். 

வேதாந்தம் பேசாதே, மாதச் சம்பளம் தான் பாதுகாப்பான வாழ்க்கை என நினைப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது. 

விசித்திரமான வாழ்க்கையில் நாம் எவரும் நம் வாழ்க்கையை வாழவே இல்லை என்பது சாபக்கேடு. அதை உணர்ந்து கொள்ளவே முடியாத அறிவுதான் நாகரீகம் என்பது அதை விடக் கொடுமை.

இனி அதிரடிக்கும் புதுவித மோசடி என்னவென்று பார்க்கலாம்.

சென்னையில் இருக்கும் ஒரு வாடிக்கையாளார் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு விலை பேசி, அட்வான்ஸ் கொடுத்து விட்டு, பேப்பர்களை வாங்கி என்னிடம் லீகலுக்குக் கொடுத்தார். நானும் லீகலுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று, ஆவணங்கள் ஆய்வு வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் நில உரிமையாளார் அட்வான்ஸ் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நில உரிமையாளரிடம் கையொப்பம் பெறச் சென்றேன். 

அவர் நான் கொடுத்த பேப்பரில், என்ன எழுதி இருக்கிறது என்றுப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டார்.  உள்ளே அலாரம் அடித்தது. ஏதோ சரியில்லையே எனத் தோன்றியது.

வாடிக்கையாளருக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கலாம். எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாமென்று நினைத்தேன்.

அடுத்த ஒரு மாதத்தில் கிரையப்பத்திரம் தயார் செய்து விட்டு, வாடிக்கையாளருக்கு அழைத்தால் கிரையம் நடக்கவில்லை என்றார். 

காரணமென்ன என விசாரித்தால், நில உரிமையாளரின் அம்மா, நிலத்தை விற்க வேண்டாமென்றுச் சொல்லி விட்டதால், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தருவதாகச் சொல்லி விட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார். அம்மா சூசைடு செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் திரைக்கதை எழுதி இருக்கிறார் நில உரிமையாளர்.

ஆனால் அது காரணம் அல்ல என்று எனக்குத் தெரிந்து விட்டது.

அந்த நில உரிமையாளரின் மொத்தச் சொத்து வரலாறும் என்னிடம் இருந்தது. அதில் ஒரு சொத்து வங்கியில் அடமானக்கடனில் இருந்தது. வங்கியில் நண்பர் மூலமாக விசாரித்தேன். வங்கி மேனேஜர் நில உரிமையாளரை பாராட்டி மகிழ்ந்தார். ஏலம் போக இருந்த சொத்தினை மீட்டு விட்டார் இந்தப் பணத்தை வைத்து. அடுத்தக் கடன் வேறொரு வங்கியில் வைத்து வாங்கிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவார். 

வட்டி இல்லாக் காசு ஆறு மாதத்திற்கு. கொஞ்ச நஞ்ச தொகையில்லை சுமார் இருபது லட்சம். அத்தனையும் அக்கவுண்டில் வாங்கினார். அந்த அக்கவுண்டில் இருந்து  லோன் அக்கவுண்டுக்கு பணம் கட்டி சொத்தினை மீட்டு விட்டார்.

இப்படித்தான் இப்போது பெரும்பாலும் நடக்கிறது. இனி நடையாய் நடந்து  அப்பணத்தை வாங்க வேண்டும். கோர்ட்டில் வழக்குத் தொடுத்தால் என்ன ஆகும் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மொத்தப் பணமும் வருவதற்குள் எல்லாம் செலவாகி இருக்கும். மன உளைச்சல் வேறு.

இப்படி ஒரு பகீர் திட்டத்தை இந்தியாவெங்கும் பலரும் செயல்படுத்தி வருவதாக பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன்.

சொத்தினை விலை பேசி அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்வதற்குள், வேறொரு புரோக்கர் ஒரு ஆளைச் செட் செய்து, அதிக விலைக்கு கேட்பார்கள். அதை நம்பும் நில உரிமையாளர் விலையை அதிகம் சொல்வார். இல்லையென்றால் அட்வான்ஸைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பார். 

ஒரு புரோக்கர் சம்பாதித்து விடக்கூடாதே என்று இன்னொரு புரோக்கர் இந்த தகிடுதத்தைச் செய்வார். இப்படித்தான் பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகாமல் கிடக்கின்றன.

கடன் இருக்கா, சொத்தினை விற்பனை செய்கிறேன் எனப் புரோக்கர்களிடம் சொல்ல வேண்டியது. எவனாவது ஏமாந்தால் அவனிடமிருந்து தொகையைப் பெற்று கடனைக் கட்டி விட்டு, ஒரு சிலர் கம்பி நீட்டி விடுவார்கள். இதில் ஊர் பிரசிடெண்ட், கவுன்சிலர், மாவட்டம், ஒன்றியம், கிளை, வட்டம், யெம்ம்ல்லே, மினிஸ் என்று எவராவது உள்ளே வந்து விட்டால் அதோகதிதான்.

இப்போதெல்லாம் நிலம் வாங்க வரும் ஆள் எப்படி என கணித்து விடுவார்கள். அவர்களுக்கு ஏற்ப ஸ்கெட்ச் தயாராகி விடும். இதுவெல்லாம் அறியாமல் விட்டில் பூச்சிகளாய் விடுவர் ஒரு சிலர்.  இன்னும் ஊட்டியில் நாற்பது இலட்சத்தை அட்வான்ஸாக கொடுத்தவருக்கு கிரையமும் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை, நிலத்தின் உரிமையாளரையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை. நடையாய் நடக்கிறார். முன்பே இது பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன்.

இந்தபதிவினை விழிப்புணர்வுக்காக எழுதி இருக்கிறேன். எவரையும் குறை சொல்லவோ அல்லது குற்றம் சாட்டவோ எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பதிவு செய்திருக்கிறேன். 

சமீபத்தில் கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்தவர் ஒருவர், நான் அதை எழுதிக் கொடுக்கவே இல்லை என வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் பாருங்கள். பணம் கொடுத்த ஆளுக்குத் தூக்கம் வருமா? நினைத்துப் பாருங்கள். இனி வழக்கு, புகார் என்று போனால் எத்தனை வருடமோ? இதில் மற்றுமொரு பிரச்சினை - ரொக்கமாகக் கொடுத்த தொகை என்னவாகும்?

நாமம் தான்.

இனி கவனமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். 

யாரைத்தான் நம்புவதோ? எப்படித்தான் நிலம் வாங்குவதோ? என்று தோன்றும். சின்ன விஷயம் தான். மிகச் சரியாகச் செய்ய வேண்டும். அது என்ன? அது என் தொழில்? அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்?

வாழ்க வளமுடன்...!

எனது “கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகம் டிஜிட்டல் வடிவில் அமேசானில் விற்பனைக்கு இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். நிச்சம் அந்தப் புத்தகம் உங்களுடன், உங்கள் மனதுடன் பேசும் என நம்புகிறேன். 

புத்தகத்தின் விலை ரூ.120/-

படத்தினைக் கிளிக் செய்தால் அமேசான் லிங்க் கிடைக்கும்.

Saturday, September 10, 2022

திருக்குரானில் ஹிஜாப் - உச்ச நீதிமன்றத்துக்கு மத விடயங்களில் தலையிட அனுமதி உண்டா? ஓர் பார்வை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் ஆகிய இறைவனை வணங்கி இந்த பதிவைத் தொடங்குகிறேன்.

ஆதம் முதலாய் உலகிற்கு அருளப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக இறைவன், இறைத்தூதர்கள் வழியே மனிதர்களின் வாழ்க்கை ஒழுங்கு நெறிக்கு பல அறிவுரைகளை வழங்கி வந்து இருக்கிறார்.

அந்த வகையில் கி.பி.570 ஆண்டுகளில் முஹம்மது என்று அழைக்கப்படும் ஸல் நபிகள் நாயகத்தின் வழியாக, இறைவனால் வழங்கப்பட்ட ஒப்பற்ற ஒரு மார்க்கத்தின் விளக்கம் தான் திருக்குரான்.

திருக்குரான் நபிகள் வழியாக உலகிற்கு வழங்கப்படும் முன்பு, மக்களின் வாழ்க்கையை படியுங்கள் அன்பர்களே!

உயிரை நடுங்கச் செய்யும் பழக்க வழக்கங்களை வாழ்க்கையாக மக்கள் வாழ்ந்து வந்தனர். விலங்குகளை விட கொடிய, கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். 

  • கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்.
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
  • குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்.
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்.
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்.
  • தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது.
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது.
  • ஒரு குலம் மட்டுமே உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் என்றார்கள்.
  • அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழிவெறியில் மயங்கிக் கிடந்தனர்.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காமல் விடமாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

கி.பி.570 வருடங்களில் மக்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. இதைக் கண்ட ஸல் - நபிகள் அவர்கள் ஹிரா குகைக்குள் சென்று தனிமையில் இருக்க ஆரம்பித்தார். அந்த நாட்களில் அவர் இறைவனின் தூதராக அறிவுறுத்தப்பட்டு, அவர் மூலம் திருக்குரான் மக்களுக்கு அருளப்பட்டது.

தற்போது உலகில் பெரும்பான்மையான மக்களால் வாழப்படும் மார்க்கமாக இஸ்லாம்  திகழ திருக்குரானின் வசனங்களே ஆதாரமாய் உள்ளது.

சமீபத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றம், இஸ்லாமிய பெண்கள் பள்ளிகளுக்கு வரும் போது ஹிஜாப் அணியக் கூடாது எனத் தடை விதித்தது.  ஏனென்றால் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உபகிளையான பிராமணிய ஜாதிய கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இந்தப் பிரச்சினை உருவாக்கப்பட்டது. 

இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதி கொண்ட அமர்வில் இந்தத் தடை பற்றிய விசாரணை நடக்கிறது. விசாரணையின் போது நீதிபதிகள் சொல்லியதாக பல கருத்துகள் பத்திரிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

வக்கீல் பாட்ஷா என்பவர் குஜாராத் சீக்கிய மதத்தினர் தலைப்பாகை அணிவது போலத்தான், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர் என்று வாதிடும் போது, அதுவும் இதுவும் ஒன்றல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சீக்கியர் மதம் வேறு, இஸ்லாம் மதம் வேறு. சீக்கிய ஆண்கள் தலைப்பாகை அணிவதும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதும் ஒன்றல்லவாம்.

Thanks to : Times of India.

ஹிஜாப் பற்றிய தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்து விட்டது நீதிபதிகளின் கருத்துகள். மை லார்டுகள், கேள்வி கேட்க முடியுமா?   

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மட்டுமே கருவறைக்குள் அர்ச்சனை செய்ய வேண்டும், அது ஆகமம் என்றொரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பதை நினைவில் கொள்க. மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூடுதல் அறிவுறுத்தலும் இருக்கிறது.

சாதிய வன்முறையினை ஊக்குவிக்கும் ஆகமங்கள் உயர்ந்தது என்ற பார்வையில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். இறைவன் முன்னால் மனிதர்களில் வேறுபாடு இருக்க முடியுமா? 

இறைவன் மனிதர்களுக்குள் வேறுபாடு வைத்தா படைத்திருக்கிறான்? இல்லையே? 

தீண்டாமை குற்றம் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்தச் சட்டம் கோவிலின் கருவறைக்குள் செல்லாத ஒன்றா? எழுபது ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

சாதி வெறியர்களிடமிருந்து இன்னும் நடராஜர் கோவிலை மீட்க முடியாமல் உலகிற்கே மறை சொன்ன தமிழர் இனம் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கட்சி மற்றும் மதச்சார்பு கொண்டிருப்பது சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது என்கிறது செய்திகள்.

மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு அனுமதி இல்லையெனில் நீதிமன்றத்துக்கு எந்தச் சட்டத்தின் படி அரசியல் சட்டமைப்பு அதிகாரம் கொடுத்திருக்கிறது என்றும் தெரியவில்லை. 

சிதம்பரம் நடராஜர் கோவிலும் ஆகமும், மதமும் ஒன்றெனில் இஸ்லாம் மதமும், ஹிஜாப்பும் வேறா? 

இஸ்லாம் மத விவகாரத்தில் தலையிட அரசுக்கோ அல்லது  நீதிமன்றத்துக்கோ அனுமதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலும் மதம் தொடர்பானதே அல்லவா? ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான விதிகள் உள்ளனவா என்றும் தெரியவில்லை.

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. திருக்குரானில் ஹிஜாப் பற்றி ஏதும் இறை வசனங்கள் உண்டா?  கேள்விக்கு விடை தேடினேன். 

திருக்குரானில் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறை வசனங்கள் 114 அத்தியாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் 24வது அத்தியாயத்தில் அந் நூர் (அந்த ஒளி) என்ற பகுதியில் 31வது வசனமாக ஹிஜாப் பற்றி இப்படித் தெரிவித்திருக்கிறார் அல்லாஹ்.

24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

ஆகையால் திருக்குரானில் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வசனங்களில் பெண்கள் முக்காடுகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.

அரசாங்கத்தில்  மதச்சார்பு உடையவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இறைவனின் அருளுரையில், வஞ்சக எண்ணத்துடன், மத அத்துமீறல்களை நிகழ்த்துவதென்பது வாடிக்கையாக இருப்பது வேதனை. 

நீதியும், நீதிமன்றங்களும் தெய்வத்தின் இருப்பிடமாகக் கருதப்படுபவை. அந்த அமைப்பில் மதச்சார்புடையவர்கள் தன் சுயநலத்துக்காகவும், எதிர்கால எம்.பி.பதவிகளுக்காகவும் இறைவனால் உலகிற்கு அருளப்பட்டவைகளை விசாரணை செய்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கடவுள் எப்போதும் இருப்பவர். அவரால் படைக்கப்பட்டவர்களின் காலமும் நேரமும் அவனின் கைகளில் உள்ளது. 

நீதிபதிகளை மக்கள் இறைவனின் பிரதிநிதியாகப் பார்க்கின்றார்கள்.  தங்களின் பொறுப்பு எதுவோ அதை உணர்ந்தவர்கள் தன் உயரத்தை அறிவர்.  தன் உயரம் அறிந்தவர்கள் தன் எல்லையை அறிவர். அறியாதவர்களும் அவர்களின் வாரிசுகளும் தர்மத்தின் முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

தங்களை மன்னர்களாக கருதிக் கொள்வர்களுக்கும் ஒரு நாள் இறைவன் தேதி குறித்திருப்பான் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

எதை விதைக்கின்றார்களோ அதை அறுவடை செய்தே தீர வேண்டியவர்கள் மனிதர்கள். அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் மனிதர்களின் செயல்களுக்கு தகுந்த தீர்ப்பினை நாடிடுவான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இறுதியாக அல்லாஹ்வின் இறை வசனத்தோடு இப்பதிவினை முடிக்கிறேன்.

24:64. கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. எதில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை அவன் அறிவான். அவனிடம் அவர்கள் கொண்டு செல்லப்படும் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

எல்லாப் புகழுக்கும் உரியவர் அல்லாஹ் ஒருவரே!

வாழ்க வளமுடன் - ஒன்றே குலம், ஒருவனே தேவன்!

Friday, September 9, 2022

பெண்களும் - சாதி வெறியர்களும் - இஸ்லாம் மார்க்கமும்


(பெண்கள் படிக்க வேண்டிய அவசியமான புத்தகம் இது)

மனுஸ்மிருதியில் மனு என்ற மகான் பெண்களும், அவர்களைக் கையாளும் விதம் பற்றி எழுதி இருக்கிறார். பார்ப்பனிய இனம் தான் உயர் சாதி என்றுத் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது. 

மனுவின் தர்மத்தைப் பற்றிக் கீழே படியுங்கள். இந்த உயர் சாதி என்று உளறிக் கொண்டிருக்கும், இவர்களைத் தான் ஆகமம எனச் சொல்லி கோவில் கருவறைக்குள் பூசை செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியது. மனிதாபிமானம் அற்ற விதிகள் ஆகமம். மனிதனுக்குள் உயர்வு தாழ்வு உண்டாக்கும் விதிகள் தான் உயர்ந்ததாம்.

எவனோ ஒரு பரதேசி எழுதிய விதிகளை மெய் வாய் பொத்தி கேட்க தமிழர்கள் என்ன கேனயர்களா?

இன்னும் எத்தனை நாள் தான் ஏமாறுவீர்கள் இளிச்சவாய் தமிழர்களே...! வெட்கமில்லையா? மானமில்லையா? நெஞ்சுக்குள் ஈட்டி நுழைந்ததை வீரமெனக் கருதிய தமிழன் செத்துப் போனானா? இப்படியா ஒரு பிழைப்பு பிழைப்பது?

நம் சொத்துக்களைப் பிறரை அனுபவிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பதா?விழுந்து கும்பிடுவதா? இதுவா வாழ்க்கை? இதுவா ஆன்மீகம்? கொடுமை.

உயர் சாதியில் பிறந்த மனு பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் எனப் படியுங்கள்.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;" என்கிறது, இந்து தர்மம்.

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்" ( நன்றி : பதிவுத் தொகுப்புகள்)

மேலும் மனு எழுதிய பெண்கள் பற்றி மிக மோசமான விதிகளைப் படிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்.


போதுமா? இன்னும் இருக்கிறது எழுத நான் என் அம்மாவின் கருவறையில் இருந்தவன். அவளிடமிருந்து உயிர் பெற்று வாழ்ந்தவன். எவன் பெண்களைப் பற்றி இழிவாகவும், விதிகள் அதுகள் என்று பேசினாலும் அவனொரு மன நோயாளி. ஒரு மன நோயாளி எழுதியதைத் தான் இந்து தர்மம் என்றுச் சொல்லித் திரிகிறது ஒரு கூட்டம். 

* * *

இஸ்லாம் என்பது மதமல்ல. அது ஒரு மார்க்கம். ஊருக்குச் செல்லும் போது பஸ் எந்த மார்க்கமாகப் போகிறது என்று கேட்பார்கள். அது போல ஒன்றே கடவுள் என்று சொல்லும் உன்னதமான ஆன்மீக பாதை இஸ்லாம். நபிகள் நாயகம் இஸ்லாத்தின் முதல் மனிதர். நபிகள் பெருமானார் எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவர் கடவுளின் மகிமையைப் பற்றி மட்டுமே பேசினார்.

இஸ்லாம் மார்க்கத்தில் கடவுள் மட்டுமே. பூசாரி இல்லை, குருமார்கள் இல்லை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரோக்கர்கள் இல்லை. சடங்குகள் இல்லை, சாதி இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை. கீழ், மேல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அதனால் தான் இஸ்லாம் உலகமெங்கும் பரவுகிறது.

இஸ்லாத்தில் கொலை செய்தவனுக்குத் தண்டனை கொலையே. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தான் கொலையாளியை மன்னித்து, பகர் பெற்றுக் கொண்டால் மன்னிப்பு உண்டு என்கிறது.

இதுதான் மார்க்கத்துக்கும் சாதி வெறிக்கும் உள்ள வித்தியாசம்.

* * * 
தமிழர்கள் உலகிற்கு இஸ்லாம் மார்க்கம் சொல்வதை முன்பே அறிவித்தவர்கள்.

’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று எழுதியது தமிழன் தான். உலகில் மனிதன் தோன்றிய பிறகு மனிதன் பேசிய மொழி தமிழ் தான் என்கிறது வரலாற்று ஆராய்ச்சி நூல்கள்.

உலகிற்கே முன்னுதாரனமாய் விளங்கிய தமிழர்களின் நாகரீகமும், அறிவும், செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமல்ல, மடைமாற்றியது யாரென்று இனியும் உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

தமிழர்களின் கோவில்களில் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும். அந்த நாளே தமிழர்கள் வீறு கொண்ட நாளாக இருக்கும். 

நாம் வீட்டைக் கட்டி விட்டு, வேறொவனுக்கு அனுபவிக்க கொடுப்பதா ஆகமம்? நியமம்? தர்மம்?

வாழ்க வளமுடன்...!

Thursday, September 8, 2022

லலித மன்றம் நாடக காட்சிகள் - காட்சி இரண்டு

லலித மன்றத்தில் கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்த  வழக்கு விசாரணை தொடங்கியது.

சாமி கேட்டர் ”வக்கீல்கள் யாரப்பா?”

இருவர் வந்து நின்றனர்.

”உங்களில் யார் வஸ்துவணிவர்? ”

அதில் ஒருவர் முன்னால் வந்தார்.

”அவருக்கு இருக்கை கொடுங்கள்”

இருக்கை கொடுக்கப்பட்டது.

”நீங்கள்?”

”நான் காலில் இருந்து பிறந்தவன்”

“சரி, கைகட்டி பத்தடி தூரத்தில் நிற்க”

“வஸ்துவணிபரே! உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்”

”என் வாதத்தை துவங்குவதற்கு முன்பு, நம்ஸ்கார்ம். மை லார்டு, நான் ஏன் நம்ஸ்காரம் என்று துவங்கினேன் என்றால் இது கடவுள் மொழி என்பதால். நானும் உங்களைக் கடவுளாகத்தான் பார்க்கிறேன்”

சாமி புன்னகைத்துக் கொண்டார். தலையை ஆட்டி ஆட்டி ஆமோதித்தார். வக்கீல் மீண்டும் வாதத்தைத் தொடங்கினார்.

”எனது கட்சிக்காரர்கள் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்றுச் சொல்ல முடியாது. ஏனென்றால் குற்றம் செய்தவர்களை விட குற்றச்செயலைச் செய்ய ஊக்குவிக்குபவர்களுக்கு தான் அதிக தண்டனை என்று, ...... எழுதிய (இந்த இடத்தில் சட்டமியற்றவரின் பெயருக்குப் பதிலாக நாக்கை வெளியில் நீட்டி விட்டு தொடர்கிறார் வக்கீல்) சட்டத்தில் இருக்கிறது. 

இந்தக் குற்றம் செய்யக் காரணமாய் இருந்தது ஒரு துணி. ஆம் லார்டு, அது ஒரு கருப்புத் துணி. சாலையில் சென்று கொண்டிருக்கிற போது, அங்கு ஒரு துணியால் ஒரு வஸ்து மூடப்பட்டு இருக்கிறதென்றால், மனிதர்களுக்கு இயற்கையாகவே அது என்னவென்று பார்க்கத் தோன்றுவது இயல்பு அல்லவா? 

அதைப் போலத்தான் எம் கட்சிக்காரர்கள் பதினோரு பேரும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் கருப்பு துணி அணிந்த உருவம் வந்து கொண்டிருந்தது. அது பேயாக இருக்குமோ என்ற பயத்தில் என் கட்சிக்காரர்கள், எதிரில் வந்தவரை விசாரித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிந்தது அது ஒரு பெண் என்று.

அதுமட்டுமல்ல மை லார்டு. அந்தப் பெண்ணின் வயிறு பெருத்து இருந்தது. அது ஏதோ மதக் கலவரத்திற்காக, வயிற்றில் கட்டப்பட்ட வெடிகுண்டாக இருக்குமோ என்ற நினைப்பில் அது என்னவென்று பார்க்கத்தான், என் கட்சிக்காரர்கள் முயன்றனர். 

தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் அவர்கள் அக்காரியத்தைச் செய்தனர் என்பதை மை லார்டு குறித்துக் கொள்ள வேண்டும்.”

அப்போது ஆலரமத்தினடியில் காற்றுப் பலமாக வீசியது.

சாமிக்கு கண்ணில் தூசி பட்டு விட்டதால், வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடரும்.

இந்தச் செய்தி உங்களுக்காக.


நன்றி : மணி கண்ட்ரோல்.காம்

சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி என்பவர் மக்கள் தொகை பெருக்கம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், மக்கள் தொகையினக் கட்டுப்படுத்துதல் அவசியம் என்றும் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டுக்கு மேல் வேண்டாமென்று பிரச்சாரமும் நடந்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது பிள்ளையே பிறப்பதில்லை. அதற்கும் ஹாஸ்பிட்டல்கள் வந்து விட்டன. ஒன்றை பெற்று வளர்ப்பதற்குள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர் மக்கள்.

இப்படியான சூழல் இருக்கும் போது இந்த ஜிதேந்திரனாந்த் வழக்கு என்ன விளைவினை ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுக்கும் என்பதும் தெரியவில்லை. 

இந்த வழக்கை கவனத்தில் வாசகர்கள் குறித்துக் கொள்ளவும்.

ஊழலை ஒழிப்போம் - எப்படி என விளக்கம்

கிழட்டு நரி இந்தியர்களை ஏமாற்றி லோக்பால் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சகம் தூங்கியதால் 70 ஆண்டுகால சதியின் வேரை கண்டு பிடிக்கவில்லை. இந்தியர்கள் கிழட்டு நரியின் நயவஞ்சக வலையில் சிக்கினார்கள். இன்று மீளாத் துயரில் ஆழ்ந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்த நரி, ஊருக்குப் போய் உட்கார்ந்து கொண்டது. 

இந்திய ஒன்றியங்களின் பிரதமர், ஊழலை ஒழிப்போம் என்கிறார். 

எப்படி?

இதோ இப்படி தான். செய்தியைப் படித்துப் பாருங்கள். புல்லரிக்கும்.

ஊருக்கே தெரியுமாம் விபச்சாரி யார் என? ஆனால்..... !

அம்புட்டுதான்..

நன்றி : தினமணி (08.09.2022)




Wednesday, September 7, 2022

லலிதமன்ற நாடகக் காட்சிகள் - காட்சி ஒன்று

லலித மன்றம் என்று அழைக்கக் கூடிய, ஆலமரத்தினடியில் சாமிகள் உட்கார்ந்திருந்தனர். இடுப்பில், தொடையில், காலில் பிறந்தவர்கள் மெய் வாய் பொத்தி நின்று கொண்டிருந்தனர். ஆகமத்தில் விதிகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு உட்கார சபையில் அனுமதி இல்லை. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டவை. சாமிகள் யாரும் அதற்கு காரணமில்லை. வேதமே காரணம். 

குற்ற விபரம் : கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் குற்றம்

விசாரணை விரைவில்...!

வாசகர்களுக்கு இன்றையச் செய்தி. நன்றி தினமணி



மேற்கண்ட செய்தியில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயிகள் போராட்டத்தில் தானாகவே ஸ்டார்ட் ஆகி, வேகமாக வந்த கார் விவசாயிகள் மீது மோதியதாக இரண்டாம் பத்தியில் செய்தி இருக்கிறது. கார் இடித்ததால் வன்முறை உண்டானது என்பது கூடுதல் செய்தி. காரினால் தான் வன்முறை என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்காக ராகுல்காந்தியின் நடைபயணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்.

ஒன்பது வருடங்கள் நேரு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். தங்களது குடும்பச் சொத்தான நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு கொடுத்தார். 

அந்தப் பரம்பரையில் வரும் ராகுல் காந்தி அவர்களுக்கு அவரது தந்தை இந்தியர்களை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். 

இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த, மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்று தனது வாழ்க்கையை இந்தியர்களுக்குக் கொடுத்த மகாத்மா காந்தி விரும்பினார்.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசும், நேரு குடும்பத்தார் மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. சூரியனை பொய்களும், புராணங்களும் மறைக்க முடியாது.

காங்கிரஸ் ரயிலைக் கொளுத்தவில்லை, கொலைகள் செய்யவில்லை, எந்த மதத்தினருக்கும் வந்தேறிகளுக்கும் அடிமையாக இல்லை. நாட்டை விற்கவில்லை, இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி விழுங்கவில்லை, எந்த அமைப்புக்கும் சார்பாக இல்லை. 

இந்திய மக்களை நேசித்தார்கள். இந்தியாவுக்கு உழைத்தார்கள். இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது. காலம் இந்தியர்களுக்கு இப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய நாளில், ஒவ்வொரு இந்தியனும் பொய்களால் ஏமாற்றப்படுகிறான். வந்தேறிகளால் நாசமாக்கப்படும் இந்தியாவை, மீண்டும் மதவெறிக்கு எதிரான ஒரு சுதந்திரப் போரினால் தான் மீட்க முடியும். 

கடந்த 70 ஆண்டுகளாக துல்லியமான நோக்குடன் திட்டமிடப்பட்டு, இன்று இந்தியா மத வெறி எனும் போர்வையில் வந்தேறிக் கும்பலொன்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடிமைகள் கலவரம் செய்கிறார்கள். வெடிகுண்டுகள் வீசுகின்றார்கள். கார்கள் ஏற்றி கொலைகள் செய்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கின்றார்கள்.

பஞ்சைப்பராரிகளாய் இந்தியர்கள் நயவஞ்சமாக மாற்றப்படுகின்றார்கள். படிக்க அனுமதிக்க மறுக்கின்றார்கள். இந்தியர்கள் கற்காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இந்தியர்களை இந்த மதவெறி வந்தேறிக் கும்பலிடமிருந்து மீட்க, இந்தியாவை நேசிப்பவர்களால், உண்மை இந்தியர்களால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் பொய்கள் எனும் மாயையில் கட்டுண்டு கிடக்கும் இந்தியர்களுக்கு ராகுல் காந்தியின் பயணம் விழிப்புணர்வைத் தரும். இந்தியா மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என்று நம்புவோம்.

ராகுல் காந்தி அவர்களின் எண்ணம் நிறைவேறட்டும். அதனால் இந்தியா மேன்மையடையட்டும்.

Monday, September 5, 2022

லலிதமன்றம் நாடகக் காட்சிகள்


உலகின் ஒப்பற்ற சக்தி படைத்தது மேலே இருக்கும் வஸ்து. அணுகுண்டு எல்லாம் இந்த வஸ்தின் முன்னே தூசு. ஹைட்ரஜன் பாம் சும்மா சும்மா. இதன் ஆற்றலை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது. அந்தளவுக்கு வலிமையான வஸ்து இது.

இந்த வஸ்துவினை அணிந்தவர்களுக்கு உலக மக்கள் யாவரும் சேவகர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்தப் பெருமித எண்ணத்தோடு, எஜமான அடிமைகளான நாம் இனி தொடர்ந்து லலித மன்றத்தில் நடத்தப்படும் நாடகக் காட்சிகளைத் தினம் தோறும் படித்து இன்புறலாம். 

இன்புற விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். லலிதமன்றத்தில் நடத்தப்படும் நாடகங்கள் சுவாரசியமானவையாக இருக்குமா? என்பது படிக்கும் உங்களுக்கு வெளிச்சம்.

நாடகக் காட்சிக்கு முன்பு முன்னுரை:

இந்த மன்றத்திற்கு சுமார் இருபத்தெட்டு ஊர்களும், எட்டு உப ஊர்களில் இருந்தும் நாடகம் பார்க்க ஆட்கள் வருவதுண்டு. சாமிகள் தான் நடிப்பார்கள். நல்ல நடிப்பாக இருக்கும். நாடகத்தில் பல பாத்திரங்கள் உண்டு. அந்தப் பாத்திரங்களில் பலர் எங்கிருப்பர் என்று தெரியாது கடவுளைப் போல. ஆனாலும் பாத்திரங்களாய் இருப்பர்.

இந்த நாடகத்தில் நடிப்பவர்களுக்கு ஆக்கிர மங்கள் எனும் புத்தகமே வழிகாட்டியாக இருக்கிறது. நாடகத்துக்கும் விதிகள் உண்டு அல்லவா?

இனி விரைவில் திரைக்காட்சிகள் தொடரும் ...