தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இன்று உள்ளூர பதைபதைப்பில் இருக்கிறது. என்னால் உறுதியாக கூற முடியும் இதன் முழு காரணம் நமது ஆட்சித் திறனற்ற ஒன்றிய அரசும் அதன் தலைவர்களும் மட்டுமே.
மக்களை எப்போதும் பதைபதைப்பில் வைத்துக் கொள்வது ஒன்றிய அரசின் தலைமையில் இருக்கும் பிஜேபியின் அஜெண்டா. அதுமட்டுமல்ல இன்னும் பல வித கொள்கைகள் உண்டு. அவைகளை எல்லாம் நெட்டில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
கொரானா பரவலை எளிதில் ஒரு சில கடுமையான சட்ட திட்டங்களைப் போட்டு கட்டுப்படுத்தி இருக்கலாம். மக்களின் மீது அபிமானம் உள்ள தலைவர்களுக்கு அது தெரியும். ஆனால் அதிகாரத்தின் மீது மட்டுமே வெறி கொண்டலையும் தலைவர்களுக்கு மக்களின் மீதான அபிமானம் பற்றியெல்லாம் கவலை இல்லை. உலகப் பத்திரிக்கைகள் காறி உமிழ்கின்றன. அதனாலென்ன துடைத்துக் கொள்வார்கள்.
இந்திய மக்கள் ஆப்பசைத்த குரங்காய் மாறி விட்டார்கள். ஆனாலும் தமிழகத்தில் பாதுகாப்பு இருக்கிறது. ஆக்கபூர்வமான, குடிமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அவர் தமிழையும், தமிழர்களையும் பாதுகாப்பார் ஏனென்றால் அவர் ஒரு சிறந்த நிர்வாகி.
ஒன்றிய அரசின் கட்ட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்வயம் என்ற அமைப்பு இந்திய மாணவர்களுக்கு இலவச கல்வி பயிற்சியை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இப்பயிற்சிகளை கட்டணம் கட்டி படிக்க முனைந்தால் லட்சத்தில் செலவாகி விடும். ஆகவே கீழே இருக்கும் இணைப்பினை சொடுக்கி என்னென்ன கோர்சுகள் இலவசமாய் படிக்க இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து படித்து முன்னேறவும்.
இணைப்பு : https://swayam.gov.in
10.05.2021 இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான செய்தி கீழே
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.