குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 8, 2022

ஸ்டாலினிசம் (2) - நான் முதல்வன்


ஆட்சிக்குப் பொறுப்பேற்றதும் அவர் தன்னை மக்களுக்கான ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்யும் ஊழியன் நான் என்று பெருமைப்பட்டார்.

அவர் தன் அமைச்சரவையை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தகுதியானவர்களுடன் உருவாக்கினார். ஒவ்வொரு அமைச்சர்களையும் மதியூகிகளாக தேர்ந்தெடுத்தார்.

தன் புதிய அரசியல் பயணத்தை, தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டுமென்ற உன்னத நோக்கில் தொடங்கினார்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் எனப் பேசுகிறார். 

கண்ணிய அரசியல். 

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலால் காட்டுகிறார்.

கல்வி கரையில, கற்பவர் நாற் சில. கரையிலாக் கல்வியை எல்லோருக்கும் கிடைத்திட ஆவலாய் பணி செய்கிறார். 

மாணவர்களிடையே, உங்கள் தகப்பன் இடத்தில் இருந்து சொல்கிறேன், “நன்றாய் படியுங்கள்” என்று கேட்கிறார்.

நான் முதல்வன் என்பது அனைவருக்குமானது. 

ஒவ்வொருவரும் முதல்வன், எல்லாவற்றிலும் என்று மாணவர்களிடையே மன ஊக்கத்தை ஊக்குவிக்கிறார்.

கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்றதை பொய்யாக்க முனைகிறார். 

நானிருக்கிறேன் நீங்கள் கல்வி கற்க, கற்க பிச்சை எதற்கு என்று கேட்கிறார்.

தமிழர்களின் பிள்ளைகள் கல்வியில் முதல்வனாக வேண்டுமெனத் திட்டமிடுகிறார். 

அதற்கு சான்று, “ நான் முதல்வன்” திட்டம்.

உயர்கல்வி ஒவ்வொரு தமிழர்களின் பிள்ளைகளுக்கும் கிடைத்திட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

இதோ அதற்கான முன்னோட்டமாக தமிழக அரசின் இணையதளம்.

https://naanmudhalvan.tnschools.gov.in/home

இதோ இப்படித் தொடங்குகிறது இணையதளத்தின் ஆரம்பம்.

”9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இந்த இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.

நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன. “

தகவல்களின் சுரங்கமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையத்தில். மாணாக்கர்கள் தங்களின் ஐ.டி வழியாக உள் நுழைந்து தேவையான தகவல்களைப் பெற்றுப் பயனடைதல் அவசியம். பலர் இத்தகவல்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். ஏழைகளால் இயலாதே. அவர்களுக்காக துல்லியமான தகவல்களுடன் இந்த இணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நம் முதல்வர் மாணவர்களை முதல்வர்களாக்க உருவாக்கிய திட்டமிது. தமிழர்களின் குழந்தைகள் முதல்வன் என்ற தகுதியை அடைவதே, நம் முதல்வருக்கு மாணவர்கள் செலுத்தும் நன்றி.

ஸ்டாலின்ஷத்தின் இரண்டாம் பகுதி நான் முதல்வன்.0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.