Thursday, October 22, 2020
சட்டம் சிக்கலானது - வருமானம் பிரதானமானது
Wednesday, October 21, 2020
உசிரை உனக்கே நேந்து விட்டேன்
இன்று என் நண்பருக்கு திருமண நாள். இருவரும் நீண்ட காலம், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல தேவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
எனக்குத் திருமணம் முடிந்து பத்தொன்பது ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். அன்புச் சிறை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லும் திருமணம். ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? என்பதற்கான காரணம் திருமணம்.
பொழுது புலர்ந்த காலையில் காற்றாடியின் வேகத்தில் முகத்தில் அலையென பரவிக் கிடக்கும் கூந்தலிடையே அவள் ஆனந்தமாக தூங்குவதைப் பார்ப்பதும், அருகில் வாயில் எச்சில் ஒழுக நிம்மதியுடன் தாமரை இதழ்கள் சூரியனுக்காக மூடிக் காத்திருப்பது போல இமை மூடி தூங்கும் அற்புதங்களின் உறக்கத்தைப் பார்ப்பதை விடவும் ஆனந்தம் வேறு உண்டா இவ்வுலகில்?
நானும் வாழ்கிறேன் என்பவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. வாழ்ந்து பாருங்க நண்பர்களே.. வாழ்க்கையின் சந்தோசம் எதுவென தெரியும். அவர்களைப் பார்த்து விட்டு, சும்மா வீட்டில் இருக்க முடியுமா?
ஓடிக் கொண்டிருப்போம். ஓடி ஓடிக் களைத்துப் போகும் போதெல்லாம் நமக்காக காத்திருக்கும் மனைவியின் முகத்தையும், பிள்ளைகளின் முகங்களையும் நினைவில் கொண்டு வாருங்கள். களைப்பு போன இடம் தெரியாது. எவன் எதைச் செய்தால் தான் என்ன? இன்னும் வேகம் வேகம் என ஓடி ஓடிக் கொண்டிருக்கிறோம் அல்லவா?
திருமணம் என்பது பிணைப்பு. மனைவியிடமோ கணவனிடமோ குறைகள் இருக்கலாம். விட்டுக் கொடுப்பதைப் போல இன்பம் இந்த உலகில் ஏதும் உண்டா? உடலின் அழகை வயது ஏற ஏற அதனிடம் விட்டுக் கொடுக்கிறோமே ஏதாவது கோபம் வருகிறதா?
முலைக் காம்பை இரத்தம் வர கடித்து பால் அருந்து குழந்தையிடம் கோபித்துக் கொள்கிறாளா தாய்?
யோனி கிழிய, உடம்பை அதிர வைக்கும் வலியுடன் குழந்தையைப் பெற்று எடுக்கின்றாளே அவள் தன் வலியை தன் குழந்தைக்காக விட்டுக் கொடுக்கின்றாளே அதை விட பெரிதாகவா நாம் விட்டுக்கொடுக்கிறோம்? இல்லையே?
விட்டுக் கொடுத்து விடுங்கள் எல்லாவற்றையும்.
பூமி நமக்கு தன் வளமெல்லாவற்றையும் நமக்காக விட்டுக் கொடுக்கிறது. பூமியிலிருந்து நாம் விதை போல வெளியில் வந்திருக்கிறோம்.
பெற்றது தாயாக இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்குமான உண்மையான தாய் பூமி.
அது கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
காற்று, நீர், இடம், உணவு என்று எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாமும் பெற்றுக் கொண்டே இருக்கிறோம். நம்மை எல்லாம் வாழ வைத்து மகிழ்வுடன் பூமி பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கிறதை பார்க்கிறோம் அல்லவா?
அதைப் போலே எல்லாவற்றையும் கொடுத்து விடுவோமே. விட்டுக் கொடுத்து விடுவோமே? அதனால் நாம் என்ன இழக்கப் போகிறோம்? இழப்பது கொஞ்சமே ஆனால் பெறுவது பேரானந்தம்.
ஆகவே அன்பு நண்பர்களே...!
விட்டுக் கொடுத்து விடுங்கள். பெறப்போவது அதிகமோ அதிகம்.
திருமணத்தை சொர்க்கமாக்குவதும், நரகமாக்குவதும் நம் கையிலே.
இன்றைக்கு திருமண நாள் காணும் அன்பு நண்பர்களுக்கும், தோழிகளுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
நிற்க...!
கரூரில் இருக்கும் போது ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நானொருவரைப் பார்க்கச் செல்வதுண்டு.
காவிரிக் கரையோரம் நிம்மதியாக உட்கார்ந்து நூற்றாண்டு காலமாய் தவம் இருக்கும் அவரைப் பார்க்காமல் என் ஞாயிறு போகாது.
அழுக்கு உடைகளை எடுத்துக் கொண்டு, காவிரித்தாய் செல்லும் ஆற்றங்கரையில் அமர்ந்து அழுக்கை நீக்கி, சூரிய ஒளியில் காயப்போட்டு விடுவேன். பிறகு ஆனந்தமாய் காவிரி அன்னையின் அருளில் நனைந்து, உடல் குளிரக் குளிர நன்கு குளியல் போடுவேன். ஆற்று மணலை எடுத்து உடலில் தேய்க்கும் போது, எழும் உணர்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தமோ பேரானந்தம்.
துணிகள் காய்ந்தவுடன், பைக்கிள் எடுத்து வைத்து விட்டு, அவரைப் பார்க்கச் செல்வேன்.
அவர் யார்?
தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றி பெற்ற அவரின் குரு, ஊரார் வாயை அடக்குகிறாயே, உன் வாய்? என்று கேட்டதற்காக வாழ் நாள் முழுவதும் பேசாமலே இருந்தவர்.
சதா நேரமும் சிவமென இருந்தவர் அவர். நெரூரில் சமாதியில் இருக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் அவர்.
காவிரிக் கரையின் ஓரம் பள்ளம் தோண்டித் தரச் சொல்லி, அப்பள்ளத்துக்குள்ளே தன்னை ஐக்கியமாக்கி தவம் செய்தவர். அவர் பாதம் பட்ட மண்ணை எடுத்து உடம்பில் பூசிக் கொள்வதை விடவும், அவர் நடந்து சென்ற கரையினிலே, காவிரித் தாயின் கருணை அன்பினால் வழிந்தோடும் உயிர் நீருக்குள் மூழ்கிக் கிடப்பதை தவிர எனது இந்த ஜென்மத்தின் பேரு வகை எது?
பனிரெண்டு மணி பூஜையின் போது காசி விஸ்வ நாதரைத் தரிசித்து விட்டு, அவரின் ஜீவசமாதியில் அமர்ந்து தியானித்து விட்டு வெளி வருவேன்.
அவர் தான் எனக்கு அவளைக் காட்டினார்.
அவளுக்கு என் உசிரை நேந்து விட்டேன்....!
மிக்க நன்றி வணக்கம்.
Tuesday, October 20, 2020
ஐபோன் 12 விலை என்ன? அதிர வைக்கும் வரி
விலை உயர்ந்த பொருட்கள் தரம் நன்றாக இருக்கும் எனச் சொல்வார்கள். உலகளவில் மொபைல் போன் மார்க்கெட்டின் ராஜா ஐபோன்கள். அதன் தரம், தனக்கென தனி ஆபரேட்டிங் சிஸ்டம், கிளவுட் ஸ்டோரேஜ், பாதுகாப்பு அம்சங்கள் என தனிக்காட்டு ராஜாவாக இன்றைக்கும் உலக மார்க்கெட்டில் வலம் வருகிறது.
ஐபோன்களின் அடுத்த அடுத்த வர்சன்கள் வெளிவர ஒவ்வொருவரும் போட்டி போட்டு வாங்குவார்கள். உலகின் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு மிகக் குறைவாக கிடைக்கும் இந்த ஐபோன்கள் இந்தியாவில் மட்டும் மிக அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் ஐபோன் 12 மினியின் விலை ரூ.74,900 ஆக உள்ளது. இந்த போன் இந்தியாவிற்குள் விற்பனை செய்ய வரும் போது, கிட்டத்தட்ட 27000 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி இருபது சதவீதம், செஸ் 2 சதவீதம், சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி - பதினெட்டு சதவீதம் என அரசு ஒரு போனுக்கு வரியாக வசூலிக்கிறது.
இந்த ஐபோனின் அடக்கவிலை அதுவும் ஆப்பிளின் லாபம் சேர்த்து விற்பனை ரூ.47,900. இந்த போன் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் போது ரூ.27,000 வரி சேர்த்து இந்திய மக்களுக்கு விற்கப்படுகிறது.
பிஜேபி அரசின் இந்த வரி விதிப்பு பகல் கொள்ளை எனச் சொல்கிறார்கள். இவ்வளவு வரி வாங்கினாலும் இன்னும் இந்தியாவில் 40 கோடி பேர், இரவு உணவு இல்லாமல் பட்டினியாகத்தான் தூங்கச் செல்கிறார்கள் என்று சீமான் தன் உரைகளில் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.
ஒவ்வொரு பொருளுக்கும் வரி, வரி. இவ்வளவு வரி வாங்கியும் அரசு நிதி போதாமல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்குகிறது.
தேசபக்தர்களாக இருந்தால் அரசு விதிக்கும் வரியினைக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
இருப்பினும் இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. ஆப்பிள் போன் இந்தியாவில் தயாரிப்பை ஆரம்பித்தால், விலை குறையும். அதற்காக இந்திய அரசு இம்மாதிரியான வரி விதிப்பினை விதிக்கிறது என்கிறார்கள்.
எதுவாக இருப்பினும் சரி, ஒரு போனுக்கு இவ்வளவு வரியா என்பது மலைக்க வைக்கத்தான் செய்கிறது.
#ios #iphone #oneplus #plus #smartphoneaccessories #iphonex #iphonecamera #iphoneaccessories #iphonecase #iphoneshot #smartphone #iphonedaily #iphonese #loveit #lisaandlena #iphoneology #pro #goals #lisaandlenalove #phonecases #phones #phone #likeit #apple #lele #promax #lovethis #iphoneographer #iphonepic #bhfyp
Monday, October 19, 2020
புத்தம் புதுக் காலை - ஊசி போட்டா மாதிரி
ஜீன் எனச் சொல்வார்கள். அப்பன் போலவே, அம்மா போலவே இருக்கான்(ள்), பாரு என்றால்.
ஆந்தாலஜி மூவி - ஐந்து இயக்குனர்கள் இணைந்து ஆளுக்கொரு கதை. ஓடிடி அமேசான் பிரைமில் புத்தம் புது காலை திரைப்படம் (??) கதைத் தொகுப்பு பார்த்தேன்.
முதல் கதை...! இளமை இதோ இதோ...!
புள்ள, புருஷனை விட்டு விட்டு ஒரு பெண் பழைய காதலனைத் தேடி வந்து ஜோடி சேருவது வயதான காலத்தில். அம்புட்டுதான் கதை.
அப்பனாக ஜெயராமும், சிறுவயதாக இருக்கும் போது காளிதாஸும் நடித்திருக்கிறார்கள்.
இயக்குனி சுதா கொங்காராவின் கற்பனை வளமும், படமாக்கமும் வெளுக்குது.
ஒழுக்கமாக சமூக கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படம் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும். ஏன் நாமும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாமே, இருந்தால் தப்பில்லை போலும் என்ற எண்ணம் கூட உதிக்கும்.
இயக்குனருக்குள் வித்தியாசமான ஆசை போலும். சின்னஞ்சிறு வயதில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆகவே இளம் வயதிலும் காட்டி இருக்கிறார்.
இளமையில் பத்து நிமிஷம் செஞ்சிருப்பாங்க. வயதானால் வாய் சாரி வயாக்கரா போட்டு செஞ்சிருப்பாங்க. இதைத் தவிர வேறு என்ன செஞ்சிருக்க முடியும்?
செக்ஸைத் தவிர உனக்கு சிந்திக்கவே தெரியாதா எனக் கேட்கும் நபர்களுக்கு. நீர் எங்கிருந்து வந்தீர் என்று உம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளும். எல்லாவற்றுக்கும் அதான் மூலமே....@
எதார்த்தம் மீறிய கதை. சினிமாக்காரர்களுக்கு ஒழுக்கம் தவறிய வாழ்க்கை என்பது வாழ்வியல் நெறியாக இருக்கலாம். ஆனால் அதை மனசு, சந்தோஷம் என்கிற வகையில் படமாக எடுப்பது என்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.
சுதா கொங்குராவுக்கு இக்கதை அனுபவமாக இருந்திருக்கலாம். நடக்காமலா எழுதி இயக்கி இருக்க முடியும்?
சுதா கொங்குராவின் கதை பெண்ணீய விடுதலையைப் பேசும் அதி அற்புதமான கள்ளக்காதலை வளர்க்கும் புதிய முயற்சி. கள்ளக்காதல்களுக்கும், கள்ளக்காதலர்களுக்கும் ஒரு நியாயம் உண்டு. தர்க்கம் உண்டு.
இன்னொருத்தன் பொண்டாட்டியை இன்னொருவன் ஆட்ட போடுவது, இல்லையெனில் இன்னொருத்தி புருஷனை வனி சாரி காதல் என்ற பெயரில், வசதியாக கல்யாணம் கட்டி பிஸ்டன் போல இயங்க வைப்பது தான் பெண்ணீய சுதந்திரம் போலும். இப்படியான புரட்சிகரமான கதைகள் இன்னும் எடுத்து தள்ளுங்க. யாருக்கு பிறந்தது இந்தப் பிள்ளை என்று இனிஷியல் கேட்கும் அமெரிக்கன் கலாச்சாரம் இந்தியாவில் வளரட்டும்.
அடுத்து
ஒரு பேத்தி தாத்தா கதை. அவரும் நானும், அவளும் நானும்.
மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு விட்டாள். அப்பா அவளுடன் பேசுவதே இல்லை. பேத்தி வருகிறார். தாத்தா தன் மகள் நன்றாகப் பாடுவாள், அதைக் காதல் என்ற பெயரில் உங்க அப்பா அழித்து விட்டார் என்ற கோபத்தால் அம்மாவுடன் உறவில் விரிசல் என்கிறார்.
தாத்தா வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார். அவரின் பேத்தி, அம்மாவின் குரலைப் பதிவு செய்து வந்து தாத்தாவிடம் போட்டுக் காட்டுகிறார். வெளிச்சம் வந்து விடுகிறது. வீட்டுக்குள் முடங்கிய தாத்தா வெளியில் வருகிறார்.
கதை முடிந்தது.
கவுதம் வாசுமேனன் இயக்கம்.
அடடா.. ரித்து மேனன் வெடக்கோழி அல்ல சும்மா உரிச்செடுத்த நாட்டுக்கோழி. அது ஒன்றுதான் இக்கதையில் கிடைத்தது. தாத்தா பேத்தி உறவென்பதை இவ்வளவு கேவலமான கதையாக எடுக்கலாம் என கவுதமுக்கு தெரிந்திருக்கிறது. அதுசரி த்ரிஷா அப்படியே சாப்பிட்ட சாரி சாரி, நடிக்க வைத்த திறமைக்காரர் அல்லவா அவர். இதுவெல்லாம் பெரிய இடத்து மேம்பட்ட ரசனை போலும். நமக்கு ரசிக்க வராது.
அடியேனெல்லாம் ராமபக்தர். மசூதியை இடிக்கத்தான் லாயக்கு.
அடுத்து,
காஃபி எனி ஒன்?
இயக்கம் சுகாசினி.மனிரட்னம்
காரில் வரும் போது அனுஹாசன் உள்ளே பிரா போட்டிருக்கலாம். வயதான காலத்தில் காத்தாட இருக்கட்டும் என விட்டு இருக்கலாம். இல்லை புரடெக்ஷனில் அதான் மெட்ராஸ் டாக்கீஸில் காசு இருந்திருக்காது. அவ்வளவு பெரிய காரையும், அதன் குலுக்கலையும் பார்த்தால், வெடுக்கென ரசனை வரவில்லை. சுருங்கி போனது ரசனை. ரசனையைச் சொல்கிறேன்.
சுகாசினியும், அப்பாவாக நடித்த காத்தாடி ராமமூர்த்தி, அப்புறம் உலக மகாப் பேரழிகி அனுஹாசன் நடிப்பை எழுத்தில் சொல்லி மாளாது. அம்மா கோமாவில் கிடக்கிறார். அப்பா அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார். மகள்களுக்கு அப்பா அம்மாவிற்கு கிடைக்க கூடிய நல் மருத்துவத்தைக் கெடுக்கிறாரே என்ற கோபத்தில் அப்பாவுடன் வாதம் செய்கிறார்கள். சின்னமகள் ஸ்ருதிஹாசன் மியூசிக் அதான் இசை டவுசர் கிழிக்கும் இசை பாடகி அம்மாவுடன் வீடியோ காலில் பேச, அம்மாவின் கோமாவிலிருந்து வெளி வந்து காஃபி கொடுக்கிறார்.
சுகாஷினிக்கும், அனுஹாசனுக்கும் ஸ்பானிஷ் மொழி தெரியும் என்பது இப்படத்தின் மூலம் தெரிய வந்தது. இருப்பினும் அனுஹாசன் பிரா போட்டிருக்கலாம். கார் ரொம்ப பெரிசு பாருங்க. டிரைவருக்கு சிரமாக இருக்கும் அல்லவா? அந்தக் கவலைதான் எனக்கு.
ரசனையற்ற வெற்று வறட்டுக் கவுரம் பேசித் திரியும் ஈகோ பிடித்தவர்கள் இவர்கள். இவரை இயக்குனர் என்றுச் சொல்லி, அமேசான் அங்கீகரிக்கிறது. மூளை கெட்டவர்கள் அமேசானில் அட்மினாக இருந்தால் இப்படித்தான் இருக்கும்.
அடுத்து, ரீயூனியன்.
கொக்கேய்ன் பயன்படுத்தும் ஆண்ட்ரியா. பள்ளித் தோழ மருத்துவ நண்பரின் வீட்டில் கொரானாவின் காரணமாய் சிக்கிக் கொள்ள, அதிலிருந்து மீண்டு விட முயற்சிக்கிறார். பள்ளித் தோழன் தன் காதலைச் சொல்கிறார். கதை முடிந்தது.
ஆண்ட்ரியாவின் ட்ரெசிங் சென்ஸ் அடிபட்ட பென்ஸ் கார் போல சகிக்கவில்லை. முகத்தில் கிழடு தட்டி சுர்ருன்னு ஆயிடுச்சு. இவரைப் போய் ஒரு படத்துக்கு, வித்தியாசமான கேரக்டருக்கு சிபாரிசு செய்து கொண்டிருந்தேன் இயக்குனர் நண்பரிடம். பிச்சினச்சு ஆகி விடும் சாரே என்று குதூகலத்தில் இருந்தார் அவர்.
இயக்கம் ராஜீவ் மேனன். இன்னொரு கொக்கேய்ன் கதைகள். அந்தப் பெண்ணுக்கு காதல். ஆண்டி ரியா வித்தியாசமான கதைகளில் நடிப்பவர் தான். அதற்காக இப்படியா? எடிட்டிங்காவது ஒழுங்காக இருந்திருக்கனும். சகிக்கலை.
இந்தப் படத்துல ராஜீவ் மேனன் ஒரு மேட்டர் சொல்லி இருப்பார் பாருங்க. கடவுளே ஆண்களுக்கு இனிமே அதை இரும்பில் படைத்து விடுங்கள். நன்றாக இருப்பீர்கள் ஆண்டவரே... உம்மை ஆண்கள் சார்பில் தோத்திரம் செய்கிறேன்.
ஆண்டி ரியா, தோழனின் அம்மாவிடம் கேட்பார். உங்க கணவரின் ரொமான்ஸ் எப்படின்னு. அதுக்கு அந்தக் கிழவி, ம்...”ஊசி போட்டா மாதிரி வந்துட்டுப் போவாரு”ன்னு சொல்லும். சாதாரணமா அரை அங்குலமாவது சைஸ் இருக்கும். அதையே அந்தக் கிழவி ஊசின்னு சொன்னா, பின்னே என்னா சைசுக்கு அது இருக்கணும் என யாராவது சொல்லுங்க... ராஜீவ் மேனனின் பெண்ணீய சிந்தனை சிலிர்க்க வைக்கிறது.
அடுத்து
மிராக்கிள் - இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்.
எளிதில் ஊகித்து விடக்கூடிய கதை. கொடுமையிலும் கொடுமை. இடையிடையே இசைக்கோர்வைகள் வேறு. பாபி சிம்ஹா படங்களில் படுத்தியது போதாது என இது வேறயா?
மிராக்கிள் பற்றிப் பேசும் சாமியாரின் கள்ளப்பணம், ஒரு இயக்குனருக்கு கிடைக்கச் செய்வது கதை. திருடராய் பாபி. அய்யய்யோ.. அம்மா.... கார்த்திக் உங்க இயக்கம் அடி தூள். ஏதாவது வெடக்கோழியா போட்டிருந்தாலாவது ரசித்திருக்கலாம். அதுவும் இல்லை. இருட்டுக்குள் முரட்டு கொத்து போல ஒரு எழவும் தெரியவில்லை. இருட்டுக்குள் ஒரு மிராக்கிள் என்று பெயர் வைத்திருந்தால், ரசிகர் பட்டாளம் இந்த ஆந்தாலஜியை கொண்டாடி இருக்கும்.
அடுத்து முக்கியமான கிளைமேக்ஸ்
மேலே சொன்ன நான்கு படங்களிலும் ஆங்கிலம் சும்மா தெரித்தது. ஐந்தாவது படத்தில் இல்லை.
வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவர்களால் தான் இப்படி எல்லாம் பேச முடியும் என ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டிய ஒரு ஆளைப் பார்த்து என் நண்பர் சொன்னார். அடுத்து அவர் சொன்னார், ”ஏதாவது கிராஸா இருக்கும் போல. ஆளின் கலரு பாருங்க”.
இப்போ படியுங்க இந்தப் பதிவின் முதல் வாக்கியத்தை.
நன்றி வணக்கம்.
Sunday, September 20, 2020
நிலம் (72) - தேனி கம்பம் போடி நாயக்கனூர் தென்னை தோட்டங்கள்
அனைவருக்கும் வணக்கம்.
கோவிட் இந்தியாவில் பல்கி பெருகிக் கொண்டிருக்கிறது. குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. இனிமேல் தான் பாதிப்புகள் அதிகரிக்கும் ஆபத்து வரும். ஆகவே அனைவரும் முடிந்த வரையில் பாதுகாப்பாக இருக்கவும்.
மத்திய அரசும், மாநில அரசும் இனி ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு பலப் பிரச்சினைகள். மக்களாகிய நாம் கையறு நிலையில் நிற்கிறோம். அது தான் உண்மை.
இந்தியப் பொருளாதாரமா? மக்களின் உயிரா? என்று வருகையில் அரசு பொருளாதாரத்தை தான் முன்னெடுக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கல்விக்கும் பல்வேறு தடைகளை உருவாக்கி இந்தியர்களில் குறிப்பாக தமிழர்களை படிக்க விடாமல் செய்வதில் மத்திய அரசு அதீத முனைப்புக் காட்டுகிறது. சுற்றிச் சுற்றி அடிக்கிறது மத்திய அரசு நீதிமன்றத்தின் துணை கொண்டு.
இத்தனை தேர்வுகள் நடத்த காரணம் அரசியல்வாதிகள் கல்வி மூலம் கருப்பு பணம் சம்பாதிக்கின்றார்கள் என்றுப் பேசுகின்றார்கள். கல்வியை அரசுடைமை ஆக்கி விட்டால் கருப்பு பணம் ஒழிந்து போகும். பிரதமர் நரேந்தர் மோடி அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால் அவரால் செய்ய இயலுமா என்பது கேள்விக் குறி. ஒவ்வொரு மதத்தின் பெயராலும் கல்விச் சாலைகள் இயக்கப்படுகின்றன. சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை.
ஆனாலும் எது வரினும் தாங்கி நிற்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் நம்மிடம் உண்டு.
இதுவும் கடந்து போகும்.
தமிழகத்துக்கு மிக நல்ல தலைவர் வருவார் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.
* * *
இனி தேனி கம்பம் போடி விஷயத்துக்கு வந்து விடலாம்.
கோல்ட் ஆன்லைன் மூலமாக தென்னந்தோப்பு நிலங்கள் விற்பனைக்கு பட்டியலிட்டு இருந்தேன் அல்லவா?
இந்த நிலங்கள் தண்ணீர் வசதி, மண்ணின் தரம், லீகல், வாஸ்து, எதிர்கால வளர்ச்சி, வருமானம் ஆகியவைகள் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்படுகின்றன.
பெரும்பாலும் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகளில் தென்னந்தோப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் தேனி, கம்பம், போடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று வர நேரிட்டது. அங்கிருந்தும் ஒரு சில நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கோல்ட் ஆன்லைனில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.
நல்ல தண்ணீர் வசதி, மண் வளம், லீகல், வாஸ்து பார்க்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன.
நான் பெரும்பாலும் தென்னைத் தோப்புகளைத் தேர்ந்தெடுக்க காரணம் முதலீடு செய்த 40வது நாளில் வருமானம் வந்து விடும். குறைவான பராமரிப்பு, நிரந்தர வருமானம். எதிர்காலத்தில் நல்ல முதலீடு பயன் கிடைக்கும் என்பதால் அடியேன் இவ்வகை நிலங்களையே தேர்ந்தெடுக்கிறேன்.
ஒரு ஐந்து ஏக்கர் வேண்டும், ஆனால் பணம் குறைவாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். நமது நிறுவனம் பல வங்கிகளில் DIRECT SELLING AGENT அனுமதி பெற்றிருக்கிறோம். ஆகவே லோன் தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.
இனிமேலும் தேனி, கம்பம், போடியில் விரைவில் நிலங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்தும் அற்புதமான பலனையும், நல்ல வருமானத்தையும் தரும் நிலங்கள். கொஞ்சம் காசு சேருங்கள். ஆளுக்கு இரண்டு ஏக்கர், நான்கு ஏக்கர் என வசதிக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்.
தோட்ட பராமரிப்பு, வருமானம் பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். நமக்கு அங்கே அலுவலகம் உண்டு. அடியேன் கவனித்துக் கொள்கிறேன். கொஞ்சமே கொஞ்சம் கட்டணம் உண்டு.
விரைவில் தென்னைத் தோட்டங்களுக்கு உரிமையாளராக வாழ்த்துகிறேன். எவரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. மாதா மாதம் வருமானம். அழகான வாழ்க்கை. நிரந்தரமான நிம்மதியான வருமானம். வேறு எந்த வேலையிலும் கிடைக்காத சந்தோஷம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
அழைக்கவும் பேசலாம்.
கோவை தங்கவேல் - 96005 77755
Thursday, August 27, 2020
நிலம் (71) - பத்திரம் எழுத வக்கீல் மற்றும் பத்திர எழுத்தர் தேவையா?
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
நிலம் தொடர் 71வது கட்டுரை எழுதுகிறேன். இது வரையிலும் எனது பதிவுகளைப் படித்து வரும் பல்வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும், தமிழ் பேசத் தெரிந்தவர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதிவுகள் ஒவ்வொன்றும் அனுபவங்களின் வாயிலாக எழுதப்படுகிறது.
வாய் மொழியாக கேள்விப்படும் செய்திகளை நான் எழுதுவதில்லை. என்னளவில் எனக்கு அனுபவம் கிடைத்திருக்கும் பட்சத்தில் எழுதுகிறேன். எனது பதிவுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். பொழுது போக்க பல வழிகள் உண்டு. இந்த நிலம் தொடர் பல கருத்துக்களையும், சட்டப்பிரிவுகளையும் நடைமுறையோடு ஒன்றி எழுதப்பட்டு வருகிறது.
தலைப்பு விஷயத்துக்குப் போகும் முன்பு, உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாற்றம் நடைபெற அரசு உத்தரவிட்டிருக்கிறது அல்லவா? அதைப் பற்றிய ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம்.
பதிவு அலுவலகம் என்பது என்னைப் பொறுத்தவரை லீகல் ஒப்பீனியன் பார்க்கும் அலுவலகம் இல்லை. ஒரு சப் ரிஜிஸ்டரர் தவறுதலான ஆவணங்களைச் சரிபார்க்காமல், இன்ன பிற விஷயங்களுக்காக ஒரு சொத்தினை இன்னொருவருக்குப் பதிவு செய்து கொடுக்கலாம். அவ்வாறு செய்யப்படும் பத்திரப்பதிவுக்கு, பட்டாவும் கிடைத்து விட்டால் அது தொடர்ச்சியாக பல கிரையங்கள் ஆகி விடும். அதையெல்லாம் கண்டுபிடித்து சரி செய்வதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும். சொத்து வாங்கி நிம்மதியாக இருக்கலாம் என்றால் முடியாது.
சொத்து பரிமாற்றம் சரிதானா? துல்லியமானதா? என்று சப் ரிஜிஸ்டரர் எப்படி கண்டுபிடிப்பார் என்பது கேள்விக்குறிய ஒன்று. ஆகவே சொத்துப் பதிவு செய்யப்பட்ட பிறகு, பட்டா மாற்றம் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மாறுதல் செய்தல் ஒன்றே சரியான வழி. அதற்கு ஆன்லைன் மூலமாகவே அரசு வி.ஏ.ஓ மற்றும் ஆர்.இ - தாசில்தாருக்கு அனுமதி வழங்கி, வசதிகள் செய்து தரலாம்.
ரெவின்யூ அதிகாரிகளின் அட்ராசிட்டி, அலைச்சல் போக்கு மக்களுக்கு பதிவு அலுவலகத்திலேயே பட்டா மாற்றம் ஆகி விட்டால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டதன் காரணமாக, எதிர்காலத்தில் விளையக்கூடிய பெரும் பிரச்சினைகளை அறிய மறுக்கின்றனர்.
ஆகவே அரசு பத்திரப்பதிவு அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல் செய்வதை மறுபரிசீலனை செய்தலும், பட்டா மாற்றத்தை பதிவு முடிந்த ஒரு மாதத்திற்குள் ரெவின்யூ டிபார்மெண்ட் மூலமாகவே ஆன்லைன் வழியாக செய்வதற்கும் வழி வகைகளை ஆராய வேண்டும்.
அடுத்து பத்திரம் எழுத வக்கீல்கள் அல்லது பத்திர எழுத்தர் தேவையா என்பது பற்றி பார்க்கலாம்.
26.08.2020ம் தேதியன்று தினமலரில் ஒரு செய்தி வெளி வந்திருந்தது. கீழே இருக்கும் பெட்டிச் செய்தியை முழுமையாகப் படித்து விடவும்.
பதிவு பெற்ற ஆவண எழுத்தர்களும், அரசால் பரிந்துரைக்கப்பட்ட வக்கீல்கள் மட்டுமே பத்திரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பது போல மேற்கண்ட செய்தியில் சொல்லி இருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது.
இந்தியப் பதிவுச் சட்டத்தில் சொத்து வாங்குபவரோ அல்லது சொத்து விற்பவரோ தானாகவே அதாவது தானே பத்திரம் எழுதி, கையொப்பம் இட்டு, சாட்சிகளுடன் பத்திரப் பதிவு செய்யலாம் என இருக்கிறது.
அடியேன் பல பத்திரங்களைச் சொத்து வாங்குபவர் பெயரில் எழுதி பதிவு செய்து கொடுத்திருக்கிறேன். வக்கீல்கள், பத்திர எழுத்தர்கள் மட்டுமே ஆவணம் எழுதி பதிவு செய்தல் என்பது தேவையில்லை. அவர்களின் கையொப்பமும் தேவையில்லை.
பத்திரம் எழுதுவதற்கு கொஞ்சம் பத்திர எழுதும் திறன் தேவை. வக்கீல்களும், பதிவு எழுத்தர்களும் தேவையே இல்லை.
ஆன்லைனில் பதிவு செய்யும் போது அது பற்றிய கொஞ்சம் அனுபவம் தேவை. அவ்வளவுதான்.
துல்லியமான லீகல் ஒப்பீனியன் பார்க்க வேண்டும். பிறகு மாடல் டிராஃப்ட் தயார் செய்து ஆன்லைனில் பதிவு செய்து, நேரடியாக சாட்சியுடன் பதிவு அலுவலகம் சென்றால் போதும்.
தற்போது பல பத்திரப்பதிவுகளில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக், நில பரப்புகளில் தவறுகளும் நடந்து, அதன் தொடர்ச்சியாக பிழை திருத்தல் பத்திரங்களும் செய்யப்படுகிறது.
ஆகவே நமக்குத் தேவையான பத்திரங்களை நாமே தயார் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் ஒரு சில கம்பெனி வகையறா, பவர் பத்திரங்கள் எழுதும் போது அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையுடன் பதிவு செய்வது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
Friday, August 21, 2020
பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? - அலசல்
அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பதிவினால் எனக்குச் சட்ட சிக்கல் வருமா என்று தெரியாது. ஆனாலும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.
அறம் கொன்றார்க்கு அறமே கூற்றாகும் என்கிறது மூதுறை. நீதியையும், தர்மத்தையும் கொன்றார்க்கு, அதுவே எமனாக வரும் என்பது அர்த்தம்.
எனக்குத் தெரிந்து ஜெயலலிதாவை விட, சசிகலாவை விட உயர் அதிகாரத்தில் இந்தியாவில் எவரும் இருந்திருக்க முடியாது. ஆனானப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரையே தூக்கி ஜெயிலில் போட்டவர்கள்.
அப்பேர்பட்டவர்களுக்கு அறமே கூற்றாக இருந்து தர்மத்தை நிலை நாட்டியது. ஜெ சசி இருவரும் ஜெயிலுக்குப் போவார்கள் என்று எவராது நினைத்திருப்போமா? ஆனால் அறம் அதைச் செய்ய வைத்தது.
இவர்களுக்கு வழங்கிய தண்டனையை ரத்துச் செய்த நீதிபதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இச்செயலை எவரும் நியாயப்படுத்த இயலுமா? தர்மத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அறம் கொன்ற எந்த நீதிபதிக்கும் இதுதான் நடக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எவரும் தப்ப முடியாது தர்மத்தின் தண்டனையிலிருந்து.
அறம் கொன்ற ஒவ்வொருவரின் வேரும் வேரடி மண்ணும் முற்றிலுமாக துடைக்கப்படும் என்று சாத்திரங்களும், தர்மத்தைப் போதிப்பவர்களும் சொல்கிறார்கள்.
இராமருக்கு கோவில் அறவழியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இராமன் என்றால் நீதி, அறம் என்று வாழ்ந்தவர் என புராணங்கள் சொல்கின்றன. அவருக்கு இப்படியான ஒரு நிலையில் கட்டப்படும் கோவில் பற்றி எதிர்கால சந்ததியினர் மிச்சம் சொச்சம் இல்லாமல் விமர்சிப்பார்கள்.
குறைந்த பட்சம் 30 வருட அனுபோக பாத்தியதை அல்லது கோவில் இருந்ததிற்கான சிறு சாட்சிகளையாவது நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டுமென்று பலரும் கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றார்கள்.
நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு சட்டம் வளையுமானால் அது வளைந்து போன சட்டம் தான். வளைந்த சட்டத்தை ஸ்ரீராமரின் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருக்கும் இராம பாணங்கள் சரி செய்யும் என அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நம்புகின்றார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காத எத்தனையோ சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் கவனத்தில் கொண்டு, தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கலாம்.
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கர்நாடகா அப்பட்டமாக மீறியது. ஆனால் அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் அவமதிப்பாக கருதவில்லை. ஏனென்று தெரியவில்லை. தனி மனிதனுக்கும் அரசுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.
ஒரு சிலசூழலில் அறச் சீற்றம் எழுவதும், அதன் தொடர்ச்சியாக கோபத்தில் வார்த்தைகள் வருவதும் இயல்பு. இது ஒவ்வொருவருக்கும் வரும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டியே கொடுத்த முதல் இந்திய வரலாறும் உண்டு.
இந்திய அரசு - நீதிபதிபதிகள், தீர்ப்புகள் விஷயத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் தீர்ப்புக் கொடுக்கும் நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்படிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் கீழ் நீதிமன்ற தீர்ப்புகள் தள்ளுபடி செய்யும் போது, அவ்வகையான தீர்ப்புகள் மீது விசாரனைகள் வேண்டும் என சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் விரும்புவார்கள். ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்க முடியாது அல்லவா?
எதேச்சதிகாரம் நீதிமன்ற விஷயத்தில் எடுபடக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு ஏழை இந்தியன் அரசுக்குச் செலுத்தும் வரியில் நீதிபதிகள் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை ஏழை இந்தியன் அறிய விரும்புகிறான்.
இதோ கீழே ஒரு சில நீதிபதிகளின் வாழ்க்கை இருக்கிறது.
பிரஷாந்த் பூசன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
நன்றி : மெயில் டுடே பத்திரிக்கை. செப்டம்பர் 23, 2009ம் தேதியில் இப்பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி.