குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Thursday, March 19, 2026

கவிஞர் வைரமுத்து ஞானபீட விருது - சுயமோகனின் வயிற்றெரிச்சல்

2025ம் ஆண்டின் அறுபதாவது ஞான பீட விருது கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அகிலன் மற்றும் ஜெயகாந்தனுக்குப் பிறகு வைரமுத்து மூன்றாவது நபராக இந்த விருதினைப் பெற்றிருக்கிறார். இது தமிழுக்கு கிடைத்த பெருமை அல்ல. தமிழால் விருது வழங்கிய அமைப்பும், கவிஞர் வைரமுத்துவும் பெருமையடைந்த தருணம். பதினோரு இலட்சம் பணமும், ஒரு சரஸ்வதி வெங்கலச் சிலையும் இந்த விருதுடன் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தமிழால் பிழைக்க வந்த ஜெயமோகன் வயிற்றெரிச்சலை கொட்டி இருக்கிறார். அவரைச் சார்ந்த ஒரு கூட்டமும், 'அய்யய்யோ என்னைக் கையைப்பிடித்து இழுத்து விட்டான்' எனக் கதறும் ஒரு சில நபர்களும் ஓசியில் கிடைக்கும் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்கள். தன் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு இதுவும் ஒரு பிழைப்புதானே? 

ஜெயமோகனின் இணையதளத்தினைப் படிப்பவர்களுக்கு மெண்டல் டிஸ் ஆர்டர் நோய் ஏற்படலாம். அந்தளவுக்கு அவரின் படைப்புகள் மோசமாக இருக்கும். ஜெயமோகனின் எழுத்து அரசியலை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் 16 வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தினார். அந்தளவுக்கு மிக மோசமான சுயமோகத்தனம் அவரிடம் இருக்கிறது. தமிழின் ஒரே எழுத்தாளர் தான் மட்டுமே, எல்லா விருதுகளுக்கும் அவரே தகுதியானவர் என்பது போன்ற இன்னும் பல மோகங்கள் அவரிடமுண்டு. 

இவரைப் பற்றி பதினேழு வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன்.

கீழே இருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஊட்டியில் தளையசிங்கம் சம்பவத்தில் வெளியிடப்பட்ட ஊட்டியில் தளையசிங்கம் புத்தகத்தை வரிக்கு வரி டைப் செய்து ஒருவரின் இணையதளத்தில் அப்டேட் செய்திருக்கிறேன். ஊட்டியில் நடந்த சுயமோகனின் அற்பத்தனத்தை பதினைந்து வருடங்களுக்கு ராஜ நாயஹம் விவரமாக எழுதி சுயமோகனின் தன்மையை உலகிற்கு காட்டி விட்டார். கீழே இருக்கும் இணைப்பில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மு.தளையசிங்கமும் தொழுகையும் - https://rprajanayahem.blogspot.com/2019/03/blog-post.html

ஜெயமோகனின் இணையதளத்தில் அவ்வளவும் தற்பெருமை. வாசகர்களின் கடிதங்கள். கடிதங்களுக்குப் பதில்கள் என  சொறி சிரங்குகள். அதுமட்டுமல்ல மிகச் சிறந்த பிசினஸ் கான்சப்ட் டிசைன் செய்து வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் செழிப்பான தன்மைக்கு அறியா வாசகர்களை வெகு நுட்பமாகப் பயன்படுத்தும் அதிபுத்திசாலித்தனம் அவரிடமிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அதிமேதாவித்தனம். வாசகன் என்பவன் ஒரு அப்பாவி என அவருக்குத் தெரியும். அவனிடமிருந்து எப்படி என்னென்ன பெறலாம் என்பதும் அவருக்குத் தெரியும். புதிது புதிதாய் வரும் வாசகர்கள் இவரின் பலியாடுகள்.

ஒரு காலத்தில் மாலைமதி, ராணிமுத்து, சுபா, பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேஷ்குமார், சாண்டில்யன், எண்டமூரி வீரேந்திர நாத், அகிலன், நா.பார்த்தசாரதி, ஞானி, புதுமைப்பித்தன் எனத் தொடர்ந்து ஓஷோ, ஜென், சூஃபியிசம், ஜே.கிருஷ்ணமூர்த்தி என படிப்பதில்  ரசனை மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டது. இப்படியான நிலையில் நான் படித்ததில் யார் சிறந்த எழுத்தாளர், எது சிறந்த படைப்பு என எப்படி முடிவு செய்ய இயலும்? ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு படைப்புகள் சிறந்ததாக இருக்கும். இதே போன்ற நிலை எல்லா வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எடுத்த எடுப்பில் புறநானுறெல்லாம் படிக்க முடியாது அல்லவா?

ஒரு காலத்தில் மு.மேத்தா கவிதைப் புத்தகங்கள் கல்லூரி மாணவர்களின் திருக்குறள். எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களைப் படித்தவர்கள் பல லட்சம் மாணவர்கள். 

இப்படியான ஒரு சூழலில் ஜெயமோகன் தன்னை யார் என வெளிப்படுத்திய தருணம் தான் தமிழுக்கு அவமானம் (https://www.jeyamohan.in/230180/) என்ற அவரின் பதிவு. இவர் தமிழரல்ல என்கிறார்கள். தமிழால் பிழைக்க வந்தவர் என்கிறார்கள். ஒரு சிலர் இவரைப் பாதி தமிழர் என்கிறார்கள். அது என்ன கன்றாவியோ பாதி, கால், அரை என்ற விளக்கம். தமிழ் அவருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது பல நபர்களுக்கு கொடுத்ததைப் போல. இவரொன்றும் தமிழின் பிரதிநிதியல்ல. ஆகவே தமிழுக்கு அவமானமென்று எழுதி அத்தாரிட்டியை எடுத்துக் கொள்ள முயலும் கள்ளத்தனத்தின் முயற்சியே வைரமுத்து அவர்களை இவர் விமர்சித்தது.

இவர் தனது ஆகச் சிறந்த படைப்பு எனக் கருதும் வெண்முரசு ஒரு குப்பை என்பேன். தத்துவங்களும், மனிதக்கடவுள்களும் மனிதனின் வாழ்வியலைச் செம்மைப்படுத்த வேண்டும். அது சக மனிதனின் இருப்புக்கும், வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்குமானால், அந்தப் படைப்பு குப்பையாகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய ஏழாம் உலகம் படித்துவிட்டு, அவருக்கும் ஒரு மெயில் அனுப்பினேன். அதை அவர் இணையதளத்தில் வெளியிட்டார் என நினைவு.

ஏன் இவரை விமர்சிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அவருக்கு கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க காரணம் இருப்பது போல எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலில், அவரவரின் திறமைக்கு ஏற்ப எழுதுவார்கள். புழுக்களும், பூச்சிகளும், வண்டுகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இயற்கையின் படைப்புதான். இதில் மனிதன் சிறந்தவன் என எப்படிச் சொல்ல முடியும்? இத்தனை உயிர்களும் இருந்தால் தான் மனிதன் வாழ முடியும் அல்லவா? மனிதனை விட மிகவும் ஆபத்தான மிருகம் வேறு எதுவும் இருக்க முடியாது. சரி, ஜெயமோகனை விமர்சிக்க என்னிடம் இருக்கும் காரணம் என்ன?


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு


நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் 

வான்இன்று அமையாது ஒழுக்கு

தமிழர்களின் அடையாளம், தமிழின் ஆகச் சிறந்த நூலான திருக்குறளில் மழை பற்றிய குறள்களைப் படித்தீர்களா? இக்குறள்களின் விளக்கம் படித்தவுடன் புரிந்திருக்காது. ஒரு சிலருக்குப் புரிந்து இருக்கும். கொள்ள கொஞ்சம் தமிழ் இலக்கண அறிவு தேவை. படிப்பறிவும் தேவை.

கரை புரண்டு ஓடுதம்மா - அந்தக் 

காவிரியில் தண்ணி யெங்கும்

நெளி நெளியா ஓடுதம்மா - அந்த

நீல வண்ணத் தண்ணி யெல்லாம்

சுழி சுழியா ஓடுதம்மா - அந்த

சுத்தமான ஆத்துத் தண்ணி

வெயிலடிக்கும் நேரமெல்லாம் - தண்ணி

வெள்ளி போல மின்னுதடி

குடிதண்ணியும் குளி தண்ணியும் - கண்மணியே

குடம் குடமா எடுப்பாங்களாம்

தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணே யதைத்

தடுக்க ஒரு நாதியில்லை

பாப்பானுக்கு பச்சைத்தண்ணி - கண்மணியே

பறையனுக்கும் பச்சைத்தண்ணி

பட்டிக்காட்டில் பல சாதியாம் - கண்மணியே

பறையன் முதல் பாப்பான் வரை

தோட்டி முதல் தொண்டமான் வரை - கண்மணியே

தொழுந்தண்ணி பச்சைத்தண்ணி

சண்டையிழுப்பதும் - கண்மணியே

சாதிக்குள்ளே பச்சைத்தண்ணி

தெய்வம் போல இருக்குதண்ணி - கண்மணியே

திசையோடும் பச்சைத்தண்ணி

இந்தப் பாடலைப் படித்து விட்டீர்களா? 

நா.வானமாமலை பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? அவர் தொகுத்த தமிழர் நாட்டுப்பாடல்கள் தொகுப்பு 1 என்ற மின்நூலில், 60வது பக்கத்தில் உள்ளது. இந்த நூல் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்ட இணையப்பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பாடல்களைப் படிக்க தொல்காப்பிய இலக்கண அறிவு தேவையில்லை. படிப்பறிவு இல்லாதவர்களிடம் படித்துக் காட்டினால், அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

திருக்குறளையும், நாட்டுப்புற பாடலையும் படித்ததில் உங்கள் மனதில் ஒட்டிக் கொண்டது எந்தப் பாடல்? பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

ஜெயமோகன் அவர்களே! கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீட விருது ஏன் வழங்கப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனாலும் அதை மறைத்து வன்மத்தைக் கொட்டி, அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் விடுத்த வார்த்தைகளே உங்களை அழிக்க வரும் ஆயுதமாகி விடும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மொழி ஆராய்ச்சியாளர்கள் ஓசைகளுக்கு தான் எழுத்துகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும்,  அதைத் தொடர்ந்தே இலக்கணம் உருவாக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். 

பேச்சு மொழியின் ஓசை வடிவத்தின் உருவான படைப்பு தான் ஆதிமூலம் அல்லவா? ஆகவே பேச்சு மொழிப் படைப்புகள் தான் மிகச் சிறந்ததாக இருக்க இயலும். அதிலும் இவ்வகைப் பாடல்கள் பல ஜென்மங்களாய் தொடர்ந்து வரும் மனிதர்களுக்கு ஓசை வடிவில் கடத்தப்படுபவை அல்லவா? எழுத்துகள் உருவாகி, இலக்கணம் உருவாகி அவைகள் இப்போது எழுத்து வடிவில் படிக்கக் கிடைக்கிறது. 

கவிஞர் வைரமுத்து இந்த வகை எழுத்துக்களை பாமரனுக்கும், படித்தவனுக்கும் புரிந்த பேச்சு மொழியில் எழுதி இருக்கிறார். 

கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க ஜெயமோகனுக்கு எந்த அருகதையும் இல்லை. எது சிறந்த படைப்பு என நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அதைப் பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை. தமிழில் எழுதி பிழைத்துக் கொள்ளுங்கள். தமிழ் தான் பலருக்கும் வாழ்க்கை கொடுக்கும். தமிழுக்கு எவரும் எதுவும் செய்யமுடியாது. அது இயற்கையானது. அது கடவுளானது. அது தமிழர்களின் உயிருக்குள் இருக்கும் ஆத்மா. 

உங்களைப் போன்றோர்கள் தமிழுக்கு அத்தாரிட்டி கேட்க முடியாது. அது உங்களால் முடியாது. தமிழ் தமிழரின் சொத்து.

இனி ரசிக்க ஒரு பாடல்

ஆண் :

கல்லருகாம், புல்லருகாம்

கடலருகாம் பூந்தோட்டம்

புல்லறுக்கப் போற பிள்ளை - நீ

பூமுடிஞ்சாலாகாதோ?


பெண் :

நத்தத்து மேட்டு வழி

நான் போறேன் ஒத்த வழி

பிச்சிச்சரம் போல - நீ

பின்னே வந்தாலாகாதோ?


ஆண் :

கண்டாங்கிச் சீலை கட்டி

கரை வழியே போற புள்ள - உன்

கண்டாங்கிச் சீலையிலே - நான்

வண்டாய்ச் சுழலுதனே

குளத்திலொரு அல்லியுண்டு

கூந்தலொரு பாகமுண்டு

இடைச் சிறுத்த அல்லிக்கு

இடையில் ஒரு மச்ச முண்டு

வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள் 1 - புத்தகத்தில் பக்கம் 163-164. 

பாட்டைப் படித்ததும் சும்மா ஜிவ்வு ஜிவ்வுன்னு தெறிக்குதல்லவா?  கவிஞர் வைரமுத்துவின் பாணி இது.  உளறல்களை இலக்கியமென்று கருதும் தற்குறிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்? வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. 

ஜெயமோகன் அவர்களே நீங்களும் எழுதுங்கள், விருது பெறுங்கள். வாழ்த்துகிறோம். 

வளமுடன் வாழ்க.

Wednesday, December 28, 2016

மாமனார் மருமகன்

உலக மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில காரியங்களைச் செய்தால் தான் அந்த மாபெரும் சிம்மாசனம் கிடைக்கும். கிடைத்த சிம்மாசனத்தை தக்க வைக்க பெரும் போராட்டங்களை செய்தால்தான் அந்த அடையாளம் தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் நாளடைவில் மறந்து போவார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சினிமாக்காரர்களுக்கு முதல் சிம்மாசனம் கிடைக்கும்.

சினிமாவை தன் வாழ்வியலோடு வாழ்க்கைப் பாதையாக மாற்றிய சமூகம் இந்த உலகில் உண்டென்றால் அது நம் தமிழகம் தான். ஆந்திராவையும் விட்டு விட முடியாது. சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் நாட்டை ஆள வந்து விடுகின்றார்கள். நாட்டையே தூக்கிக் கொடுத்து விடும் அளவுக்கு சினிமா ஹீரோக்களுக்கு சிம்மாசனம் கொடுத்திருக்கிறோம்.

சினிமாவில் ஹீரோ போடும் சட்டை,  அவர் தலைமுடியில் செய்யும் மாற்றம், ஹீரோயின் கட்டும் சேலை முதற்கொண்டு தமிழ் சமுதாயம் விடாது தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள். தன் பிள்ளைகள் இன்னார் ரசிகன் என்று சொன்னால் புளகாங்கிதமடைகின்றார்கள். அந்தளவுக்கு சினிமாவுக்குள் தங்கள் வாழ்க்கையை புகுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தமிழர் சமூகம்.

தானும் கெட்டு தன் தலைமுறைகளையும் கெடுத்து அழிவின் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சமூகம் தமிழர் சமூகம் மட்டுமே. இதில் எவருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டமிடவும். பதில் தருகிறேன். (கம்யூனிஸ்ட்வாதிகள் ஏன் சினிமா ஹீரோ கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டேன் என்பது எனக்குப் புரியவே இல்லை. கம்யூனிஸம் என்பது சினிமாத் தொழிலாளிகளுக்கு இல்லையா?)

எழுத்தாளர்களுக்கு அந்த சிம்மாசனம் கிடைத்து விடுமா? என்றால் இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. சினிமாவில் வசனம் எழுதலாம், சில கில்லாடி எழுத்தாளர்கள் சினிமா இயக்குனர்களானாலும், ஹீரோக்களுக்கு கிடைக்கும் சிம்மாசனம் போல அவர்களுக்குக் கிடைத்து விடுவதில்லை.

இரண்டு வருடங்களாக சாரு நிவேதிதாவின் எழுத்தினை முதல் வாசகனாகப் படித்து, பதிவேற்றி வந்த பழக்கத்தின் காரணமாக சுயசரிதைத் தன்மையான எழுத்துக்களே எனக்கு வசமாகி இருக்கின்றன. ஆனால் அந்த சுயசரிதை தன்மை எழுத்துக்களை எழுத்துலகம் அங்கீகரிப்பதில்லை என்பதை கொஞ்ச காலமாக அனுபவித்து வருகிறேன். மனதை வருடும் சம்பவங்களாக பல பத்திரிக்கைகளைக்கு எழுதி அனுப்பினேன். அனைத்தும் திரும்பி வந்து விட்டன. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் போனில் அழைத்து நீங்கள் எழுதுவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இது எழுத்து வடிவமல்ல என்றுச் சொல்லி நான் எழுதும் சுயசரிதைத் தன்மையான பதிவுகளை சிறுகதைகளாக்குவது எப்படி என்று விவரித்தார். ஆச்சரியமாக இருந்தது. 

(சாரு நிவேதிதாவின் பழைய இணைய வடிவமைப்பு பக்கம்)

சுயசரித பதிவுகளைப் படிக்கும் போது எழுதுபவர்களுடன் மன நெருக்கம் உண்டாகும் உணர்ச்சி இருக்கும். சிறுகதை படிக்கும் போது வெளியில் இருந்து வாசிப்பது போல இருக்கிறதே என அவரிடம் வினவினேன். அந்த உணர்ச்சி வேறுபாடு எழுதப்படும் போக்கில் இருக்கும் குறை என்றுச் சொன்னார்.

என்னை ஒரு நாவலைப் படிக்கச் சொன்னார். அந்த நாவல் பா.சிங்காரத்தின் ’புயலிலோ ஒரு தோணி’ மற்றும் ’கடலுக்கு அப்பால்’. மூன்று வாரங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்படியே உள் இழுத்துக் கொண்டு விடுகிறது அந்த நாவல். மீள நேரமாகின்றது. 

தமிழக நாவல் வரிசையில் இந்த நாவல் எவராலும் மறக்கமுடியாத நாவல் என்றாலும் பா.சிங்காரத்தை பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆக மக்களின் மனதில் எப்படி எழுதினாலும் சிம்மாசனம் என்பது கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று.

ஒரு நண்பர் சொன்னார், தங்கம் எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதில் சிறந்தவர் ஜெயமோகன் பின்னர் ராமகிருஷ்ணன். உட்லாக்கடி எழுத்துக் கணக்குப்படி எழுதுபவர்கள் கமர்ஷியல் எழுத்துக்காரர்கள். ஒரு சிலர் ஏதோ ஒரு பவுண்டேஷனிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவார்கள். அவர்கள் ஒன்றிரண்டு புத்தகங்களோடு நின்று போவார்கள்.

பல வெற்றிகரமான எழுத்தாளர்களைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவரும் வருமானத்துக்கு குறைச்சல் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவதொரு கட்சி, பெரும் பணக்காரன் ஆகியோர்களை நண்பர்களாய் வைத்திருப்பார்கள். இந்தக் கணக்குச் சரியாக இருந்தால் தான் தொடர்ந்து எழுத முடியும். லெளகீக வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளா வண்ணம் இருப்பவர்களால் தான் தொடர்ந்து எழுதி வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அதன் படி இப்போது தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் என்று (வேறு எவரும் எழுதினால் எளிதாக படைப்புச் சரியில்லை என்று மறுதலித்து விடுவதும், ஏதோ இவர்கள் தான் எழுத்துலகத்தின் கடவுள்கள் போல கருதிக் கொண்டு பிற எழுத்தாளர்களை விமர்சிக்கும் காமெடியும் தொடர்ந்து எழுத்துலகத்தில் நடைபெற்றுக் கொண்டே வருவதை நாமெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்) கருதிக் கொள்வோர்கள் உண்டல்லவா? என்றும் சொன்னார்.

நண்பரின் கூற்றுப்படி பார்த்தால் ஏதோ ஒரு பின்புலம் இருப்பவர்களால் தான் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்தப் பின்புலங்களின் மனசு நோகா வண்ணம் எழுத வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சினிமாவுக்குள் அரசியல் என்றால் எழுத்துலகில் அதை விடப் பெரிய அரசியல் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவனின் குழந்தையை இன்னொருவன் பார்த்து கண் இப்படி இருக்கிறது, கால் இப்படி இருக்கிறது, கலர் சரியில்லை என்று விமர்சிப்பது போலத்தான் பிறரின் படைப்பை விமர்சிப்பது. அதை எவரும் புரிந்து கொள்வார் இல்லை. அவரவர் குழந்தை அவரவருக்குப் பெரிது. இதில் குறையென்ன காண்பது?  ஆக எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கணக்கின் விடையைப் போட்டு விட்டால் எழுத்துலகத்தின் கடவுள்களில் நாமும் ஒருவராக மாறி விடலாமா என்று யோசித்தால் வரிசை கட்டி நம் முன்னே நிற்கும் எழுத்தாளர்களைப் பார்த்தால் திகிலடிக்கிறது. நாமாவது அந்த வரிசைக்கு வருவதாவது? சாத்தியமே இல்லாத சாத்தியம். இருந்தாலும் ஒரு நப்பாசை. நரி திராட்சைக்கு ஆசைப்பட்டது போல.

ஆகையால் நானும் பலப் பல புத்தகங்களைப் படித்து மெருகேற்றி சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கலாம் என்று உட்கார்ந்தால் தொடர்ந்தாற் போல நான்கு பக்கங்களுக்கு மேல் எழுதவே முடியவில்லை. எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்கும் போது, பாதிக்குப் பாதி காணாமல் போய் விடுகிறது. இப்படியே தொடர்ந்து விடிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை முயற்சிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆறு மணிக்குப் பிறகு காய்கறி நறுக்கிச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்றைய உணவு ஈயமாகி விடுகிறது.

அதன் பிறகு லெளகீக வாழ்க்கைப் பயணத்தின் தொடர்ச்சி நிகழ ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை மீண்டும் இதே கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மலைகள் இணைய இதழில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்கள். இனி தொடர்ந்து பல இதழ்களில் வெளியிடலாமென்பதற்காக உலகத் தரத்துடன் (உலக  நாயகன் பாதிப்பு) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் ஓஷோவும், பா.சிங்காரமும், சுஜாதாவும், ஜட்ஜ் பலராமய்யாவின் முப்பு குரு விஷயமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி விகடன் குழுமத்தின் வயிற்றெரிச்சல் செய்திகள் வேறு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே மாமனார் மருமகன் பதிவை இன்னொரு நாள் எழுதுகிறேன். 

இணையத்தில் படித்த இந்தக் கவிதையோடு இந்தப் பதிவை முடித்து வைக்கிறேன். இருந்தாலும் அந்த எழுத்துக்கடவுள்கள் வரிசை மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. குஷ்பூவுக்கு கோயில் கட்டியது போல எவராவது ஒருவர் எனக்கு ஏதோ ஒரு மூலையில் கல்லாவது வைத்து மஞ்சள் தடவி அதன் மீது குங்குமம் வைத்து வழிபடமாட்டாரா என்ற ஆசை துரத்து துரத்துவென துரத்திக் கொண்டிருக்கிறது.

கொற்றவை சிம்மாசனம் (கவிதை)
------------------------------------------------------

சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

சிந்தையில் சிகரத்தைச் செலுத்தி நல்லறிவுடன்
பாட்டனும் பூட்டனும் பேசிய தமிழ்மொழி
அகரத்தின் ஆனிவேரில் ஓல்கா செம்புகழுடன்
பட்டினியில் பட்டறிவு பூசிய செம்மொழி
வென்றிட போர் விதம் பலவுண்டு
தலை நின்றிட சொற்குணம் கைகொண்டு
நித்தய நற்சோறு காணோம் இன்று

கலையில் கரைந்தவை நிற்பவை நிலைத்தவை
ஏட்டிலே வெடித்தவை கற்றவை சுரந்தவை
பாட்டிலே படர்ந்தவை கொற்றவை கொணர்ந்தவை
போரிட்டு முடித்துவை தூற்றிட தொடர்ந்து செய்
சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

நன்றி: பூந்தளிர் ஆனந்தன்

Friday, October 28, 2016

ஜெயமோகனின் அறச்சீற்றம்

கடந்த வாரம் என்று நினைக்கிறேன். வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில் ஒரு பையனை இரண்டொருவர் சேர்ந்து அடித்து துவைத்தனர். பார்த்த எனக்கு கடும் கோபம் ஏற்பட்டு எனது நண்பர்களை அழைத்து என்ன செய்யலாம் என்றுக் கேட்டேன். பல இடங்களில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதற்கென முஸ்தீபுகளைச் செய்த போது அது முடிந்து போன சமாச்சாரம் என்ற தகவல் கிடைத்தது. ஆசிரியர்கள் பணி மாறுதலும் அந்த பசங்களுக்கு டிசியும் கொடுக்கப்பட்டதாகவும், அடி வாங்கிய பையன் விரும்பினால் இருவரின் மீது வழக்குப் பதியலாம் என்ற செய்தி கிடைத்ததும் தான் மனசு சற்று ஆசுவாசப்பட்டது. இது ஒவ்வொரு மனிதனுக்குள் உண்டாகும் அறச்சீற்ற உணர்வு. எனக்கு ஏற்பட்டது அந்த அடி கொடுத்த பையனின் மீதான கோபம் இல்லை. அங்கு தர்மம் மீறப்படுகிறது. அதனால் சீற்றம் உண்டாகிறது. அவ்வளவுதான் விஷயம். நீ யார் கோபப்பட? உனக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அதற்கும் ஒரு பதில் இருக்கிறது என்னிடம்.

சாலையில் அடிபட்டுக் கிடப்போரைக் கண்டு கொள்ளாமல் சென்றால் மனிதனா நீ என்றெல்லாம் பேசுகின்றோமே அது என்ன விதத்தில் சரி? சிலர் ஓடோடி உதவி செய்கிறார்களே அதைப் போலத்தான் கடும் கொடும் செயல் நடக்கும் போது மனிதர்களுக்குள் உண்டாகும் கோபம். அதே போலத்தான் ஜெயமோகன் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இது போன்ற வீடியோக்களைப் பார்த்ததும் படபடப்பும் நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஹீரோயிசமும் வெளி வந்து விடும். 

இதே போலத்தான் ஜெயமோகனும் செய்திருக்கிறார். அவருக்கு தன் கோபமானாலும் சரி, மகிழ்ச்சியானாலும் சரி, எழுதி விடத்தான் செய்வார். அவரின் அந்தக் கோபம் அந்தப் பெண்மணி மீது உண்டானது என்று முடிவு செய்ய வேண்டியதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்.

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளால் நாட்டுக்கு எவ்வளவு இழப்புகள் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. நேற்று கூட சுப்ரீம் கோர்ட்டில் 85,000 கோடி ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு இதுவரை கடன் கட்டாமல் தவிர்த்து வரும் பெரும் தொழிலதிபர்களைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறது நம் மத்திய அரசு. வங்கிப் பணம் மக்களுடைய பணம் அல்லவா? வங்கிகள் திவாலானால் மனிதன் வங்கி மீது கொண்டிருக்கும் கடைசி நம்பிக்கை கூட சிதறுமானால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஹர்சத் மேத்தா என்ன செய்தார்? ஏதாவது நடந்ததா? பெரும் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் வங்கி மேலாளர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றனவே அதையெல்லாம் யாரால் என்ன செய்து விட முடியும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர.

வங்கிகள் சாதரண மனிதனின் நம்பிக்கை. பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட காசைக் கொடுத்து வைத்துப் பின்னர் திரும்ப வாங்க முடியுமா என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால் வங்கிக்கு நம்பிச் செல்கிறார்கள். இந்த நம்பிக்கைக் குலையும் படி நடந்து கொள்வது சரி என்கின்றார்களா? 

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோரால் எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல், மக்கள் மீது அலட்சியம். அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஒன்றையே வேலையாக வைத்துள்ளார்கள். 

ஜெயமோகன் அந்தப் பெண்ணின் வேலை செய்யும் வேகத்தினைப் பார்த்துதான் கோபத்தில் எழுதி இருப்பார். இன்னுமா நாம் ஏமாற வேண்டும்? இப்படியுமா ஒரு அரசு அலுவலர் வேலை செய்வார்? என்ற உடனடிக் கோபம் தான் அது. அதற்காக அவரை இரண்டு நாட்களாக வறுத்து எடுப்பது சரியல்ல. கடந்து செல்ல வேண்டிய விஷயம் இது. ஜெயமோகனுக்கு உண்டானது அறச்சீற்றம். அது அழுக்கு அல்ல.

சிவா தன் பிளாக்கில் எழுதி இருந்ததை இங்கு மீள் பதிவிடுகிறேன். ஏனென்றால் அதுதான் உண்மை. 

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 

ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது.  பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.

நன்றி :  நிகழ்காலத்தில் சிவசுப்ரமணியன்

Thursday, March 26, 2015

ரத்தம் கசியும் நினைவுகளூடே உப்புவேலி

எனக்குக் காந்தி மீது ஆற்றவே முடியாத கோபம் இருக்கிறது. எனது தாத்தா மறைந்த மாணிக்கதேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் பணி செய்தவர். அவர் வம்சத்தில் வந்தவன் என்பதால் கூட காந்தி மீது கோபம் வர காரணமாக இருக்கலாம். 

தாத்தா மலேசிய சிறையிலிருந்து இந்தியா வந்த பிறகு அவர் கூடவே கொண்டு வந்திருந்த ராணுவ சட்டையை நான் மார்கழி மாதக் குளிருக்கு அணிந்து கொள்வேன். சொரசொரப்பான மடக்குக் கத்தி ஒன்றினை அவர் இடுப்பில் சொருகி வைத்திருப்பார். அதுவும் ராணுவத்தில் இருந்து கொண்டு வந்ததுதான் என்பார். அதை விரிக்க என் சிறு வயதில் வலுப் போதவில்லை. 

ஒரு முறை முயற்சித்து ஆள்காட்டி விரலின் நடுவில் கத்தி பிளந்தது போல வெட்டி விட்டது. அதன் பிறகு அந்தக் கத்தியைப் பார்த்தாலே எனக்குள் விரலில் இருந்து கொட்டிய இரத்தம் நினைவுக்கு வந்து விடும். ராணுவத்தின் கத்தி என்பதை அது சரியாக நிரூபித்தது. அதன் பிறகு எனக்கு விபரம் தெரிந்த நாள் வரை விரித்துப் பார்க்கவே இல்லை. அந்தக் கத்தியில் ஒரு குத்தூசி போல ஒரு பகுதி இருக்கும். அதை வைத்துதான் குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்கும் வீரர்களுக்கு மோட்சம் கொடுப்பார்களாம். நிற்க !

இந்திய வரலாற்றுச் சரித்திரத்தில் மறைந்து போன ஒரு விஷயம் என்பதாய் ஜெயமோகன் தனது இணையதளத்தில் உப்புவேலி என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தார். எனது நண்பரிடம் சொல்லி உடனடியாக அந்தப் புத்தகத்தை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சாதாரண கம்பெனியாக இந்தியாவுக்குள் நுழையும் போது வளமுடன் இருந்த இந்தியாவை, ஏழை நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், கலாச்சாரத்தையும், கல்வியையும் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்கிற வரையில் வரலாறு சொல்லிக் கொடுத்தது. ஆனால் இந்த உப்புவேலி காட்டும் இன்னொரு முகம் மேற்கண்ட சீரழிவை விடவும் கொடூரமான ஒன்றாய் இருக்கிறது. 

உப்புக்கு வரி, அதனால் உருவான வேலி (சுங்கம்) அதனால் மாண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பிரிட்டன் இந்தியாவை ஒரு இடம் விடாமல் சீரழித்து சின்னப்படுத்தி அழித்ததை ஒரு பிரிட்டன்வாசி எழுதி இருப்பதைப் படிக்கையில் நினைவுகளில் ரத்தம் துளிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

காந்தியின் அஹிம்சை மீது எனக்கு வெறுப்பு மண்டுகிறது. அதனால் அவர் மீது எனக்கு எல்லையில்லாக் கோபம் கொப்பளிக்கிறது. அஹிம்சை என்பது கெஞ்சுவது, இறைஞ்சுவது என்ற எண்ணம் உதித்தபடியே இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் உண்மை என்னை அப்படிச் சிந்திக் வைக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் அவசியம் படித்து உணர வேண்டிய அற்புதமான ஒரு நூல் “உப்புவேலி”. சிறில் அலெக்சின் மொழிபெயர்ப்பில் இந்தியாவின் வழிந்தோடிய ரத்தம் உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகள் படம் போல விரிகின்றன. எழுத்து பதிப்பகத்தின் அற்புதமான படைப்பு. 


Thursday, November 26, 2009

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை முன்வைத்து !

ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் சமீபத்தில் படித்தேன். அந்த நாவலில் ஒரு கேரக்டர், அதன் பெயர் முத்தம்மை. அவலட்சனமானவள். முத்தமாளுக்கு வேலை பிச்சை எடுப்பது. அவளுக்கு பிள்ளை பிறக்க வைத்து, அந்தப் பிள்ளைகளை பெற்று பிச்சைக்கு விடுவதுடன், அந்தப் பிள்ளைகளை வேறு ஆட்களுக்கு விற்றும் விடுவார் பண்டாரம்.

முத்தம்மையோடு அகோரமானவர்களை இணைய விடுவது (அரேஞ்டு மேரேஜ்ஜுகள் நினைவுக்கு வருகிறது) அதன் காரணமாய் பிறக்கும் உருப்படிகளை வைத்துப் பிச்சை எடுப்பது போன்ற சம்பவங்களை நாவலில் எழுதி இருப்பார்.

நாவலின் கடைசியில் முத்தம்மையோடு இணைய விடுவது அவள் பெற்ற பிள்ளையை. படிக்கவே படுபயங்கரமாக இருக்கும் அந்த நாவல் எனக்குள் உருவாக்கிய கேள்விகள் பலப்பல.
அதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் இங்கே.

நாமும் இப்படித்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து முதலாளித்துவ பகாசுர கம்பெனிகளிடம் வேலை என்ற பெயரில் அடிமைகளாய் நம் பிள்ளைகளை விற்கின்றோமா?

நாம் தான் முத்தம்மாளா?


ஜெயமோகன், ஏழாம் உலகம்