குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, July 26, 2020

நிலம் (69) - பட்டா மாறுதல்களில் நடந்த தவறுகள் உண்மையா?

அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வருவாய் துறை மூலம் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையினைப் பாருங்கள். ஒரு சில இடங்களில் பட்டா மாறுதல்களில் பல்வேறு போலிப் பட்டாக்கள் உருவாக்கப்பட்டன. அடியேனும் பெரும் மதிப்பில் உள்ள ஒரு நிலத்தின் முறைகேடாக மாற்றப்பட்ட பட்டாவை, மீண்டும் சரி செய்தேன். அதன் கால அளவு ஒன்றரை வருடம். அலைச்சலும், கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு.

ஏன் பட்டா மாறுதல்களில் ஏகப்பட்ட தவறுகள் நடந்தன?

ஒவ்வொரு பட்டா மாறுதல்களின் போதும் அதற்கான ஆவணங்கள் கோப்பு எண் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டன. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. பட்டா மாறுதலுக்காக கோப்பு எண் மட்டும் இருக்கும். அதற்கான ஆவணங்கள் இருக்காது. தீர்ப்பு மட்டும் இருக்கும், சாட்சிகள் இருக்காது. 

இப்படியான ஒரு சூழல் சமீபத்தில் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்டில் நடந்தது. பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், அதற்கான ஆவணங்கள் மூன்றாண்டுகளுக்கு பிறகு அழிக்கப்பட்டன என்று தகவல் சொல்கின்றார்கள். 


அதை எவ்வாறு அரசு செய்யும் என்று எனக்குப் புரியாமல் இருந்தது. இடையில் ஏதோ ஒரு வில்லங்க உத்தரவோ அல்லது வேறு ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. 

இதன் காரணமாக பட்டா மாறுதல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அதை தாமதமாக அறிந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

இப்பிரச்சினையில் எவரேனும் சிக்கி இருந்தால், கவலைப்படாதீர்கள். அதற்கு சரியான வழி உள்ளது இப்போது. என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் நடந்ததா என்று கேட்கும் நண்பர்களுக்கு இதோ தமிழக அரசு அனுப்பிய ஒரு சுற்றறிக்கை உங்களின் பார்வைக்காக.

நிலம் நம் வாழ்க்கை, வரலாறு மற்றும் வாழ்வியல் ஆதாரம் என்பதை மறந்து விடாதீர்கள்.விரைவில் GOLDONLINE  யூ டியூப் சானலில் தண்ணீர் வசதியுடன் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், 5 ஏக்கர் நிலங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்க. ஒவ்வொரு நிலங்களும் தண்ணீர் வசதி ஆராயப்பட்டு, லீகல் சரி பார்க்கப்பட்டு, வாஸ்து முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும். 

 GOLDONLINE

இருந்த இடத்தில் இருந்து எந்த வித அலைச்சலும் இன்றி, மிகப் பாதுகாப்பான முறையில், சரியான இடத்தில், எதிர்கால பாதுகாப்புக்கு உகந்த நிலங்களைப் பார்வையிட்டு, முதலீடு செய்யலாம்.

என்னால் வெளியிடப்படும் எந்த நிலமாக இருப்பினும், வில்லங்க விவகாரங்கள் ஏதும் எதிர்காலத்தில் வந்தால், அதை எமது நிறுவனமே எந்த வித கட்டணமும் இன்றி சரி செய்து தரும் அல்லது பொறுப்பேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.