அன்பு நண்பர்களே,
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் பெயரில் ஏதேனும் ஒரு சொத்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஏதோ ஒரு இடத்தில் கையளவு நிலம் வாங்கிப் போட்டால் அது தரும் பெருமித உணர்ச்சியே வேறு. நிலம் வாங்கியவர்களுக்கு அடையாளம் என்று ஒன்று கிடைத்து விடும். இன்றைய கால கட்டத்தில் சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வருவாய்த் துறை (Revenue Department) கீழ் இருக்கும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தான் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)
பட்டா என்றால் என்ன?
=======================
ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
சிட்டா என்றால் என்ன?
======================
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.
அடங்கல் என்றால் என்ன?
========================
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.
'அ' பதிவேட்டில் ('A' Register) இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.
1.பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
3.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
4.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் என்றால் என்ன?
===============================================
நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.
இதுவரை ஒரு சொத்திற்கான பதிவேடுகள் என்னென்ன என்பதைப் பார்த்தோம். அடுத்து சொத்து வாங்கும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மாதம் மூன்று லட்சம் வருமானம் வரும் பண்ணை வீட்டுடன் கூடிய சொத்து ஒன்றினை விற்பனைக்காக, நிலத்தின் உரிமையாளர் ஃபார்ச்சூன் பிரிக்சிடம் கொடுத்திருக்கிறார். அச்சொத்து வேண்டுவோர் மேலும் விபரங்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸினை அணுகலாம்
தொடர்பு எண் : 0422 4275976
மேலும் விபரங்களுக்கு : http://www.fortunebricks.net
4 comments:
நல்ல பதிவு தங்கவேல் சார்.
உண்மைவிரும்பி.
மும்பை.
அன்பு நண்பருக்கு, நங்கள் வீட்டு மனை ஒன்றை கோவை புறநகரில் வாங்க உத்தேசித்து,
சென்று பார்த்து அட்வான்ஸ் 1001 /- , அந்த மனை வடக்கு நோக்கி உள்ளது , அதில் கிழவரத்தில் வட தெற்காக EB LINE செல்கிறது, பழைய ஒவ்நேர் அது ஒன்றும் ப்ராப்ளம் இல்லை, மின் வாரியத்தில் எழுதிவைத்தால் அந்த லைனை எடுத்து விடுவார்கள் என்று சொல்கிறார், அது தோட்டத்துக்கு போகும் லைன் ஆகையால் அந்த இடத்தை வாங்கலாமா வேண்டாமா சொல்லுங்கள்.
கார்த்திக் மனை நல்ல விலைபோகும் இடத்தில் இருந்தால் நிச்சயம் வாங்கலாம். இபி லைன் என்பது போஸ்ட் மரம் மூலம் செல்கிறதா இல்லையா என்பதினை தெரிவியுங்கள். மேலும் விபரங்களுக்கும் உதவிகளுக்கும்
எங்களை அணுகவும்.
மிக அவசியமும் பயனுமுள்ள பதிவு
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.