குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஆர்.பி.ராஜநாயஹம். Show all posts
Showing posts with label ஆர்.பி.ராஜநாயஹம். Show all posts

Thursday, March 19, 2026

கவிஞர் வைரமுத்து ஞானபீட விருது - சுயமோகனின் வயிற்றெரிச்சல்

2025ம் ஆண்டின் அறுபதாவது ஞான பீட விருது கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அகிலன் மற்றும் ஜெயகாந்தனுக்குப் பிறகு வைரமுத்து மூன்றாவது நபராக இந்த விருதினைப் பெற்றிருக்கிறார். இது தமிழுக்கு கிடைத்த பெருமை அல்ல. தமிழால் விருது வழங்கிய அமைப்பும், கவிஞர் வைரமுத்துவும் பெருமையடைந்த தருணம். பதினோரு இலட்சம் பணமும், ஒரு சரஸ்வதி வெங்கலச் சிலையும் இந்த விருதுடன் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தமிழால் பிழைக்க வந்த ஜெயமோகன் வயிற்றெரிச்சலை கொட்டி இருக்கிறார். அவரைச் சார்ந்த ஒரு கூட்டமும், அய்யய்யோ என்னைக் கையைப்பிடித்து இழுத்து விட்டான் எனக் கதறும் ஒரு சில நபர்களும் ஓசியில் கிடைக்கும் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்கள். தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள இதுவும் ஒரு பிழைப்புதானே?

ஜெயமோகனின் இணையதளத்தினைப் படிப்பவர்களுக்கு மெண்டல் டிஸ் ஆர்டர் நோய் ஏற்பட்டிருக்ககூடும். அந்தளவுக்கு மோசமாக இருக்கும். ஜெயமோகனின் எழுத்து அரசியலை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் 16 வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தி  விட்டார். அந்தளவுக்கு மிக மோசமான சுயமோகத்தனம் அவரிடம் இருக்கிறது. தமிழின் ஒரே எழுத்தாளர் தான் மட்டுமே, எல்லா விருதுகளுக்கும் அவரே தகுதியானவர் என்பது போன்ற இன்னும் பல மோகங்கள் அவரிடமுண்டு. 

இவரைப் பற்றி பதினேழு வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன்.

கீழே இருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஊட்டியில் தளையசிங்கம் சம்பவத்தில் அடியேன் ஒரு காலத்தில் வெளியான இந்த புத்தகத்தை வரிக்கு வரி டைப் செய்து ஒருவரின் இணையதளத்தில் அப்டேட் செய்திருக்கிறேன். ஊட்டியில் நடந்த சுயமோகனின் அற்பத்தனத்தை பதினைந்து வருடங்களுக்கு ராஜ நாயஹம் எழுதி சுயமோகனின் தன்மையை உலகிற்கு காட்டி விட்டார்..

மு.தளையசிங்கமும் தொழுகையும் - https://rprajanayahem.blogspot.com/2019/03/blog-post.html

ஜெயமோகனின் இணையதளத்தினை வாசித்துப் பாருங்கள். அவ்வளவும் தற்பெருமை. வாசகர்களின் கடிதங்கள். கடிதங்களுக்குப் பதில்கள் என  சொறி சிறங்குகள். அதுமட்டுமல்ல மிகச் சிறந்த பிசினஸ் கான்சப்ட் வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் செழிப்பான தன்மைக்கு அறியாமை வாசகர்களை வெகு நுட்பமாகப் பயன்படுத்தும் அதிபுத்திசாலித்தனம். ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அதிமேதாவித்தனம். வாசகன் என்பவன் ஒரு அப்பாவி. புதிது புதிதாய் வாசகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் இவரின் பலியாடுகள்.

ஒரு காலத்தில் மாலைமதி, ராணிமுத்து, சுபா, பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேஷ்குமார், சாண்டில்யன், எண்டமூரி வீரேந்திர நாத், அகிலன், நா.பார்த்தசாரதி, ஞானி, புதுமைப்பித்தன் எனத் தொடர்ந்து ஓஷோ, ஜென், சூஃபியிசம், ஜே.கிருஷ்ணமூர்த்தி என படிப்பதில்  ரசனை மாற்றங்கள் எனக்கு ஏற்பட்டது. இப்படியான நிலையில் யார் சிறந்த எழுத்தாளர், எது சிறந்த படைப்பு என எப்படி முடிவு செய்ய இயலும்? ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு படைப்புகள் சிறந்ததாக இருக்கும். 

ஒரு காலத்தில் மு.மேத்தா கவிதைப் புத்தகங்கள் கல்லூரி மாணவர்களின் திருக்குறள். எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களைப் படித்தவர்கள் பல லட்சம் மாணவர்கள். 

இப்படியான ஒரு சூழலில் ஜெயமோகன் தன்னை யார் என வெளிப்படுத்திய தருணம் தான் தமிழுக்கு அவமானம் (https://www.jeyamohan.in/230180/) என்ற அவரின் பதிவு. இவர் தமிழரல்ல என்கிறார்கள். தமிழால் பிழைக்க வந்தவர் என்கிறார்கள். ஒரு சிலர் இவரைப் பாதி தமிழர் என்கிறார்கள். அது என்ன கன்றாவியோ பாதி, கால், அரை என்ற விளக்கம். தமிழ் அவருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது பல நபர்களுக்கு கொடுத்ததைப் போல. இவரொன்றும் தமிழின் பிரதிநிதியல்ல.

இவர் தனது ஆகச் சிறந்த படைப்பு எனக் கருதும் வெண்முரசு ஒரு குப்பை என்பேன். தத்துவங்களும், மனிதக்கடவுள்களும் மனிதனின் வாழ்வியலைச் செம்மைப்படுத்த வேண்டும். அது சக மனிதனின் இருப்புக்கும், வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்குமானால், அந்தப் படைப்பு குப்பையாகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய ஏழாம் உலகம் படித்துவிட்டு, அவருக்கும் ஒரு மெயில் அனுப்பினேன். அதை அவர் இணையதளத்தில் வெளியிட்டார் என நினைவு.

ஏன் இவரை விமர்சிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அவருக்கு கவிஞர் வைரமுத்துவைத் தாக்க காரணம் இருப்பது போல எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலில், அவரவரின் திறமைக்கு ஏற்ப எழுதுவார்கள். புழுக்களும், பூச்சிகளும், வண்டுகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இயற்கையின் படைப்புதான். இதில் மனிதன் சிறந்தவன் என எப்படிச் சொல்ல முடியும்? மனிதனை விட மிகவும் ஆபத்தான மிருகம் வேறு எதுவும் இருக்க முடியாது. சரி, ஜெயமோகனை விமர்சிக்க என்னிடம் இருக்கும் காரணம் என்ன?


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு


நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் 

வான்இன்று அமையாது ஒழுக்கு


தமிழர்களின் அடையாளம், தமிழின் ஆகச் சிறந்த நூலான திருக்குறளில் மழை பற்றிய குறள்களைப் படித்தீர்களா? அனேக நபர்களுக்கு புரிந்திருக்காது, ஒரு சிலருக்கு இந்த திருக்குறள் பாடல் என்ன சொல்கிறது எனப் புரிந்து இருக்கும். இப்பாடல்களைப் புரிந்து கொள்ள கொஞ்சம் தமிழ் இலக்கண அறிவு தேவை. படிப்பறிவும் தேவை.


கரை புரண்டு ஓடுதம்மா - அந்தக் 

காவிரியில் தண்ணி யெங்கும்

நெளி நெளியா ஓடுதம்மா - அந்த

நீல வண்ணத் தண்ணி யெல்லாம்

சுழி சுழியா ஓடுதம்மா - அந்த

சுத்தமான ஆத்துத் தண்ணி

வெயிலடிக்கும் நேரமெல்லாம் - தண்ணி

வெள்ளி போல மின்னுதடி

குடிதண்ணியும் குளி தண்ணியும் - கண்மணியே

குடம் குடமா எடுப்பாங்களாம்

தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணே யதைத்

தடுக்க ஒரு நாதியில்லை

பாப்பானுக்கு பச்சைத்தண்ணி - கண்மணியே

பறையனுக்கும் பச்சைத்தண்ணி

பட்டிக்காட்டில் பல சாதியாம் - கண்மணியே

பறையன் முதல் பாப்பான் வரை

தோட்டி முதல் தொண்டமான் வரை - கண்மணியே

தொழுந்தண்ணி பச்சைத்தண்ணி

சண்டையிழுப்பதும் - கண்மணியே

சாதிக்குள்ளே பச்சைத்தண்ணி

தெய்வம் போல இருக்குதண்ணி - கண்மணியே

திசையோடும் பச்சைத்தண்ணி


இந்தப் பாடலைப் படித்து விட்டீர்களா? 

நா.வானமாமலை பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? அவர் தொகுத்த தமிழர் நாட்டுப்பாடல்கள் தொகுப்பு 1 என்ற மின்நூலில், 60வது பக்கத்தில் உள்ளது. இந்த நூல் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்ட இணையப்பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பாடல்களைப் படிக்க தொல்காப்பிய இலக்கண அறிவு தேவையில்லை. படிப்பறிவு இல்லாதவர்களிடம் படித்துக் காட்டினால், அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

திருக்குறளையும், நாட்டுப்புற பாடலையும் படித்ததில் உங்கள் மனதில் ஒட்டிக் கொண்டது எந்தப் பாடல்? பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

சுயமோகன் அவர்களே! கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீட விருது ஏன் வழங்கப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனாலும் அதை மறைத்து வன்மத்தைக் கொட்டி, அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் விடுத்த வார்த்தைகளே உங்களை அழிக்க வரும் ஆயுதமாகி விடும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மொழி ஆராய்ச்சியாளர்கள் ஓசைகளுக்கே எழுத்து உருவாக்கப்பட்டிருக்கும்,  எழுத்து, இலக்கணம் என்பவை மொழியைச் செழுமைப்படுத்தியவை என்கிறார்கள். 

பேச்சு மொழியில் ஓசை வடிவத்தின் படைப்பு தான் ஆதிமூலம் அல்லவா? ஆகவே பேச்சு மொழிப் படைப்புகள் தான் மிகச் சிறந்ததாக இருக்க இயலும். அதிலும் இவ்வகைப் பாடல்கள் பல ஜென்மங்களாய் தொடர்ந்து வரும் மனிதர்களுக்கு ஓசை வடிவில் கடத்தப்படுபவை அல்லவா? எழுத்துகள் உருவாகி, இலக்கணம் உருவாகி அவைகள் இப்போது எழுத்து வடிவில் படிக்கக் கிடைக்கிறது. 

கவிஞர் வைரமுத்து இந்த வகை எழுத்துக்களை பாமரனுக்கும், படித்தவனுக்கும் புரிந்த பேச்சு மொழியில் எழுதி இருக்கிறார். 

சுயமோகனின் எழுத்துக்களின் தன்மை என்னவென உங்களுக்கே தெரியும். கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க சுயமோகனுக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழால் பிழைக்க வந்தவருக்கு தமிழ் நிறைய பொருளையும், புகழையும்(?) தந்திருகிறது. அதை வைத்து வாழ்ந்து கொள்ளட்டும். அது அவருக்கு நல்லது.

இனி ரசிக்க ஒரு பாடல்


ஆண் :

கல்லருகாம், புல்லருகாம்

கடலருகாம் பூந்தோட்டம்

புல்லறுக்கப் போற பிள்ளை - நீ

பூமுடிஞ்சாலாகாதோ?


பெண் :

நத்தத்து மேட்டு வழி

நான் போறேன் ஒத்த வழி

பிச்சிச்சரம் போல - நீ

பின்னே வந்தாலாகாதோ?


ஆண் :

கண்டாங்கிச் சீலை கட்டி

கரை வழியே போற புள்ள - உன்

கண்டாங்கிச் சீலையிலே - நான்

வண்டாய்ச் சுழலுதனே

குளத்திலொரு அல்லியுண்டு

கூந்தலொரு பாகமுண்டு

இடைச் சிறுத்த அல்லிக்கு

இடையில் ஒரு மச்ச முண்டு


வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள் 1 - புத்தகத்தில் பக்கம் 163-164. 

பாட்டைப் படித்ததும் சும்மா ஜிவ்வு ஜிவ்வுன்னு தெறிக்குதல்லவா?  கவிஞர் வைரமுத்துவின் பாணி இது.  உளறல்களை இலக்கியமென்று கருதும் தற்குறிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்.  வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. ஜெயமோகன் அவர்களே நீங்களும் எழுதுங்கள், விருது பெருங்கள். வாழ்த்துகிறோம். 

வளமுடன் வாழ்க.