தமிழகத்தின் பிரபல நகரங்களில் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் உரிமையாளர்களில் ஒருவர் எனது நண்பர். திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து அழைப்பு. ”டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வேலையாக, உங்களது கன்சல்டேஷன் வேண்டி இருக்கிறது, வர இயலுமா ?” என்று கேட்டார். ஒத்துக் கொண்டேன்.
போர்டு மீட்டிங்கில் இரண்டு சேர்மன்களுடன் தனிமையில் உரையாடினேன். டிபார்ட்மென்ட் ஸ்டோரின் ஒரு நாள் கலெக்ஷன் 25 லிருந்து 35 லட்சம் வரை. அதுவே சனி, ஞாயிறு என்றால் அரைக்கோடிக்கும் மேல். சில சமயம் ஸ்டாக் செக்கிங் செல்லும்போது, ஸ்டாக் குறைவாக இருக்குமாம். ஆனால் ஆர்டர் போட்டது அதிகமாக இருக்கும் என்றும் விற்பனையானதும் குறைவாக இருக்கும் என்றும், அதன் பிறகு ரகசிய கேமராக்கள் வைத்து, கஸ்டமர் யாராவது திருடுகின்றார்களா என்றெல்லாம் பார்த்ததில் அப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என்றும் தெரிய வந்திருப்பதாகவும் சொன்னார். கணிணியில் செயல்படும் சாஃப்ட்வேர் இவர்கள் கம்பெனிக்காக ஸ்பெஷலாக தயாரித்தது என்றும் சொன்னார். எங்கு திருட்டு நடக்கிறது என்பதே புரியவில்லை என்றும், வருமானம் கொஞ்சம் கொஞ்சமாய சரிகிறது என்றும் சொன்னார்.
பெரிய விஷயம். நிர்வாகத்தாலே கண்டுபிடிக்க முடியாததை நம்மிடம் தள்ளுகின்றார்களே, நம்மால் முடியுமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். முயற்சி செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து, ”முயற்சிக்கிறேன்” என்று உறுதி கொடுத்து விட்டேன். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன். நான் என்ன செய்கிறேன் என்று கேட்கக் கூடாது என்றும், நான் சொல்வதை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டேன். “அப்படியே ஆகட்டும் தங்கம்” என்று இருவரும் கோரசாகச் சொல்லி விட்டனர். அவரின் கவலை தீர்ந்தது. ஆனால் எனக்குள் அந்தக் கவலைப் பரவி விட்டது.
பிரபல ஹோட்டலில் எனக்கான தனி அறை, சேர்மனின் வீட்டிலிருந்து சாப்பாடு, மாலைகளில் வெளியே சென்று வர தனி கார் மற்றும் உதவியாளர் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல் நாள் சேர்மனின் அறையிலிருந்து கொண்டு அவருடன் பேசிக் கொண்டே அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்தேன். இரவு தனியாக நானும் சேர்மனும் ஸ்டோருக்குள் வந்து எங்கெங்கு என்ன வேலைகள் நடக்கின்றன என்று விசாரித்து அறிந்து கொண்டேன்.
மறுநாள் நான் சேர்மனின் நண்பர் என்றும், புதிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று வைப்பதற்காக, ஆலோசனை கேட்க வந்திருப்பதாகவும் செய்தி பரப்பப்பட்டது. அதன்பிறகு தான் ஆக்சன் பிளானே ஆரம்பமானது.
பில்லிங் போடும் கவுண்டரில் அமர்ந்து சில பில்களைப் போட்டேன். அது உடனே அக்கவுண்டிங் செக்ஷனுக்கு வருகிறதா என்று செக் செய்த போது, வரவில்லை. ஏன் என்று கேட்டால், ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை பில் டேட்டாவை அப்லோட் செய்தால் தான் அக்கவுண்ட் செக்ஷனுக்கு வரும் என்றுச் சொன்னார் சாஃப்ட்வேர் ஆள். ஓகே, பில்லிங்கில் ஏதும் டெலிட் ஆப்சன், அப்டேட் ஆப்சன் ஏதும் இருக்கிறதா என்று பார்த்த போது, அப்படியான ஆப்சனே இல்லாமல் இருந்தது. ஏதாவது தவறான எண்ட்ரி வர வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.பார்கோட் ரீடிங் மூலம் இன்புட் வாங்கப்பட்டது. சரி பில்லிங் செக்ஷனில் பிரச்சினை இல்லை. டேட்டா அப்லோடிங்கிலும் பிரச்சினை இல்லை என்று முடிவெடுத்தேன்.
அடுத்து, அக்கவுண்ட் செக்ஷனுக்குள் நுழைந்தேன். சில பொருட்களை மட்டும் லிஸ்ட் எடுத்து வரவு, விற்பனையை சரி பார்த்தேன். பெரும்பாலும் சரியாகவே இருந்தன. இப்படி ஒவ்வொரு பொருளையும் செக் செய்து கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆகி விடுமே என்று யோசித்துக் கொண்டே, ராண்டமைஸ்ஸாக செக்கிங் செய்யலாம் என்று முடிவெடுத்து, சில பொருட்களை லிஸ்ட் எடுத்தேன்.
ஒரே ஒரு பொருள் மட்டும் வரவு விற்பனையில் இடித்தது. அது 500 கிராம் ஹார்லிக்ஸ் பாட்டில். அது எந்த டீலரிடமிருந்து வாங்கப்படுகிறது என்ற விபரத்தை எடுத்து, அந்த டீலர் அனுப்பும் பொருட்களை லிஸ்ட் எடுத்து பார்த்த போது எனக்கு பிரச்சினை எங்கிருக்கிறது என்று புரிந்து விட்டது. எத்தனை ரூபாய் திருடப்பட்டது என்பதை எப்படித் திருடப்பட்டது என்பதைச் சொல்லி விட்டால் கண்டுபிடித்து விடலாம், மேலும் திருட்டையும் சரி செய்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு, அடுத்த பிளானை உருவாக்கினேன்.
மறு நாள் சேர்மனைச் சந்தித்த போது, ”தங்கம் கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கே?” என்றுச் சொன்னார். அவர் தான் பிசினஸ் மேன். முகத்தைப் படிக்கத் தெரிந்தவர். அதனாலல்லவா கோடிகளுக்கு அதிபதியாய் இருக்கிறார்.
”இன்னும் இல்லை சார், எனக்கு குழப்பமாய் இருக்கிறது எங்கு தப்பு நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்றே தெரியவில்லை. பாருக்குப் போகலாமா இன்று இரவு” என்று கேட்க,ஆள் அதிர்ந்து விட்டார்.
“தங்கம், நீங்கதான் ட்ரிங்க்ஸ் யூஸ் பண்ணமாட்டீங்களே, பின்னே பாருக்குப் போகலாமான்னு கேட்கின்றீர்களே, என்ன ஆச்சு, ஏதும் பிரச்சினை இல்லையே? “ என்று அதிர்ந்து போய் கேட்க,
”நத்திங் சார், சும்மா ரிலாக்சேஷனுக்காக” என்றுச் சொல்லி சமாளித்தேன்.
* * *
அடுத்த பகுதியில் நான் சென்ற வேலையினை எப்படி வெற்றிகரமாக முடித்தேன் என்று பார்க்கலாம்.