குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 17, 2022

பார்ப்பனர்களின் வெவ்வேறு ஜாதிகள் - மலைக்க வைக்கும் ஊடுறுவல்

இந்திய நாகரீகத்தை ஆரியர் நாகரீகமாக மாற்ற இதுவரை பார்ப்பனர்களால் கையாளப்படும் வழிகளாக தேவ நேயப்பாவாணார் எனும் தமிழறிஞர் தான் எழுதிய பண்டைத் தமிழர் நாகரீகம் எனும் நூலில் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

ஒரு நாட்டை போரில் வென்று ஆக்கிரமிப்பது வேறு, படிக்காதவர்கள் நிறைந்த இந்தியாவில், கல்வி அறிவு பெற்ற சமூகமாக இருந்த பார்ப்பனர்கள் தங்கள் சதியால் இந்திய நாகரீகத்தை அவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் என்று நிறுவ இன்றும் துடிப்பாக துல்லியமாகச் செயல்பட்டு வருகின்றார்கள்.
 • பழந்தமிழ் நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும்
 • பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல்
 • தமிழ் நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதகாலத்தினின்றும் தொடங்கல்
 • தென்னாட்டு பழங்குடி மக்களாகிய தமிழரை வந்தேறிகளாகவும் கலவையினமாகவுங் காட்டல்
 • குமரிக்கண்ட இடப்பெயர்களையும் தெய்வப்பெயர்களையும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டல்
 • கட்டுக்கதைகளையும் ஆரியச் சொற்களையும் புகுத்தி, இருபெருந்தமிழ்ச் சமயங்களாகிய சிவ நெறியையும், திருமால் நெறியையும் ஆரிய வண்ணமாக்கலும், தமிழைக் கோயில் வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளலும்
 • மூவேந்தர் பேதமையால் ஆரியம் வேரூன்றிய கடைக்கழகக் கால நூல்களினின்று ஆரியச் சார்பான சான்று காட்டல்
 • தமிழ் வடமொழிக்கிளையென்று அயலார் கருதுமாறு, அடிப்படைத் தமிழ்ச் சொற்கட்கெல்லாம் வலிந்தும் நலிந்தும் வடசொற் மூலங்காட்டல்
 • வடமொழி தேவமொழியென்றும், பிராமணர் நிலத்தேஅர் (பூசுரர்) என்றும், வேதக்கால ஆரியப் பூசாரியால் புகுத்தப்பட்ட ஏமாற்றுக் கருத்துகளையும், பிறப்புத் தொடர்பான குலப்பிரிவினையையும் தொடர்ந்து போற்றல்
 • சமயச்சார்பான சொற்பொழிவுகளாகாற் பொதுமக்களை அறியாமையில் அமிழ்த்துதல்
 • உண்மை கூறும் தமிழ்ப் புலவர்க்கு அலுவற் பதவியில்லாதவாறு செய்தல்
இவ்வாறு 1966 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதுகிறார். இந்தக் கால கட்டத்தில் நான் பிறக்கவே இல்லை. பார்ப்பன ஊடுறுவல்கள் இன்னும் இருக்கின்றன. வரும் காலங்களில் எழுதுகிறேன்.

ஆரியர்களின் ஊடுறுவல்கள் பல தளங்களில் கிடைத்தவை தொகுப்பாக:-  

வேத ஆரிய பிராமணர்களின் வேர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன். சரஸ்வதி நதிக்கு அருகில் தங்கியிருந்ததாகக் கூறப்பட்டதில் வரலாற்று  உண்மை என்னவென்றால் சரஸ்வதி நதி என்பது  ப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு அருகில் உள்ள ஹரஹ்வைதி நதி ஆகும். 

சரஸ்வதி பகுதியில் இருந்து கங்கை பகுதிக்கு வந்த பிராமணர்கள் தங்களை கௌட சரஸ்வத பிராமணர்கள் என்று அழைத்தனர்.

நாகர் பிராமணர்கள் முதன்முதலில் குஜராத்துக்கு கி.பி. 404 ஆண்டில் குடியேறினர். கிரீஸ், மாசிடோனியா, சிரியா அல்லது இந்த இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் நாகர் பிராமணர்கள் என  வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

இந்திய அறிஞர் ராமகிருஷ்ண கோபால் பண்டார்கர் சித்பவான்களின் பெயர்களுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள புவியியல் தளங்களுக்கும் இடையே ஒற்றுமையைக் காட்டியுள்ளார்.

கி.பி 1120 இல் அரேபியர்களுடன் கூட்டு சேர்ந்த பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார்.

1311 இல் மாலிக் காஃபூர் பாண்டிய பேரரசின் மீது போர் தொடுத்த பிறகு தமிழர்கள் அரசு முடிவுக்கு வந்தது. தாக்குதலுக்குப் பிறகு, பெரும்பாலான தமிழ் பிராமணர்கள் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.  கி.பி 1529 இல் மதுரை நாயக்கர் ஆட்சி நிறுவப்பட்டபோது மகாராஷ்டிராவிலிருந்து ஒரு புதிய பிராமணர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

சர் சிபி. ராமசாமி ஐயர் தனது வாழ்க்கை வரலாற்றில் தனது முன்னோர்கள் மகாராஷ்டிராவில் உள்ள தேஷ் பகுதியில் இருந்து குடிபெயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

நம்பூதிரி பிராமணர்கள் உத்தரபாஞ்சால நாட்டின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து அதாவது பண்டைய நேபாளத்திலிருந்து கர்நாடகாவிற்கு கடம்ப மன்னன் மயூரவர்மாவின் ஆட்சியின் போது கி.பி 345 இல் குடிபெயர்ந்தனர்.

கேரளா துளு-நேபாளத் தாய்வழி சாமந்த ஆட்சியாளர்கள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானகத்தால் வழங்கப்பட்டது. இதனால் கி.பி.1335ல் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் ஆதரவைப் பெற்ற நேபாள பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் கேரளா வந்தது.

நம்பூதிரிகளால் எழுதப்பட்ட கேரளோல்பத்தி மற்றும் கேரள மகாத்மியம் போன்ற அனைத்து நூல்களும் பண்டைய நேபாளத்தின் தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்தில் இருந்துள்ள தங்கள் தோற்றத்தைக் குறிப்பிடுகின்றன.

கிபி 1311 இல் பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மாலிக் காஃபூர்தான் துளு-நேபாள மக்களுக்கு அதாவது நம்பூதிரி நாயர் மற்றும் சாமந்தா ஆட்சியாளர்களுக்கு கேரளாவின் மேலாதிக்கத்தை வழங்கினார்.

பழைய செப்பேடுகளில் அக்ரஹாரம் என்பது ஊரிலிருந்து ஒதுக்குபுறமாக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகவே பதியப்பட்டிருக்கிறது. நாளடைவில் கோவிலை உருவாக்கி, பூசையை உருவாக்கி பாமர மக்களிடம் இல்லாத பொய்களையும், புரட்டுகளையும் புராணங்கள், வேதங்கள் என்றுச் சொல்லி ஏமாற்றி ஊரின் நடுவில் அமர்ந்து கொண்டனர்.

அதுமட்டுமல்ல, இந்தியா முழுமையும் நம்பூதிரி, ஐயர், ஐயங்கார், முகர்ஜி, பேனர்ஜி, சாட்டர்ஜி, சித்பவன் (ஆர்.எஸ்.எஸ் தலைமை வகிக்கும் பிராமணர்கள்), பண்டிட், பட்டேல், மிஸ்ரா என்ற பெயர்களில் தங்களை வேறு இனமாக காட்டிக்கொண்டு, இந்தியா முழுமையும் ஊடுறுவி இருக்கிறார்கள் என்று தொல் திருமாவளவன் பேசி இருப்பதைப் பாருங்கள்.


இந்தியாவை இவர்களிடமிருந்து மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானதா என்றால் எளிதுதான். 

தமிழர்களுக்கு பார்ப்பனிய நலனுக்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போல ஒரு அமைப்பும் இல்லை. 

பார்ப்பனியம் எப்படி ஒரு அமைப்பாக உலகெங்கும் சாதி வன்மத்தை இன்னும் முனை கருகாமல் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதற்கு 2002ம் ஆண்டில் வெளியான “The Foreign Exchange of Hate - IRDF and the American Funding of Hate" என்ற புத்தகத்தில் இருந்து ஒரு விளக்கப்படம் கீழே. 

காலத்தின் கட்டாயமாக அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு அமைப்பினை பார்ப்பன சதிகளுக்கு உட்படாமல் உருவாக்கிட வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் வாரிசுகள் படிப்பின்றி, கல்வியின்றி பார்ப்பன அடிமைகளாக கிடக்க நேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கும் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும். கோவில்களுக்குள் பூசை செய்தல் வேண்டும்.

மேற்கண்ட செய்திகள் எல்லாம் காலம் காலமாக பார்ப்பனியத்துக்கு, அதன் சாதிய வன்மத்துக்கு எதிராக மானுடத்தின் மீது அன்பு கொண்டவர்களால் எழுதப்பட்டது.  இது எதுவும் என் கருத்து அல்ல. நான் படித்தவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மை எதுவெனப் புரிந்து கொள்ள முயலுங்கள். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.