குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 10, 2022

ஸ்டாலினிசம் (3) - உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே

1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதல் மேயர் சர்.பி.டி.தியாகராசர் வெற்றி பெற்றார். அந்த காலத்தில் நீதிகட்சி ஆட்சியிலிருந்தது. 1920 ஆம் ஆண்டுகளில் தான் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்க் மதிய உணவு அளிக்கப்பட்டது. 

அப்போதைய காலத்தில் அரசாங்கப் பள்ளிக் கூடங்களுக்கு தலையில் குடுமியுடனும், பஞ்சகச்சத்துடன் பள்ளிக்கு மிடுக்காகச் சென்று கொண்டிருந்த பிராமணப் பையன்களுடன், பிராமணர்களால் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களும் பள்ளிக்குச் சென்றனர். இதைக்கண்டு பொறுக்காத ஆட்சியில் அப்போது இருந்த பிராமணர்களும், பிராமண பத்திரிக்கைகளும் அரசில் நிதி இல்லை என்றும், இன்னும் பல்வேறு காரணங்களைச் சொல்லும் 01-04-1925 ஆம் ஆண்டு இந்த மதிய உணவுதிட்டம் நிறுத்தப்பட்டது. 

பிராமணர்களின் நய வஞ்சகத்தால் மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டவுடன் பள்ளிக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வருகை குறைந்தது. 

கல்வி கற்க இப்போது ஒன்றிய பிராமணிய ஜாதி கட்சி கொண்டு வரும் நுழைவுத் தேர்வுகள் இத்தகைய தடைகளே! பிரதமருக்கும், மந்திரிகளுக்கும் நுழைவுத் தேர்வு இல்லை. 

ஆனால் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு. 

ஏன்? ஏன்? 

ஒரே காரணம் பிராமணீயம். அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பிராமணிய அதிகாரிகளும், பி.ஜே.பி மட்டுமே.

அதன் பிறகு பல்வேறு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது நீதிக்கட்சி.

அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற கல்வி வள்ளல், எளிய மனிதர் காமராஜர் அரசு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. தமிழர்களுக்கு கல்வியே உயர்வினைத் தரும் என்று காமராஜர் நம்பினார். 

பஞ்சமும், பட்டினியுமாய் இருந்த இந்தியாவில் கல்வி கற்க வா என்றால் பசியா? கல்வியா என்று பார்க்கும் போது பசியே முன்னிலையில் நிற்கும். மதியம் சோறு போடுகிறோம், பிள்ளைகளைப் படிக்க அனுப்புங்கள் என்று தமிழக மக்களைக் கேட்டார். 

கல்விச்சாலையில் அறிவுப் பசியுடன், வயிற்றுப்பசியும் தீர்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த திராவிட கட்சியின் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவு சத்துள்ளதாக மாற்றப்பட்டது. கலைஞர் ஆட்சியில் இன்னும் கூடுதலாக மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டது.

இந்தியாவில் சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம். ஆனால் தமிழ் நாடு அதற்கு முன்பே கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்க ஆரம்பித்து விட்டது. பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

கொரானாவினால் சுமார் 40 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டதையும், ஒன்றிய அரசின் வரிக்கொள்ளையினாலும், ஒருவர் மட்டுமே உலகப் பணக்காரராய் இருக்க வேண்டுமென்பதற்காக பணிபுரியும் அரசினாலும் மக்கள் படும் துயரங்களைப் பட்டியலிட முடியாது.

பார்ப்பனிய ஜாதி கட்சியின் வரிப்பிடுங்கல் சட்டத்தினால், மக்களிடமிருந்து கட்டாயப்படுத்திப் பிடுங்கப்படும் பணத்தினாலும், உணவுப் பொருள்களின் விலை உயர்வினாலும், வேலை இன்றி தவிப்பதாலும் அவர்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் அளவு குறைந்திருப்பதை திரு.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்துள்ளார்கள். 

ஒன்றிய அரசு மக்களை வறியவர்களாக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி இலவசமே வழங்கக் கூடாது என்கிறது. 

பார்ப்பனிய ஜாதிக் கட்சி உறுப்பினரை வைத்து, இலவசம் எந்த மாநில அரசும் இலவசம் வழங்கக் கூடாது என உத்தரவிடக்கோரி,  உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, வரி செலுத்த மட்டுமே மக்கள் என்கிறது ஒன்றிய அரசு. அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்கிறது.

ஒன்றிய அரசினால் ஏழையாக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள், தற்போது அரசுப் பள்ளிகளில் படிப்பதற்கு வருகின்றார்கள். இந்த நிலையில் சதியால் ஏழைகளாக்கப்பட்ட இந்திய மக்களால் தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தான உணவினை எங்கனம் வழங்க முடியும் என்று மக்களின் வலியை உணர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின்.

மக்களை நேசிக்கும் ஒரு தலைவரால் தான், அவர்களுக்கு உள்ள சிரமம் பற்றி அறியமுடியும். 

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழர்களின் கஜானாவைக் கொள்ளை அடித்த நயவஞ்சக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஐந்து லட்சம் கோடி கடனையும் கருதாது, மக்கள் நலனே முக்கியம் என்ற மனிதாபிமானத்தில் உருவாக்கப்பட்டது தான் காலைச் சிற்றுண்டி உணவு திட்டம்.

விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்கான சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆரோக்கியத்துக்கான புரதச்சத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமினும் தாதுப்பொருட்களும் நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க வேண்டும். உணவிலிருந்து பெறக்கூடிய சத்துக்களில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ‘போலேட்’, ‘பி12’ மிக முக்கியமானவை. இரும்புச்சத்து மற்றும் ‘போலேட்’ உடலுக்கான ரத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு உகந்தது என்கிறது உணவு ஆராய்ச்சி.

இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டசத்து நிலை பற்றி எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10% வரை ரத்தசோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41% பேர் ‘போலேட்’ பற்றாக்குறையும், 7% பேர் ‘பி 12’ பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 

தற்சமயம் ஆரம்பப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும் 12 கிராம் புரதமும் கொடுக்கப்படுகிறது.  வாரத்தில் ஐந்து நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகிறது. முதல் ஐந்து நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார், கறிவேப்பிலை சாதம் வழங்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்கள் சாம்பார் சாதம், சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘மீல் மேக்கர்’ சேர்க்கப்பட்ட சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது.

இது போதாதென்று முதல்வர் நினைக்கிறார். இளம் சிறார்களுக்கு ஊட்டச்சத்து காலையிலேயே கொடுத்தல் அவசியம் என்று தகப்பன் நிலையிலிருந்து சிந்திக்கிறார். சட்டமன்றத்தில் 08.05.2022 அன்று காலை உணவுத் திட்டத்தினை அறிவிக்கிறார்.

அவரின் கடமை இதுவென நினைக்கிறார். திமுகவின் கொள்கையில் கடமை முதலில்.

தமிழகத்தில் மாநில அரசின் முழுமையான நிதியைக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37 ஆயிரத்து 740 மாணவ, மாணவிகளுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 

காலைச் சிற்றுண்டியாக அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாறி மாறி வழங்கப்படவுள்ளன. 

வாரத்தில் குறைந்தது 2 நாள்கள் உள்ளூா் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி தயாா் செய்யப்பட்டு வழங்கப்படும்.

அதுமட்டுமல்ல,  நுண்சத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டவும், மாணவர்களுக்குக் காய்கறி வளர்ப்பதற்குப் பயிற்சி அளிக்கவும், 10,000 பள்ளி வளாகங்களில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார். 

இதன்படி மதிய உணவு வழங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாணாக்கர்களுக்கு காய்கறிகள் வளர்க்கும் பயிற்சியும், அத்துடன் ஊட்டச்சத்துக்கு தேவையான உணவை ஒவ்வொரு பள்ளியும் உற்பத்திச் செய்து கொள்ளும் தன்னிறைவு உணவு உற்பத்தி செய்யும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.

இதுவரை எந்த அரசும் செய்யாத, எதிர்கால இந்தியாவிற்கு ஒப்பற்ற மக்களை ஒப்படைக்கும் கடமையாக இந்தக் காலைச் சிற்றுண்டி உணவு முதலிடம் வகிக்கும்.

தமிழர்களின் குழந்தைகளுக்கு எல்லாமும் கிடைத்து நிறைவு வாழ்க்கை வாழ வேண்டுமென்பது ஸ்டாலினிசம்.

ஸ்டாலினிசம் தமிழர்களின் உயர்வுக்கானது. ஸ்டாலின் எனும் ஒப்பற்ற தலைவரின் மனிதாபிமானத்தின், அற உணர்வின் வெளிப்பாடே ஸ்டாலினிசம்.

காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரையில் வரும் 15-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளாா்

ஸ்டாலினிசத்தின் ஒப்பற்ற திட்டமே சிறார்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.