கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். எல்கேஜியிலிருந்து மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, லெக்சரர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். மிகப் பெரும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள், பேராசிரியர்கள், பெரும் கோடீஸ்வரர்களை அந்தக் கால கட்டத்தில் சந்தித்து இருக்கிறேன். எந்தளவுக்கு நல்ல எண்ணங்கள் கொண்டவர்களைச் சந்தித்தேனோ அதை விட பலமடங்கு பொறாமையும், பொய்யும், சூதும், வாதும் நிறைந்த மனிதர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன்.அவர்களால் படாதபாடும் பட்டிருக்கிறேன்.
நான் ஜாவா மற்றும் சி பிளஸ், விபி புரோகிராம்களில் நல்ல தேர்ச்சி அடைந்திருந்த போது, கரூர் கல்லூரியில் இருக்கும் கணிப்பொறி துறையில் சிஸ்டம் அட்மின்னாக நிர்வாகத்தின் சார்பில் சேவை செய்து வந்தேன்.இந்தக் கல்லூரியின் ஹெச் ஓடி அந்தக்கால ஃபோர்ட்டான், பாஸ்கல் லாங்குவேஜ்களைப் படித்து விட்டு, விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வந்த பிறது அதைப் பற்றிய அப்டேட்டட் செய்யாமல் இருந்தார். கல்லூரியின் கணிப்பொறி துறைப் படிப்பில் ஜாவா புரோகிராம் புதிதாக வந்த போது, ஜாவா இயங்கு தளத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டியதாக இருந்தது.
இன்ஸ்டால் செய்து அதைப் பற்றிய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த ஹெச் ஓடியின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனக்குத் தெரியாது என்பதற்காக பிற லெக்சரரைப் படிக்க அனுமதிக்க மறுத்தார். அவரை மீறி பிற லெக்சர்களால் ஒன்றும் செயல்பட முடியவில்லை.
அதற்கு என்னை பலிகடாவாக்க முயற்சித்து, நான் பெண்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கட்டுக்கதைகளை பரப்பினார். கணிணி அறையின் ஆரம்பக் கதவில் ஒரு கண்ணாடி சதுரம் இருக்கும். அதில் காகிதத்தை அவரே ஒட்டி விட்டு அதை ஒரு சாட்சியாக்கினார்.
நிர்வாகத்தின் தலைவரும் நானும் பல விஷயங்களை தினம் தோறும் பகிர்ந்து கொள்வோம். அவரிடம் எதேச்சையாக பேப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் அந்த ஹெச் ஓடி என்னைப் பற்றிய கதையை அவிழ்க்க, இன்னொரு நொடி இங்கிருந்ந்தால் நடப்பதே வேறு என்றுச் சொல்லி சத்தமிட, அரண்டு ஓடி இருக்கிறார் அந்தப் பெண்மணி.
இதைப் போன்ற எண்ணற்ற கதைகளை அவர் பரப்பியதற்கு காரணம், அவரால் கணிப்பொறித் துறையின் மூலமாய் காசு பார்க்க முடியவில்லை என்பதுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் அசெம்பிளிங்கிலிருந்து, நெட்வொர்க் இன்ஸ்டாலேஷன் வரை அடியேனின் கண்ட்ரோலில் இருந்தது. அந்தக் காலத்தில் பிராண்டட் விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒன்றினை விலை கிட்டத்தட்ட 60,000 ரூபாய் இருந்தது. ஆனால் நான் அதே கான்ஃபிக்கில் நான் அசெம்பிள் செய்தது ரூபாய் 40,000 ஆயிரமாக இருந்தது. பிரைவேட்டாக கொடுத்தால் மேல் வரும்படி கிடைத்திருக்கும். என்னால் அது வரவில்லை என்பதால் என் மீது வன்மம் கொண்டலைந்தார் அந்தப் பெண்மணி.
தகுதியும், திறமையும் அற்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் ஆணுக்குப் பெண்ணும் சளைத்தவரல்ல என்பதையும் அறிந்து கொண்டேன்.
எங்கு பணிபுரிந்தாலும் இவர்களைப் போன்றவர்களை நாம் சந்திக்கலாம். என்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடியாய் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஆணாக இருந்தால் “ தனியாக பட்டயக் கிளப்பி” விட வேண்டும். பெண்ணாக இருந்தால் கேரக்டர் அசாசினேஷன் செய்து விட வேண்டும். ஏனென்றால் தானும் வாழாமல், பிறரையும் வாழ விடாமல் இருப்போரை என்ன செய்தாலும் அது குற்றமே ஆகாது.
இப்படிச் சொல்லும் நான் அந்த ஹெச் ஓடியைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டேன். என் மீது படுபயங்கர கோபத்தில் திரிந்தார். அது அவரின் பிரச்சினை அல்லவா? அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்ய முடியாதவாறு பார்த்துக் கொண்டேன்.