குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 29, 2020

காயங்களின் கதாநாயகன் – ஜோசப்


முதலில் இந்தப் பாடலைப் பார்த்து விடுங்கள். பின்னர் படிக்கச் செல்லலாம்.

இது விமர்சனம் அல்ல. படம் பார்த்த போது எனக்குள் உண்டான எண்ணங்கள். விமர்சனம் என்றால் ஒப்பீடு. ஒப்பீடுகள் ஒரு சில இடங்களில் சிலாகிக்க முடியாது. எங்கு விமர்சனம் செய்ய வேண்டுமோ அங்கு அவசியம் கருதி விமர்சிக்க வேண்டும். சினிமா விமர்சனம் என்பது கத்தி மீது நடப்பது போல. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போம். அதற்கேற்ற அறிவுதான் இருக்கும். அதை வைத்து சரியான விமர்சனத்தை எழுத முடியாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அறிவின் தன்மையைப் போல அவரவர்களின் விமர்சனம் வரும். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்தது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை விமர்சிக்க முடியாது. திட்டனும். ஏனென்றால் இன்று வரைக்கும் கிழவர்கள் குமரிகளை அதுவும் ரக ரகமான பாவைகளை காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதி திரைப்படம் பார்த்தேன். கதாநாயகியே இல்லை. படம் நன்றாக ஓடியதாக கேள்விப்பட்டேன். கார்த்தியின் ஹீரோயிசத்தை சகித்துக் கொண்டால் ரசிக்க முடியும்.

நாமெல்லாம் பிறரின் ஹீரோயிசத்தைப் படித்து வளர்ந்தவர்கள் தானே. முளைக்கும் போதே தவறான வழிகாட்டல். அது காடு செல்லும் வரை தொடர்கிறது.

இந்த உலகில் ஒரே ஒரு அப்துல் கலாம் தான் இருக்க முடியும். அவரைப் போல வாழ்க்கையை இன்னொருவர் வாழவே முடியாது. ஆனால் நாமோ அவரைப் போல, இவரைப் போல என பேசி தன் சுயத்தை அழித்துக் கொள்கிறோம்.

இனி படம்.

கொலை நடந்த வீடு. எஸ்.பி யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறார். அவர் தான் இந்த ஜோசப். பழைய ஸ்கூட்டரில் வருகிறார். கொலை நடந்த இடத்தை ஒவ்வொரு பகுதியாக பார்வை இடுகிறார். பேசுகிறார். கொலையாளியைக் காட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஆக்ஸிடெண்ட் என்று போனில் அழைக்கிறார் ஒருவர். ஹாஸ்பிட்டலில் ஸ்டெல்லா படுத்து இருக்கிறார். ஸ்டெல்லா இவரின் மனைவி. அழைத்தது ஸ்டெல்லாவின் இரண்டாவது கணவர்.

ஸ்டெல்லா உடனான வாழ்க்கை விரிகிறது. காவியம் போல. இடையில் ஒரு கிளைக்கதை. ஜோசப்பிற்கு முன்னால் காதலி ஒருத்தி உண்டு. அந்தக் காதல் நிறைவேறவில்லை. அவளை அவர் போலீஸாகி வேலை பார்க்கும் போது, ஒரு கொலை விசாரணைக்குச் சென்ற போது அழுகிய பிணமாகப் பார்க்கிறார்.

அதன் பாதிப்பில் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கிறார். ஸ்டெல்லா ஜோசப் இன்னொரு பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு மகளை ஜோசப்பிடம் விட்டு விட்டு சென்று விடுகிறார். இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜோசப் திருமணம் செய்யாமலே வாழ்கிறார்.

ஸ்டெல்லாவுக்கு மூளைச்சாவு ஏற்படுகிறது. உடலுறுப்புகள் தானம் கொடுக்கப்படுகிறது. ஜோசப் ஸ்டெல்லா ஆக்சிடெண்ட் ஆன இடத்தைப் பார்வையிடுகிறார். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிகிறார். அவரின் மகளும் இதே போல ஆக்சிடெண்டில் சிக்கி உயிரிழக்கிறார். அப்போது ஸ்டெல்லா இன்னொருவரின் மனைவி. அப்போது இருவரும் மகளின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய அனுமதிப்பார்கள். அடுத்த ஆக்ஸிடெண்ட் மரணம் ஸ்டெல்லா.

முதன் முதலாக காதலித்தவரும் கொலையாகிறார். மகளும், மனைவியும் இறந்து போகின்றார்கள். தன் மனவலியை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் இப்படத்தில். அவரின் வலியை நாம் உள்ளுக்குள் உணரலாம்.

கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிகிறார்.

தன்னையே, தன் உயிரை சாட்சியாக்கி விட்டு சாகிறார். கொலையாளிகள் சிக்குகிறார்கள்.

படம் முடிந்தது.

முதல் காதல் – மரணம் வரை மறையாத உணர்வு. ஜோசப் ஏழை என்பதற்காக அக்காதலை இழக்கிறார். காதலியோ இன்னொருவருடன் வாழ்கிறார்.

இரண்டாவது வாழ்க்கை. முதல் காதலியின் மரணத்தின் வலியால் மனைவியை இழக்கிறார். அதை அவளிடம் தாமதமாகச் சொல்கிறார். இருந்தும் என்ன பயன்? அவள் வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெண்கள் அவசர புத்திக்காரர்கள் என்பார்கள். ஆண்களின் உணர்வுகள் சினிமாத்தனமானவை அல்ல. ஒரு முழுமையான ஆண் தன் ஆசாபாசங்களைக் குறைத்துக் கொள்வான் காலத்தின் சூழலுக்கு ஏற்ப. ஆனால் பெண்களில் பலர் அவ்வாறு இருப்பதில்லை.

இன்றைக்கும் என் காதல் மனைவி தன் மகளிடம் ”உங்கப்பா, முன்ன போல இல்லை” என சொல்லிக் கொண்டிருப்பார்.. எனக்குள் ஆயாசம் தான் ஏற்படும். எப்போதும் சினிமா கதாநாயகர்களைப் போல காதலித்துக் கொண்டிருக்க முடியுமா?

மகள் பெரிய பெண்ணாகி விட்ட நாள் முதல் கொண்டு, மனைவியின் முகத்தை காதலுடன் பார்க்க் கூட முடியவில்லை. என் மனைவியின் மீதான காதல், என் மகளின் மீது அன்பாக மாறிப் போனது. அரும்பு மீசை தழுவ மகனைப் பார்க்கும் போது என்னால் வேறொரு பெண்ணை பார்க்கவே முடியவில்லை. வயது கூட கூட, உணர்வுகளும் மாற்றமடைகின்றன. ஆனால் பெண்களோ…??? அவர்களின் உணர்வுகளோ? என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது. அவர்கள் என்றைக்குமே உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் தூங்கும் எரிமலை போல.

ஜோசப் பெரிய பெண்ணாகிய தன் மகளை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் வாசலில் விட்டு வருவார். அப்போது ஸ்டெல்லாவைப் பார்ப்பார். 

அந்தக் காட்சியைப் பார்த்த போது எனக்குள் எழுந்த வேதனையை என்னவென்று சொல்வது. பெண்களால் எப்போதுமே உண்மையானவைகளை அறிந்து கொள்ளவே முடியாதா? அந்தக் காட்சி என் மனதுக்குள் நின்று கொண்டு இரண்டு நாட்களாக பாடாய் படுத்தியது. அவசரம் ஸ்டெல்லாவுக்கு. ஜோசப் கடைசி வரையில் இன்னொரு பெண்ணை நினைத்துக் கூட பார்க்காமல் வாழ்வார்.

ஸ்டெல்லாவுடன் ஜோசப்பின் வாழ்க்கை ஒரு பாடலில் விரியும் அழகான ஆண் மயில் பெண் மயிலை ஈர்க்க விரிக்கும் இறகுகளைப் போல. ஒரு காட்சியில் ஸ்டெல்லா குளித்து விட்டு, கூந்தலில் எண்ணை மிளிரும் அழகோடு, பின்னாலே மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொண்டு, ஜோசப்பை திரும்பி பார்த்து, ஒரு பார்வை பார்ப்பார். அய்யோ….!!! இன்னும் அந்தப் பார்வையின் காதலை மறக்க முடியவில்லை. இயக்குனர் கலாரசிகன். என்ன ஒரு காட்சி? பாடல் இருக்கிறது யூடிப்பில் கீழே பாருங்கள். சொக்கிப் போவோம்.

ஆண்கள் எப்போதுமே காயங்களோடு தான் வாழ்வார்கள். ஆம் பெண்கள் தங்களிடம் இருக்கும் பல ஆயுதங்களால் ஒவ்வொரு ஆண்களையும் வீழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வீசும் ஒவ்வொரு ஆயுதங்கள் ஏற்படுத்தும் காயங்கள் என்றைக்குமே ஆறாத தழும்பாய் ஆண்களிடம் பதிந்து விடும். நிராயுதபாணியான ஜோசப் இரண்டு பெண்களின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு முடிவில் தன்னையே அழித்துக் கொள்வார்.

சர்ச்சுகளில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆண்களின் நினைவுகள் வந்துவிடும்.

ஜோசப்பின் வாழ்க்கை முழுவதையும் நம்முள் உணரலாம். அற்புதமான படைப்பு. எழுதிக் கொண்டே போகலாம். நான் ரசித்தவைகளை எழுத எழுத நான் படத்துக்குள் மூழ்கி விடுவேனோ என்ற பயம் ஏற்படுகிறது. 

என்னை ஈர்த்த அற்புதமான படங்களில் இது ஒன்று.

காயங்களின் கதாநாயகனாக ஜோசப்.

வாழ்க்கையின் அபத்த நாடகங்களை இந்த ஜோசப் திரைப்படம் ஒரு துளியாய் மின்னலடிக்க வைத்திருக்கிறது.

இயக்குனருக்கு என் பாராட்டுக்கள். ஜோஜு ஜார்ஜ் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க நினைக்கிறேன். பார்க்கலாம் காலம் கனியட்டும்.

அமைதியாக அமர்ந்து கொண்டு, இந்தத் திரைப்படத்தை அவசியம் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்று அறியலாம்.

பல வகைகளில் நாமெல்லாம் காயங்களோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காயங்கள் இல்லாத மனிதர்கள் இவ்வுலகில் உண்டா?

ஆம் நண்பர்களே….!

பாரதி சொன்னான் பாருங்கள்.

காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

ஒரே ஒரு வலியோடு செத்துப் போவது மேல் அல்லவா?

Tuesday, April 28, 2020

கொரானா சொல்லப்படாத உண்மைகள்


அமெரிக்காவில் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொரானாவில் பாதிப்படைந்து, அதில் 50000 பேர் உயிரிழப்பு நடந்திருக்கிறது என்கிறது செய்தி. இதை நம்பலாம். ஏனென்றால் அங்கு ஓரளவு பத்திரிக்கை முதலாளிகள் தைரியசாலிகள்.

ஆனால் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வரக்கூடிய செய்திகளை நம்பக் கூடிய அளவுக்கு மீடியாக்கள் இதற்கு முன்னால் உண்மையான செய்திகளை வெளியிடவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் சொன்னார்கள்.

கோவையில் உண்மையை வெளியிட்ட சிம்ப்ளிசிட்டி இணைய பத்திரிக்கையின் நிர்வாகி கைது அதை வெளிக் கொணர்ந்து இருக்கிறது. ஊருக்கு உண்மையைச் சொன்னால் கைது. தமிழக அரசின் கண் அசைவுகளுக்கு ஏற்ப தான் பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

என்ன உண்மை என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்க தோன்றும். அந்தளவுக்கு தரவுகளை என்னால் திரட்ட முடியாது. செய்தி தாள்களில், இணையங்களில், அரசு உத்தரவுகளில் வரக்கூடிய ஒரு சில செய்திகளை படிக்கும் போது பூனைக்குட்டி வெளியில் வந்து விடுகிறது. உண்மையை மறைக்கலாமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியாது. அது உண்மையின் இயல்பு. பொய் பல அலங்காரங்களுடன் வெளியிடப்படும் போது, அந்தச் செய்தியில் உண்மை எங்கோ ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அம்மா உணவகம் மூலம் இலவச உணவு அளிக்கப்படுகிறது என்கிறது அரசு. அதைக் கிண்டல் செய்து கார்ட்டூன் வரைகிறது ஆர்.;பி.ஐ.இயக்குனரின் பத்திரிக்கை துக்ளக். மக்களுக்குப் பதிலாக திமுக என எழுதி இருக்கிறார்கள். எழுத்துப் பிழை அல்ல. கருத்துப் பிழை. உண்மை மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள் என்பது.
நேற்று முதலமைச்சர்களுடன் பிரதமர் பேசிய போது, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொற்று அதிகரிக்கும் எனச் சொன்னதாக, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாகச் செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அப்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு லாக் டவுன் இருக்கலாம் என சிந்தனை வருகிறது.


கேரளா முதலமைச்சர் பி.எம்முக்கு லெட்டர் எழுதுகிறேன் எனச் சொல்லி, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்களால் எங்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதற்காக அவர் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லையோ என நினைப்பு வருகிறது.

கொரானா டெஸ்டிங்கை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கிறோம் என தமிழக அரசு அறிவிக்கிறது. அப்போது அரசு அறிவிக்கும் தொற்று எண்ணிக்கை சரியானதாக இருக்காது என அறிவு சொல்கிறது. தொற்று எண்ணிக்கை எவ்வளவு எனத் துல்லியமாக அறிவிக்க டெஸ்ட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் தொற்று எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்? ஆக தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், பசியோடு இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று ஏழு கட்டளைகளைப் பின்பற்றும்படி ரேடியோவில் பேசுகிறார். ஆக மத்திய அரசு மக்களுக்கு உதவாது என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தெரிகிறது.

நாங்கள் வரியை மட்டும் வசூலிப்போம். அதை குறித்த காலத்துக்குள் மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம். மக்கள் செத்துப் போனாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால் பெரிய நிறுவனங்கள் நடத்தும்  முதலாளிகளுக்கு வட்டி, வரிகளுக்கு தள்ளுபடி வழங்குவோம் என்று சொல்கிறாரோ என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

எக்கனாமி நன்றாக இருக்கிறது என்று பேசுகிறார். நாமும் நம்புகிறோம். ஆனால் இந்தியாவில் மியூட்சுவல் ஃபண்ட் பிசினஸ் செய்யும் டெம்பிள்டான் நிறுவனத்திற்கு 50000 கோடி நிவாரணம் அறிவிக்கிறது ஆர்.பி.ஐ. நன்றாக இருக்கிறது எக்கனாமி என்று ஒரு பக்கம் பேசி முடிப்பதற்குள், இந்த செய்தி வெளி வருகிறது. மியூட்சுவல் ஃபண்ட்ஸ் அடிவாங்கினால் மொத்தமாக ஷேர் மார்க்கெட் படுத்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை பின் ஏன் டெம்பிள்டானுக்கு ஆர்.பி.ஐ. நிவாரணம் வழங்குகிறது? ஆக இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என தெரிகிறது. இனி பிரதமர் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்கிறது.
தமிழகத்தை பி.ஜே.பி தான் ஆள்கிறது என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். பால்பாக்கெட் கெட்டுப் போனவுடன், அதை சி.எம்க்கு டிவீட் செய்கிறான். ஆஃப்டர் ஆல் ஒரு கூத்தாடிக்கு வீட்டுக்கே பால் பாக்கெட் கொண்டு போய் கொடுக்கப்படுகிறது. வாங்கியவன் பேசாமல் இருந்திருக்கலாம். வேண்டுமென்றே அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை டிவீட் போடுகிறான். ஒரு டிவீட்டுக்கு அரசு எனக்கு எவ்வாறு வேலை செய்கிறது எனப் பாருங்கள் என தற்பெருமைக்காக, கேவலப்படுத்துகிறோம் என்று தெரிந்தே அதைச் செய்கிறான் அவன். இப்போது நம் தமிழகத்தின் முதலமைச்சருக்கு நெட்டில் வேறு பெயர் வைத்து அழைக்கிறார்கள். இந்தச் சம்பவம் உண்மையில் சென்ஸார் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஒரு கூத்தாடிக்கு இந்த அரசு பயந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆக பி.ஜே.பி தான் தமிழகத்தை ஆள்கிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என்று நம்பிட வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் வெளியிடப்படும் செய்திகளில் இருக்கும் பொய்களைக் களைந்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதே கதைதான். ஏதோ இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு நண்பர் என்னிடம், அரசு கொரானா இல்லை என்று அறிவித்த பிறகு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று கேட்டார்.
கொரானாவுக்கு மருந்து இருக்கிறது என்று உறுதியாக தெரியும் வரையில் அனுப்புவதில் எனக்கு உவப்பில்லை. ஒரு வருடம் லீவ் போட்டு விட்டால் போச்சு. அரசுக்கு கொரானாவில் செத்தார் என்பது அது அறிவிக்கும் எண்ணிக்கையில் ஒரு எண் கூடும். அவ்வளவுதான். அது அவர்களுக்கு எண் மட்டுமே. ஆனால் நமக்கோ அது ஒரு உயிர். நம் வாழ்வின் துடிப்பு. நம் வாழ்க்கை. டிப்ளமேட்ஸ், அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பிறரின் வாழ்க்கை? யாருக்கு யார் உத்தரவாதம் தர முடியும்? நாம் தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இனி என்னதான் செய்வது? பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் எதிர்காலம் என்னவாகும்?

பசிக்கு உணவு அதற்காக உழைப்பு, உடலுக்கு உடை, இருக்க ஓர் இடம். இது போதும். கடவுள் மனிதனை இயற்கையோடு ஒன்றி வாழத்தான் படைத்தார். காசு சம்பாதிக்க அல்ல.

பின்னே இந்த அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்? இனி வரும் காலங்களிலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடலாம். எவனாது அரசு இயந்திரத்தை இயக்க வேண்டுமே?

நமக்குத்தான் தைரியம் இல்லையே. கேள்வி கூட கேட்க மாட்டோமே? தெருவில் இறங்கி நிற்க கூட தைரியமில்லையே? எக்கேடு கெட்டால் தான் நமக்கு என்ன? கூனிப் போய் விட்டது மனசும் உடம்பும் நமக்கு.

ஆக, அரசு தன்னால் இயன்றதைச் செய்யும். அது எல்லோருக்குமானதாக இருக்காது. மக்கள் தான் தங்களை காத்துக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் சுடுகாடு. மக்கள் உயிருடன் இருந்தால் ஓட்டுப் போட்டு ஜன நாயகத்தை நிலை நாட்டலாம். வரி கொடுக்கலாம். உயிருடன் இல்லாது செத்துப் போனால் அது அரசின் புள்ளி விபரங்களுக்கு உதவும். இத்தனை பேர் உயிருடன் உள்ளார்கள். இத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்று அரசு கணக்குகளை டிவியில் வெளியிடும். நிச்சயமாக இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கும். உண்மைக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகமோ அதிகம்.

நீங்கள் புள்ளி விபரங்களில் எதுவாக இருக்க விரும்புகின்றீர்கள் என்பது உங்களின் அறிவுக்கு உட்பட்டது.

ஆகவே நண்பர்களே, இதுவும் கடந்து போகும் என்ற எதிர்மறைச் சிந்தனையில், விதி இதுதான், கடவுளின் விருப்பம் இது, இயற்கையின் சீற்றம் இது என்று வசதிக்கு ஏற்றபடி சிந்தித்து முடிவெடுப்போம்.

குறிப்பு : செய்திகளை உற்றுக் கவனியுங்கள். உண்மையை உணர்ந்து கொள்வோம். நம்மையும், நம் உறவுகளையும், நண்பர்களையும் காப்பாற்றுவோம்.

வாழ்க நலமுடன்…வளமுடன்…!!

Sunday, April 26, 2020

சினிமா வழியான ரகசிய தாக்குதல்


இரக்கம் மானுட உலகில் மட்டுமல்ல, விலங்குகளின் வாழ்விலும் வெளிப்படும் ஜீவகாருண்யத்தின் உணர்வு நிலை.

நீங்கள் யுடியூப் வீடியோக்களில் பார்த்திருக்கலாம். பல விலங்குகள் தன் இனம் அல்லாத பல உயிரினங்களைப் பாதுகாப்பதும், பாலூட்டி வளர்ப்பதுமான பல காட்சிகளை. பார்க்க விரும்பினால் மீண்டும் தேடிப்பாருங்கள். ஆயிரக்கணக்கில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தண்ணீரிலிருந்து வெளியில் வந்து துடித்துக் கொண்டிருந்த மீனை ஒரு பறவை மீண்டும் தூக்கி தண்ணீருக்குள் போட்ட வீடியோவைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். பறவைக்கு மீன் ஆகாரம். பசியை விட இரக்க உணர்வு அப்பறவையிடமிருந்து உடனடியாக வெளிப்பட்டது. பசி, தாகம், கோபம் இவை எல்லாவற்றையும் விட இரக்க உணர்வு, எல்லா உயிரினங்களிடத்திலும் ‘சட்’டென்று வெளிப்படுபவை.

எத்தனையோ பேர் சாலைகளில் அடிபட்டுக் கிடப்பவர்கள் பிழைக்க வேண்டுமென பிரார்த்திப்பார்கள். அது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, மனதுக்குள் சட்டென்று கவிழும் இரக்க உணர்வு உடல் முழுதும் வியாபித்து மனம் துயரத்தில் வீழும் அல்லவா?

நாய் – கற்காலத்திலிருந்து இதுவரையிலும் மனிதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈடு இணையற்ற விலங்கு. வேட்டைக்காகவும் ஆடு,மாடு மந்தைகளைக் காப்பது முதற்கொண்டு, மனிதனைக் காத்து வரும் அற்புதமான இறைவனின் படைப்பு அது. காவல்காரன் கூட துரோகி ஆகலாம். நாய்கள் அப்படி ஆவதில்லை. அதனுடைய எஜமானனை எவராவது அடிக்க கை ஓங்கினால் பட்டென்று கவ்வி விடும். ஒரு சில நாய்கள் தலையைக் கவ்வி தனியாகப் பிடுங்கி எடுத்து விடும் கோபம் கொண்டவை. தன் எஜமானன் மீதான அன்பினால் அவைகள் சக மனிதர்களை கொல்லக் கூட தயங்காது. மனிதனின் மீது ஜீவகாருண்யத்தைக் காட்டுவதில் நாய்க்கு நிகராக தாயைத்தான் சொல்லலாம்.

முயலை வாயில் கவ்வி, அதை தன் எஜமானனிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அவர் போடும் கறிக்காக காத்துக் கிடக்கும் அந்த விசுவாசமான நாய். கணவன் இறந்தால் கூட பிள்ளைகளோ, மனைவியோ கூட இறந்து விடுவதில்லை. ஆனால் பாசமுள்ள நாய்கள் உண்ணாமல் பட்டினி கிடந்து செத்துப்போன கதைகளை நாமெல்லாம் கேட்டிருக்கிறோம்.

ஜீவகாருண்யம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஒரே உணர்வாகத்தான் வெளிப்படுகிறது.

அந்த இரக்கம் எனும் உணர்வு மனிதனிடத்தில் அவனறியாமல் அவனைப் பல சங்கடங்களில் சிக்க வைத்து விடும். பல பேருக்கு இந்த அனுபவம் இருக்கலாம். நாமெல்லாம் இன்றைக்கு சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்திருக்க காரணமும் அந்த இரக்க உணர்வுதான்.

மனிதனின் இரக்க சுபாவத்தை வெளிப்படுத்த வைத்து, அதன் விளைவாக தன்னை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி, அதன் மூலம் ரசிகனின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அவனை அறியாமலே, அவனுக்குப் புரியாமலே சுரண்டி கோடிகளைக் குவித்து மனித குலத்துக்கே கேடு விளைவிப்பதில் சினிமாவுக்கு நிகராக வேறு ஒன்றையும் சுட்டிக் காட்ட முடியாது.

தீவிரவாதத்துக்கும் எல்லாம் மேலானது இது. மனிதனை அவன் அறியாமலே அடிமையாக்கி, அது தான் உண்மையான மகிழ்ச்சி என நம்ப வைக்கும் செயலை தீவிரவாதத்துக்கும் எல்லாம் உயர்ந்த தீவிரவாதம் என்று தான் சொல்ல வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு மனிதனின் உணர்வுக்குள் அசுர தாக்குதலை நிகழ்த்தி, அவனறியாமலே அடிமையாக்கி விடுகிறது சினிமா. மனிதனின் உளவியலில் வெகு நுட்பமான வகையில் தாக்குதல் நடத்தி, அவனக்குப் புரியாமலே உணர்வினூடே பதிந்து, அதன் பலனை அட்சர சுத்தமாய் அறுவடை செய்து விடுகிறார்கள் புத்திசாலி சினிமாக்காரர்களில் பலர்.

சினிமாக்களில் ஹீரோக்கள் கொடுமையான பல வேதனைகளை வில்லன்களால் அனுபவிப்பார்கள். ஹீரோக்களின் அம்மா துடிக்கத் துடிக்க கொல்லப்படுவார். தங்கைகள் ஹீரோவின் முன்னாள் கற்பழிக்கப்படுவர். வில்லன்கள் செய்யும் செயல்களால் ஹீரோ பெரும் துயரம் கொள்வார். கண்ணீர் வடிப்பார். வேதனையில் விம்முவார். இப்படித்தான் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

திரையின் முன்னால் காசைக் கொடுத்து, படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனின் நெஞ்சுக்குள் ஹீரோவின் மீதான இரக்கமும், அவன் எது செய்தாலும் சரி, ஏன் இன்னும் ஹீரோ வில்லனைக் கொல்லாமல் இருக்கிறான் என்ற எண்ணமும் எழுவது திண்ணம் அல்லவா? 

இரக்க சுபாவத்தின் இன்னொரு முகம் கொடூரம். ஹீரோ வில்லனைக் கொன்றாலும் பரவாயில்லை என்று மனம் கோபம் கொள்ளும். இன்றைக்கு ரசிகக் குஞ்சுகள் தன் நடிகன் பெரியவன் என டிவீட், ஃபேஸ்புக்கில் எழுதி, மீம்ஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்ன காரணத்தினால் நாம் அவ்வாறு செய்கிறோம் எனத் தெரியாமலே. உண்மையில் ரசிகக் குஞ்சுகள் ஒரு வித கிளர்ச்சியின் பாதிப்பில் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள் என அவர்கள் அறிவதில்லை.

அது மட்டுமின்றி, பருவ வயதில் சக பெண்களை ஏறெடுத்துப் பார்க்கவும் முடியாமல் தவிக்கும் இளவட்டங்களின் முன்னால், அழகு மிளிரும் பாவைகளுக்கு அரைகுறை ஆடைகள் உடுத்தி அவளின் கழுத்தில் கை வைத்து தடவி, தொப்புளில் முட்டை சுட்டு, பிசைந்து, பிசைந்து, கடித்து, நக்கி, உறிஞ்சி இன்னும் என்னென்ன சேட்டையெல்லாம் செய்யலாமோ அத்தனையும் செய்து ஹீரோயிசத்தைக் காட்டுவது போல, ரசிகனின் ஏக்கத்தைத் தீர்ப்பார் ஹீரோ. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவரை மறக்க முடியுமா? அது போல காம உணர்வின் வடிகாலுக்கு உதவும் ஹீரோ ரசிகனின் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டு விடுகின்றார்.

வெள்ளைதுணியில் ஒளிரும் பிம்பத்தைப் பார்க்கும் ரசிகக்குஞ்சுகளின் காம உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அந்த இன்பத்தினால் எழும் குதூகலத்தில் ஹீரோவின் அடிமையாகி விடுவார்கள். பின்னே என்ன ஹீரோவின் மீதான இரக்கம், அவன் செய்யும் காமச் சேட்டைகள் இவை ஒவ்வொரு ரசிகக் குஞ்சுகளின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் இல்லை. ”முதல் நாள் முதல் சோ” என்பார்கள் அல்லவா ஒரு சில ரசிகர்கள்? அவர்கள் அனைவரும் இந்த விதமான காட்சிகளால் தூண்டப்பட்டவர்கள் தான்.

இவர்களைப் போன்றவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிப்பவர்கள். இவர்கள் தான் என்ன செய்கிறோம் என்று அறியாத அடிமைகளாகி, ஒப்புக்கு வாழ்வார்கள். ஒரு சிலர் காலப் போக்கில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். உண்மை புரிந்த உடன் விலகி விடுவார்கள். பெரும்பான்மையானவர்கள் தங்கள் ஆயுள் காலம் முடியும் வரை அடிமைகளாக இருந்து கொண்டு, அதற்கு பெயர் “ரசிகன்” என்றுச் சொல்லிக் கொண்டு திரிந்து செத்துப் போவார்கள். 

இந்த உண்மையை அட்சர சுத்தமாக புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரும், பாலசந்தரும். பெரும்பாலும் சினிமாக்களில் ஒரு ஜாதி ஆதிக்கம் அதிகமிருக்கும். அவர்கள் எல்லா ஃபீல்டுகளிலும் இருப்பார்கள். அவர்களின் நோக்கம் வேறு. முன்பே எழுதி இருக்கிறேன் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆரம்பகாலப் படங்களில் கற்பழிப்புக் காட்சிகள் அதிகமிருக்கும். சட்டத்தைக் கேள்வி கேட்கும் படங்கள் எனச் சொல்வார் அவர். சினிமா வசனங்கள் நாட்டின் அரசியலமைப்பினைக் கேள்வி கேட்கும். ஓட்டைகளை அலசும். 

ஆனால் உண்மை என்ன? அரசியலமைப்பு எல்லோருக்கும் நன்மை செய்வதற்காகத்தான் உருவானது. ஆனால் அதை பயன்படுத்துவோரால் தான் அது சிறுமை பெறுகிறது. சினிமாவில் என்ன சொல்வார்கள் தெரியுமா? மொத்த அரசியலமைப்பே தவறு என்பார்கள். ஆட்கள் தவறு என்று சொல்வதை விட அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தி ஹீரோ வேஷத்துக்கு பலம் சேர்ப்பார்கள். ஹீரோ பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு நாட்டைக் காப்பாற்றுவார்.

கற்பழிப்புக் காட்சிகள் மன வக்கிரத்தின் உச்ச நிலை. ஆனால் ரசிகனுக்கு அது ஒரு வேறு விதமான உணர்வினை உண்டாக்க்கி கிளர்ச்சி தன்மையை கிளறி விடும். அவருக்கு என்ன தேவை எனில், இவரின் அடுத்த படத்தில் எந்த நடிகையை யார் கற்பழிக்கப் போகிறான் என ரசிகன் பார்க்க வர வேண்டுமென்பது. திரையில் காட்டுவார். ரசிகன் மயங்குவான். அதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த படங்களுக்கு ரசிகன், ‘முதல் நாள் முதல் சோ” என்று அலைய ஆரம்பித்து விடுவான். அவர் என்ன எதிர்பார்த்தாரோ அதை மிகச் சரியான வகையில் ரசிகனின் நெஞ்சில் விதைத்திருப்பார். நாட்டுக்கு நல்லது செய்ய அல்ல. எவன் எக்கேடு கெட்டாலும் சரி, எனக்கு பணம் கொட்ட வேண்டும். அதற்கு இது ஒரு வழி. அவ்வளவுதான்.

அதுமட்டுமல்ல, இன்று தமிழகத்தில் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அவர் தன் மகனுக்கு அவர் கொடுக்கும் அலப்பறைகள் ஊரெல்லாம் தெரிந்த கதை. தன் மகனை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த ஆரம்பகாலப் படங்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் காம உணர்வைத் தீண்டி விடும் தன்மையானவை. ரசிகன் என்றொரு படத்தில் ஃப்ளூபிலிம் காட்சியை விஜய் பார்ப்பது போல வைத்திருப்பார். ஆங்காங்கே, அவ்வப்போது பார்வையாளன் கிளர்ச்சி அடையும் படி காட்சிகளை வைப்பார்கள். படத்தில் ஒன்றும் இருக்காது. ஆனால் சீன்கள் நிறைய இருக்கும். அதில் விஜய் நடிக்கும் பாடல் காட்சியில் நடிகை கருப்பு டவுசர் போட்டுக் கொண்டு மழையில் நனைந்து கட்டிப் பிடித்து பின்புறத்தை உரசி, ஆட்டிக் கொண்டிருப்பார். பாத்ரூம் கதவுக்குள் மாமியாரைத் தடவுவார் விஜய். 

பின்னர் போகப் போக காதலுக்காக தியாகி ஆவது, ஊருக்கு நல்லது செய்வது போல படங்களை விடுவார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளன் மனதில் ஹீரோவை கடவுள் ரேஞ்சுக்கு உயர்வடைய வைப்பார்கள். 

அதுமட்டுமல்ல, காசு கொடுத்தால் கூவும் ஒரு சில விவரமான ரசிகர்களை இவர்கள் கண்டுகொண்டு, இவர்களே காசு கொடுத்து பாலாபிஷேகம், பீராபிஷேகம் நடத்துவார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் சினிமா தியேட்டர்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த 1000 தியேட்டரில் 100 பேர் ரசிகக் குஞ்சுகளாக இருப்பார்கள். மொத்தம் 100000 - ஒரு லட்சம் பேர் குஞ்சுகளாய் மாறி குதூகலித்து கிடப்பார்கள். ஆனால் டிவியில் பார்த்தீர்கள் என்றால் கோடிக்கணக்கில், உலகமெங்கும் என அள்ளி விடுவார்கள். இதன் அரசியல் வேறு. நேரம் வரும் போது எழுதுகிறேன்.

தமிழ் ஊடகங்களில் வேலை செய்யும் வாழவே தகுதியற்ற பல அயோக்கிய சிகாமணி நிருபர்களை சூட்டிங்க் இடையில் வர வைத்து ஜூஸ் கொடுப்பது, துணை நடிகையை அறிமுகப்படுத்தி வைப்பது, ஹீரோயினை அறிமுகப்படுத்தி விடுவது போன்ற அக்மார்க் அயோக்கியத் தனங்களைச் செய்வார்கள். பணம் கொடுத்து ஆஹா ஓஹோ என எழுதச் செய்வது போன்ற பல்வேறு நரித்தந்திரங்களைச் செய்வார்கள் மீடியாக்காரன் போன்ற ஒரு அக்மார்க் அயோக்கியனை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க முடியாது. மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியவர்கள் சொல்வதே இல்லை. அப்படியானவர்களை நாம் இப்படித்தான் குறிப்பிட வேண்டும் அல்லவா? நல்ல நிருபர்கள் கோபம் கொள்ள வேண்டாம்.

பாலசந்தர் கதை வேறு. அதற்கான களம் வரும் போது எழுதுகிறேன்.

உங்களுக்கு நினைவில் இருக்கலாம் ஒரு ஹிந்தி பாட்டு. “சோலி கே பீச்சா கியா ஹே” இந்தப் பாட்டில் நடனமாடிய நடிகை மாதுரி தீட்சித் ஒரு காலத்தில் ஹிந்தி சினிமா உலகில் நிரந்தர கதாநாயகியாக இருந்தார். இந்தப் படம் வந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஜாக்கெட்டுக்குள் என்ன இருக்கு என்று அர்த்தம் தொனிக்கும் இரட்டை அர்த்தப் பாடல் வரி இது. அதன் கிளர்ச்சி காரணமாக, ஹாஸ்டலின் புக் செல்ஃபில் மாதுரி தீட்சித் புகைப்படத்தை வைத்து ரசித்துக் கொண்டிருந்தேன். இதே போன்ற சம்பவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நடந்திருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு நிகழ்வினால் ஒரு நடிகையையோ அல்லது நடிகரையோ பிடித்திருக்கிறது என. மனதுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். எந்த ஒரு படம் பார்த்த பிறகு நாம் ரசிகனாய் மாறினோம் என்ற விஷயம் பிடிபடும். பின்னர் மனது தெளிவாகி விடும்.

இது ஒரு மன நோய். ஆம் என்னைப் பொறுத்தவரை சினிமா ஹீரோயின் அல்லது ஹீரோவின் மீதோ வெறித்தனமான அன்பு வைத்திருக்க காரணம் மன நோய். ரசிகனாய் இருக்கும் ரசிகனுக்கு ஒரு தம்பிடி லாபம் இல்லை. 

இங்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



ரசிகன், என் ரசிகன், உங்களால் தான் நான் என்றெல்லாம் சொல்லும் ஹீரோக்கள் தன் படங்களில் எந்த ரசிகனுக்கு வாய்ப்புக் கொடுத்து அவனையும் நடிகனாக்கி அழகு பார்த்தார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம். ரஜினி அவரின் மகள்கள், சகலையின் மகன், அவரின் நண்பர்களின் வாரிசுகள் இப்படித்தான் வாய்ப்புக் கொடுப்பார். கமலோ சொல்லவே வேண்டியதில்லை. ரஜினி ஒரு படி மேலே. தன் படம் ஜப்பானில் ஓடுகிறது என்பதற்காக ஜப்பான்காரப் பெண் ஒருத்தியை ஒரு படத்தில் நடிக்க வைத்தார். இதுதான் அக்மார்க் பிழைப்புதனம். 

ரசிகனாக இருப்பது என்பது மன நோய். அந்த மன நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரசிகனின் பாக்கெட்டில் இருக்கும் பணம் ஹீரோக்களின் கல்லாபெட்டிக்குள் சென்று கொண்டே இருக்கும்.

இப்போது நிதர்சனத்துக்கு வாருங்கள்.

இந்திய அரசியல் பல காலங்களில் பிணத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆட்சிகளாக இருந்தன அல்லவா? இந்திராகாந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மீது இந்திய மக்களுக்கு இரக்கம் கடலெனப் பொங்கி பிரவாகமெடுத்து, அவரைப் பிரதமராக்கி விட்டுத்தான் அமைதியானார்கள். ராஜீவ் கொல்லப்பட்டார், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி. இப்படி ஒவ்வொரு மரணத்தின் பின்பும் மக்களுக்கு எழும் இரக்கமென்னும் சுபாவத்தினாலே அறுவடைகளை அழகாகச் செய்து கொண்ட வரலாற்று நிகழ்வுகளை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் காரணம் நம் மனதில் இருக்கும் கடவுள் தன்மை கொண்ட இரக்கம் எனும் உணர்வுதான். இல்லையென்று உங்களால் மறுக்கவே முடியாது.

ஒரு புலி உங்களைக் கொல்ல வருகிறது. அதன் காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. அதைப் பார்க்கும் போது, அய்யோ பாவம் என தோன்றும். அது உங்களைக் கொல்ல வருகிறது என்றாலும் கூட, நொடியில் அந்த எண்ணம் தோன்றி மறையும். அந்த நொடி புலிக்குப் போதும். இரையாகி விடுவீர்கள் அல்லவா? அது போன்ற உணர்வு எழும் போதெல்லாம், அது சரிதானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூனை வளர்ப்பதற்காகவெல்லாம், அது பசியாக கிடந்து அல்லலுறுகிறதே என்பதற்காகவெல்லாம் இரக்கப்பட்டால், காசு தான் கரியாகும். இமயமலைக்கு அழைத்துச் சென்றவரின் அன்பு இன்றைக்கு செல்லாக்காசு ஆகிப் போன கதையை, அந்த அன்பு சொல்லும்.

இரக்கமும், ஜீவகாருண்யமும் சரியானவைகளுக்குச் சேர வேண்டும் எனப் புரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரையும் ஏமாற்றும் வஞ்சக நரிகளிடம், இரக்கத்தைக் காட்டினால் நாம் அழிக்கப்படுவோம்.

அந்த நரிகளின் சுய நலம், நம் இரக்க உணர்வினை அவர்களின் பிழைப்புக்கு பயன்படுத்தி விடுவார்கள் என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

ரசிகன் என்ற சொல் மனநோயைக் குறிக்கும் சொல். இனி நான் அவருக்கு ரசிகன் என்று சொன்னீர்கள் என்றால் நீங்கள் ஒரு அடிமுட்டாளான அடிமையும், மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் அவலமானவர் என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உழைப்பில் கிடைக்கும் பலன்களை, தேவைப்படுபவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். ஒரு சினிமா பார்ப்பதற்கு செலவழிக்கும் தொகை இன்னொருவருக்கு ஒரு நாள் உணவு என்பதை மறந்து விடாதீர்கள்.

அதற்காக மகிழ்ச்சியாக இருக்க படமே பார்க்க கூடாதா என்று கேட்காதீர்கள். அதற்கு ஹீரோயிசம் இல்லாத எதார்த்தமான படங்களைப் பாருங்கள். அது தான் உண்மையான படைப்பும் கூட.

இனி நல்ல எதார்த்தமான பல படங்களை விமர்சனமாக எழுதலாம் என நினைக்கிறேன். முதல் நாளே பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள் என்றால் அது உங்களின் நோயின் தன்மை முற்றி, ஹீரோவுக்கு அடிமையாகி விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது ஒரு விதமான போதை. போதையிலிருந்து வெளி வாருங்கள். வாழ்க்கை சுகமானது.

அதை தன்னை உருவாக்கிய குடும்பங்களுடனும், உறவினர்களுடனும், நட்புக்கள் உடனும் கொண்டாட்டமாய் வாழலாம்.

எனது அன்பும், அசீர்வாதமும் என்னை விட இளையவர்களுக்கு. என்னை விட அனுபவத்தில் முதிந்தவர்களிடம் ஆசீரவாதங்கள் செய்யுங்கள் எங்கள் எல்லோரையு என வேண்டிக் கொள்கிறேன்.

Wednesday, April 22, 2020

நான்கு படங்களால் மாறிய ரசனையும் வாழ்க்கையும்


உருப்படவே உருப்படாத தமிழ் சினிமாவின் ரசிகனாய் இருப்பதன் பலனை நாமெல்லாம் இதுகாறும் அனுபவித்தோம். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என சினிமாக்காரர்களை முதலமைச்சராய் ஆக்கிய பெருமையை தமிழ் சினிமா உருவாக்கியது.

தமிழகத்தின் விதியோ வேறு மாதிரியாக இருந்தது போல. மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படாதவர் மூன்றாண்டு காலம் முதலமைச்சராய் இருக்கும் மாபெரும் ஜனநாயகம் இது. இந்தக் கொடுமையெல்லாம் இந்தியாவில் சாத்தியமோ சாத்தியம். ஆட்சித்திறன் இருக்கிறதா? ஊழல் செய்யாதவர்களா? என்றெல்லாமா பார்த்தோம்? நம் கையில் எதுவும் இல்லை. வேடிக்கை மட்டும் பார்க்கலாம். தற்போதைக்கு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் எழுதலாம். அதுவும் வலிக்காமல். இல்லையெனில் கும்மி விடுவார்கள் கும்மி. உண்மையைச் சொன்னால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் நெருப்பில் எரிவதாக நம் தலைவர்களும், அடிப்பொடிகளும் கோபம் கொள்கிறார்கள்.

யாருக்கு ஓட்டுப் போட்டோமோ அவர் போய்ச் சேர்ந்தார். யாரோ ஒரு ஆள் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார். ஏன் இந்த மாற்றம்?

இதை நான் தமிழகத்தின் தேவை எனப் பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு தமிழன்னை சுட்டிக்காட்டி இருக்கும் ஒப்பற்ற ஒரு உண்மை எனப் பார்க்கிறேன். சினிமா தொடர்பு இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பது நல்லது. ஆனால் அவர்களின் ஆட்சித்திறன் மீதும், வளைந்து நெளிந்து செல்லுவதும், தமிழகத்தின் நலனை தன்னைக் காத்துக் கொள்வதற்காக இழக்க வைப்பதும் நல்லதல்ல. ஒரு கட்சி நடத்தி, தலைவராகி, பிரச்ச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்திருந்தால் மக்களின் தேவை என்ன? தமிழகத்தின் நலன்கள் என்ன? எப்படி ஆட்சி நடத்த வேண்டுமென்று அறிய நேர்ந்திருக்கும். இன்ஸ்டண்ட் ஊறுகாய் மாதிரி ஆட்சிக்கு வந்தால் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல தான் இருக்கும். அரசியல் பயங்கரத்தில் நிலைத்து நிற்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும் சினிமாக்காரர் அல்ல என்பது ஒரு சிறிய மகிழ்ச்சிதான். ஆனால் துரோகம் எல்லா நல்லனவைகளையும் தூக்கி விடும்.

அரசியல் குப்பை போதும். பேசித் தீரப்போவதில்லை. மக்களின் மனத்தில் மாற்றம் வேண்டும். எது உண்மை, எது போலி என அறியும் திறன் வேண்டும். இனி வரும் காலங்களில் இந்தியாவில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

மிகச் சிறந்த இளைஞர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஊழல்வாதிகளின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்து கஜானாவில் சேர்த்து விடுவார்கள். இனி எந்த மந்திரவாதியும், எந்த யாகமும் பலன் தரப்போவதில்லை.

காலம் காலமாய் சிவாஜி, எம்.ஜி.ஆர், சிவகுமார், ரஜினி, கமல், மோகன், ராஜேஷ், ராஜா, சூரியா, கார்த்தி, சிம்பு, தனுஷ் வகையறாக்கள் காதல் செய்வதை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனது. ஹீரோக்கள் ஒருவரே. ஆனால் பல ஹீரோயின்களுடன் அவர்கள் காதல் செய்வதை எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது? ஏ படங்களில் கூட பலதரப்பட்ட ரசனையான படங்கள் வந்து கலக்குகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் இவர்களின் காதலும், பாடலும், சண்டைக்காட்சிகளும், உஷ், படா சத்தங்களும் மட்டும்தான் நமக்கு காணக்கிடக்கின்றன. இதில் சூர்யா, கார்த்தி அண்ணன் தம்பிகள் இருவரும் ஒரே நடிகையைக் காதல் செய்வதையெல்லாம் பார்த்து எரிச்சல்தான் வரும். இன்ஸெஸ்ட் காதல் அல்லவா அது. கன்றாவி. நேர்மை, நியாயம், தர்மம் பற்றி எல்லாம் பேசும் சிவகுமார் அய்யாவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதா? இந்தக் கொடுமையையெல்லாம் எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரா? சங்கட்டமாக இருக்காதா?

ஆனாலும் நடிக்கிறார்கள் கூச்ச சுபாவம் ஏதுமின்றி.

அமேசான் பிரைம் இலவசமாக ஏர்டெல் போஸ்ட் பெயிடுக்கு வழங்குகிறார்கள். ஆகவே மலையாளப்படங்கள் பார்க்கலாம் என நினைத்து தேடினேன்.

நான் மூன்றே மூன்று படங்களைப் பார்த்தேன். தமிழ் சினிமாவின் தரம் குப்பையிலும் குப்பை என அறிந்தேன். தெலுங்கு சினிமாவோ சாக்கடை என புரிந்தது. மலையாளப் படங்களில் சாக்கடைகளும் உண்டு. ஆனால் பல படங்கள் உன்னதமானவையாக இருக்கின்றன. கதை இருக்கிறது. எதார்த்த வாழ்வியல் இருக்கிறது. படத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது. படத்தோடு மனசு பயணிக்கிறது.

டிரான்ஸ் (Trance), உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel), வாரிக்குழியிலே கொலபதகம் (Vaarkkuzhiyile Kolapathakam) & ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25 (Android Kunjappan Versio  5.25) ஆகிய படங்கள் என்னை இன்னொரு படைப்பு உலகத்துக்குள் கொண்டு சென்றது.

இது ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் - இனி வரும் காலத்தில் இப்படித்தான் ஆகுமோ என கவலைப்பட வைத்தது.



இது டிரான்ஸ் படம். கார்ப்பொரேட் பிசினஸ் பற்றிய அற்புதமான படம். அசந்து விடுவீர்கள் நிச்சயமாய்.

இது உஸ்தாத் ஹோட்டல் - தாத்தா பேரன் கதை என்றாலும் முக்கியமான பெற்றோரின் உளவியலை வெளிப்படுத்துகிறது.

வாரிக்குழியில் ஒரு கொலபதகம்
இந்தியாவில் ஏன் கிறிஸ்து மதம் பரவியது என்பதை இப்படம் சொல்லும். என்ன ஒரு படம் தெரியுமா? பாருங்கள். அசந்து விடுவீர்கள்

நேற்று ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25 எனும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மலையாளமும் கிட்டத்தட்ட தமிழ் மாதிரிதான். ஆரம்பத்தில் கொஞ்சம் டயர்ட் ஆக்குகிறது. ஆனால் போகப் போக படம் நம்மை உள்ளே இழுத்து விடுகிறது.

என்ன ஒரு பிரச்சினை வருகிறது என்றால், மலையாளத்தில் பேசுவது போல தினமும் கனவு வருகிறது. எனக்கு கேரளாவில் நண்பர்கள் அதிகம். அவர்களோடு மலையாளத்தில் வேறு பேச முற்படுகிறேன். வீட்டில் மனையாள் அடிக்கடி ஏங்க, என்ன ஒரு மாதிரியாகப் பேசுகின்றீர்கள் எனக் கேட்க ஆரம்பித்து விட்டார்.

இது எல்லாவற்றையும் விட என் பிள்ளைகளுடன் உட்கார்ந்து மலையாளப் படங்களைப் பார்க்கிறேன் எந்த வித சங்கோஜமும் இன்றி. தினமும் இரண்டு படங்கள் பார்க்கின்றோம். அருமையான பல படங்கள் கொட்டிக் கிடக்கின்றன மலையாளத்தில். ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடுகிறார்கள். உடனடியாக மலையாளம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது.

அன்பு நண்பர்களே, தமிழ் சினிமாவைப் பார்ப்பதை விடுங்கள். அற்புதமான படைப்புகள் பல கொட்டிக் கிடக்கின்றன மலையாள சினிமாவில். இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் கொரானா நம்மை விடுவிக்க. அதுவரை ஒரு மொழியைக் கற்றுக் கொண்டது போல ஆகும். நல்ல படைப்புகளைப் பார்த்தது போல ஆகும்.

தமிழ் சினிமா என்னைப் பொறுத்தவரை குப்பையிலும் சேர்க்க முடியாத அழுகல் ஒரு சில படங்களைத் தவிர.

தமிழ் சினிமாவின் ரசிக அரசியல் பற்றி எழுதுகிறேன். படித்துப் பாருங்கள். இதுவரை எந்த விமர்சகரும், எவராலும் சொல்லாத ஒரு உண்மையைச் சொல்லப் போகிறேன். உடைந்து விழும் பிம்பங்கள் உங்கள் மனதுக்குள் என்று நிச்சயம் நம்புகிறேன்.

இனி,

டிரான்ஸ், உஸ்தாத் ஹோட்டல், வாரிக்குழிக்குள் கொலபதகம், ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25 – அமேசானில் கிடைக்கிறது. 

அவசியம் பாருங்கள்.

வாழ்க வளமுடன்…!

Tuesday, April 21, 2020

நிலம் (64) - வெளிநாடுவாழ் இந்தியர்களின் சொத்துக்கள் பாதுகாப்பு

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரின் நண்பரின் சொத்து ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டது. அவர் ரஷியாவில் வசிக்கிறார். பத்து ஏக்கர் தோட்டத்தினை வாங்கி, மெயிண்டெயின் செய்ய ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்.

இப்போது அந்தச் சொத்து என்னுது, நான் தான் அனுபவம் செய்து வருகிறேன், உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று சொல்லி இருக்கிறார். புகார் கொடுத்து, காவல்துறை விசாரணையின் போது, சிவில் வழக்கு எனச் சொல்லி, கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லி விட்டனர்.

இனி எப்போது தீர்ப்பு வந்து, செலவு செய்து யார் இந்தப் பிரச்சினைக்கு அலைந்து?  அங்கிருந்து இங்கு வந்து, செய்யும் தொழிலை விட்டு விட்டு, எவ்வளவு பிரச்சினைகள் இனி?

நண்பர்களே, நீங்கள் உங்களின் உறவினர்களிடம் சொல்லி இருக்கலாம், இல்லை நண்பர்களிடம் சொல்லி இருக்கலாம். எல்லோரும் கெட்டவர்கள் என்றுச் சொல்ல வில்லை. ஒவ்வொருவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மாறுபவர்கள் தான். அதான் வெளி நாட்டில் கோடி கோடியா சம்பாதிக்கின்றானே, இதை நான் வைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன அல்லவா? நீங்கள் அங்கு படும் துயரம் பற்றி இவர்களுக்குத் தெரியாது.

இதைப் போன்ற பல பிரச்சினைகள் வந்து கொண்டிருப்பதையும், லீகல் கன்சல்டேசனுக்காக போனிலும், மெயிலிலும் தொடர்பு கொள்கிறார்கள் பலர்.

ஆகவே நமது நிறுவனம் இதற்கான ஒரு தீர்வினை சர்வீஸாகச் செய்யலாம் என முடிவெடுத்து இருக்கிறது.

தமிழ் நாட்டில் சொத்து எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். தற்போதைக்கு, அதன் பரிபாலனம் உங்களிடம் இருந்தால், அதை எம் நிறுவனத்திடம் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையைச் சட்டப்படி கொடுக்கலாம்.

சொத்துக்கு ஏற்ப வருடக்கட்டணம் செலுத்த வேண்டும். அது வீடோ, காம்ப்ளக்சோ, அபார்ட்மெண்டோ, தோட்டமோ, வயலோ, விவசாய பூமியோ எதுவாக இருப்பினும் எமது நிறுவனத்திடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.

நமது நிறுவனம் உங்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்ய விடாமலும், வருமானத்தை துல்லியமாக வசூல் செய்து உங்க்ள் வங்கிக் கணக்கில் சேர்க்கவும், மாதம் ஒரு தடவை நீங்களே உங்கள் சொத்தினை  பார்வையிடவும், வரிக்கள் மற்றும் இதர வேலைகளைச்  செய்து தரவும் தயாராக இருக்கிறது.

சொத்துக்களை வாங்குவது பெரிதில்லை. அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும், தலைமுறைக்கு சேர்த்திடவும் வேண்டும். அதை நமது நிறுவனம் சர்வீஸாகச் செய்து தருகிறது.

தேவைப்படுபவர்கள் covaimthangavel@gmail.com என்ற மெயில் முகவரிக்கு தேவைப்படும் சேவை பற்றிய விபரத்தினையும், சொத்துக்கள் விபரத்தையும் தெரியப்படுத்துங்கள்.

ஒரு அக்ரிமெண்ட் போட்டுப் பதிவு செய்து கொண்டு, பிறகு நிறுவனம் தனது வேலையைத் தொடர்ந்து செய்யும்.

அவசியம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

போனில் அழைக்க (9600577755) காலை 9.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரையிலும்

உங்கள் சொத்துக்கள் உங்களிடமே இருக்கவும், ஆக்கிரமிப்புகள் இல்லாது இருக்கவும், மன நிம்மதியாக இருக்கவும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்க.

Friday, April 17, 2020

காமம் தீராதவர்கள் (18+ மட்டும்)


கணவனைக் கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி என்ற பதிவினைத் தொடர்ந்து எனக்கு பல பெண்கள் போனில் அழைத்தார்கள். ஏன் இன்னும் அந்தத் தொடரை எழுதவில்லை எனக் கேள்விகள். எழுதலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் மனசு வரவில்லை. ஏனென்றால் ஒரு மாமியார் என்னை அழைத்தார்.

“தம்பி, நீங்க என்ன எழுதப் போறீங்கன்னு எனக்குத் தெரிந்து விட்டது. நான் பட்ட துன்பத்தை பிறர் அனுபவிக்க வேண்டாம். ஆகவே எழுதாதீர்கள். அதை இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் சுய நலத்துக்காகப் பயன்படுத்துவார்கள். எளிதில் ஆண்களை பைத்தியம் பிடித்தலைய வைப்பார்கள். கலிகாலம் அப்பா. வேண்டாம் எழுதவே எழுதாதீர்கள்” என்றார்.

அவர் என்ன துன்பம் அடைந்தார், எப்படி என்றெல்லாம் எனக்கு கேட்கத் தோன்றவில்லை. ஆனால் இது பிரச்சினைக்கு வழி வகுக்கும் எனத் தெரிந்து கொண்டேன். பெரும்பாலும் என்னைத் தொடர்பு கொண்டவர்கள் மத்திம வயதுப் பெண்கள். ஆகவே அலர்ட் ஆறுமுகமாகி விட்டதால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன், என் பெயரைக் கொண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை வெகு சுருக்கமாய் எழுதி இருந்தார் சிவராஜ் என்பவர்.

”மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்” என்பாராம் ஜி நாகராஜன்.

அடியேனுக்கு ”மனிதன் தீராக்காமந்தகன்” என்றுதான் தோன்றும்.

ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா கதையை நான் படிக்கவில்லை. கீதாப்பிரியன் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்ததைப் படித்து, அப்படியே செந்தில் ஜகன்நாதனைப் பிடித்து, பார்த்தால் வேறு உலகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். நன்றி கீதாப்பிரியன்.

செந்திலுக்கு படம் கிடைத்து, அவரின் இயக்கத்தில் ஒரு படம் பார்க்கணும் என ஆவல். பார்க்கலாம், காலம் என்ன சொல்லப் போகிறது என.

காமம் மனிதனிடத்தில் இருந்து மறைந்து விட்டால், அவன் மண்ணில் வாழ பிடிப்பில்லாமல் போய் விடும். காமம் இல்லா வாழ்க்கை வெற்று வாழ்க்கை. சாமியார்கள், சூஃபிக்கள், ஃபாதர்களை விட்டு விடலாம்.

மனதை வெகுவாகப் பாதித்த அந்த உண்மையின் அடிவேர் ஒரு பெண்ணின் காமம். அமைதியான குளத்தின் நடுவில் வீசும் கல் ஒன்று உருவாக்கும் அலையைப் போல, காமத்தின் பால் வீசப்பட்ட தவறான பார்வை, செயல் உருவாக்கும் அபத்தத்தின் துயரம் அந்த தங்கவேல் வாழ்க்கையில் மீளவே முடியாத அவலத்தை உருவாக்கி இருந்ததைக் கண்டு மனிதர்கள் தீராக்காம நோயுடையவர்கள் என்ற எனது எண்ணத்திற்கு வலுச் சேர்த்தது. 

அடூர் கோபால கிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக இருந்த தங்கவேல் அண்ணின் கதை இனி, சிவராஜ் எழுதியது. (நன்றி சிவராஜ்)

சுருக்கமாக எழுத விரும்பவில்லை. சிவராஜ் சிலாகித்து எழுதிய அப்பதிவு மறக்கவே முடியாத ஒன்றாகி விட்டதால், அதை இங்கு பதிவு செய்து வைக்கிறேன். அவர் எனது பிளாக்கைப் படித்தால் என்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை திரு.சிவராஜ்.

மலையாளத்தின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியரான அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் தங்கவேல் அண்ணன். எனக்கு, முதன்முதலாக அவர் ஒரு நூலகத்தில் அறிமுகமானார். சென்னிமலை மலையடிவாரத்தின் கீழே அமைந்திருந்த சிறிய நூலகமது. முதன்முதலில் அவரைப் பார்க்கையில் அவர் நூலகத்தில் அமர்ந்து, கையில் ஒரு நோட்டை வைத்து எதோ குறிப்பு எழுதிக்கொண்டிருந்தார். நான், வேறொரு நண்பரை அங்கு சந்திக்கச் செல்கையில் எதேச்சையாக அவரை அங்கு கண்டேன். அடுத்தடுத்து, வெவ்வேறு தருணங்களில் அந்நூலகதிற்குப் போகும்போதும், அவர் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது.

ஒருநாள் நானாகச் சென்று என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். மெல்ல எங்களுக்குள் பேச்சு வளர்ந்தது. இலக்கியத்தில் தீவிரமான வாசிப்பும், இசைகுறித்த ஆழ்ந்த நேசிப்பும் உள்ள மனிதர்தான் தங்கவேல் அண்ணன். இசையமைப்பாளர்கள் குறித்தும், இசைகுறித்தும் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிற அறிவுஞானத்தை அவர் பெற்றிருந்தார். நான் நேர்பழகிய முதல் இசைநேசர் அவர். ஒவ்வொரு இசைக்கலைஞர்கள் பற்றியும் சொல்வதற்கு அவருக்குள் ஒரு கருத்திருந்தது. ஒரு குரல் இசையில் என்னவாக ஒலிக்கிறது என்பதைப்பற்றிய துல்லிய விவரணைகளை எடுத்துரைக்கும் நபராக அவர் ஆளுமை அடைந்திருந்தார்.

அவர் ஒருமுறை சொல்லக்கேட்டதுண்டு, “ரஹ்மானுடைய மியூசிக், இளையராஜா மியூசிக் என்ன வித்யாசம்ன்னா... ரஹ்மான் மியூசிக்ல ஏகப்பட்ட இசைக்கோர்வைகள் (tracks) கலந்த இசையாக இருக்கும். இளையராஜாவோட இசை, ரொம்ப சொற்பமான இசைக்கோர்வைகள் உள்ளதா இருக்கு. எனக்கு மிக நன்றாக ஞாபகமிருக்கிறது. இசைகுறித்து அவருக்கும் எனக்குமான ஒரு உரையாடலில் அவர், “நிறைய கொலைகளை தடுப்பதற்கு இளையராஜா இசைமாதிரியான மெல்லிசைகள் காரணமாக இருக்கும். அதிகமான கற்பழிப்பு, வன்முறை எண்ணங்கள் வருவதற்கு இப்போதைய நவீன இசை காரணமாக இருக்கும். ஏனென்றால், அவ்வளவு இசைக்கோர்வைகள் மனதுக்குள் போகும்போது, அந்த அழுத்தம் ஒரு வன்முறையாக மாற வாய்ப்புள்ளது என்று சொன்னார்.

தங்கவேல் அண்ணனும் நானும் தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள் அடுத்தடுத்து வாய்த்தது. ஒருநாள், அவர் தங்கியிருந்த அவரது நண்பரின் அறைக்குச் சென்றோம். மிகவும் சிறிய அறை, ஆனால் அதில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அதன்பிறகு, அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அங்கும் நிறைய புத்தகங்கள் இருந்தன. எப்பவெல்லாம் சென்னையில் பணியில்லாமல், சொந்த ஊரில் அலைந்துதிரிகிறாரோ அப்பவெல்லாம், ஊருக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்விடுவது அவருடைய பழக்கமாக இருந்தது. எனக்கு முதன்முதலில் புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்தியது அவர்தான். புதுமைப்பித்தன் மீது அவருக்கு அளவுகடந்த காதல் இருந்தது. ஒரே புத்தகத்தை இருபது, முப்பது முறை தொடர்ந்து வாசிக்கிற ஒரு மனப்பழக்கம் உடையவராக அவர் கனிந்திருந்தார்.

அவரிடமிருந்த பெரும்பான்மையான புத்தகங்கள் எல்லாம், ஏதோவொரு நூலகத்தில் திருடப்பட்டவையாக இருந்தது. ஒவ்வொரு புத்தகத்தின் மீதிருந்த நூலக லட்சினை அதை உறுதிசெய்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு ஊர்களின் நூலகங்கள். புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமில்லாமல், அருகில் ஒரு நோட்டு வைத்து குறிப்பெடுப்பது அவருடைய மாறாத பழக்கம். அப்படி அவர் வழக்கமாகக் குறிப்பெடுக்கையில், அவர் பக்கத்தில் சின்ன ‘BPL வாக்மேன் ஒன்றை அருகில் வைத்திருப்பார். அதில் ஒரு பெண்குரல் கீதம் கேட்டுகொண்டே இருக்கும். அது, பாம்பே ஜெயஸ்ரீயின் குரல்!

முதன்முதலில், எனக்கு பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அறிமுகமானது அங்குதான். எப்பவுமே அந்தக்குரல் மட்டும்தான் அந்த வாக்மேனில் ஒலித்துக் கொண்டிருக்கும். வேறு எந்தப் பாடலையும் அவர் கேட்டு நான் பார்த்ததில்லை. ‘மாலைப் பொழுதின் வேனிலிசையே...” என்ற பாடல் திரும்பத் திரும்ப அவர்முன் ஒலித்தபடியே இருக்கும். பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் ‘அக்னி ஆல்பத்தில் வெளிவந்த பாடல் என நினைக்கிறேன்.

ஒருநாள், அவர் மிதமான போதையில், “நான் ஆறாவது படிக்குறப்ப என்னோட அப்பா, எங்க வீட்டு மரத்தூண்ல என்னோட ரெண்டு கையையும் கட்டிபோட்டுட்டு, சில வார்த்தைகள அம்மாவ பத்தி சொல்லிட்டு, என் கண்ணு முன்னாடியே உத்திரத்துல தூக்குமாட்டித் தொங்கி தற்கொலை செஞ்சுகிட்டாரு. ஆனா, அதுக்குப் பின்னாடியும் நான் என் அம்மாவோட சேர்ந்து வாழக்கூடிய சூழல்தான் இருந்துச்சு. என் கண்ணு முன்னாடி நடந்த அந்த மரணமும், எனக்குள்ள இருந்த வெறுப்பும் என்னைய எதிர்மறையா பயணிக்கவிடாம, ஏதோவொருவகையில நேர்மறையான திசையில பயணிக்கிறேன்னா... ஒரு நாள்ல நாலஞ்சு காட்சிகள என்னால புதுசா யோசிச்சு எழுத முடியுதுன்னா... அது எல்லாத்துக்குக்கும் கண்டிப்பா காரணம் இந்த அம்மாவோட குரல் தான். நீ திரும்பத் திரும்ப கேளு!” என்று என்னிடம் சொன்னார். அப்படித்தான் பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரல் எனக்குள் அணுக்கமாகியது. அப்படித்தான் நான் அவர்களின் மீட்பிசையை கண்டடைந்தேன்.

காலங்கள் நகர நகர, பத்து வருடங்கள் கழித்து ஒருநாள் அதிகாலை அந்தத் தகவல் என்னை வந்ததடைந்தது, ‘தங்கவேல் அண்ணன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என. அவருக்கு மிக நன்றாக நீச்சல் தெரியும் என்பதை நான் நன்கறிவேன். நன்றாக நீச்சல் தெரிந்த ஒருவன், தண்ணீரில் மூழ்கி உயிரைவிடுகிறான் என்றால்... அவன் எவ்வளவு விரும்பி வழியச்சென்று தன் மரணத்தை உள்வாங்கி இருப்பான் என நினைக்கும்போதே எனக்குள் அழுகைவந்துவிடுகிறது. சிறுவயதில் கண்முன்னே நிகழ்ந்த தன் தந்தையின் தற்கொலையின் காட்சிநினைவு, தானும் சாகும்வரை மண்டையைவிட்டு அகலாத தங்கவேல் அண்ணனுக்கு, இடைக்கால மருந்தாக எது அவரது உயிரை அத்தனைக் காலம் தள்ளிப்போட்டிருக்கும் என யோசித்தால், அவை இரண்டே இரண்டுதான். ஒன்று இலக்கியம், மற்றொன்று பாம்பே ஜெயஸ்ரீயின் இசைக்குரல்!

அதன்பிறகு, நான் சென்னைக்கு வந்து வெவ்வேறு சூழல்களில் அலைந்து திரிந்தபோதும்... பத்திரிக்கை, சினிமா என எல்லாவற்றிலும் தோற்றுவிட்டேன் என்கிற மனநெருக்கடியில் நானிருந்தபோதும்... என்னை மெல்லத் தேற்றியது, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் அதே ‘அக்னி ஆல்பம் தான். வருடங்கள் ஓடி, பிரார்த்தனைகளின் நற்பயனாக குக்கூ காட்டுப்பள்ளி எனும் கனவு நிறைவேறத் தொடங்கியது.

அதன்பின், கட்டிடக்கலை பயிலும் பியேஷ் என்னும் தோழிக்கும், கற்களை அடுக்கி அடுக்கி கரையோரங்களில் சிற்பங்கள் செய்து அவைகளை அப்படியே விட்டுவிட்டுப் பயணிக்கிற ஒரு சிற்பக்கலைஞனுக்கும் குக்கூ காட்டுபள்ளியின் வனப்பகுதிக்குள் திருமணம் நிகழ்ந்தது. பியேஷ், தற்போது ஆப்ரிக்காவில் பழங்குடி மக்களின் வீடுகளை ஆய்வு செய்கிறவராக இருக்கிறார். பியேஷ், முழுக்க முழுக்க பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் இசையை மனதுக்குள் கொண்டாடி மகிழ்பவர். எனவே, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் இசைக்குரல் காடெங்கும் மெல்லியதாக ஒலிக்க, அந்திப்பொழுதின் சிறுஅகல் விளக்கொளியில் அவர்களது திருமணம் நிகழ்ந்தது.

என் மனதுக்குள் சின்னதாக ஒரு விருப்பம் இருந்தது, குக்கூ திறப்பு விழாவின்போது, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களும் வரவேண்டும் என்பது. ஆனால், அச்சமயத்தில் அகிலா அவர்கள்தான் மின்னஞ்சல் வழியாக அம்மாவிடம் இதுகுறித்து பேசிவந்தார். அப்போது, அம்மாவுக்கென தனியாக திருவண்ணாமலையில் அறை ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று மின்னஞ்சல் அனுப்பியபோது, அதற்கு அவர், “என்னுடைய குரலை பிரார்த்தனையாக நினைக்கிற அந்த இடமும் ஒரு கோவில் தான? அங்கவந்து தங்குவதுதான் சரியாக இருக்கும். அந்த இடம் எப்படியிருந்தாலும் நான் தங்கிக்கொள்கிறேன் என்று பதில் அனுப்பியிருந்தார். திறப்புவிழாவுக்கு வருகைதர அம்மா ஒப்புக்கொண்ட பிறகும், ஏதோவொருவகையில் தேதி மாற்றம் நிகழ்ந்ததால் அவர்களால் திறப்புவிழாவில் கலந்துகொள்ள இயலாத சூழல்.

பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்பிரமணியம், ‘பவுல் பார்வதி ஆகியோர்கள் என்றாவதொருநாள், குக்கூ மலையடிவாரத்தில் கொஞ்சமாகக் குழுமியிருக்கும் மக்கள் திரளுக்கு அமர்ந்து பாடுவதாக எங்களுக்குள் நாங்களே அடிக்கடி நினைத்துப்பார்த்துக் கொள்வதுண்டு. எங்கள் நீண்டகால இசைவிருப்பம் இது. அவ்வகையில், நாங்கள் இசைத்துதித்து கைதொழும் அந்தத் தாயின் கீதக்குரல், தற்பொழுது அருகில் கேட்பதாக நாங்கள் உணர்கிறோம். எங்கள் பயணத்தின் வெவ்வேறு சூழ்நிலைகளில், உள்ளுணர்வாக உடனிருந்துப் பயணித்தது அம்மாவின் குரல்தான். அவருடைய இசைகேட்பது, ஒரு அனிச்சை செயலென எங்களுக்குள் நிகழ்கிறது.

கிராமத்தில் வயதான பாட்டி கட்டுகிற மண்வீடு போலதான் அம்மாவோட குரல்... அதுல முழுக்கமுழுக்க வாழ்க்கை இருக்கும் எனச்சொல்லும் கட்டிடக்கலைஞர் ‘மிராவையும், தங்களுடைய கர்ப்பகாலத்தில் அம்மாவின் ‘ஜெகதோ தாரனா பாடலை தினந்தோறும் சிசுவைக் கேட்கச்செய்த அருண்- ரேணுவையும், இணையவெளியில் அம்மாவின் இசைக்குரலை தொடர்ந்து மலரச்செய்கிற பிராபகரன் சேரவஞ்சியையும், மின்மினி ராஜாராமையும், ‘இரக்கம் வராமல் போனதென்ன காரணம் அருணிமாவையும்... இக்கணம் மனதில் நினைத்துக்கொள்கிறோம்.

குக்கூ நேரலை உரையாடலில், நாளை(14.04.2020 சித்திரை முதல்நாள்) மாலை 5 மணிக்கு, இசையன்னை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் உரையாடவுள்ளார். இருதயவுறவுகள் இதில் இணைந்துகொள்க!


இப்படிக்கு,
சிவராஜ்