குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

Tuesday, May 29, 2012

ஐபிஎல் 420 கிரிக்கெட் - தினமணி தலையங்கம்

அடியேன் ஏப்ரல் 16-20, 2012 பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுதிய கட்டுரையின் பெயர் “ஐபிஎல் 420 கிரிக்கெட்”. கட்டுரை வெளிவந்த புதிதில் பல நண்பர்கள் சும்மாவாச்சும் எழுதி இருக்கின்றீர்கள் என்று என்னிடம் “கருத்து” தெரிவித்தார்கள். அவர்களுக்கெல்லாம் சிரிப்பையே பதிலாக்கினேன்.

அதைத் தொடர்ந்து வெளி வந்த ஐபில் சூதாட்டம், மது, மாது கொண்ட்டாட்டங்களைக் கண்டு, “கருத்து” தெரிவித்த நண்பர்களே “என்னப்பா, அப்படியே நடக்கிறது” என்று மீண்டும் “கருத்து” தெரிவித்தார்கள்.

இன்றைய தினமணி தலையங்கமும், அடியேனின் கட்டுரையின் கருத்தும் ஒன்றாய் இருப்பதை பாருங்கள். ஐபிஎல் கருப்புப் பண முதலைகளின் பிசினஸ் ஏரியாவாக இருப்பதையும், கிரிக்கெட் கிரிக்கெட் என்று மக்கள் ஏமாந்து முட்டாளாக இருப்பதையும் படித்து, அதில் எவராவது ஒரு சிலராவது  உணர்ந்து திருந்துவார்கள் என நம்புகிறேன்.

-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்.


தினமணியில் வெளியான 28.05.2012 தலையங்கத்தின் லிங்க்


அடியேனின் கட்டுரை 

ஐபிஎல் 420 கிரிக்கெட்

இந்தியாவில் 1990க்குப் பிறகான அரசியல் உலகில் பணம் சம்பாதிப்பதை பிரதானமாக அரசியல்வாதிகள் நினைக்க ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டார்கள். தங்களுக்கு என  தனியாகவும், தான் சார்ந்த கட்சியின் பெயராலேயும் பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தனர். இந்திய ஊழல்களின் ஆரம்பம் 1990க்குப் பிறகே சூடு பிடிக்க ஆரம்பித்தன. பொது நலத்தின் போர்வைக்குள்ளே சுய நலத்தின் நரி புகுந்தது. அரசியலிலில் நாகரீகம் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போனது. கொள்கைகள், கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் எல்லாம் மாற்றத்துக்கு உரியனவாய் மாறிப் போயின. பதவி இருந்தால் பத்து மட்டுமல்ல பத்து லட்சம் கோடியும் கிடைக்கும் என்று சமூகத்தில் எண்ணங்கள் ஊன்ற ஆரம்பித்தன. கட்சிப் பதவிக்கு கோடிகளைக் கொட்டி சீட் வாங்க ஆரம்பித்தார்கள். சமூகம் பணம் இல்லாத நல்லவனுக்கு கொடுக்கும் மரியாதையை விட, பணமுள்ள கெட்டவனுக்கு கொடுக்க ஆரம்பித்தது. ஊழலின் அசைக்க முடியாத புல் விதை இங்கு விதைக்கப்பட்டது.

மஹாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்திற்கு அழைக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த வேலையையும், குடும்பத்தையும் துறந்து களத்துக்குள் இறங்கிய இந்தியர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று ஓட்டுப் போட “பணம்” பெற்றுக் கொள்ளும் சுய நல இந்தியர்கள் இருக்க காரணம், பதவி வெறியும், எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க துடிக்கும் நபர்கள்தான் காரணம்.

முன்பு காந்தியின் எண்ணமும் செயலும் பொது நலத்தை முன்னிறுத்தி இருந்தது. பொது மேடையில் சுய நல பரப்புரைகள் இடம் பெறாது. இன்றோ அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் வரிசை கட்டி சாலைகளில் பறக்கும் கார்கள் என்ன? சாலையோரம் நடப்படும் ட்யூப் லைட்டுகள் என்ன, கொடிகள் என்ன, தோரணம் என்ன? ஆட்டம் என்ன பாட்டம் என்ன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இவ்வளவு பணத்தைக் கொட்டி செலவு செய்து விட்டு, பதவிக்கு வந்த பிறகு சும்மாவா இருப்பார்கள். தவறு செய்பவர்களுக்கு ஓட்டுப் போட்டு அனுப்பி வைக்கும் இந்தியர்களின் அறிவுக் கூர்மையை என்னவென்று மெச்சுவது? மாறிப் போன மக்களால் ஊழல் இந்தியாவின் முகமாய் மாறிப் போனது. இந்தியா என்றால் ஊழல், ஊழல் என்றால் இந்தியா என்றாகிப் போனது.

ஊழல் செய்து பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது என்று அந்த ஊழல் பணத்தையே முதலீடாக்கி மேலும் மேலும் கொள்ளை கொள்ளையாய் வசூலிக்க வேண்டுமென்ற இவ்வகை ஊழல்வாதிகளின் ஆசையை நிறைவேற்ற வந்தது தான் இந்தியன் ப்ரீமியர் லீக் என்கிற ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட்.

ஐபிஎல் டி20  கிரிக்கெட் எப்படி ஊழல்வாதிகளின் விளையாட்டாய் மாறியது என்பதைச் சுருக்கமாய் இனி பார்ப்போம்.

என் ஆர் ஐ என்றுச் சொல்லக்கூடிய வெளி நாடு வாழ் இந்தியர்கள் அதாவது வெளி நாடுகளில் வசித்து பிசினஸ் செய்து பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள், அப்பணத்தை எளிதில் இந்தியா கொண்டு வரும் படியான இந்தியப் பொருளாதார விதிகள் வெகு ஜாக்கிரதையாக வகுக்கப்பட்டன. இந்த விதிகளைப் பயன்படுத்திக் கொண்டும், இந்தியா சில நாடுகளுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் படியும் என் ஆர் ஐ பிசினஸ் மேன்களைப் பினாமியாக வைத்துக் கொண்டு பெரும்பான்மையான கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும், சில நாடுகளின் வழியாக கருப்புப் பணத்தை மூலதனமாய் மாற்றிக் கொண்டு, இந்தியாவில் பிசினஸ் செய்ய, இந்த ஐபிஎல் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தனர். டி20 கிரிக்கெட் விதிகளில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராய் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பான்மையான அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளும் தங்கள் கறுப்புப் பணத்தை வெகு எளிதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலீடு செய்கின்றனர். திரு லலித் மோடியும், திரு சசி தரூரும் கொச்சி அணியில் செய்த தில்லுமுல்லுகளை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருக்கலாம்.

டி20 கிரிக்கெட் மூலமாய் மிகப் பெரிய லாபம் கிடைக்குமா என்று சந்தேகிப்பீர்கள். ஸ்டார் டிவி ஒரு போட்டி ஒளிபரப்பிற்கு 40 கோடி கட்டணம் கொடுத்து ஏலமெடுத்து இருக்கிறது. இந்த நாற்பது கோடியை இரண்டு மணி நேரத்தில் எப்படி எடுப்பார்கள் என்று ஒரு நிமிடம் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒளிந்திருக்கும் ரகசியம் புலப்பட ஆரம்பிக்கும். ஒளிபரப்பிற்கான உரிமை, கட்டண உரிமை போன்றவற்றில் மட்டும்தான் வருமானம் வரும் என்று அப்பிராணிகள் நினைக்கக் கூடும். அது ஒரு சிறிய வருமானம் என்றால் மிகப் பெரிய வருமானம் வரும் வழி ஒன்று டி20 கிரிக்கெட்டில் இருக்கிறது.

விளையாட்டில் வெற்றி பெற்றால் பரிசுகள் கிடைக்கும். தோற்றால் ஒன்றும் கிடைக்காது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் டீம்களின் ஓனர்களுக்கு தோற்றாலும், வெற்றி பெற்றாலும் கோடி கோடியாய் ரகசியமாய் கொட்டும். தன் டீம் தோற்பதற்காகவா இத்தனை கோடிகளை கொட்டி விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவார்கள்? யோசித்துப் பாருங்கள் காரணம் உங்களுக்கு நன்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் தொடர்ந்து படியுங்கள். சில ஐபி எல் கிரிக்கெட் டீம்கள் ஜெயிக்கவே இல்லையே எப்படி அவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்? அதற்கு எப்படி பணம் வருகிறது என்று கேட்டுப் பாருங்கள். விபரம் தெரியும். இது ஒன்றும் பத்து ரூபாய் கத்தரிக்காய் வியாபாரம் இல்லை. இது ஒரு விதமான சித்து விளையாட்டு வியாபாரம். பணமிருப்போர் உல்லாச அறைகளிலே அழகிகளின் மடிகளில் படுத்துக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் 420 மன்னிக்கவும் டி20 கிரிக்கெட்.

தோற்றாலும் பணம் எப்படிக் கொட்டும் என்று இன்னும் புரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம்.  ஷாருக்கான் ஏன் கிரிக்கெட் டீமை வாங்க வேண்டும்? அவர் டீம் தோற்றால் நஷ்டமாகுமே?  நஷ்டமானால் போட்ட காசு புஸ்ஸாகிவிடுமே? கிரிக்கெட் மீதிருக்கும் ப்ரியத்தாலா ஷாருக்கான் ஐபிஎல் டீமை வாங்கினார்? நிச்சயமாக இருக்கவே முடியாது. போடும் பணம் இரட்டிப்பு அல்ல பல மடங்கு அதிகமாக வந்தால் தான் அல்லவா பணக்காரர்கள் முதலீடு போடுவார்கள். இல்லையென்றால் அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பார்களா? ஆகவே பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டால் சாதாரணமாய் கிடைக்கும் வருமானத்தை விட மிக அதிக வருமானம் கொட்டும் என்பதற்காகத்தானே முதலீடுகளை கொட்டுகின்றார்கள். உடனே ஷாருக்கான் துபாயில் வாங்கி இருக்கும் இந்தியர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வில்லா உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கிரிக்கெட்டை முன் வைத்து உலகமெங்கும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தச் சூதாட்டத்தை யாருக்கும் தெரியாமல், வெகு சாமர்த்தியமாக, ரகசியமாக இந்தியாவில் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் வருகின்றார்கள். உலகப் போலீஸ் இண்டர் போலால் கூட கண்டுபிடிக்க முடியாது என்று இச்சூதாட்டத்தை நடத்துபவர்கள் மார்தட்டிக் கொள்வார்கள்.

சூதாட்ட ரகசியத்தை இப்போது பார்க்கலாம். எக்ஸ் என்ற டீம் எல்லாப் போட்டிகளிலும் ஜெயித்துக் கொண்டே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது பலரும் பெட் கட்டுவார்கள். பெரும் பணம் குவியும். எக்ஸ் அணிதான் ஜெயிக்கும் என்று ஏகப்பட்ட பேர் கிரெடிட் கார்டு மூலமும், இன்னபிற உண்டிகள் மூலமும் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்கள். மிகப் பெரும் பணம் வசூல் ஆனது தெரிந்தவுடன் சூதாட்டத்தின் அடுத்த வேலை ஆரம்பிக்கும். யாரோ ஒருவர் ஒய் என்ற அணி ஜெயிக்கும் என்று பெட் கட்டுவார். எக்ஸ் தோற்றால் ஒய்யுக்கு அத்தனை பணமும் வந்து விடும் அல்லவா? அதற்கேற்ப சிக்னல்கள் தண்ணீர் பாட்டில்கள் மூலமாகவோ, காயமடைந்து விட்டார் என்பதாகவே, கணுக்கால் உடைந்து விட்டது என்பதாகவோ சம்பந்தப்பட்ட பிளேயருக்குக் கொண்டு செல்லப்படும். முடிவில் எக்ஸ் தோற்று ஒய் ஜெயிக்கும்.  எக்ஸ் ஜெயிக்கும் என்று பணம் கட்டியவர்களின் பணம் ஹோகயா ஆகி விடும். ஒய் மீது பணம் கட்டியவர்களிடமிருந்து தோற்ற அணியின் அதாவது எக்ஸுக்கு பேசப்பட்ட பங்கு சென்று சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கு ஒன்றினை மீண்டும் நினைவு படுத்துகிறேன். விலை கொடுத்து வாங்கப்படும் விளையாட்டு வீரர்கள், அணியின் முதலாளி சொல்வதைக் கேட்பார்களா  இல்லை கேட்கமாட்டார்களா?  என்பதற்கான விடையில் இருக்கிறது டி20 கிரிக்கெட் 420 கிரிக்கெட்டான மாறியதன் காரணம்.

ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்பது போல அரசியல் புகுந்த இடம் ஊழலாகிப் போகும் என்பதற்கு பவித்திரமான விளையாட்டும் மாறிப் போனது. வெறும் பதினோறு நாடுகளில் விளையாடப்படும் கிரிக்கெட்டை பணம் கொழிக்கும் கற்ப தருவாய் மாற்றிக் காட்டி, அதையும் ஊழல் மயமாக்கியதோடு இல்லாமல் இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகளும், சில சுய நலமிகளும். டி20 கிரிக்கெட்டினை ஊழல் செய்ய உருவாக்கப்பட்ட விளையாட்டாய் மாற்றி விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாய் கிரிக்கெட் மாறி இருக்கிறது. வரப்போகும் வரலாற்றுப் பக்கங்களில் கிரிக்கெட் என்பது “திருடர்களின் விளையாட்டாய்” பதியப் படத்தான் போகிறது. உண்மை காற்றுப் போல. அது ஒரு நாள் புயலாய் மாறும் போது பொய் என்ற நாற்றமெடுக்கும் தோற்றம் கரைந்து போய் விடும். டி20 ஐபிஎல் ஊழலுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு என்பது வரலாற்றில் பதியப்படும். அப்போது மக்களெல்லாம் “இப்படி ஏமாந்து விட்டோமே?” என்று பெருமூச்செறிவார்கள் என்பது நிச்சயம்.

அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டும், காதில் ரேடியோவை வைத்துக் கொண்டும், இணைய தளங்களில் டி 20 கிரிக்கெட்டின் ரிசல்ட்டைக் கவனித்துக் கொண்டும், அது பற்றிய கமென்டுகளை பேசிக் கொண்டும், விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர் என்றுச் சொல்லி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களை ஏமாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை கோடி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்போரை புத்திசாலிகள் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்னதான் ஊழலாக இருந்தாலும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் என்பது மிக நல்ல வியாபாரம் என்ற உண்மையை நான் உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

-     கோவை எம் தங்கவேல், கோயமுத்தூர் ( 30/03/2012)

Monday, June 6, 2011

தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்பேற்றால்

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். எல்கேஜியிலிருந்து மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, லெக்சரர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். மிகப் பெரும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள், பேராசிரியர்கள், பெரும் கோடீஸ்வரர்களை அந்தக் கால கட்டத்தில் சந்தித்து இருக்கிறேன். எந்தளவுக்கு நல்ல எண்ணங்கள் கொண்டவர்களைச் சந்தித்தேனோ அதை விட பலமடங்கு பொறாமையும், பொய்யும், சூதும், வாதும் நிறைந்த மனிதர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன்.அவர்களால் படாதபாடும் பட்டிருக்கிறேன்.

நான் ஜாவா மற்றும் சி பிளஸ், விபி புரோகிராம்களில் நல்ல தேர்ச்சி அடைந்திருந்த போது, கரூர் கல்லூரியில் இருக்கும் கணிப்பொறி துறையில் சிஸ்டம் அட்மின்னாக நிர்வாகத்தின் சார்பில் சேவை செய்து வந்தேன்.இந்தக் கல்லூரியின் ஹெச் ஓடி அந்தக்கால ஃபோர்ட்டான், பாஸ்கல் லாங்குவேஜ்களைப் படித்து விட்டு, விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வந்த பிறது அதைப் பற்றிய அப்டேட்டட் செய்யாமல் இருந்தார். கல்லூரியின் கணிப்பொறி துறைப் படிப்பில் ஜாவா புரோகிராம் புதிதாக வந்த போது, ஜாவா இயங்கு தளத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டியதாக இருந்தது.

இன்ஸ்டால் செய்து அதைப் பற்றிய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த ஹெச் ஓடியின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனக்குத் தெரியாது என்பதற்காக பிற லெக்சரரைப் படிக்க அனுமதிக்க மறுத்தார். அவரை மீறி பிற லெக்சர்களால் ஒன்றும் செயல்பட முடியவில்லை. 

அதற்கு என்னை பலிகடாவாக்க முயற்சித்து, நான் பெண்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கட்டுக்கதைகளை பரப்பினார். கணிணி அறையின் ஆரம்பக் கதவில் ஒரு கண்ணாடி சதுரம் இருக்கும். அதில் காகிதத்தை அவரே ஒட்டி விட்டு அதை ஒரு சாட்சியாக்கினார்.

நிர்வாகத்தின் தலைவரும் நானும் பல விஷயங்களை தினம் தோறும் பகிர்ந்து கொள்வோம். அவரிடம் எதேச்சையாக பேப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் அந்த ஹெச் ஓடி என்னைப் பற்றிய கதையை அவிழ்க்க, இன்னொரு நொடி இங்கிருந்ந்தால் நடப்பதே வேறு என்றுச் சொல்லி சத்தமிட, அரண்டு ஓடி இருக்கிறார் அந்தப் பெண்மணி.

இதைப் போன்ற எண்ணற்ற கதைகளை அவர் பரப்பியதற்கு காரணம், அவரால் கணிப்பொறித் துறையின் மூலமாய் காசு பார்க்க முடியவில்லை என்பதுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் அசெம்பிளிங்கிலிருந்து, நெட்வொர்க் இன்ஸ்டாலேஷன் வரை அடியேனின் கண்ட்ரோலில் இருந்தது. அந்தக் காலத்தில் பிராண்டட் விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒன்றினை விலை கிட்டத்தட்ட 60,000 ரூபாய் இருந்தது. ஆனால் நான் அதே கான்ஃபிக்கில் நான் அசெம்பிள் செய்தது ரூபாய் 40,000 ஆயிரமாக இருந்தது.  பிரைவேட்டாக கொடுத்தால் மேல் வரும்படி கிடைத்திருக்கும். என்னால் அது வரவில்லை என்பதால் என் மீது வன்மம் கொண்டலைந்தார் அந்தப் பெண்மணி. 

தகுதியும், திறமையும் அற்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் ஆணுக்குப் பெண்ணும் சளைத்தவரல்ல என்பதையும் அறிந்து கொண்டேன்.

எங்கு பணிபுரிந்தாலும் இவர்களைப் போன்றவர்களை நாம் சந்திக்கலாம். என்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடியாய் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஆணாக இருந்தால் “ தனியாக பட்டயக் கிளப்பி” விட வேண்டும். பெண்ணாக இருந்தால் கேரக்டர் அசாசினேஷன் செய்து விட வேண்டும். ஏனென்றால் தானும் வாழாமல், பிறரையும் வாழ விடாமல் இருப்போரை என்ன செய்தாலும் அது குற்றமே ஆகாது.

இப்படிச் சொல்லும் நான் அந்த ஹெச் ஓடியைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டேன். என் மீது படுபயங்கர கோபத்தில் திரிந்தார். அது அவரின் பிரச்சினை அல்லவா? அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்ய முடியாதவாறு பார்த்துக் கொண்டேன்.