குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஜிஎஸ்டி. Show all posts
Showing posts with label ஜிஎஸ்டி. Show all posts

Tuesday, August 13, 2024

கடமையைச் செய்ய வரி கேட்கும் ஒன்றிய அரசு

விடிகாலை நேரம். வெள்ளிங்கிரி மலையடிவாரத்திலிருக்கும் வீட்டின் ஜன்னல் வழியே மேற்கில் உயர்ந்து நிற்கும் பச்சை வண்ண போர்வை போர்த்திய மலையைய் பார்க்கிறேன். மலைகளின் மீது ஆங்காங்கே வெளீரென அருவிகள் தென்படுகின்றன. ரோசா செடியில் மொட்டு விரியவில்லை. ரூடோஸ் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள். பரிமளாவைக் காணவில்லை. எங்காவது படுத்திருப்பாள். 

சிந்தனை இரண்டு நாட்களுக்குப் பின்னால் சென்றது.

ரேசன் கடை ஊழியர் கைரேகை மிஷினைக் கொண்டு வந்து கொடுத்தார். பல வகைகளில் ரேகையைப் பதிவு செய்ய முயன்ற போது எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே கண் மற்றும் ரேகைகளை மீள்பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். அரசு சேவை மையம் என்று குறிப்பிட்டிருந்த பகுதிக்குச் சென்றேன். ஒரு அரசு அலுவலகம் இவ்வளவு குப்பையாக கூட இருக்குமா? என்று நினைக்கும் அளவுக்கு ஒட்டடையும், தூசியும், உடைந்த நாற்காலிகளும், ஆங்காங்கே பிரிந்து தொங்கிய மின் வயர்களுமாய் - பேய் பங்களா போலக் காட்சி அளித்தது.

100 நாள் பணி செய்யும் திறமையானவர்களைக் கொண்டு, அரசு அலுவலங்களை சுத்தப்படுத்தலாம். மெருகுபடுத்தலாம். அவர்களை வைத்து அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களை நெறிப்படுத்தலாம். தமிழ் நாடு அரசு இதுபற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

சேவை மையத்தில் இருந்த பெண்ணிடம் கைரேகை அப்டேட் செய்ய வேண்டுமென்று கேட்ட போது, வேண்டா வெறுப்பாய் ’உட்காருங்க, அழைக்கறேன்’ என்றார்.

100 ரூபாய் கேட்டார்.

வரி 18% சதவீதம். ஆதார் கார்டு அப்டேட்டுக்கு வரியுடன் சேர்ந்து 100 ரூபாய். இந்தக் கட்டணமும் அரசுக்குத்தான் செல்கிறது. இதற்கு ஒரு வரியைப் போடுகிறது. வரியும் அரசுக்குத்தான் செல்கிறது.

ஆதார் கார்டை முழுமூச்சாக எதிர்த்தவர்கள் இப்போது எதற்கெடுத்தாலும் ஆதாரைக் காட்டு என்கிறார்கள் என்பது நகைமுரண்.

ஆதார் அட்டையை அத்தியாவசியமான சான்றாக மாற்றிய அரசு, ஆதாரில் அப்டேட் செய்வதைக் கூட மக்களுக்கு வரி விதிக்காமல் செய்யகூடாதா?

அரசாங்கம் மக்களுக்கு வழங்க கூடிய அடிப்படையான சேவை அல்லவா ஆதார்? தன் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்க கூட வரி வாங்க வேண்டுமா? இப்படியும் ஒரு வரியா? 

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் கூட இப்படியான வரியை பிரிட்டிஷார் விதிக்கவில்லை.

இந்திய மக்களின் மீது கடுமையான வரிக் கொடுமையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. 

இத்தனை வரி வாங்கியும் இந்தியாவின் வெளி கடன் தொகை 663 பில்லியன் டாலர் என்கிறது ஆர்.பி.ஐ.

இதுதான் மக்கள் சேவையா? 

Thursday, April 28, 2022

வாட் வரியைக் குறையுங்கள் - பிரதமர் மோடி - உண்மை என்ன?

இன்றைய செய்தி தாள்களில் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டுமென்று பிரதமர் சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதால் தான் விலை உயர்வு உண்டாகிறது. விலை உயர்வினைச் செய்வது ஒன்றிய அரசு. ஆனால் பிரதமர் மா நில அரசுகளை வரியைக் குறையுங்கள் என்றுச் சொல்கிறார்.

இது என்ன விதமானது என்பது அவருக்கே வெளிச்சம். நாங்கள் வரியை உயர்த்துவோம், விலையை உயர்த்துவோம், ஆனால் மாநிலங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது சரிதானா என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ஒன்றிய அரசின் கலால் வரியையும், பிரதமரின் செய்தியையும் கீழே பாருங்கள். எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்குகின்றார்கள் என்று சிந்தியுங்கள். 

ஏற்கனவே தமிழக அரசு ஐந்து ரூபாய் அளவுக்கு பெட்ரோல் விலையை குறைத்து உள்ளது. இன்னும் குறைக்க வேண்டுமாம். 

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையில் இன்னும் 78,000 கோடி பாக்கி இருக்கிறது. வாங்கிய வரியைக் கூட கொடுப்பதில்லை. 

மாநில அரசுகள் எப்படி நிர்வாகம் செய்வார்கள்? நிதிக்கு எங்கே போவார்கள். 

வரி தாக்குதலை இந்திய மக்களின் மீது தொடுக்கும் கொடுமையான செயலை அறமற்றுச் செய்கிறது ஒன்றிய அரசு என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பிற கட்சியினரை அழிக்க வேண்டுமென்ற ஆவலில் ஒன்றிய அரசின் செயல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வரியைப் பிடுங்கிக் கொள்ளும். மாநில அரசுகள் தான் விலை உயர்வுக்கு காரணம் என்று எப்படியெல்லாம் திசைதிருப்புகிறார்கள் பாருங்கள். 

தினமணியில் முதல் பக்கத்தில் செய்தி. ஏதோ திமுக அரசு தான் விலை குறைக்காமல் இருக்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டுமாம். தினமணியின் ஆசையைப் பாருங்கள்.

மாநில அரசுகள் வரியை இழந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தா வண்ணம் முடங்க வேண்டுமென்ற மறைமுக எண்ணம் தான் இந்த செய்தியின் பின்னால் இருக்கும் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.

ஒன்றிய அரசு வரியை எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று கீழே இருக்கும் செய்தியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



பிரதமர் மோடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? கூட்டாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது ஒன்றிய அரசா இல்லை  மா நில அரசுகளா என்பதற்கு தமிழக ஆளும் திமுக அரசின் நிதியமைச்சரின் பதில் கீழே.




Tuesday, October 20, 2020

ஐபோன் 12 விலை என்ன? அதிர வைக்கும் வரி

விலை உயர்ந்த பொருட்கள் தரம் நன்றாக இருக்கும் எனச் சொல்வார்கள். உலகளவில் மொபைல் போன் மார்க்கெட்டின் ராஜா ஐபோன்கள். அதன் தரம், தனக்கென தனி ஆபரேட்டிங் சிஸ்டம், கிளவுட் ஸ்டோரேஜ், பாதுகாப்பு அம்சங்கள் என தனிக்காட்டு ராஜாவாக இன்றைக்கும் உலக மார்க்கெட்டில் வலம் வருகிறது. 

ஐபோன்களின் அடுத்த அடுத்த வர்சன்கள் வெளிவர ஒவ்வொருவரும் போட்டி போட்டு வாங்குவார்கள். உலகின் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு மிகக் குறைவாக கிடைக்கும் இந்த ஐபோன்கள் இந்தியாவில் மட்டும் மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் ஐபோன் 12 மினியின் விலை ரூ.74,900 ஆக உள்ளது. இந்த போன் இந்தியாவிற்குள் விற்பனை செய்ய வரும் போது, கிட்டத்தட்ட 27000 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி இருபது சதவீதம், செஸ் 2 சதவீதம், சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி - பதினெட்டு சதவீதம் என அரசு ஒரு போனுக்கு வரியாக வசூலிக்கிறது.

செய்தி பட உதவி : பிசினஸ் ஸ்டாண்டர்


இந்த ஐபோனின் அடக்கவிலை அதுவும் ஆப்பிளின் லாபம் சேர்த்து விற்பனை ரூ.47,900. இந்த போன் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் போது ரூ.27,000 வரி சேர்த்து இந்திய மக்களுக்கு விற்கப்படுகிறது.

பிஜேபி அரசின் இந்த வரி விதிப்பு பகல் கொள்ளை எனச் சொல்கிறார்கள். இவ்வளவு வரி வாங்கினாலும் இன்னும் இந்தியாவில் 40 கோடி பேர், இரவு உணவு இல்லாமல் பட்டினியாகத்தான் தூங்கச் செல்கிறார்கள் என்று சீமான் தன் உரைகளில் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

ஒவ்வொரு பொருளுக்கும் வரி, வரி. இவ்வளவு வரி வாங்கியும் அரசு நிதி போதாமல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்குகிறது.

தேசபக்தர்களாக இருந்தால் அரசு விதிக்கும் வரியினைக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. 

இருப்பினும் இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. ஆப்பிள் போன் இந்தியாவில் தயாரிப்பை ஆரம்பித்தால், விலை குறையும். அதற்காக இந்திய அரசு இம்மாதிரியான வரி விதிப்பினை விதிக்கிறது என்கிறார்கள். 

எதுவாக இருப்பினும் சரி, ஒரு போனுக்கு இவ்வளவு வரியா என்பது மலைக்க வைக்கத்தான் செய்கிறது.

#ios #iphone #oneplus #plus #smartphoneaccessories #iphonex #iphonecamera #iphoneaccessories #iphonecase #iphoneshot #smartphone #iphonedaily #iphonese #loveit #lisaandlena #iphoneology #pro #goals #lisaandlenalove #phonecases #phones #phone #likeit #apple #lele #promax #lovethis #iphoneographer #iphonepic #bhfyp