குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 8, 2022

தமிழர்களின் சதிராட்டம் பிராமணர்களின் பரதநாட்டியமானதன் நயவஞ்சக வரலாறு (1)

சதியால் சதிராட்டம் எப்படி பரத நாட்டியமாக மாற்றப்பட்டது என பார்க்கலாம். தமிழர்களின் நாட்டியக்கலையை வந்தேறி பார்ப்பனர்கள் தங்களின் சொத்தாக மாற்றி வெற்றி கண்ட அவலம் இது. சூடு, சுரணையற்ற தமிழர்களின் நிலையை எடுத்துக் காட்டும் வரலாற்று உண்மை இது. 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை செய்த சண்முக ஷர்மா ஜெயபிரகாஷ் என்பவர் (கவனிக்க ஷர்மா என்பது பிராமண இனத்தின் ஒரு பெயர்) நவரசம் - நடனத்தின் அழகிய அனுபவம் என்ற கட்டுரையினை இலங்கையிலிருந்து வெளி வரும் கலைக்கேசரி என்ற பத்திரிக்கையில் எழுதி இருந்தார். அதில் வரும் ஒரு பத்தி கீழே.


மேற்கண்ட பத்தியில், இந்திய சாஸ்திரீய நடனங்கள் பரத நாட்டியம், கதகளி, மோகினியாட்டம், கதக், குச்சுப்புடி போன்ற நடனங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆண்ட போது, அரசவையில் நடன மகளிர் ஆடிய நாட்டியத்தின் பெயர் சதிராட்டம். 

அதை ஏன் இந்த ஷர்மா குறிப்பிடவில்லை?  என்ன காரணம் தெரியுமா?

டி.ராஜேந்தர் அவர்களின் மனைவி உஷா அவர்களின் சகோதரி சுவர்ணமுகி. எலும்பே இல்லாத பெண்மணி என்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டப்பட்டவர். சதிராட்டத்தில் நூறு கர்ணங்கள் உண்டு. அந்த நூறு கர்ணங்களையும் ஆடியவர் சுவர்ணமுகி. இவரின் தந்தை தான் இவருக்கு குரு. தந்தை பெயர் நினைவில் இல்லை.

சுவர்ணமுகியைக் கவுரவிக்க முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், சுவர்ணமுகியை அரசு நர்த்தகி என்ற பட்டம் கொடுத்து சதிராட்டத்தை அங்கீகரித்தார்.

சுவர்ணமுகி ஆடிய தமிழர் நடனத்தின் பெயர்.”சதிராட்டம்”. அதிலொன்று பாம்பு, மயில் நடனம். இவ்வாறு பிரபலமாக இருந்த சதிராட்டத்தை ஒரு பெண்மணி பிராமணர்களின் சொத்து என்பது போல மாற்றினார்.

அந்தக் காலத்தில் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒரே காரணத்தால் படிப்பறிவு பெற்ற பார்ப்பனர்கள், தமிழர்களின் வரலாற்றை தமிழை வைத்தே மாற்றி எழுதினர்.

தமிழர்களின் வாழ்வியலை, ஒவ்வொருவரும் திட்டமிட்டு மறைத்து எழுதினர். எந்த வகையிலும் தமிழர் பூமியில் தொடர்பு இல்லாதவர்கள் தங்களை, தமிழர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய ஆதாரங்களை நூல் வடிவில் கொண்டு வந்தனர். 

அந்தக் கால பட்டயங்களில் அக்ரஹாரம் என்பது அவர்கள் பகுதியாக இருந்தது. அதில் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்து கொண்டு வேதம், மந்திரம் போன்ற அடாத செயல்களைச் செய்து வந்தனர். காலப் போக்கில் தமிழர்களை ஊருக்கு ஒதுக்குப் புறமாய் மாற்றி விட்டனர்.

சரி, சதிராட்டம் என்கிறாயே, உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்பீர்கள். 

இலங்கையில் இருந்து வெளிவரும் கலைக்கேசரி ஜனவரி 2020 பத்திரிக்கையில் கார்த்திகா கணேசர் என்ற நாட்டியப் பெண்மணி எழுதிய கட்டுரையினை கீழே படியுங்கள். இக்கட்டுரையில் கூட சதிராட்டம் என்பதை வசதியாக மறைத்து எழுதி இருக்கின்றார் கார்த்திகா கணேசர். அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனாலும் அவர் எழுதவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

தமிழகத்திலிருந்து வெளி நாடுகள் சென்ற நாட்டிய பெண்களைப் பற்றிப் படியுங்கள்.  நன்றி : கலாக்கேசரி இதழ் மற்றும் நாட்டிய கலா நிதி கார்த்திகா கணேசர்.








தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு அரசுகள் சதிராட்டத்தைப் பாதுகாக்கவில்லை என்பதோடு கடந்து விடுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 

ருக்மணி தேவி அருண்டேல் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட சதியின் தொடர்ச்சியாக சதிராட்டம் அழிக்கப்பட்டது.  

தமிழனின் அற்புதமான நடனத்தை அழித்து, அதை தமிழர்களின் பூமியிலேயே வேறொரு பெயரில் மாற்றி, அதற்கொரு கலாசேத்ரத்தை உருவாக்கி, இன்னும் அகங்காரத்தோடு பரத நாட்டியம் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

முட்டாள் தமிழர்களும், மூளைகெட்ட இன துரோகிகளும் தன்னை நானொரு கன்னெடிகா என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் எட்டப்பன்களும் இருக்கும் தமிழ் நாட்டின் சாபக்கேடு இதுதான்.

எழுபது ஆண்டுகாலமாக ஒரு கோவிலுக்குள் சென்று இறைவனைப் பிரார்த்தனை செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வீரத்தை என்ன சொல்லி மெச்ச? மானம் கெட்டுப் போனவர்களாய் தமிழர்கள் கிடப்பதை எண்ணி வேதனை தான் விஞ்சுகிறது.

விரைவில் தொடரும் 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.