குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, May 10, 2021

இந்து தமிழ் திசை ஜாதி மொழி பிரச்சினையை உருவாக்குகிறதா?

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இருந்த ஒரே காரணத்தால் தான் மதராசி என்ற பெயர் மாறி தமிழ்நாடு என்று பெயர் பெற்று  இன்று உலகிற்கே முன்னுதாரணமாய் இருக்கிறது தமிழகம்.

இன்றைய இந்து தமிழ் திசை, தனது தினசரியில் நம் முதல்வரின் பூர்வ குடிகள் ஆந்திராவில் இருந்ததாக செய்தி வெளியிட்டு தனது ஜாதிய, மொழி சார்ந்த கலவரம் செய்யும் வழக்கத்தை முன்னெடுத்து தனக்குத் தானே ஜெலுசில் குடித்துக் கொண்டிருக்கிறது.
 

அந்தளவுக்கு எரிச்சலில் இந்து தமிழ் திசை நாழிதழ் இருக்கிறது என்று தெரிய வரும் போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது மைசூர் அரசில் இவரின் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டிருந்தால், ஜெ அவர்கள் ஆசிரியருக்கு ஆப்பு சொருகி இருப்பார்.

அதுமட்டுமல்ல, ஜூனியர் விகடனில் மாப்பிள்ளை தர்பார் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் குழுமம் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. விகடன் பத்திரிக்கை குழுமம் தன் எரிச்சலை இனி இப்படியான செய்திகளை வெளியிட்டு திமுக அரசின் மீதான தன் எரிச்சலை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கும்.

ஜெயலலிதாவுக்கு ஒரு குடும்பம் இருந்திருந்தால் அவர் எப்படிச் செத்தார் என்று உலகத்துக்கு தெரிந்திருக்கும். அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் அவரின் வாழ்வும், சாவும் பெரும் அவலத்துக்கு உள்ளாயின.

அதே போல கலைஞரும் இருந்திருந்தால் தங்கள் வழக்கப்படி ஆவன செய்து அதிகாரத்தில் இருந்திருப்பர். ஆனால் கலைஞரிடம் அது எடுபடவில்லை. அது முதல்வர் ஸ்டாலினிடமும் எடுபடாது. வயிற்றெரிச்சல் தாளாமல் விகடனும் ஜெலுசில் குடிக்க வேண்டியதுதான். வேறு வழி இப்போதைக்கு அவர்களிடம் இல்லை. 

இந்த பத்திரிக்கைகள் அனைத்தும் முரசொலி மாறனை என்னவெல்லாம் விமர்சித்து எழுதினார்கள் என்பது வரலாறு. இவர்களுக்கு தலைவர்கள் குடும்பத்தோடு இருந்தால் எப்போதும் போல தங்கள்  வழக்கத்தினை செயல்படுத்த இயலாதே என்ற எரிச்சலில் எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள்.

அதிகாரத்தில் இருக்க வேண்டும், இல்லையெனில் அதிகாரத்தில் இருப்பவர்களோடு ஆலோசனையாளராக இருக்க வேண்டும். இல்லையெனில் காசு எங்கே இருக்கிறதோ அங்கே இருக்க வேண்டும். காலம் காலமாக தொன்று தொட்டு செய்து வரும் வழக்கம் இது.

தேர்தல் பிரச்சாரம் முடிந்து அடுத்த நாள், பத்து வருடத்திற்கு முன்பு நடந்த செய்திகளைக் கட்டம் கட்டி வெளியிட்ட தினமலர், தினமணி, இந்து தமிழ் திசை, இந்து பத்திரிக்கை மற்றும் தினதந்தி ஆகியவை விளம்பரமாக வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீதான வன்மத்தைக் காட்டின. 

இதே போல மேற்கண்ட பத்திரிக்கை ஆசிரியர்களின் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வரும் மனித குல விரோத நடவடிக்கைகளை தினமும் விளம்பரமாக வெளியிட்டால் ஒருவர் கூட நிம்மதியாக முடியுமா? தொழிலும் நடக்குமா? பெரியார் அதை திறம்படச் செய்ததால் பெரியார் பூமி என்றாலும் திராவிடன் என்றாலும் அவர்களுக்கு எரிகிறது.

தின்பது, குடிப்பது, சம்பாதிப்பது எல்லாம் தமிழர் பூமியில். ஆனால் செய்வது அனைத்தும் கம்யூனல் வயலன்ஸ் செய்திகள், மக்களை உள்ளப் பூர்வமாக காயப்படுத்தி, மதி மயங்கச் செய்யும் செய்திகள் என இவர்களின் ஆட்டம் இன்னும் குறைந்த பாடில்லை.

மேற்கண்ட ஐந்து பத்திரிக்கைகளின் மீதான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காது. ஏனென்றால் முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான முதல்வர். அவர் ஜாதிய, மொழிக்கு அப்பாற்பட்டு தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உயர்த்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். 

சட்டசபை கூடும் போது இந்த பத்திரிக்கைகள் செய்த அதர்மத்தை சபாநாயகரிடம் தெரிவித்து, சட்டசபை மூலமாக இவர்களின் நடவடிக்கைக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  

அதுமட்டுமல்ல தினமலர் பத்திரிக்கை தெருவில் கடை போட்டு விற்பனை செய்து வருபவர்களை காவல்துறை தடுக்க வேண்டுமென்று எழுதி இருந்தது. தெருவில் போட்டு விற்பனை செய்வது அவர்களின் பத்திரிக்கைகளும் தான் என்பதை மறந்து விட்டார்கள். விடிகாலையில் செய்தி பார்சல்களை தெருவில் போட்டு பிரித்து விற்பனைக்கு செல்கிறதே, தினமலர் முறையாக அரசுக்கு கட்டணம் செலுத்தியா தெருவில் பார்சல்களைப் பிரிக்கிறது? இவர்களுக்கு ஒரு நியதி, இன்னொருவருக்கு ஒரு நியதி. இவர்கள் செய்தால் அது சரி, பிறர் செய்தால் குற்றம். இந்தப் பத்திரிக்கைகள் எங்கணம் தனக்கேற்றவாறு செய்திகளை பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.

பல ஆண்டு காலமாக பத்திரிக்கைத் துறையிலும், எழுத்து துறையிலும் ஊறிப்போன இவர்கள், எப்படி மக்களை திசை திருப்பலாம், எப்படி பொய் செய்திகளை வெளியிட்டு தமிழர்களை இன்னும் அழிக்கலாம் என்று கரைத்துக் குடித்திருக்கிறார்கள். ஆகவே இவர்களிடமிருந்து நாம் பாதுகாப்பாய் இருப்பது அவசியம். இவர்கள் பாரசைட்டுகள், லீச்சஸ், கிருமிகள் போன்றவர்கள். இவர்களிடமிருந்து தமிழர்கள் விலகி இருக்க வேண்டும். இவர்களை நிராகரிக்க வேண்டும். அவர்கள் வெளியிடும் செய்தியின் பின்புலத்தினை ஆராய வேண்டும். அமைதியாக கடந்து விடக்கூடாது. அவர்களை மக்கள் மத்தியில் தோலுறிக்க வேண்டும். இனி பெரியாரின் படைப்புகளை படியுங்கள். வரலாற்றில் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை வன்மமும் தெரியும். தெருவில் நடந்து வந்தாலே ஓரமாய் ஒதுங்கிப் போகனும் என்ற நிலையில் இருந்த தமிழர்கள் இன்று தலை நிமிர நடக்க வைத்திருக்கும் கட்சியின் மீது, தலைவரின் மீது இவர்கள் இன்னும் அதிக வன்மத்தைக் காட்டுவார்கள். தகுந்த முறையில், ஜனநாயக வழியில் எதிர்ப்புகளைப் பதிய வைக்க வேண்டும். 

இங்கு எழுதி இருப்பது எவர் மீதான வன்மம் அல்ல. அவர்கள் என்ன செய்கின்றார்களோ அதற்கான எதிர்வினை.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.