குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, June 5, 2011

சொத்துக்கள் வாங்கினாலும் பிரச்சினைகள் வரும்


சமீபத்தில் 3/5/2011 தினமலரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.  50 அடிக்கு மட்டுமே அனுமதி உடைய சாலையினை 60 அடி என்று தவறாகக் காட்டி, அதன்படி எட்டு மாடி அடுக்குக் குடியிருப்பினை பிரபல கட்டுமானக் கம்பனியொன்று கட்டவிருப்பதாகவும், அதற்கு உடந்தையாய் பலரும் இருக்கிறார்கள் என்றும் அந்த அறிவிப்பு சொன்னது.

டிடிசிபி அப்ரூவல் இருக்கிறது. விசாரித்தால் சரியாக இருக்கிறது. மற்ற விசயங்கள் அனைத்துமே மிகச் சரியாய் இருக்கிறது. ஆனால் 40 அடியை 60 அடி என்று காட்டி குடியிருப்பைக் கட்டி விற்ற பிறகு, இவ்விஷயம் வெளியில் தெரிந்து, அரசு நடவடிக்கை எடுத்தால் வீட்டினை வாங்கியவர்களின் கதி என்ன? இது போன்ற ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் சொத்து வாங்கும் போது வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. 

நன்கு படித்தவர்களால் கூட இவ்விஷயங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இருக்கின்ற அவசரகாலத்தில் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்க்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்று அனைவரும் சொல்லுவார்கள்.

சொத்துக்கள் வாங்குவதே பெரும் பிரச்சினையாய் இருக்கும் போல இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சொல்ல வேண்டியது கடமை சொல்லி விட்டோம். இதற்கு என்ன தான் வழி என்று கேட்டால் பிரச்சினையே இல்லாத சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதுதான் சரி. மேற்கண்ட பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் சொத்துக்களை, எந்த வித சிரமமும் இன்றி வாங்க விரும்புவோருக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நல்ல சேவையை அளிக்கிறது.

பிரச்சினையே இல்லாத சொத்துக்களைக் கண்டுபிடிப்பது எப்படி, யாரிடம் கேட்பது, சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து பிரச்சினைகள் ஏதுமில்லாத சொத்துதானா என்பதை எப்படி தெரிந்து கொள்வது போன்ற பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வுகளைத் தருகிறது.

சொத்துக்களின் மீதான வில்லங்கங்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் அலசி ஆராய்ந்து தனது முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இவ்வசதி தேவைப்படுவோர் நிறுவனத்தின் இயக்குனரை அணுகலாம்.

மெயில் : info@fortunebricks.net or thangavelmanickam@gmail.com

தொலைபேசி எண் : + 91 96005 77755

Saturday, June 4, 2011

ஐடியில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய குறிப்பு

கம்ப்யூட்டரில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கும் உடல் சூடு அதிகமாகும். அச்சூடு அதிகரித்தால் உடலில் பலவித நோய்கள் உருவாக ஆரம்பிக்கும். உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடற் சூட்டைத் தணிக்க சில சிறிய வழிகளை தொடர்ந்தால் உடற்சூடு ஏற்படாது.

சாப்பாட்டில் தூள் உப்பின் உபயோகத்தை நிறுத்தி, கல் உப்பினைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இரண்டாவதாக எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி விட வேண்டும். மூன்றாவது பெப்சி, கோக், லெமன் என்று குளிர்பானங்களையும், பீட்சா, பர்கர் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். சர்க்கரை உபயோகப்படுத்துவதற்குப் பதிலாய் பனங்கற்கண்டு, பனைவெல்லம்(கெமிக்கல் சாராதது) பயன்படுத்துங்கள். பால், பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து விடுங்கள்.

இனி உடற் சூட்டைத் தணிக்க என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்கிறேன். வாரம் இரண்டு முறை தலையிலிருந்து கால் வரை அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆக வேண்டும். அப்படிக் குளிக்கவில்லை என்றால் உடற்சூடு குறையாமல் நோய்கள் வர ஆரம்பிக்கும். ஏசியில் அமர்ந்தால் சூடு குறைந்து விடும் என்று நினைக்காதீர்கள். அதில் அமர்ந்தால் உடற்சூடு அதிகரிக்கும். 

உடற்சூட்டைத் தணிக்க சீரக எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கவும். நல்லெண்ணெயை நன்கு காயவைத்து அதில் சீரகத்தை போட்டு பொறித்து வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயை தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்தி வந்தால் உடற்சூடு குறைந்து உடல் காற்றுப் போல இருக்கும். 

அடிக்கடி பப்பாளி, கொய்யா, மாதுளை பழங்களைச் சாப்பிட்டு வரவும். வாரத்துக்கொருமுறை அவசியம் கொவ்வைக்காய் உணவில் சேர்க்கவும். அகத்திக்கீரை சிகரெட் பிடிப்பவர்கள் சேர்த்துக் கொள்ளவும். அகத்திக் கீரையில் நிகோடினைக் குறைக்கும் பொருள் இருக்கிறது.

Thursday, June 2, 2011

பாதுகாப்பான முதலீடு மூலம் பல மடங்கு வருமானம் பெற

இன்றைய காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாயை ஏதாவதொரு தொழிலில் முதலீடு செய்து, அதிலிருந்து வருடத்திற்கு வருமானம் என்றால் செலவுகள் போக 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஏனென்றால் தொழில்கள் அவ்வாறு நடந்து வருகின்றன. பாதுகாப்பான முதலீட்டின் மூலம் நல்ல வருமானம் பெற பலர் ஆவல் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த வகையில், 100 மடங்கு பாதுகாப்பான வகையில் முதலீடு செய்யவும், அந்த முதலீடு இருமடங்காக மாறும்படியான, நம்பிக்கையான, முதலீட்டுப் பாதுகாப்பான சர்வீஸ் ஒன்றினை வழங்குகிறது.

எப்படி என்பதை எங்களது கம்பெனி வாடிக்கையாளரின் அனுபவம் மூலமாக, உங்களின் பார்வைக்கு..

எங்களது நிறுவனத்தை சொத்து வாங்கித் தரும்படி அணுகினார் ஒருவர். எதற்காக சொத்து வாங்குகின்றீர்கள் என்று விசாரித்தோம். இன்வெஸ்ட்மெண்ட் பர்போஸ் என்றார். அந்த சமயத்தில் எங்களிடம் 12 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்திருந்தது. அவரிடம் இந்தச் சொத்தினை வாங்கும் படியும், வாங்கிய பிறகு சைட் போட்டு விற்றுத்தருகிறோம் என்ற எங்களது கோரிக்கையை வைத்தோம். உடனே அதற்குண்டான பிராஜக்டைப் போட்டுத்தரும்படி கேட்டார். கையோடு போட்டுக் கொடுத்தோம்.

மேற்கண்ட நிலத்தை அவர் பெயருக்கு வாங்கி ரிஜிஸ்டர் செய்து கொடுத்தோம். பின்பு அவரிடமிருந்து ஒரு எம்ஓவினைப் போட்டுக்கொண்டு, டிடிசிபி பிளான், அப்ரூவல் இவற்றினை அரசிடமிருந்து முறைப்படி வாங்கினோம். அப்ரூவல் வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருட காலத்திட்டக் கணக்கில், சைட்டுகளை விற்கத் தொடங்கினோம்.

எங்களிடம் ஏற்கனவே வாங்கியவர்களே அனைத்து சைட்டுகளையும் வாங்கிக் கொள்ள, குறிப்பிட்ட காலத்திற்குள், அதாவது நான்கைந்து மாதங்களுக்குள் அனைத்து மனைகளும் விற்றாகி விட அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஒவ்வொரு சைட் விற்பனையின் போதும் கையெழுத்துப் போட வந்த எங்களது வாடிக்கையாளர், தனக்கு கிடைத்த லாபத் தொகையில் எங்களுக்குண்டான பங்கினைக் கொடுத்து விட்டு, மீதித் தொகையுடன் மகிழ்ச்சியோடு சென்றார்.

கடைசி சைட் ரெஜிஸ்டரின் போது, உண்மையில் “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” எனக்கு அதிர்ஷடத்தை தந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொல்லிச் சென்றார். அடுத்த சைட் போட பணத்தோடு காத்திருக்கிறார் எங்களின் வாடிக்கையாளர். ஃபார்ச்சூன் பிரிக்ஸ் அவருக்கான நிலத்தை தேர்வு செய்வதில் இறங்கி இருக்கிறது.

சொத்து மார்க்கெட் மதிப்பின் படி முதலீட்டாளரின் பெயரில் வாங்கப்படுகிறது. சைட் போட்டு விற்பனை செய்ய அவர் எந்த வித விளம்பரச் செலவும் செய்ய வேண்டியதில்லை. அவரின் வேலை சொத்தினை வாங்கி, அவர் பெயரிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது மட்டும்தான். மற்றபடி வேலைகளை “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.

சைட் போட்டு, விற்பனை செய்வது வரை “ஃபார்ச்சூன் பிரிக்ஸே” கவனித்துக் கொள்ளும். இதை விட பாதுகாப்பான, நல்ல லாபம் தரும் முதலீடு என்பது இக்காலத்தில் சாத்தியமா என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

மேற்கண்ட சர்வீஸ் தேவைப்படுபவர்கள் எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். இதுவரை நாங்கள் செய்த அத்தனை மனை விபரங்களை உங்களின் பார்வைக்கு தருகிறோம்.

குறிப்பு : எங்களது ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம், அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பெற்ற பல வருட அனுபவங்கள், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவை வழங்க ஏதுவாக இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு, மிகச் சிறந்த லாபம் கிடைக்க எங்களை அணுகலாம்.

தொடர்பு எண் : 
கோவை எம் தங்கவேல், எக்சிகியூட்டிவ் டைரக்டர், ஃபார்ச்சூன் பிரிக்ஸ்
+ 91 96005 77755 (காலை 10 மணியிலிருந்து இரவு 6 மணி வரைத் தொடர்பு கொள்ளலாம்)

எங்களது இணையதளத்தினை பார்க்க கீழே இருக்கும் படத்தினைச் சொடுக்கவும்.

Thursday, April 21, 2011

இக்காலக் குழந்தைகள் எதை நோக்கிப் பயணிக்கின்றன?

எனது நண்பருடன் பொள்ளாச்சி செல்ல வேண்டிய வேலை இருந்ததால் காரில் கிளம்பி விட்டோம். வேலை முடிந்து வந்து கொண்டிருந்த போது, நண்பரின் பையனிடமிருந்து போன் வந்தது. சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார். பதினொன்றரை மணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்றுச் சொன்னார்.  பையன் டான்ஸ் கிளாசுக்குப் போக வேண்டுமாம். அப்பா கொண்டு வந்து விட வேண்டும் என்பது டீல்.

அப்போது தான் நாங்கள் காரமடை தாண்டி வந்து கொண்டிருந்தோம். வெள்ளலூர் தாண்டி வருகையில் மேலும் ஒரு வேலை காரணமாய் அரை மணி நேரம் ஆகி விடும் என்றுச் சொல்ல, பையனிடம் பேசினார். தொடர்ந்து எங்கெங்கோ போன் பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் முடித்து விட்டு என் முகத்தினைப் பார்த்தார்.

”சொல்லுங்க” என்றேன்.

”என் பையன் கடைசிக் காலத்தில கஞ்சி ஊத்தமாட்டான் சார்” என்றார்.

“ அதான் தெரிஞ்ச கதையாச்சே சார். என்ன நடந்தது? ” என்று கேட்க கதை சொன்னார்.

பதினொன்றரைக்கே வருவேன் என்றுச் சொல்லி விட்டு ஏன் இப்போது மேலும் லேட்டாக வருகிறாய் என்றும், என் டயத்தை வேஸ்ட் செய்கிறாய் என்றும் சத்தம் போட்டிருக்கிறான். அது மட்டுமல்லாமல், இவர் வருவதற்கு லேட்டாகுமென்பதால், பையனை டான்ஸ் கிளாஸ்ஸிற்கு கொண்டு செல்ல மாற்று ஏற்பாடாக தன் பக்கத்து வீட்டு நண்பர்களை அழைத்திருக்கிறார். அவரின் நண்பர்கள் எல்லோரும் இப்போது தான் பையன் அழைத்தார் என்றும், நாங்கள் தூரத்தில் இருப்பதால் உடனடியாக வர இயலாது என்றும் சொல்லி இருக்கின்றனர். நண்பரின் பையன் அப்பாவிடம் சொல்வதற்கு முன்பே, அவரின் நண்பர்களை அழைத்து விசாரித்து இருக்கிறார். இது தெரியாமல் இவர் அவரின் நண்பர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் முடியாது என்றுச் சொல்லியவுடன் அப்பாவுடன் சண்டை போடுகிறான். அதன் பிறகு அவனின் அம்மாவை கொண்டு வந்து விட ஏற்பாடு செய்திருக்கிறான்.

இந்தக் காலக் குழந்தைகள் தன் நலம் சார்ந்தே வாழ்கின்றன என்று சோகத்துடன் சொன்னார். பிறரின் பிரச்சினை என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மறுக்கின்றனர். விளைவு - வயதானவர்கள் விடுதிகள் புற்றீசலாய்க் கிளம்புகின்றன.

ஏன் இந்தச் சூழ் நிலை ஏற்பட்டது என்பதை பெற்றோர்கள் கவனித்து சரி செய்யா விட்டால், வயதான காலத்தில் எங்கோ கிடந்து உழல வேண்டியதுதான்.


Tuesday, April 5, 2011

சொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1

அன்பு நண்பர்களே,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் பெயரில் ஏதேனும் ஒரு சொத்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஏதோ ஒரு இடத்தில் கையளவு நிலம் வாங்கிப் போட்டால் அது தரும் பெருமித உணர்ச்சியே வேறு. நிலம் வாங்கியவர்களுக்கு அடையாளம் என்று ஒன்று கிடைத்து விடும். இன்றைய கால கட்டத்தில் சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வருவாய்த் துறை (Revenue Department) கீழ் இருக்கும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தான் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)

பட்டா என்றால் என்ன?
=======================
ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

சிட்டா என்றால் என்ன?
======================
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

அடங்கல் என்றால் என்ன?
========================
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

'அ' பதிவேட்டில் ('A' Register) இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

1.பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
3.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
4.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் என்றால் என்ன?
===============================================

நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை ஒரு சொத்திற்கான பதிவேடுகள் என்னென்ன என்பதைப் பார்த்தோம். அடுத்து சொத்து வாங்கும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மாதம் மூன்று லட்சம் வருமானம் வரும் பண்ணை வீட்டுடன் கூடிய சொத்து ஒன்றினை விற்பனைக்காக, நிலத்தின் உரிமையாளர் ஃபார்ச்சூன் பிரிக்சிடம் கொடுத்திருக்கிறார். அச்சொத்து வேண்டுவோர் மேலும் விபரங்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸினை அணுகலாம்
தொடர்பு எண் : 0422 4275976

மேலும் விபரங்களுக்கு : http://www.fortunebricks.net

Monday, March 28, 2011

தேர்வு சில நினைவுகள்


(இது மனோரா என்றழைக்கப்படும் கடற்கரையோர அந்தக்கால கலங்கரை விளக்கம். வெகு அருமையான சுற்றுலாத் தளம்)

ஆவணம் கிராமத்திலிருந்து பேராவூரணிக்குத் தான் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதச் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். விடிகாலையில் எழுந்து குளித்து, கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு நானும் போஸும்(எங்களின் வயல் வேலை செய்து வந்தவர்) சைக்கிளில் கிளம்புவோம். குறுக்கு வழியாய் காவிரி ஆற்றின் கிளையாற்றினை ஒட்டிய சாலையில் ஆரஸ்பதி மரங்கள் வரிசையாய் நிற்கும் நிழலில் மெதுவாய் சைக்கிளை மிதிப்பார் போஸ்.

கோடை காலம் ஆதலால் ஆற்றில் தண்ணீர் வராது. கதிர் அறுப்பு முடிந்து போய் வயல் வெளிகளில் ஆங்காங்கே வைக்கோல் போருகள் குட்டி குட்டியாய் காட்சியளிக்கும். பொறுக்கு மண் அடிக்கும் வண்டிகள் வயல்களுக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அப்படியே மெதுவாய் ஆற்றோரமாய் வந்து கொண்டிருக்கும் போது ஆறு ஒரு இடத்தில் முடிந்து போய் இருக்கும். அது என்னவென்றால், ஆற்றுத் தண்ணீர் முழுமையும் ஒரு இடத்தில் குழாய் போன்றிருக்கும் பகுதிக்குள் கொட்டும், அத் தண்ணீர் பத்து மீட்டர் பூமிக்குள்ளே பதியப்பட்டிருக்கும் குழாய் வழியாகச் சென்று வெகு வேகமாய் மறு முனையில் கொப்பளித்துக் கிளம்பி வேகமாய்ச் செல்லும். தண்ணீரின் வேகம் குறையாமல் இருக்க அப்படி ஒரு சிஸ்டம் வைத்திருந்தார்கள். ஊரில் அதைக் கேணிப்பாலம் என்பார்கள்.

அதைத் தாண்டிச் செல்லுகையில் ஓரிடத்தில் போர் மூலம் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். வருடம் முழுவதும் அப்பகுதியில் விவசாயம் நடந்து கொண்டிருக்கும். பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரியும். அப்படியே சிறிது தூரம் கடந்து சென்றால் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்கும் ஊர் வழியாய் பேராவூரணியில் இருக்கும் அரசு பள்ளிக்குச் சென்று சேர்வோம்.

நான் படித்த காலத்தில் அறிவியலில் 40 மதிப்பெண்ணுக்கு ஒற்றை வார்த்தையில் விடையளிக்கும் கேள்விகள் இருக்கும். நாற்பது வார்த்தைகள் எழுதி விட்டால் போதும் எளிதில் தேர்வாகி விடலாம். இத்தேர்வின் போது போலீஸ்காரர்கள் பள்ளியில் கேட்டருகில் அதிகம் தென்படுவார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து ”எழுதிக்கோங்கோ எழுதிக்கோங்கோ”  என்று பெரும் சத்தம் கேட்கும். ஒருவன் சைக்கிளை வேகமாக ஓட்டுவான். ஒருவான் பின்னால் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்வான். இவர்களைப் பார்த்ததும் போலீஸ்காரர்கள் துரத்துவார்கள். ஆனால் விடாமல் 40 விடைகளையும் சொல்லிவிட்டுத்தான் ஓய்வார்கள். சுமாராக படிக்கும் சில மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் 40 கேள்விகளையும் எழுதி பேனா மூடிக்குள் வைத்து வெளியில் தூக்கி எறிந்து விடுவார்கள். அதை எடுத்து பதில் எழுதி சத்தமாய்ச் சொல்வார்கள். அனைவரும் எழுதிக் கொள்வோம். நான் பதில்களைச் சரிபார்ப்பேன்.

வருடம் தோரும், இது ஒரு பெரும் சுவாரசியமான சம்பவமாய் நடக்கும். எத்தனையோ மாணவர்களில் அறிவியலில் தேர்ச்சி அடைய இந்த வழி காரணமாய் இருந்திருக்கிறது. அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதுக்குள் சிரிப்பொன்று பூக்கும்.

தேர்வெல்லாம் முடிந்த கடைசி நாட்களில் பேராவூரணி சக்கரம் தியேட்டரில் மேட்டினி சினிமாவொன்றினைப் பார்த்து விட்டு திரும்ப வருவோம். போரிலிருந்து ஊற்றிக் கொண்டிருக்கும் தண்ணீரில் கண்கள் கோவைப்பழமாய் சிவக்கச் சிவக்க ஒரு ஆட்டம் போட்டு விட்டு, வீடு வந்து சேர்வோம். 

அந்த நாட்கள் எல்லாம் நினைவுகளூடே இன்றைக்கும் பசுமையாய் நின்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் சுவாரசியமான சம்பவங்கள் சில சமயங்களில் சோர்வுற்ற மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

Sunday, March 27, 2011

மாதா பிதா குரு தெய்வம்


மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு எனக்கு நீண்ட நாள் கழித்து உதாரண விளக்கம் கிடைத்தது. எனது மகள் கோவையில் இருக்கும் ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா பள்ளியில் எல்கேஜி படித்துக் கொண்டிருக்கிறார்.நேற்றைக்கு காலையில் நானும் மனைவியும் மகளின் பிரமோஷன் கார்டை வாங்குவதற்காக பள்ளிக்குச் சென்றிருந்தோம்.  நீண்ட நேரம் கழித்து திரும்பிய மனைவியிடம் “ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேட்டேன்.


”வீட்டில் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தவர்கள், பால் குடி மறந்து பள்ளிக்கு வந்து , என்னையேச் சுற்றி வந்தார்கள். அவர்களுக்கு ஏபிசிடி சொல்லிக் கொடுத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, தூங்க வைத்து, பாட்டுச் சொல்லிக் கொடுத்து வந்தேன். என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.சில பிள்ளைகள் பேசவே மாட்டார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக பேச ஆரம்பித்தார்கள். இத்தனை காலம் பேசாமல் இருந்து விட்டு, வகுப்பை விட்டுச் செல்லும் போது பேசுகிறார்களே என்று அழுகை அழுகையா வருகிறது. தூங்கும் நேரம் மட்டுமே அம்மாவிடம் இருந்தார்கள். பெரும்பாலான நேரத்தில் என்னுடனே கழித்த பிள்ளைகள் இப்போது வகுப்பை விட்டுச் செல்லுவதை நினைத்து என்னால் தூங்கவும் முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை . இனி யார் என்னைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். யாருடன் நான் விளையாடுவது? யாருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது? ”என்று எனது மகளின் ஆசிரியை அழுதார் என்றுச் சொன்னார். அழுது அழுது ஆசிரியையின் முகம் வீங்கிப் போய் இருப்பதாக சொல்ல, என் மனது பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. மனைவியோ கண்களில் கண்ணீரோடு என்னிடம் என் மகளின் ஆசிரியைப்பற்றி சொல்லிக் கொண்டு வந்தார். எந்த ஒரு பிரச்சினைக்கும் கலங்காத என் கண்கள் நேற்றைக்கு கலங்கி நின்றன.

இதற்கு தீர்வு தான் என்ன? இது தீர்வு காண வேண்டிய ஒன்று அல்ல. அந்த ஆசிரியையின் அன்பினை காட்டுகிறது. இனி புதிதாய் வந்து சேரக்கூடிய மாணவர்களோடு பழக ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாய் புதிய மாணவர்கள் மீது பிரியம் கொள்வார். ஆனாலும் கடந்த ஒரு வருடமாய் பழகிய அந்த அன்பு உள்ளம், வரப்போகும் பிரிவினைக் கண்டு துடித்த, அந்த அன்பு உள்ளத்தின் பரிதவிப்பு கண்டு எங்கள் மனது பட்ட வேதனையை வார்த்தையால் எழுத முடியாது.

என் மகள் வகுப்பில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசில் பெற்றார். அதற்கு திருமதி நொய்லா அவர்களே காரணம். ஆசிரியை திருமதி நொய்லா அவர்களுக்கு பெற்றோர்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைப்பது அரிதிலும் அரிது. இவரைப் போன்ற ஆசிரியைகளை நிர்வாகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது எனது ஆவல்.


திருமதி நொய்லா அவர்கள் தான் உண்மையான குருவிற்கு ஒரு எடுத்துக்காட்டு. முன்னோர்கள் இவர்களைத் தான் ”குரு” என்றழைத்தார்கள். காசே பிரதானமாகக் கொண்ட இவ்வுலகில் அன்புள்ளத்தோடு வாழும் இவ்வகை மனிதர்களால் தான் உலகம் இன்னும் ஜீவித்து வருகிறது. 

திருமதி நொய்லா அவர்களின் அன்பிற்கு இவ்வுலகில் ஈடானது ஒன்றுமே இல்லை. கடவுள் இவருக்கும், இப்பள்ளிக்கும் ஆசீர்வாதங்களை வழங்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
Wednesday, March 9, 2011

கோவை சாந்தி கியர் கேண்டீன்

ஒண்டிப்புதூரில் இருக்கும் நண்பரைப் பார்க்கச் செல்லும் வழியில் சாந்தி கியர் கேண்டீன் என்ற போர்டைப் பார்த்ததும் காலையில் சாப்பிடாத காரணத்தால் ஒரு காஃபி குடித்து வரலாம் என்று உள்ளே சென்றேன். 

சென்ற பிறகுதான் தெரிந்தது அது கேண்டீன் இல்லை உயர்தரமான உணவகம் என்பதை. சுத்தமாய் பளிச்சிடும் டைல்ஸ் தரைகள். செல்ஃப் சர்வீஸ் பாணி பரிமாறுதல். சுத்தமாக துடைக்கப்படும் மேஜைகள். மெல்லிய சங்கீதம் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. சில்லிட்ட காற்று வீசுகிறது. சத்தமில்லாத சூழல். அமைதி தழுவும் சுற்றுப்புறங்கள். குழந்தைகள் கைகழுவ படிகள் என்று அசத்தினார்கள்.

உணவுகளின் விலையோ மிகக் மிகக் குறைவு. சாம்பார் வடையொன்றினை மனைவி வாங்கி வந்தார். விலை 10 ரூபாய் தான். இதே சாம்பார் வடை வேறு ஹோட்டல்களில் 23 ரூபாய் கொடுத்திருக்கிறோம். இட்லியோ ஆறு ரூபாய்(2) என்று எழுதி இருந்தது. மேலும் படிப்பதற்குள் அழித்து விட்டார் ஒரு அன்பர். கோதுமை தோசை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

நண்பரிடம் விசாரித்தேன். கோவையில் பாதி பேர் சமைப்பதே இல்லை என்றும், சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்தோடு சாந்தி கேண்டீனுக்கு வந்து விடுவதாகவும் சொன்னார். முழுச் சாப்பாட்டின் விலை ரூபாய் 25 என்றுச் சொன்னார். அசந்து விட்டேன்.

ஏதாவது அசந்தர்ப்பமாகத்தான் ஹோட்டல்களில் சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். அதுவும் பழங்கள் கிடைக்காத போது, ஹோட்டல்களை நாடுவது வழக்கம். வீட்டுச் சமையல் போல சுத்தமான, சுகாதாரமான சமையல் எல்லாம் ஹோட்டல்களில் இன்றைய சூழலில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனது நண்பரின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் வரை ஃப்ரீசரில் ஆட்டுக்கறியையும், கோழிக்கறியையும் வைத்திருப்பார்கள். அதற்கு தேவையான கிரேவியை ஒரு வாரம் வரை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகளை உண்ணவும் ஆசை வருமா? இந்த நண்பருக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது. அவருக்கும் எனக்கும் வீட்டிலிருந்து தான் சாப்பாடு வரவழைப்பார். காரணத்தை பிறகுதான் புரிந்து கொண்டேன்.

சாந்தி கியர்ஸின் சோசியல் சர்வீஸ் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் பணியாற்றிய போது அங்கு வரும் அன்பர்களை சாமியார் முதலில் சாப்பிடச் சொல்லி விடுவார். அதன்பிறகு தான் வந்த காரணம் பற்றி பேசுவார். என்னையும் அப்படியே வாழும்படி சொல்வார். ஒருவனுக்கு எவ்வளவு காசினைக் கொடுத்தாலும் போதாது என்றுதான் சொல்லுவான். ஆனால் சாப்பாடு போட்டுப் பாருங்கள். ஒரு அளவுக்கு மேல் போதும் போதும் என்றுச் சொல்லி விடுவான். அவனுக்கு வயிறும் நிறைந்து விடும். மனதும் நிறைந்து விடும். இதைத்தான் தர்மத்திலேயே மிக உயர்ந்த தர்மம் “அன்னதானம்” என்றுச் சொல்வார்கள்.

அந்த அன்னதானத்தையும் மிகுந்த அர்தத்தோடு செய்யும் சாந்தி கியர்ஸின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
Wednesday, March 2, 2011

உணவே விஷமான சம்பவம்

மிகச் சமீபத்தில் மனைவி சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்தார். அன்றைய இரவு உணவுக்காக ஹோட்டல் செல்லும் வழியில், கேரளக்கார கடை ஒன்று கண்ணில் பட்டது. ஆப்பம், கொண்டக்கடலைக் குழம்பு என்று போர்டில் எழுதி இருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கொச்சின் செல்லும் வழியில், பாலக்காட்டில் ஆப்பமும், கொண்டக்கடலைக் குழம்பும் சாப்பிட்டது நினைவுக்கு வர, உடனடியாக டூவீலரை நிறுத்தி உள்ளே சென்றேன்.

சூடாக இரண்டு ஆப்பமும், குழம்பும் பரிமாற சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்து விட்டேன். மறு நாள் காலையில் எச்சில் முழுங்க முடியவில்லை. தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல இருந்தது. ஏதோ பிரச்சினை என்று மட்டும் தெரிந்தது. சரி மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். காரம், புளி சேர்க்காமல் சாப்பிட்டு வந்தேன். இரண்டு நாளாக தொண்டையில் கட்டிக் கொண்ட உணர்வு மட்டும் போகவே இல்லை. வேறு வழி இன்றி மருத்துவரிடம் சென்றேன். தொண்டையில் புண் என்று சொல்ல திக்கென்றாகி விட்டது.

இரு நூறு ரூபாய் செலவு, பதினைந்து நாட்கள் ஆயின தொண்டைப் புண் ஆறுவதற்கு.  முப்பது ரூபாய்க்கு ஆப்பம் சாப்பிட்ட கொடுமையால், உடம்பே ஏறுக்கு மாறாய் மாறி விட்டது. அதுமட்டுமா பதினைந்து நாட்கள் அவஸ்தை வேறு. இந்த ஹோட்டலின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இத்தனைக்கும் கோயமுத்தூர் ஹெல்த் டிபார்ட்மெண்டில் எனது நண்பர் வேலை செய்கிறார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடு, தூக்கி விடுகிறேன் என்கிறார். அதன்பின் வரும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் விட்டு விட்டேன்.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கதைகள் அனைத்தும் படு பயங்கரமாய் இருந்தன. மட்டன், சிக்கன் சாப்பிடாத காரணத்தால் மீன் உணவை மாதமொருமுறை பயன்படுத்தி வருகிறேன். அந்த மீனில் இருக்கும் படுபயங்கரம் என்ன தெரியுமா? மீன் பிடித்து கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகு தான் விற்பனைக்கே வரும் என்றும், அந்த மீனைச் சாப்பிடுவதால் ஏகப்பட்ட வியாதிகள் வரும் என்றும், பேசாமல் டேம் மீனுக்குச் சென்று விடுங்கள் என்றும் சொன்னார். டேம் மீன் மட்டும் சும்மாவா, மீனுக்கான உணவிற்காக குளத்தில் யூரியாவைக் கொட்டுகிறார்கள் என்றும் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விற்பனைக்கு வரும் மீன்கள் பெரும்பாலும் கடைசித் தரமானது என்றும் சொன்னார். கேட்கவே படுபயங்கரமாய் இருந்தது. 

கடந்த வாரம் எனது நண்பரின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு முற்றிலுமாய் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்கிறார்கள். நல்ல இள நீர் ஒன்றினை அருந்தி விட்டு, வரும் வழியில் காலிஃபிளவர் தோட்டத்தைப் பார்த்தேன். அய்யோ என்று கதறலாம் போலிருந்தது. மருந்தால் பயிராகும் ஒரு  உணவுப் பொருள் என்றால் அது காலிஃபிளவர்தான். பேஸ்டு போல மருந்து ஒட்டி இருந்தது. காலிஃபிளவரில் இருக்கும் செலோனியம் புற்று நோய்க்கிருமிகள் வராமல் தடுக்கின்றன என்று படித்த ஞாபகம் வந்தது.

நவீனகாலம் உணவை விஷமாக்கியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை மனித குலத்திற்கு என்பது உண்மை.

Thursday, February 3, 2011

ஃபெமோவின் தமிழ் கதாநாயகி
எங்களது இணை நிறுவனமான ஃபெமோ, கடந்த இரண்டாண்டுகளாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் ஃபெமோ முதன் முதலாய் கதாநாயகி ஒருவரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் அதுபற்றிய விபரங்களை வெளியிடுவோம்.

பெரும்பாலும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றாலும் கடும் பிரயத்தனம் செய்து சான்ஸ் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் ஏதாவதொரு நடிகரின் வாரிசாக இருக்க வேண்டும். சினிமாக் கனவில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் சென்னைக்கு வருகின்றனர். எங்கு செல்வது? எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தடுமாறி நிற்கின்றனர். சிலர் வழி தவறிச் சென்றும் விடுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து சினிமாக் கனவுகளோடு சென்னைக்கு வருபவர்களின் கனவினை நிறைவேற்றவும், அவர்களுக்கு தகுந்த வழி காட்டவும் தான் ஃபெமோ ஆரம்பிக்கப்பட்டது. 

இதுவரையிலும் விளம்பரங்களில் மட்டுமே தனிக் கவனம் செலுத்தி வந்த நாங்கள், தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க, வாய்ப்புகளை பெற உதவி செய்கிறோம்.

எங்களது இணையதளத்தினை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபல விளம்பர இயக்குனர்கள் அடிக்கடி பார்வை இடுகின்றார்கள். அதன் காரணமாய் பல வாய்ப்புக்களைப் பலரும் பெற்றிருக்கின்றார்கள். எந்த வித ஆரம்பக் கட்டணமும் இன்றி வெகு எளிதில் சினிமா மற்றும் விளம்பர மீடியாக்களில் இருப்போர் கவனத்திற்கு நீங்கள் சென்று விடுவீர்கள். 

சினிமா, டிவி மற்றும் விளம்பரங்களில் நடிக்க விரும்புவோருக்கு நல்ல வரப்பிரசாதமாக எங்களது ஃபெமோ நிறுவனம் விளங்கி வருகிறது.

மேலும் விபரங்களுக்கு எங்களது இணைய தளம் http://www.femo.in சென்று பார்க்கவும். 

- ஃபெமோ