குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அமேசான் பிரைம். Show all posts
Showing posts with label அமேசான் பிரைம். Show all posts

Monday, October 19, 2020

புத்தம் புதுக் காலை - ஊசி போட்டா மாதிரி

ஜீன் எனச் சொல்வார்கள். அப்பன் போலவே, அம்மா போலவே இருக்கான்(ள்),  பாரு என்றால். 

ஆந்தாலஜி மூவி - ஐந்து இயக்குனர்கள் இணைந்து ஆளுக்கொரு கதை. ஓடிடி அமேசான் பிரைமில் புத்தம் புது காலை திரைப்படம் (??) கதைத் தொகுப்பு பார்த்தேன்.

முதல் கதை...! இளமை இதோ இதோ...!

புள்ள, புருஷனை விட்டு விட்டு ஒரு பெண் பழைய காதலனைத் தேடி வந்து ஜோடி சேருவது வயதான காலத்தில். அம்புட்டுதான் கதை.

அப்பனாக ஜெயராமும், சிறுவயதாக இருக்கும் போது காளிதாஸும் நடித்திருக்கிறார்கள். 

இயக்குனி சுதா கொங்காராவின் கற்பனை வளமும், படமாக்கமும் வெளுக்குது. 

ஒழுக்கமாக சமூக கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படம் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும். ஏன் நாமும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாமே, இருந்தால் தப்பில்லை போலும் என்ற எண்ணம் கூட உதிக்கும்.

இயக்குனருக்குள் வித்தியாசமான ஆசை போலும். சின்னஞ்சிறு வயதில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆகவே இளம் வயதிலும் காட்டி இருக்கிறார்.

இளமையில் பத்து நிமிஷம் செஞ்சிருப்பாங்க. வயதானால் வாய் சாரி வயாக்கரா போட்டு செஞ்சிருப்பாங்க. இதைத் தவிர வேறு என்ன செஞ்சிருக்க முடியும்? 

செக்ஸைத் தவிர உனக்கு சிந்திக்கவே தெரியாதா எனக் கேட்கும் நபர்களுக்கு. நீர் எங்கிருந்து வந்தீர் என்று உம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளும். எல்லாவற்றுக்கும் அதான் மூலமே....@

எதார்த்தம் மீறிய கதை. சினிமாக்காரர்களுக்கு ஒழுக்கம் தவறிய வாழ்க்கை என்பது வாழ்வியல் நெறியாக இருக்கலாம். ஆனால் அதை மனசு, சந்தோஷம் என்கிற வகையில் படமாக எடுப்பது என்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. 

சுதா கொங்குராவுக்கு இக்கதை அனுபவமாக இருந்திருக்கலாம். நடக்காமலா எழுதி இயக்கி இருக்க முடியும்?

சுதா கொங்குராவின் கதை பெண்ணீய விடுதலையைப் பேசும் அதி அற்புதமான கள்ளக்காதலை வளர்க்கும் புதிய முயற்சி. கள்ளக்காதல்களுக்கும், கள்ளக்காதலர்களுக்கும் ஒரு நியாயம் உண்டு. தர்க்கம் உண்டு.

இன்னொருத்தன் பொண்டாட்டியை இன்னொருவன் ஆட்ட போடுவது, இல்லையெனில் இன்னொருத்தி புருஷனை வனி சாரி காதல் என்ற பெயரில், வசதியாக கல்யாணம் கட்டி பிஸ்டன் போல இயங்க வைப்பது தான் பெண்ணீய சுதந்திரம் போலும். இப்படியான புரட்சிகரமான கதைகள் இன்னும் எடுத்து தள்ளுங்க. யாருக்கு பிறந்தது இந்தப் பிள்ளை என்று இனிஷியல் கேட்கும் அமெரிக்கன் கலாச்சாரம் இந்தியாவில் வளரட்டும்.

அடுத்து

ஒரு பேத்தி தாத்தா கதை. அவரும் நானும், அவளும் நானும்.

மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு விட்டாள். அப்பா அவளுடன் பேசுவதே இல்லை. பேத்தி வருகிறார். தாத்தா தன் மகள் நன்றாகப் பாடுவாள், அதைக் காதல் என்ற பெயரில் உங்க அப்பா அழித்து விட்டார் என்ற கோபத்தால் அம்மாவுடன் உறவில் விரிசல் என்கிறார். 

தாத்தா வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார். அவரின் பேத்தி, அம்மாவின் குரலைப் பதிவு செய்து வந்து தாத்தாவிடம் போட்டுக் காட்டுகிறார். வெளிச்சம் வந்து விடுகிறது. வீட்டுக்குள் முடங்கிய தாத்தா வெளியில் வருகிறார்.

கதை முடிந்தது.

கவுதம் வாசுமேனன் இயக்கம். 

அடடா.. ரித்து மேனன் வெடக்கோழி அல்ல சும்மா உரிச்செடுத்த நாட்டுக்கோழி. அது ஒன்றுதான் இக்கதையில் கிடைத்தது. தாத்தா பேத்தி உறவென்பதை இவ்வளவு கேவலமான கதையாக எடுக்கலாம் என கவுதமுக்கு தெரிந்திருக்கிறது. அதுசரி த்ரிஷா அப்படியே சாப்பிட்ட சாரி சாரி, நடிக்க வைத்த திறமைக்காரர் அல்லவா அவர். இதுவெல்லாம் பெரிய இடத்து மேம்பட்ட ரசனை போலும். நமக்கு ரசிக்க வராது.

(ரித்து வர்மா)

அடியேனெல்லாம் ராமபக்தர். மசூதியை இடிக்கத்தான் லாயக்கு. 

அடுத்து,

காஃபி எனி ஒன்?

இயக்கம் சுகாசினி.மனிரட்னம்

காரில் வரும் போது அனுஹாசன் உள்ளே பிரா போட்டிருக்கலாம். வயதான காலத்தில் காத்தாட இருக்கட்டும் என விட்டு இருக்கலாம். இல்லை புரடெக்‌ஷனில் அதான் மெட்ராஸ் டாக்கீஸில் காசு இருந்திருக்காது. அவ்வளவு பெரிய காரையும், அதன் குலுக்கலையும் பார்த்தால், வெடுக்கென ரசனை வரவில்லை. சுருங்கி போனது ரசனை. ரசனையைச் சொல்கிறேன்.

சுகாசினியும், அப்பாவாக நடித்த காத்தாடி ராமமூர்த்தி, அப்புறம் உலக மகாப் பேரழிகி அனுஹாசன் நடிப்பை எழுத்தில் சொல்லி மாளாது. அம்மா கோமாவில் கிடக்கிறார். அப்பா அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார். மகள்களுக்கு அப்பா அம்மாவிற்கு கிடைக்க கூடிய நல் மருத்துவத்தைக் கெடுக்கிறாரே என்ற கோபத்தில் அப்பாவுடன் வாதம் செய்கிறார்கள். சின்னமகள் ஸ்ருதிஹாசன் மியூசிக் அதான் இசை டவுசர் கிழிக்கும் இசை பாடகி அம்மாவுடன் வீடியோ காலில் பேச, அம்மாவின் கோமாவிலிருந்து வெளி வந்து காஃபி கொடுக்கிறார்.

சுகாஷினிக்கும், அனுஹாசனுக்கும் ஸ்பானிஷ் மொழி தெரியும் என்பது இப்படத்தின் மூலம் தெரிய வந்தது. இருப்பினும் அனுஹாசன் பிரா போட்டிருக்கலாம். கார் ரொம்ப பெரிசு பாருங்க. டிரைவருக்கு சிரமாக இருக்கும் அல்லவா? அந்தக் கவலைதான் எனக்கு.

ரசனையற்ற வெற்று வறட்டுக் கவுரம் பேசித் திரியும் ஈகோ பிடித்தவர்கள் இவர்கள். இவரை இயக்குனர் என்றுச் சொல்லி, அமேசான் அங்கீகரிக்கிறது. மூளை கெட்டவர்கள் அமேசானில் அட்மினாக இருந்தால் இப்படித்தான் இருக்கும். 

அடுத்து, ரீயூனியன்.

கொக்கேய்ன் பயன்படுத்தும் ஆண்ட்ரியா. பள்ளித் தோழ மருத்துவ நண்பரின் வீட்டில் கொரானாவின் காரணமாய் சிக்கிக் கொள்ள, அதிலிருந்து மீண்டு விட முயற்சிக்கிறார். பள்ளித் தோழன் தன் காதலைச் சொல்கிறார். கதை முடிந்தது.

ஆண்ட்ரியாவின் ட்ரெசிங் சென்ஸ் அடிபட்ட பென்ஸ் கார் போல சகிக்கவில்லை. முகத்தில் கிழடு தட்டி சுர்ருன்னு ஆயிடுச்சு. இவரைப் போய் ஒரு படத்துக்கு, வித்தியாசமான கேரக்டருக்கு சிபாரிசு செய்து கொண்டிருந்தேன் இயக்குனர் நண்பரிடம். பிச்சினச்சு ஆகி விடும் சாரே என்று குதூகலத்தில் இருந்தார் அவர். 

இயக்கம் ராஜீவ் மேனன். இன்னொரு கொக்கேய்ன் கதைகள். அந்தப் பெண்ணுக்கு காதல். ஆண்டி ரியா வித்தியாசமான கதைகளில் நடிப்பவர் தான். அதற்காக இப்படியா? எடிட்டிங்காவது ஒழுங்காக இருந்திருக்கனும். சகிக்கலை.

இந்தப் படத்துல ராஜீவ் மேனன் ஒரு மேட்டர் சொல்லி இருப்பார் பாருங்க. கடவுளே ஆண்களுக்கு இனிமே அதை இரும்பில் படைத்து விடுங்கள். நன்றாக இருப்பீர்கள் ஆண்டவரே... உம்மை ஆண்கள் சார்பில் தோத்திரம் செய்கிறேன். 

ஆண்டி ரியா, தோழனின் அம்மாவிடம் கேட்பார். உங்க கணவரின் ரொமான்ஸ் எப்படின்னு. அதுக்கு அந்தக் கிழவி, ம்...”ஊசி போட்டா மாதிரி வந்துட்டுப் போவாரு”ன்னு சொல்லும். சாதாரணமா அரை அங்குலமாவது சைஸ் இருக்கும். அதையே அந்தக் கிழவி ஊசின்னு சொன்னா, பின்னே என்னா சைசுக்கு அது இருக்கணும் என யாராவது சொல்லுங்க... ராஜீவ் மேனனின் பெண்ணீய சிந்தனை சிலிர்க்க வைக்கிறது.

அடுத்து

மிராக்கிள் - இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்.

எளிதில் ஊகித்து விடக்கூடிய கதை. கொடுமையிலும் கொடுமை. இடையிடையே இசைக்கோர்வைகள் வேறு. பாபி சிம்ஹா படங்களில் படுத்தியது போதாது என இது வேறயா? 

மிராக்கிள் பற்றிப் பேசும் சாமியாரின் கள்ளப்பணம், ஒரு இயக்குனருக்கு கிடைக்கச் செய்வது கதை. திருடராய் பாபி. அய்யய்யோ.. அம்மா.... கார்த்திக் உங்க இயக்கம் அடி தூள். ஏதாவது வெடக்கோழியா போட்டிருந்தாலாவது ரசித்திருக்கலாம். அதுவும் இல்லை. இருட்டுக்குள் முரட்டு கொத்து போல ஒரு எழவும் தெரியவில்லை. இருட்டுக்குள் ஒரு மிராக்கிள் என்று பெயர் வைத்திருந்தால், ரசிகர் பட்டாளம் இந்த ஆந்தாலஜியை கொண்டாடி  இருக்கும். 

அடுத்து முக்கியமான கிளைமேக்ஸ்

மேலே சொன்ன நான்கு படங்களிலும் ஆங்கிலம் சும்மா தெரித்தது. ஐந்தாவது படத்தில் இல்லை. 

வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவர்களால் தான் இப்படி எல்லாம் பேச முடியும் என ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டிய ஒரு ஆளைப் பார்த்து என் நண்பர் சொன்னார். அடுத்து அவர் சொன்னார், ”ஏதாவது கிராஸா இருக்கும் போல. ஆளின் கலரு பாருங்க”.

இப்போ படியுங்க இந்தப் பதிவின் முதல் வாக்கியத்தை.

நன்றி வணக்கம்.