எலியார் பூனைகளுக்குப் பயப்படவில்லை.
ஆகவே நான் இன்கம்டாக்ஸ் அல்லது இ.டி. வழியைத் தேர்ந்தெடுத்தேன்.
அதற்கு காரணம் நானல்ல.
கனவில் வந்தவர்கள்.
வள்ளலார் கருணையைக் கொஞ்சம் தள்ளி வை எனக் கனவில் வந்து சொன்னார்.
காந்தி மகானோ அகிம்சை என்றால் பாதகம் என்றும் அந்தக் காலத்தில் மனசாட்சி உள்ளவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் கொலைகாரனை கூட அண்ணா என்றும், தலைவர் என்று அழைக்கும் படுபாதகர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் கருணையோ, பொறுமையோ காட்டினால் உன்னை அழித்து விடுவார்கள் என்றும், பிரதமர் மோடி அவர்கள் கூட என்னைப் பற்றி காந்தித் திரைப்படத்துக்குப் பின்பு தான் எல்லோருக்கும் தெரிய வந்தது என்று சொன்னார் அல்லவா? இதையெல்லாம் கவனத்தில் வை என்றும் கனவில் வந்து உபதேசித்தார்.
என் மூளை பல உபாயங்களைத் தேடியது. அதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தது.
எலியைப் பிடிக்கலாமே தவிர கொல்லக் கூடாது. அது சட்ட விரோதம் என பீட்டா வழக்குத் தொடுக்கும் அபாயம் வேறு இருக்கிறது.
முதலில் வழக்கு, அதன் பிறகு விசாரணை, வக்கீல் செலவு என இத்தியாதிகள் நடந்து தீர்ப்பு வரும் வரை அது கொலையாக கருதப்படும் அபாயம் வேறு இருக்கிறது.
ஆகவே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.
மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா? - வசனம் நினைவிருக்கிறதா?
எலிக்கு மரண பயத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது.
கொலை அல்ல, மரண பயம்..!
இதெல்லாம் தேவையா? பேசாமல் எலியைப் பிடிக்க உத்தரவு போடச் சொல்லி, டெல்லி கோர்ட்டில் வழக்கு போட்டு விடலாமா எனக் கூட நினைத்தேன். செலவு ரொம்ப ஆகும். ஆகவே அதை தள்ளி வைத்து விட்டேன்.
படுக்கையறையின் அருகில் இருக்கும் சிலாப்பில் எலியார் விடிகாலையில் வந்து விடுவதைக் கண்டுபிடித்தேன். அடுத்த நாள் திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டியது என முடிவெடுத்தேன்.
விடிகாலையில் எலியார் சிலாப்பிற்கு வந்து, தன் பற்கள் மூலம் சில்மிஷத்தில் இருந்தார்.
கோதையை எழுப்பி பெட்ரூம் கதவைச் சாத்தி விட்டு வெளியில் நில், கையில் ஒரு துண்டு அவசியம். தரையில் அடிப்பது திட்டம். எலியார் பாதித்து விடக்கூடாது என்பது முக்கியம் என திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளிடம் விவரித்தேன்.
வழக்கம் போல மண்டையை ஆட்டி விட்டாள்.
லைட்டைப் போட்டவுடன், அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியில் நின்றாள்.
என் கையில் ஒரு பிரம்பு.
லைட்டைப் போட்டவுடன் எலியாருக்கு பீதியில் கிலி பிடித்து விட்டது. குடுகுடுவென பீரோ வழியாக இறங்கி கதவருகில் வந்தவருக்கு மூச்சே நின்று போனது.
சாத்தப்பட்ட கதவு.
எலியாருக்கு திகில் கிளம்ப கட்டிலுக்குள் கீழ் ஓடி ஒளிந்தார்.
என் கையில் இருந்த பிரம்பால் ஒரு தட்டு.
எலியாருக்கு ஒன்றுக்கு ரெண்டுக்கு வந்திருக்கும் போல.
தட தடவென அங்குமிங்கும் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தார்.
இனி திட்டத்தின் அடுத்த பகுதி.
கோதை லேசாக கதவைத் திற எனக் கத்தினேன்.
சத்தம் கேட்ட கோதை கதவைத் திறக்க, எலியாருக்கு திருப்பதி சொர்க்க வாசல் திறந்த போல இருந்தது போல. கூட்டத்தினர் திருப்பதி பெருமாளை பார்க்க முண்டியடிப்பது போல கதவிடுக்கு வழியாக வரவேற்பறைக்குச் செல்ல, அங்கே தூக்கக் கலக்கத்தில் எழுந்த கோதை தலை விரி கோலத்துடன், கையில் துண்டுடன் பத்ரகாளி போல நிற்கிறாள்.
எலியாருக்கு எப்படி இருந்திருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
சொர்க்கவாசலா? நரகவாசலா?
எலியாருக்கு எந்த வாசல்?
ஓடி வந்த எலியாரின் அருகில் துண்டால் ஒரு தரையில் சாத்து சாத்தினாள் கோதை.
எலியார் துள்ளிய துள்ளலைப் பார்த்தேன்.
உயரம் தாண்டுதலுக்கு ஒலிம்பிக் கமிட்டியார் எலிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
பீட்டா அமைப்பினர் இதற்கெல்லாம் வழக்குத் தொடுக்க கூடாது. எலியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வேண்டுதல். அம்புட்டுத்தான்.
அன்றிலிருந்து எலியாரைக் காணவில்லை.
இன்கம்டாக்ஸ், என்ஃபோர்ஸ்மெண்ட் இண்டலிஜென்ஸ் ஆட்களைப் பார்த்து எதற்கு எலி அல்ல கிலி பிடித்தலைகிறார்கள் என எலியாருக்குப் புரிந்திருக்கும்.
வாலைச் சுருட்டிக் கொண்டு, பிள்ளையாரிடம் போய் விட்டார் போல எலியார். ஏனென்றால் பிள்ளையார் இந்துக் கடவுள் அல்லவா?
எலியாருக்கு அவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லையே.
கனவு மூலமாக வந்த வள்ளலார் எலியை விரட்டி விட்டார் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் மனித ரூபாய் அல்ல ரூபாய நமஹ!
வளமுடன் வாழ்க.
04.10.2025
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.